பிரான்சிய மொழி: பிரான்சில் பேசப்படும் மொழி

பிரான்சிய மொழி (le français (ⓘ) அல்லது la langue française ) ஓர் உரோமானிய மொழியாகும்.

இம் மொழி பிரான்சு, சுவிட்சர்லாந்தின் உரோமண்டிப் பகுதி, பெல்சியத்தின் வல்லோனியா மற்றும் பிரசெல்சுப் பகுதி, மொனாகோ, கனடாவின் கியூபெக்கு மற்றும் நியூ பிரான்சுவிக்கு (அக்காடியா பகுதி) மாகாணங்கள் மற்றும் ஐக்கிய அமெரிக்க மாநிலமான மெய்ன், இலூசியானாவின் அக்காடியானா பகுதி ஆகியவற்றில் முதன்மை மொழியாகப் பேசப்படுகிறது. மேலும் உலகெங்குமுள்ள பல்வேறு சமூகத்தினரும் இம் மொழியைப் பேசுகின்றனர். இதை விட பிரான்சை இரண்டாம் மொழியாகப் பேசுவோர் உலகெங்கிலும் உள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் பிரான்சிய மொழி பேசும் ஆபிரிக்கப் பகுதிகளில் உள்ளனர். ஆபிரிக்காவில், காபொன் (80%), மொரீசியசு (78%), அல்ஜீரியா (75%), செனகல் மற்றும் ஐவரி கோஸ்ட் (70%) ஆகிய நாடுகளில் பிரான்சிய மொழி பேசுவோர் பெரும்பான்மையாக உள்ளனர். பிரான்சிய மொழியைத் தாய்மொழியாகப் பேசுவோர் 110 மில்லியன் எனவும், இரண்டாம் மொழியாகப் பேசுவோர் 190 மில்லியன் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

பிரான்சிய மொழி
பிரெஞ்சு
français
உச்சரிப்பு[fʁɑ̃sɛ]
நாடு(கள்)பிரான்சிய மொழி: புவியியல் பரம்பல், மேலும் காண்க, மேற்கோள்கள் பிரான்சு, தற்போது உலகம் முழுவதும்
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
76.8 மில்லியன்  (date missing)
321 மில்லியன் மொத்தம் (தாய்மொழி கூடுதலாக 2வது மொழியாக; 2022)
இந்திய-ஐரோப்பிய மொழிகள்
  • இத்தாலிக்
    • இலட்டினோ-பாலீஸ்கேன்
      • உரோமான்சு
        • மேற்கு உரோமான்சு
          • கல்லோ-உரோமான்சு
            • ஒயில்
              • பிரான்சிய மொழி
ஆரம்ப வடிவம்
பண்டைய இலத்தீன்
  • பாரம்பரிய இலத்தீன்
    • உலகர் இலத்தீன்
      • பண்டைய கல்லோ-உரோமான்சு
        • பண்டைய பிரான்சியம்
          • பிரான்சிய மொழி
இலத்தீன் (பிரான்சிய அரிச்சுவடி)
பிரான்சிய பிரெய்லி
கையெழுத்து வடிவம்
கையெழுத்திட்டது பிரெஞ்சு
(français signé)
அலுவலக நிலை
அரச அலுவல் மொழி



