அதிர்ச்சிக்குப் பிறகான மன அழுத்தப் பாதிப்பு

அதிர்ச்சிக்குப் பிறகான மன அழுத்தப் பாதிப்பு அல்லது பேரதிர்ச்சிக்குப் பிறகான மனஉளைச்சல் (post-traumatic stress disorder, PTSD) என்பது ஒரு மனநிலை சார்ந்த பாதிப்பு ஆகும், இது ஒருவருக்கு மன அதிர்ச்சி ஏற்பட்ட பிறகு ஏற்படலாம், அதாவது பாலியல் வன்முறை, போர் நடவடிக்கை, சாலை விபத்துகள் அல்லது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் பிற நிகழ்வுகள் போன்றவை.

இதன் அறிகுறிகளில் தொல்லையூட்டும் எண்ணங்கள், உணர்வுகள் அல்லது நிகழ்வுகளுடன் தொடர்புடைய கனவுகள், மனம் அல்லது உடல் அழுத்தம் முதல் மன அதிர்ச்சி தொடர்பான தாக்கங்கள் வரை இருக்கலாம், மன அதிர்ச்சி சார்ந்த எண்ணங்களைத் தவிர்க்க முயலுதல், ஒருவர் எவ்வாறு நினைப்பார் மற்றும் உணர்வார் என்பதை மாற்றி யோசித்தல் மற்றும் சண்டைபோடு தூண்டல் அதிகமாக இருத்தல். இந்த அறிகுறிகள் நிகழ்வு ஏற்பட்டு ஒரு மாதத்திற்கு அதிகமாகவும் நீடிக்கலாம். இளம் குழந்தைகள் தங்கள் மன அழுத்தத்தைக் காட்டுவது குறைவுதான், எனினும் அதற்குப் பதிலாக விளையாடுதல் மூலம் தங்கள் நினைவுகளை வெளிப்படுத்தலாம். PTSD பாதிப்பு கொண்டவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் மற்றும் சுயமாகக் காயம் ஏற்படுத்திக் கொள்ளும் வாய்ப்பு மிகவும் அதிகம்.

அதிர்ச்சிக்குப் பிறகான மன அழுத்தப் பாதிப்பு
post-traumatic stress disorder
சிறப்புஉளநோய் மருத்துவம், உளநோய் தீர் உளவியல்
அறிகுறிகள்தொல்லையளிக்கும் எண்ணங்கள், உணர்வுகள் அல்லது கனவுகள் இந்த நிகழ்வுடன் தொடர்புடையவை; அதிர்ச்சி தொடர்பான குறிப்புகளின் மனம் அல்லது உடல்சார்ந்த அழுத்தம்; அதிர்ச்சி தொடர்பான சூழ்நிலைகளைத் தவிர்ப்பதற்கான முயற்சிகள்; அதிகமாக இருக்கும் சண்டைபோடுதல் தூண்டல்
சிக்கல்கள்தற்கொலை
கால அளவு> 1 மாதம்
காரணங்கள்அதிர்ச்சிகரமான நிகழ்வு ஏற்படல்
நோயறிதல்அறிகுறிகளின் அடிப்படையில்
சிகிச்சைஆலோசனை, தியானம்
மருந்துதேர்ந்தெடுக்கப்பட்ட செரோடோனின் மறுபயன்பாட்டுத் தடுப்பான்
நிகழும் வீதம்8.7% (வாழ்நாள் நோய்த்தாக்கம்); 3.5% (12 மாத ஆபத்து) (அமெரிக்கா)

