சுவிட்சர்லாந்து: ஐரோப்பிய நாடு

சுவிட்சர்லாந்து (Switzerland) அதிகாரப்பூர்வமாக சுவிசுக் கூட்டமைப்பு என்பது மேற்கு, மத்திய மற்றும் தெற்கு ஐரோப்பாவின் சங்கமத்தில் அமைந்துள்ள ஒரு நிலத்தாலும் ஆல்ப்ஸ் மலையாலும் சூழப்பட்ட மத்திய ஐரோப்பிய நாடாகும்.

சுவிட்சர்லாந்தானது மண்டலங்கள் என அழைக்கப்படும் 26 மாநிலங்களைக் கொண்ட கூட்டாட்சி குடியரசு ஆகும். கூட்டமைப்பின் அதிகாரத் தலைமையிடமாக பேர்ன் நகரமும் நாட்டின் பொருளாதார மையங்களாக இதன் இரண்டு உலகளாவிய நகரங்களான ஜெனீவாவும் சூரிச்சும் திகழ்கின்றன.

சுவிட்சர்லாந்துக் கூட்டமைப்பு
Swiss Confederation
ஐந்து அதிகாரப்பூர்வப் பெயர்கள்
கொடி of சுவிட்சர்லாந்து
கொடி
சின்னம் of சுவிட்சர்லாந்து
சின்னம்
குறிக்கோள்: 
"Unus pro omnibus, omnes pro uno"
"அனைவருக்கும் ஒன்று, ஒன்றே அனைவருக்கும்"
நாட்டுப்பண்: "சுவிசுப் பண்"
அமைவிடம்: சுவிட்சர்லாந்து  (பச்சை) ஐரோப்பியக் கண்டத்தில்  (பச்சையும் சாம்பலும்)
அமைவிடம்: சுவிட்சர்லாந்து  (பச்சை)

ஐரோப்பியக் கண்டத்தில்  (பச்சையும் சாம்பலும்)

தலைநகரம்
46°57′N 7°27′E / 46.950°N 7.450°E / 46.950; 7.450
பெரிய நகர்சூரிக்கு
ஆட்சி மொழி(கள்)
இனக் குழுகள்
(2020)
  • 74.3% சுவிசு மக்கள்
  • 25.7% வெளிநாட்டினர்
சமயம்
(2020)
மக்கள்சுவிசு
அரசாங்கம்கூட்டாட்சி அரசு நேரடி மக்களாட்சியுடன் இயக்குநரகக் குடியரசு
• கூட்டாட்சிப் பேரவை
  • அலைன் பெர்செட் (அரசுத்தலைவர்)
  • வியோலா ஆம்கெர்டு (துணைத்தலைவர்)
• சான்சிலர்
வால்ட்டர் துர்கெர்
சட்டமன்றம்சட்டமன்றம்
மாநிலங்களின் பேரவை
தேசியப் பேரவை
வரலாறு
• நிறுவல்
1 ஆகத்து 1291
• இறையாண்மை அங்கீகாரம் (வெஸ்ட்ஃபாலியா அமைதி ஒப்பந்தம்)
24 அக்டோபர் 1648
• கூட்டாட்சி ஒப்பந்தம்
7 ஆகத்து 1815
• கூட்டாட்சி நாடு
12 செப்டம்பர் 1848
பரப்பு
• மொத்தம்
41,285 km2 (15,940 sq mi) (132-வது)
• நீர் (%)
4.34 (2015)
மக்கள் தொகை
• 2020 மதிப்பிடு
Neutral increase 86,36,896 (99-வது)
• 2015 கணக்கெடுப்பு
8,327,126
• அடர்த்தி
207/km2 (536.1/sq mi) (48-வது)
மொ.உ.உ. (கொ.ஆ.ச.)2022 மதிப்பீடு
• மொத்தம்
சுவிட்சர்லாந்து: வரலாறு, குறிப்புகள், மேற்கோள்கள் $739.49 பில். (35-வது)
• தலைவிகிதம்
சுவிட்சர்லாந்து: வரலாறு, குறிப்புகள், மேற்கோள்கள் $84,658 (5-வது)
மொ.உ.உ. (பெயரளவு)2022 மதிப்பீடு
• மொத்தம்
சுவிட்சர்லாந்து: வரலாறு, குறிப்புகள், மேற்கோள்கள் $841.69 billion (20-வது)
• தலைவிகிதம்
சுவிட்சர்லாந்து: வரலாறு, குறிப்புகள், மேற்கோள்கள் $92,434 (7-வது)
ஜினி (2018)positive decrease 29.7
தாழ்
மமேசு (2021)சுவிட்சர்லாந்து: வரலாறு, குறிப்புகள், மேற்கோள்கள் 0.962
அதியுயர் · 1-வது
நாணயம்சுவிசு பிராங்க் (CHF)
நேர வலயம்ஒ.அ.நே+1 (ம.ஐ.நே)
• கோடை (ப.சே.நே.)
ஒ.அ.நே+2 (ம.ஐ.கோ.நே)
திகதி அமைப்புநாள்.மா. ஆண்டு (அனோ டொமினி)
வாகனம் செலுத்தல்வலம்
அழைப்புக்குறி+41
ஐ.எசு.ஓ 3166 குறியீடுCH
இணையக் குறி.ch, .swiss