Regulated byபிரான்சிய அகாதமி (பிரான்சு)
பிரெஞ்சு மொழிக்கான கியுபெக் வாரியம் (கியூபெக்)
மொழிக் குறியீடுகள்
ISO 639-1fr
ISO 639-2fre (B)
fra (T)
ISO 639-3fra
மொழிக் குறிப்புstan1290
Linguasphere51-AAA-i
{{{mapalt}}}
  பிரான்சியம் முதன்மை மொழியாகப் பேசப்படும் பகுதிகள்
  பிரான்சியம் உத்தியோகபூர்வ மொழியாக உள்ள பகுதிகள்
  இரண்டாம் மொழியாக உள்ள பகுதிகள்
  சிறுபான்மை மொழியாக உள்ள பகுதிகள்
இக் கட்டுரை அனைத்துலக பலுக்கல் அரிச்சுவடியின் ஒலியியல் குறியீடுகளைக் கொண்டுள்ளது. முறையான அனைத்துலக பலுக்கல் அரிச்சுவடி உதவியற்று இருந்தால், நீங்கள் பெட்டி போன்ற குறியீடுகளை ஒருங்குறிக்குப் பதிலாகக் காண நேரிடலாம்.
பிரான்சிய மொழி: புவியியல் பரம்பல், மேலும் காண்க, மேற்கோள்கள்
பிரான்சிய மொழி பேசப்படும் பகுதிகள்

இத்தாலிய மொழி, போர்த்துக்கேய மொழி, எசுப்பானிய மொழி, ரோமானிய மொழி, லொம்பார்ட் மொழி, காட்டலான் மொழி, சிசிலிய மொழி, மற்றும் சார்டினிய மொழி போன்றே பிரான்சிய மொழியும் பேச்சுவழக்கு இலத்தீன் மொழியிலிருந்தே உருவானது. வடக்குப் பிரான்சிலும், பெல்ஜியத்திலும் பண்டைக்காலத்திலிருந்து பேசப்பட்டு வரும் பல மொழிகளுடன் பிரான்சிய மொழி தொடர்புபட்டுள்ளது. எனினும் இம்மொழிகளில் பல பிரான்சிய மொழியின் தாக்கத்தால் வழக்கொழிந்து போயுள்ளன. ரோமானிய கோல் பிரதேசத்தில் பேசப்பட்ட செல்டிக் மொழிகள் மற்றும் ரோமானியருக்குப் பின் பிரான்சை ஆக்கிரமித்த பிராங்கிய ஆக்கிரமிப்பாளர்களின் ஜெர்மானிக் பிராங்கிய மொழி ஆகியன் பிரான்சிய மொழியில் செல்வாக்குச் செலுத்தியுள்ளன. இன்று, பிரான்சின் குடியேற்றவாத ஆட்சியின் காரணமாக பல்வேறு பிரான்சிய மொழியின் அடிப்படையிலான கிரியோல் மொழிகள் உருவாகியுள்ளன. இவற்றுள், எயிட்டிய மொழி குறிப்பிடத்தக்கது.

பிரான்சிய மொழி 29 நாடுகளில் உத்தியோகபூர்வ மொழியாக உள்ளது. இவற்றில் பெரும்பான்மையான நாடுகள் இணைந்து லா பிரான்கோபோனீ எனும் அமைப்பைத் தோற்றுவித்துள்ளன. மேலும் இது ஐக்கிய நாடுகளின் பல்வேறு நிறுவனங்கள் மற்றும் பல்வேறு சர்வதேச அமைப்புக்கள் ஆகியவற்றில் உத்தியோகபூர்வ மொழியாக உள்ளது. பிரான்சின் வெளிநாட்டு மற்றும் ஐரோப்பிய உறவுகள் அமைச்சின் தகவலின் படி, ஐரோப்பாவில் 77 மில்லியன் மக்கள் பிரான்சியத்தைத் தாய்மொழியாகக் கொண்டுள்ளனர். பிரான்சுக்கு வெளியே பிரான்சிய மொழி பேசும் மக்கள் அதிகளவில் கனடா (மக்கள் தொகையில் 25%த்தினர், பெரும்பாலானோர் கியூபெக்கில் வசிக்கின்றனர்), பெல்ஜியம் (மக்கள்தொகையில் 45%த்தினர்), சுவிட்சர்லாந்து (மக்கள்தொகையில் 20%த்தினர்) மற்றும் லக்சம்பேர்க் ஆகிய நாடுகளில் உள்ளனர். 2013ல், அமைச்சு மேற்கொண்ட ஆய்வுகளின்படி, ஐரோப்பாவில் இரண்டாவது பெரும்பான்மை மொழியாக பிரான்சியம் உள்ளது. முதலிடத்தில் ஜெர்மானிய மொழியும் மூன்றாமிடத்தில் ஆங்கில மொழியும் உள்ளன. ஐரோப்பாவில் பிரான்சியத்தைத் தாய்மொழியாகக் கொண்டிராத, 20%மான மக்கள் பிரான்சிய மொழி பேசக்கூடியவர்களாக உள்ளனர்.[தெளிவுபடுத்துக] இது கிட்டத்தட்ட 145.6 மில்லியனாகும். 17ம் நூற்றாண்டுக்கும், 20ம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில், பிரான்சு மற்றும் பெல்ஜியம் (அவ்வேளையில் இது பிரான்சிய மொழி பேசுவோரால் ஆளப்பட்டது). ஆகியவற்றின் குடியேற்றவாத ஆட்சியின் காரணமாக, அமெரிக்காக்கள், ஆபிரிக்கா, பொலினேசியா, லிவான்ட், தென்கிழக்காசியா மற்றும் கரீபியன் பிரதேசங்களில் பிரான்சிய மொழி அறிமுகமானது.