மன அதிர்ச்சி ஏற்பட்டுள்ள பெரும்பாலானவர்களுக்கு இந்நிலை ஏற்படுவதில்லை. துன்புறுத்தல் அல்லாத பாதிப்புகளான விபத்துகள் மற்றும் இயற்கைப் பேரழிவுகள் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்களுடுன் ஒப்பிடுகையில், நேரடி மனிதர்கள் ஈடுபட்ட மன அதிர்ச்சியால் கற்பழிப்பு அல்லது குழந்தைச் சித்திரவதை) பாதிக்கப்பட்டவர்களுக்கு இது ஏற்பட வாய்ப்பு அதிகம். கற்பழிப்பால் பாதிக்கப்பட்ட நபர்களில், பாதிக்கும் மேற்பட்டவர்களுக்கு இது ஏற்படுகிறது. குழந்தைகளின் வயது 10-க்குள் இருந்தால் அவர்களுக்கு அதிர்ச்சிக்குப் பிறகான மன அழுத்தப் பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு பெரியவர்களைவிடக் குறைவாகும். அதிர்ச்சிகரமான சம்பவத்தைத் தொடர்ந்து குறிப்பிட்ட அறிகுறிகள் ஏற்படுவதன் அடிப்படையில் நோயறிதல் இருக்கும்.

ஆலோசனை சிகிச்சையை, அறிகுறிகள் ஆரம்பநிலையில் இருக்கும் போதே தொடங்குவது பயனளிக்கலாம். எனினும் பாதிப்புள்ளானவர்களில் அறிகுறிகள் உள்ள அல்லது இல்லாத எல்லாத் தனிநபர்களுக்கும் இச்சிகிச்சை அளிப்பது பலனளிக்காமல் போகலாம். ஆலோசனையும் மருந்து எடுத்துக்கொள்வதுமென இரண்டும் இணைந்த சிகிச்சையே இப் பாதிப்பு கொண்டவர்களுக்கான முதன்மை சிகிச்சையாகும். பலதரப்பட்ட சிகிச்சை முறைகள் பயனளிக்கலாம். இது ஒரே ஒரு நபரின் நேரடி சிகிச்சை அல்லது குழு சார்ந்த சிகிச்சையாகவோ இருக்கலாம். மன அழுத்த மேம்பாட்டுச் சிகிச்சைகளான தேர்ந்தெடுக்கப்பட்ட செரோடோனின் மறு உபயோகத் தடுப்பான் வகை சிகிச்சை இதற்கான முதல்நிலை மருத்துவமாகும். இச்சிகிச்சை சுமார் பாதிக்கும் மேற்பட்டவர்களுக்குப் பலனளிக்கிறது. இவற்றின் பலன்கள் பிற சிகிச்சையை விடக் குறைவாகும். மருந்துகள் மற்றும் சிகிச்சை முறைகள் ஆகியவற்றை இணைத்துப் பயன்படுத்துவது மிகுந்த பயன் கொண்டதாக உள்ளதா என்பது தெளிவாக இல்லை. பிற மருந்துகள் பலனளிக்கிறதா என்பதற்குப் போதுமான சான்றுகள் இல்லை. சிலருக்கு பென்சோடயசிபைன் போன்ற உளஆற்றுமை மருந்துகள் விளைவுகளை மோசமாக்குகின்றன.

கொடுக்கப்பட்டுள்ள ஆண்டில் அமெரிக்காவில் உள்ள 3.5% பெரியவர்களுக்கு இப்பாதிப்பு ஏற்படுகிறது, இது 9% மக்களை அவர்களின் வாழ்க்கையில் ஏதாவது ஒரு காலகட்டத்தில் பாதிக்கிறது. உலகின் மற்ற இடங்களில் கொடுக்கப்பட்டுள்ள ஆண்டில் பாதிப்பு 0.5% மற்றும் 1% ஆகியவற்றுக்கு இடையில் உள்ளது. ஆயுத மோதல்கள் ஏற்படும் இடங்களில் இந்த விகிதம் அதிகமாக உள்ளது. இந்த நோய் பொதுவாக ஆண்களைவிடப் பெண்களை அதிகம் பாதிக்கிறது. பண்டைய கிரேக்கர்களில் குறைந்தபட்சம் ஒருமுறை மன அதிர்ச்சி தொடர்பான மனநிலைப் பாதிப்புகளின் அறிகுறிகள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. உலகப் போர்களின் போது இந்த நிலைமை "ஷெல் அதிர்ச்சி" மற்றும் "காம்பேக்ட் நியூரோசிஸ்" போன்ற சொற்களில் அறியப்பட்டது. "அதிர்ச்சிக்குப் பிறகான மன அழுத்தப் பாதிப்பு" என்ற பதம் 1970களில் அமெரிக்க இராணுவ வீரர்கள் வியட்நாம் போரில் கலந்துகொண்டு திரும்பிய பிறகு அதிகமானவர்களுக்குத் தாக்கம் கண்டறியப்பட்டதால் ஏற்பட்டது. இது அதிகாரப்பூர்வமாக அமெரிக்க உளவியல் சங்கத்தால் 1980 ஆம் ஆண்டில் மன நோய்களைக் கண்டறிதல் மற்றும் புள்ளிவிவர கையேடு (DSM-III)-இன் மூன்றாம் பதிப்பில் அங்கீகரிக்கப்பட்டது.

