அனில் கும்ப்ளே

அனில் கும்ப்ளே (Anil Kumble; பிறப்பு: அக்டோபர் 17, 1970) இந்தியத் துடுப்பாட்ட அணியின் முன்னாள் பந்து வீச்சாளர் மற்றும் தேர்வுத் துடுப்பாட்டம், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டத்தின் தலைவர் ஆவார்.

இவர் 18 ஆண்டுகள் துடுப்பாட்டங்கள் விளையாடியுள்ளார். வலது கை சுழற்பந்து வீச்சாளரான இவர் 619 இலக்குகள் எடுத்துள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் அதிக இலக்குகள் எடுத்தவர்கள் முத்தையா முரளிதரன் மற்றும் ஷேன் வோர்ன் ஆகியவர்களுக்கு அடுத்தபடியாக மூன்றாவதாக உள்ளார். இவர் ஜம்போ என்றும் அழைக்கப்படுகிறார். 1993 ஆம் ஆண்டின் சிறந்த துடுப்பாட்ட வீரராக இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாடு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்டார். பின் 1996 ஆம் ஆண்டில் விசுடன் துடுப்பாட்டாளர்களின் நாட்குறிப்பால் சிறந்த வீரராகத் தேர்வானார்.

அனில் கும்பிளே
Anil Kumble
அனில் கும்ப்ளே
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்அனில் கும்ப்ளே
பிறப்பு17 அக்டோபர் 1970 (1970-10-17) (அகவை 53)
பெங்களூர், கருநாடகம், இந்தியா
பட்டப்பெயர்ஜம்போ
உயரம்6 அடி 1 அங் (1.85 m)
மட்டையாட்ட நடைவலக்கை
பந்துவீச்சு நடைவலக்கை காற்சுழல்
பங்குபந்து வீச்சாளர்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 192)9 ஆகத்து 1990 எ. இங்கிலாந்து
கடைசித் தேர்வு29 அக்டோபர் 2008 எ. ஆத்திரேலியா
ஒநாப அறிமுகம் (தொப்பி 78)25 ஏப்ரல் 1990 எ. இலங்கை
கடைசி ஒநாப19 மார்ச் 2007 எ. பெர்முடா
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
1989/90–2008/09கர்நாடகம்
2006சரே
2000லைசுடர்சயர்
1995நோர்தாம்ப்டன்சயர்
2008–2010ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தே.து ஒ.ப.து மு.த.து ப.அ
ஆட்டங்கள் 132 271 244 380
ஓட்டங்கள் 2,506 938 5,572 1,456
மட்டையாட்ட சராசரி 17.77 10.54 21.68 11.20
100கள்/50கள் 1/5 0/0 7/17 0/0
அதியுயர் ஓட்டம் 110* 26 154* 30*
வீசிய பந்துகள் 40,850 14,496 66,931 20,247
வீழ்த்தல்கள் 619 337 1,136 514
பந்துவீச்சு சராசரி 29.65 30.89 25.83 27.58
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
35 2 72 3
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
8 0 20 0
சிறந்த பந்துவீச்சு 10/74 6/12 10/74 6/12
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
60/– 85/– 120/– 122/–
மூலம்: espncricinfo, 8 நவம்பர் 2016

பெங்களூர், கருநாடகத்தில் பிறந்த இவர் பி. எஸ். சந்திரசேகரின் பால் ஈடுபாடு கொண்டு முழு நேர துடுப்பாட்ட வீரராக ஆனார். இவர் கருநாடக மாநிலத் துடுப்பாட்ட அணி சார்பாக முதல் தரத் துடுப்பாட்டத்தில் தனது 19 வயதில் விளையாடினார். இவரின் முதல் தேர்வுத் துடுப்பாட்டம் இங்கிலாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிரானது ஆகும். 132 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் இந்திய அணியை தலைமேற்று நடத்தினார். 1990 ஆம் ஆண்டின் துவக்கத்தில் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் இவருக்கு நிரந்தர இடம் கிடைத்தது. மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணிக்கு எதிராக 12 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து 6 இலக்குகளை எடுத்தார். 1996 துடுப்பாட்ட உலகக்கிண்ணத்தில் சிறப்பான பங்களிப்பை வெளிப்படுத்தினார். அதில் 7 போட்டிகளில் விளையாடி 15 இலக்குகளை எடுத்தார். அவரின் பந்து வீச்சு சராசரி 18.73 ஆகும். 1999 ஆம் ஆண்டில் பாக்கித்தான் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் அனைத்து இலக்குகளையும் வீழ்த்தி சாதனை படைத்தார். இதற்குமுன் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஜிம் லேகர் இந்தச் சாதனையைப் படைத்துள்ளார்.

இந்தியக் குடியுரிமை விருதுகளில் நான்காவது பெரிய விருதாக கருதப்படும் பத்மசிறீ விருதினை 2005 ஆம் ஆண்டில் கும்ப்ளே பெற்றார். நவம்பர் 2008 ஆம் ஆண்டில் சர்வதேச துடுப்பாட்டப் போட்டிகளில் இருந்து தனது ஓய்வினை அறிவித்தார். அக்டோபர், 2012 ஆம் ஆண்டில் இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாடு வாரியத்தின் செயலாளராக நியமனம் ஆனார்.

இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகளில் 2012 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு அறிவுரையாளராக நியமனம் ஆனார். மேலும் இவர் இந்தியத் துடுப்பாட்ட அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமனம் செய்யப்பட்டார். 2015 ஆம் ஆண்டில் பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையினால் ஹால் ஆஃப் ஃபேமாக அறிவிக்கப்பட்டார்.

தனிப்பட்ட வாழ்க்கை

அனில் கும்ப்ளே அக்டோபர் 17, 1970 இல் பெங்களூர், கருநாடகத்தில் பிறந்தார். இவரின் தந்தை கிருஷ்ணசாமி, தாய் சரோஜா. இவருக்கு தினேஷ் கும்ப்ளே எனும் சகோதரர் உள்ளார். இவர் சேத்தானா கும்ப்ளே என்பவரை திருமணம் செய்தார். இவர்களுக்கு மயாஸ் கும்ப்ளே எனும் மகனும், ஸ்வாஸ்தி கும்ப்ளே எனும் மகளும் உள்ளனர். சேத்தானாவின் முதல் திருமணத்தில் பிறந்த ஆருனி கும்ப்ளே எனும் மகளை கும்ப்ளே தத்தெடுத்தார்.

இவரது சாதனைகள்

வெளியிணைப்புகள்

டுவிட்டரில் அனில் கும்ப்ளே அனில் கும்ப்ளே 

சான்றுகள்

வார்ப்புரு:இந்தியத் துடுப்பாட்ட அணியின் ஒ.ப.து தலைவர்கள்

Tags:

அனில் கும்ப்ளே தனிப்பட்ட வாழ்க்கைஅனில் கும்ப்ளே இவரது சாதனைகள்அனில் கும்ப்ளே வெளியிணைப்புகள்அனில் கும்ப்ளே சான்றுகள்அனில் கும்ப்ளே1996இந்தியத் துடுப்பாட்ட அணிஇந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாடு வாரியம்ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்தலைவர் (துடுப்பாட்டம்)தேர்வுத் துடுப்பாட்டம்பந்து வீச்சாளர்முத்தையா முரளிதரன்விசுடன் துடுப்பாட்டாளர்களின் நாட்குறிப்புஷேன் வோர்ன்

🔥 Trending searches on Wiki தமிழ்:

அருந்ததியர்இந்திய அரசியலமைப்பு சட்டம், பிரிவு 370ஐந்திணைகளும் உரிப்பொருளும்கருக்கலைப்புதொல்காப்பியர்சிவனின் 108 திருநாமங்கள்இந்திய ரூபாய்சிறுபாணாற்றுப்படைபண்பாடுமுன்னின்பம்இந்திய வரலாறுபுற்றுநோய்இந்திய தேசிய காங்கிரசுமாதோட்டம்தொலமியின் உலகப்படம்கங்கைகொண்ட சோழபுரம்உ. வே. சாமிநாதையர்தமிழர் நிலத்திணைகள்கம்பராமாயணம்நிதி ஆயோக்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்வேதம்நீரிழிவு நோய்கேரளம்ஒற்றைத் தலைவலிசினைப்பை நோய்க்குறிகல்வெட்டுவெண்பாபரணி (இலக்கியம்)இலங்கையின் வரலாறுபூரான்விஜய் வர்மாதிராவிட முன்னேற்றக் கழகம்நேர்பாலீர்ப்பு பெண்நாயக்கர்சூரரைப் போற்று (திரைப்படம்)கும்பகோணம்நவரத்தினங்கள்பத்துப்பாட்டுவிவேகானந்தர்ஆத்திசூடிஎதற்கும் துணிந்தவன்குண்டலகேசிசிவனின் தமிழ்ப் பெயர்கள்சாதிதிருக்கடையூர் அமிர்தகடேசுவரர் கோயில்காதல் கொண்டேன்வெள்ளியங்கிரி மலைஉதகமண்டலம்அக்பர்ஆய்த எழுத்து (திரைப்படம்)ஏப்ரல் 29அருணகிரிநாதர்தமிழில் சிற்றிலக்கியங்கள்மரபுத்தொடர்திருமலை நாயக்கர்பெயர்ச்சொல்பூலித்தேவன்ஒழுகு வண்ணம்நுரையீரல் அழற்சிவிலங்குகளின் பெயர்ப் பட்டியல்மூதுரைராஜஸ்தான் ராயல்ஸ்தொல். திருமாவளவன்சோல்பரி அரசியல் யாப்புசிவபெருமானின் பெயர் பட்டியல்மயங்கொலிச் சொற்கள்சமணம்பொருளாதாரம்உமறுப் புலவர்சிவாஜி கணேசன்உரிச்சொல்குறுநில மன்னர்கள்தினகரன் (இந்தியா)கிளிகணையம்ர. பிரக்ஞானந்தாநந்தா என் நிலாஇந்தியாவின் தேசிய மனித உரிமை ஆணையம்🡆 More