லாவல் பல்கலைக்கழகம் மற்றும் பிரான்சிய மொழி பேசும் பல்கலைக்கழக ஒன்றியம் ஆகியன நடத்திய சனத்தொகை எதிர்வுகூறல் ஆய்வின்படி, 2025ல் 500 மில்லியன் மக்கள் பிரான்சிய மொழி பேசுவர் எனவும், 2050ல் இது 650 மில்லியன் அல்லது உலக சனத்தொகையின் 7%மாக உயரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புவியியல் பரம்பல்

ஐரோப்பா

ஐரோப்பிய ஒன்றியத்தில், தாய்மொழியாகப் பேசப்படும் மொழிகளில் பிரான்சிய மொழி நான்காம் இடத்தில் உள்ளது.

பிரான்சில் சட்டத் தகுதிநிலை

பிரான்சிய அரசியலமைப்பின்படி, 1992இலிருந்து பிரான்சிய மொழி உத்தியோகபூர்வ மொழியாகும் (எவ்வாறாயினும் இதற்கு முன்னரான சட்ட வரைவுகளில் இது உத்தியோகபூர்வ மொழியாகக் குறிப்பிடப்பட்டுள்ளது (1539இலிருந்து). பிரான்சின் உத்தியோகபூர்வ அரசாங்க வெளியீடுகள் மற்றும் பொதுக் கல்வியில் பிரான்சிய மொழி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எனினும் ஒப்பந்தங்கள் போன்ற சில இடங்களில் இவ்விதிமுறை தளர்த்தப்பட்டுள்ளது. விளம்பரங்கள் வெளிநாட்டு மொழிபெயர்ப்பொன்றைக் கொண்டிருக்கவேண்டும்.

பிரான்சிய மொழியை விட பல்வேறு பிராந்திய மொழிகளும் மொழி வழக்குகளும் காணப்படுகின்றன. பிராந்திய மொழிகளுக்கான ஐரோப்பியப் பட்டயத்தில் பிரான்சு கையெழுத்திட்டுள்ளது. எனினும், 1958ம் ஆண்டின் அரசியலமைப்புக்கு இது விரோதமாக உள்ளதால் இவ்வொப்பந்தம் நடைமுறைப்படுத்தப்படவில்லை.