இதன் வடக்கே செருமனி, மேற்கே பிரான்சு, தெற்கே இத்தாலி, கிழக்கே ஆஸ்திரியா மற்றும் லீக்கின்ஸ்டைன் ஆகிய நாடுகள் சுவிசின் எல்லைகளாக உள்ளன. சுவிட்சர்லாந்து வரலாற்று நோக்கில் ஒரு கூட்டமைப்பு ஆனால் 1848 முதல் ஒருங்கிணைந்த தனி நாடாக உள்ளது. இது புவியியல் ரீதியாக சுவிஸ் பீடபூமி, ஆல்ப்ஸ் மற்றும் ஜூரா என பிரிக்கப்பட்டுள்ளது. 41,285 கிமீ2 (15,940 ச.மை) பரப்பளவில் 39,997 கிமீ2 (15,443 ச.மை) நிலப்பரப்பைக் கொண்டுள்ளது. ஆல்ப்ஸ் பிரதேசத்தின் பெரும்பகுதியை ஆக்கிரமித்துள்ளது. தோராயமாக 8.7 மில்லியன் மக்கள் தொகை (2009) கொண்ட நாடான இது மற்றைய நாடுகளுடன் ஒப்பிடும் போது பரப்பளவில் 136ம் இடத்தில் உள்ளதுடன் அந்நாட்டின் நீர்ப்பரப்பு நிலப்பரப்புடன் ஒப்பிடும் பொழுது 4.2% மாகவும் உள்ளது. இங்கு சூரிச், ஜெனிவா மற்றும் பாசல் உட்பட மிகப்பெரிய நகரங்களும்பொருளாதார மையங்களும் அமைந்துள்ளன. இந்த மூன்று நகரங்களிலும் உலக வணிக அமைப்பு, உலக சுகாதார அமைப்பு, பன்னாட்டு தொழிலாளர் அமைப்பு, பன்னாட்டுக் காற்பந்துச் சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் ஐக்கிய நாடுகள் அவைகளின் இரண்டாவது பெரிய அலுவலகம் போன்ற சர்வதேச அமைப்புகளின் தலைமையகம் அல்லது அலுவலகங்கள் உள்ளன.

பேர்ன், கூட்டாட்சி அமைப்புகளின் தலைநகராகவுள்ள போதிலும் சூரிச் வர்த்த உலகில் அறியப்பட்ட நகரங்களாகவும் உள்ளன. சுவிட்சர்லாந்து, தனி நபருக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தியின்படி, உலகின் செல்வந்த நாடுகளில் ஒன்றாக உள்ளது, இதன் சராசரி தனிநபர் GDP இன் மதிப்பு $67,384.என்பதாக உள்ளது.. உலகின் உயர்ந்த வாழ்க்கைத் தரத்தைக் கொண்டுள்ள நகரங்களில் சூரிச் மற்றும் ஜெனீவா முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தில் உள்ளன..