மேற்கோள்கள்

அதிர்ச்சிக்குப் பிறகான மன அழுத்தப் பாதிப்பு  இந்தக் கட்டுரை கட்டற்ற ஆக்கம் ஒன்றின் உரைக் பகுதியைக் கொண்டுள்ளது. Licensed under CC BY-SA 3.0 IGO A Lifeline to learning: leveraging mobile technology to support education for refugees, UNESCO, UNESCO. UNESCO.

வெளி இணைப்புகள்

Tags:

உணர்ச்சிஉளப் பிறழ்ச்சிகனவுசாலை விபத்துசிந்தித்தல்தற்கொலைபாலியல் வன்முறைபோர்

🔥 Trending searches on Wiki தமிழ்:

திராவிட இயக்கம்இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்கோத்திரம்தனிப்பாடல் திரட்டுநெசவுத் தொழில்நுட்பம்மகேந்திரசிங் தோனிபாலை (திணை)இந்திய தேசியக் கொடிவிந்துஉயர் இரத்த அழுத்தம்சட் யிபிடிகொன்றை வேந்தன்சிலம்பரசன்நீர்இடமகல் கருப்பை அகப்படலம்பிலிருபின்புதுக்கவிதைபாண்டவர்உலா (இலக்கியம்)மு. வரதராசன்ஆவுடையார் கோயில் ஆத்மநாதசுவாமி கோயில்கார்லசு புச்திமோன்கட்டுரைஅறுபடைவீடுகள்இதயம்அனைத்துலக நாட்கள்இலங்கை தேசிய காங்கிரஸ்அபினிஇந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்அணி இலக்கணம்இந்திய நாடாளுமன்றம்இராமலிங்க அடிகள்கல்லீரல்இந்து சமயம்மதுரைக் காஞ்சிமாமல்லபுரம்அனுஷம் (பஞ்சாங்கம்)விருமாண்டிஎட்டுத்தொகை தொகுப்புகௌதம புத்தர்பால கங்காதர திலகர்மதீச பத்திரனசாகித்திய அகாதமி விருதுகேள்விபுலிமுருகன்இராசேந்திர சோழன்குடும்பம்பாசிசம்எண்சபரி (இராமாயணம்)கணம் (கணிதம்)சித்த மருத்துவம்சிறுபஞ்சமூலம்ஒரு கல் ஒரு கண்ணாடி (திரைப்படம்)ஐங்குறுநூறு69 (பாலியல் நிலை)மரகத நாணயம் (திரைப்படம்)இந்து சமய அறநிலையத் துறைஅடல் ஓய்வூதியத் திட்டம்மீனம்பீப்பாய்யானையின் தமிழ்ப்பெயர்கள்அளபெடைதஞ்சாவூர்ஓடி விளையாடு பாப்பா (பாரதியார் பாடல்)நம்ம வீட்டு பிள்ளைகுற்றாலக் குறவஞ்சிபயில்வான் ரங்கநாதன்ஆர். சுதர்சனம்பரிதிமாற் கலைஞர்பஞ்சாப் கிங்ஸ்ஐம்பெருங் காப்பியங்கள்சவ்வரிசிபெருஞ்சீரகம்திவ்யா துரைசாமிபுதுமைப்பித்தன்🡆 More