சுவிட்சர்லாந்து

பிரான்சிய மொழி, சுவிட்சர்லாந்தின் நான்கு உத்தியோகபூர்வ மொழிகளில் (ஏனையன ஜெர்மன், இத்தாலியன் மற்றும் ரொமான்சு என்பன.) ஒன்றாகும். இது ரோமண்டி எனப்படும், சுவிட்சர்லாந்தின் மேற்குப் பகுதியில் பேசப்படுகிறது. இப்பகுதியிலுள்ள பெரிய நகரம் ஜெனீவா ஆகும். சுவிட்சர்லாந்தின் அரசியல் பிரிவுகளோடு மொழிப்பிரிப்பு பொருந்துவதில்லை. இதனால் சில பிரிவுகள் இரு மொழி நிலையைக் கொண்டுள்ளன. சுவிட்சர்லாந்தின் மக்கள்தொகையில் 20%த்தினர் பிரான்சியத்தைத் தாய்மொழியாகக் கொண்டுள்ளனர். மேலும் நாட்டின் மக்கள்தொகையில் 50.4%த்தினர் இம்மொழியைப் பேசுகின்றனர்.

சுவிட்சர்லாந்தின் பிரான்சிய மொழி பேசும் சமூகத்தினர், பிரான்சின் பிரான்சிய மொழியைப் போல் பேசக்கூடியோராய் உள்ளனர்.எனினும், 69க்குப் பின்னரான எண்கள் மற்றும் சில வாய்மொழிச் சொற்பிரயோகங்கள் என்பன சிறிய வேறுபாட்டைக் கொண்டுள்ளது.

பெல்ஜியம்

பிரான்சிய மொழி: புவியியல் பரம்பல், மேலும் காண்க, மேற்கோள்கள் 
பிரசெல்சிலுள்ள இருமொழிக் குறியீடுகள்.

பெல்ஜியத்தில், வல்லோனியாவில் (ஜெர்மன் மொழி பேசும் கிழக்குப் பிரதேசம் தவிர்ந்த) பிரான்சியம் உத்தியோகபூர்வ மொழியாக உள்ளது. மேலும் பிரசெல்சு தலைநகரப் பகுதியில் டச்சு மொழியுடன் இன்னொரு உத்தியோகபூர்வ மொழியாக உள்ளது. வல்லூன் மற்றும் பிரசெல்சு தலைநகரப் பகுதி ஆகியவற்றை எல்லையாகக் கொண்டிருந்தாலும் பிரான்சிய மொழியும் ஜெர்மன் மொழியும் ஃபிளெமிஷ் பகுதியில் உத்தியோகபூர்வ மொழியாகவோ அல்லது சிறுபான்மை மொழியாகவோ அங்கீகரிக்கப்படவில்லை. எனினும் இங்குள்ள சில நகரப் பிரதேசங்களில் பிரான்சிய மொழி பேசுவதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. நாட்டின் சனத்தொகையில் 40%மானோர் பிரான்சியத்தை தாய்மொழியாகக் கொண்டுள்ளனர். எஞ்சிய 60%மானோர் டச்சு மொழியைத் தாய்மொழியாகக் கொண்டுள்ளனர். இவர்களில் 59%த்தினர் பிரான்சியத்தை இரண்டாம் அல்லது மூன்றாம் மொழியாகக் கொண்டுள்ளனர். இதன்படி, பெல்ஜிய மக்கள்தொகையில் முக்கால் பங்கினர் பிரான்சிய மொழி பேசக்கூடியோராய் உள்ளனர்.

மொனாகோ மற்றும் அன்டோரா

மொனாகோவின் தேசியமொழி மொனெகாஸ்க் மொழியாக இருந்தாலும், இதன் உத்தியோகபூர்வ மொழி பிரான்சிய மொழி மட்டுமேயாகும். நாட்டின் சனத்தொகையில் 47%த்தினர் பிரான்சிய மொழிபேசுவோராவர்.

அன்டோராவின் உத்தியோகபூர்வ மொழி காட்டலான் ஆகும். எனினும், பிரான்சுக்கு அருகில் இருப்பதாலும், ஏர்ஜெலின் ஆயர் மற்றும் பிரான்சு ஆகியன அரசாங்கத்தின் ஒரு பகுதியாக இருப்பதாலும் இங்கு பிரான்சிய மொழி பயன்படுத்தப்படுகிறது. பிரான்சிய மொழி பேசுவோர் நாட்டின் மொத்தச் சனத்தொகையில் 7%மாக உள்ளனர்.