சுவிட்சர்லாந்து நீண்ட நடுநிலைத்தன்மையுடைய வரலாற்றினைக் கொண்டது. ஆஸ்திரியா மற்றும் பர்கண்டிக்கு எதிரான தொடர்ச்சியான இராணுவ வெற்றிகளைத் தொடர்ந்து இடைக்காலத்தின் பிற்பகுதியில் நிறுவப்பட்ட பழைய சுவிஸ் கூட்டமைப்பிலிருந்து சுவிட்சர்லாந்து உருவானது. 1291 இன் கூட்டமைப்பு சாசனம் நாட்டின் நிறுவன ஆவணமாகக் கருதப்படுகிறது. இந்த நாள் சுவிஸ் தேசிய தினமாகக் கொண்டாடப்படுகிறது. 16 ஆம் நூற்றாண்டின் சீர்திருத்தத்திலிருந்து, சுவிட்சர்லாந்து ஆயுதமேந்திய நடுநிலைக் கொள்கையைப் பராமரித்து வருகிறது. புனித உரோமானியப் பேரரசிலிருந்து 1648இல் வெஸ்ட்ஃபாலியா அமைதி ஒப்பந்தம் மூலம் முறையாக அங்கீகரிக்கப்பட்டது. 1815 முதல் சுவிட்சர்லாந்து சர்வதேசப் போரில் ஈடுபடவில்லை. இது 2002 இல் மட்டுமே ஐக்கிய நாடுகள் சபையில் இணைந்தது. இருப்பினும் அது உலகளவில் அடிக்கடி அமைதியை கட்டியெழுப்பும் செயல்முறைகளில் பங்கேற்பது உட்பட தீவிரமான வெளியுறவுக் கொள்கையை பின்பற்றுகிறது.

உலகின் மிகவும் தொன்மையான மக்கள் ஆட்சியைக் கொண்ட நாடான இது செர்மன், பிரெஞ்சு, இத்தாலியம் மற்றும் உரோமாஞ்சு முதலிய நான்கு தேசிய மொழிகளையும், பலமொழிகள் பேசப்படும் நாடாகவும் விளங்குகிறது. பெரும்பான்மையான மக்கள் ஜெர்மன் மொழி பேசுபவர்களாக இருந்தாலும், கூட்டாட்சி நேரடி மக்களாட்சி, ஆல்பைன் குறியீட்டுவாதம் போன்ற பொதுவான மதிப்புகள் தேசிய அடையாளமாக இதன் பொதுவான வரலாற்று பின்னணியில் வேரூன்றியுள்ளது. and Alpine symbolism. மொழி, இனம் மற்றும் மதம் ஆகியவற்றைக் கடந்த இந்த அடையாளம், சுவிட்சர்லாந்தை ஒரு தேசிய அரசாகக் காட்டிலும் "விருப்பத்தின் தேசம்" என்று விவரிக்க வழிவகுத்தது.

சுவிட்சர்லாந்து உலகின் மிகவும் வளர்ந்த நாடுகளில் ஒன்றாகும். இது எந்த நாட்டிலும் ஒரு வயது வந்தவருக்கு மிக உயர்ந்த பெயரளவிலான செல்வத்தையும், ஆள்வீத வருமான அடிப்படையில் நாடுகள் பட்டியலில் எட்டாவது இடத்தையும் கொண்டுள்ளது. 2021 முதல் மனித மேம்பாட்டுக் குறியீட்டில் சுவிட்சர்லாந்து முதலிடம் வகிக்கிறது. மேலும் இது பொருளாதார போட்டித்தன்மை மற்றும் ஜனநாயக ஆளுமை உட்பட பல சர்வதேச அளவீடுகளிலும் உயர்ந்த இடத்தில் உள்ளது. இதன் நகரங்களான சூரிச், ஜெனிவா மற்றும் பேசல் ஆகியவை வாழ்க்கைத் தரத்தின் அடிப்படையில் மிக உயர்ந்த இடத்தில் இருந்தாலும் சில உயர்தர வாழ்க்கைச் செலவுகளும் உள்ளன.

வரலாறு

சுவிட்சர்லாந்து 1848 இல் சுவிஸ் கூட்டாட்சி அரசியலமைப்பை ஏற்றுக்கொண்டதிலிருந்து தனது தற்போதைய வடிவத்தில் ஒரு மாகாணமாக விளங்குகிறது. நவீன சுவிட்சர்லாந்தின் முன்னோடிகள் 13 ஆம் நூற்றாண்டின் இறுதியிலிருந்து பாதுகாப்பான கூட்டணியை உருவாக்கியிருந்தனர். அதன் அமைப்பில் பல நூற்றாண்டுகளாக நிலைத்திருக்கின்ற பல மாகாணங்களின் ஒருங்கிணைப்பாக அது உருவாக்கப்பட்டது.