பிரான்சிய மொழி: புவியியல் பரம்பல், மேலும் காண்க, மேற்கோள்கள் 
ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரான்சிய மொழியறிவு (பெல்ஜியத்தின் சனத்தொகையில் 40%மானோர் பிரான்சியத்தைத் தாய்மொழியாகக் கொண்டோர். மேலும் 88% மக்கள் பிரான்சிய மொழியறிவுடையோர்.)

லக்சம்பேர்க்

லக்சம்பேர்க்கின் தாய்மொழியான லக்சம்பேர்கிய மொழி மற்றும் ஜெர்மன் மொழி ஆகியவற்றுடன் பிரான்சிய மொழியும் அந்நாட்டின் உத்தியோகபூர்வ மொழிகளாகும். அரசாங்கத்தின் நிர்வாக நடவடிக்கைகளில் பிரான்சிய மொழி முதன்மையாகப் பயன்படுத்தப்படுவதோடு, வெளிநாட்டவர்களுடன் தொடர்பாடுவதற்கான முதன்மை மொழியாகவும் இது உள்ளது. லக்சம்பேர்க்கின் கல்வி முறைமை மும்மொழிகளிலானது. அடிப்படைக்கல்வி லக்சம்பேர்கிய மொழியிலும் பின் ஜெர்மன் மொழியிலும், இரண்டாம் நிலைக் கல்வி பிரான்சிய மொழியிலும் நடத்தப்படும். இரண்டாம் நிலைக் கல்வியில் கணிதம் மற்றும் விஞ்ஞானம் போன்ற பாடங்களின் மொழியாக பிரெஞ்சு உள்ளது. லக்சம்பேர்க் பல்கலைக்கழகம் பிரெஞ்சு, ஜெர்மன் மற்றும் ஆங்கில மொழிகளில் பாடநெறிகளை வழங்குகிறது.

இத்தாலி

இத்தாலியின் சிறு பிரதேசமான ஓசுடாப் பள்ளத்தாக்கின் உத்தியோகபூர்வ மொழி பிரான்சியம் ஆகும். இப்பகுதியிலுள்ள இத்தாலிய மொழி பேசா மக்களில் பலர் பிரான்சிய மொழியின் ஒரு வழக்கினைப் பேசுகின்றனர். எனினும் இம்மொழிப் பிரிவுக்கான சர்வதேச முக்கியத்துவம் குறைவாக உள்ளதால் இவர்கள் பிரான்சிய மொழியையே எழுத்துத் தேவைகளுக்குப் பயன்படுத்துகின்றனர்.

ஐக்கிய இராச்சியம் மற்றும் கால்வாய்த் தீவுகள்

ஐக்கிய இராச்சியத்தின் முக்கிய சிறுபான்மை மொழியாகவும் குடிப்பெயர்வு மொழியாகவும் பிரான்சிய மொழி உள்ளது. ஐக்கிய இராச்சியத்தில் பிரான்சு மக்கள் 300,000 பேர் உள்ளனர். மேலும், ஆபிரிக்காவிலிருந்து ஐக்கிய இராச்சியத்துக்குக் குடிபெயர்ந்தோர் பலராலும் இம்மொழி பேசப்படுகிறது. மேலும், பிரான்சிய மொழி ஒரு பிரபலமான வெளிநாட்டு மொழியாகவும் கருதப்படுகிறது. 2006ம் ஆண்டின் ஐரோப்பிய ஆணையக அறிக்கையின்படி, ஐக்கிய இராச்சியத்தின் சனன்த்தொகையில் 23%மானோர், பிரான்சிய மொழியில் உரையாட வல்லவராய் உள்ளனர்.