முற்கால வரலாறு

சுவிட்சர்லாந்து: வரலாறு, குறிப்புகள், மேற்கோள்கள் 
கி.மு.44 இல் கண்டறியப்பட்ட அகஸ்டா ரௌரிகா என்பது ரைனில் அமைந்த முதல் ரோமானிய குடியேற்ற நாடு ஆக இருந்தது, மேலும் இது தற்சமயம் சுவிட்சர்லாந்தின் முக்கியமான தொல்லியல் சார்ந்த தளமாக உள்ளது.

150,000 ஆண்டுகளுக்கும் முன்பே சுவிட்சர்லாந்தில் மனிதர்கள் வாழ்ந்ததற்கான தொன்மையான தடயங்கள் இருக்கின்றன. கி.மு. 5300 ஆம் ஆண்டு வாக்கில் சுவிட்சர்லாந்தின் காக்லிங்கெனில் மிகப்பழமையான விவசாயக் குடியிருப்புகள் காணப்பட்டதாகத் தெரிகிறது.

குறிப்புகள்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்


Tags:

சுவிட்சர்லாந்து வரலாறுசுவிட்சர்லாந்து குறிப்புகள்சுவிட்சர்லாந்து மேற்கோள்கள்சுவிட்சர்லாந்து வெளி இணைப்புகள்சுவிட்சர்லாந்துஆல்ப்ஸ் மலைஐரோப்பாசூரிச்ஜெனீவாதெற்கு ஐரோப்பாநடு ஐரோப்பாநிலம்சூழ் நாடுபேர்ன்மேற்கு ஐரோப்பா

🔥 Trending searches on Wiki தமிழ்:

கோத்திரம்வைதேகி காத்திருந்தாள்பட்டினப் பாலைவேதாத்திரி மகரிசிதிரிசாஇந்தியாஇந்திய ஐந்தாண்டு திட்டங்கள்சரக்கு மற்றும் சேவை வரி (இந்தியா)விடுதலை பகுதி 1இந்து சமயம்தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்எங்கேயும் காதல்ஐராவதேசுவரர் கோயில்பஞ்சாங்கம்பாஞ்சாலி சபதம்இரண்டாம் உலகப் போர்கேள்விசூல்பை நீர்க்கட்டிதளபதி (திரைப்படம்)வேலுப்பிள்ளை பிரபாகரன்இலங்கையின் மாவட்டங்கள்சி. விஜயதரணிகும்பகோணம்உத்தரகோசமங்கைஆனைக்கொய்யாசோழர்இந்திய விடுதலை இயக்கம்சன் தொலைக்காட்சி நாடகத் தொடர்கள் பட்டியல்குறிஞ்சிப் பாட்டுதமிழ் எழுத்து முறைபுனித ஜார்ஜ் கோட்டைகல்விக்கோட்பாடுசிங்கம்இராமர்தமிழக வரலாறுமுத்தரையர்அதியமான்வாதுமைக் கொட்டைநான் அவனில்லை (2007 திரைப்படம்)நாளந்தா பல்கலைக்கழகம்விஷ்ணுபிரெஞ்சுப் புரட்சிதிருப்பாவைபழனி முருகன் கோவில்வில்லுப்பாட்டுசன்ரைசர்ஸ் ஐதராபாத்வாணிதாசன்புதிய ஏழு உலக அதிசயங்கள்தாயுமானவர்நரேந்திர மோதிதிருமுருகாற்றுப்படைசின்னம்மைஉலக சுற்றுச்சூழல் நாள்அக்பர்சிற்பி பாலசுப்ரமணியம்நம்ம வீட்டு பிள்ளைமாம்பழம்மும்பை இந்தியன்ஸ்அன்பே ஆருயிரே (2005 திரைப்படம்)யானையின் தமிழ்ப்பெயர்கள்தங்கம்பர்வத மலைஉயிர்மெய் எழுத்துகள்திராவிட முன்னேற்றக் கழகம்தமிழ் இலக்கணம்மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்பித்தப்பைலக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்நாலாயிர திவ்வியப் பிரபந்தம்சத்திய சாயி பாபாஉமறுப் புலவர்வாட்சப்பாம்புஇந்திய அரசியலமைப்பு சட்டம், பிரிவு 370விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல்நாழிகை🡆 More