1066ல் ஏற்பட்ட நோர்மன் படையெடுப்பைத் தொடர்ந்து, நவீன மற்றும் நடு ஆங்கிலத்தில் பண்டைய ஆங்கிலம் மற்றும் ஒயில் மொழிகளின் பிரதிபலிப்பைக் காணமுடியும். நோர்மன் மொழி பேசிய இவர்களது தாய்மொழி ஜெர்மானிக் ஆகும். ஐரோப்பாக் கண்டத்துடனான இங்கிலாந்தின் தொடர்புகள் காரணமாக நவீன ஆங்கிலத்திலுள்ள பல சொற்கள் பிரான்சியத்தின் மூலத்தைக் கொண்டுள்ளன.

ஜெர்சி மற்றும் கேர்ன்சியின் உத்தியோகபூர்வ மொழியாக பிரான்சிய மொழி உள்ளது. இவ்விரு இடங்களிலும் நிர்வாக நடவடிக்கைகள் மற்றும் விழாக்களில் பிரான்சிய மொழி ஓரளவு பயன்படுத்தப்படுகிறது.

வட மற்றும் தென்னமெரிக்கா

கனடா

பிரான்சிய மொழி: புவியியல் பரம்பல், மேலும் காண்க, மேற்கோள்கள் 
கியூபெக் பிரதேசத்தில் காணப்படும் நிறுத்தற் குறியீடு.

கனடாவில், ஆங்கில மொழிக்கு அடுத்த முதன்மை மொழியாக பிரான்சியம் உள்ளது. மேலும், இவ்விரு மொழிகளும் அரசாங்க மட்டத்தில் உத்தியோகபூர்வ மொழிகளாய் உள்ளன. கியூபெக் மாகாணத்தின் ஒரே உத்தியோகபூர்வ மொழி பிரான்சியம் ஆகும். இம் மாகாணத்தில் 7 மில்லியன் மக்கள், அதாவது சனத்தொகையின் 80.1% (2006 கணக்கெடுப்பு) மக்கள் பிரான்சியத்தைத் தாய்மொழியாகப் பேசுகின்றனர். கியூபெக்கின் 95.0%மான மக்கள் பிரான்சியத்தைத் தாய்மொழியாகவோ அல்லது இரண்டாம் மொழியாகவோ பேசுகின்றனர். பிரான்சியத்தைத் தாய்மொழியாகப் பேசுவோர் உள்ள நகரங்களில் இரண்டாமிடத்திலுள்ள மொன்றியல் நகரம் இங்கேயே அமைந்துள்ளது. உத்தியோகபூர்வமாக, இருமொழி மாகாணங்களாக நியூபிரன்சுவிக்கும், மானிட்டோபாவும் காணப்படுகின்றன. நியூபிரன்சுவிக்கின் சனத்தொகையில் மூன்றிலொரு பங்கினர் பிரான்சிய மொழி பேசுவோராய் உள்ளனர். ஆட்சிப் பகுதிகளின் (வடமேல் ஆட்சிப் பகுதிகள், நுனாவுட் மற்றும் யூகோன்) உத்தியோகபூர்வ மொழிகளில் பிரான்சிய மொழியும் ஒன்றாகும். இவற்றுள், யூகோனில் அதிகளவில் பிரான்சிய மொழி பேசுவோர் உள்ளனர். இவர்கள் கிட்டத்தட்ட 4%மாக உள்ளனர். கிழக்கு ஒன்ராரியோ, வடகிழக்கு ஒன்ராரியோ, நோவா ஸ்கோட்டியா, நியூபவுன்லாந்து மற்றும் லாப்ரடோர், அல்பேர்ட்டா மற்றும் மானிட்டோபா ஆகிய இடங்களில் குறிப்பிடத்தக்களவு பிரான்சிய சமூகத்தினர் உள்ளனர். ஒன்ராரியோ போன்ற பல மாகாணங்கள் இங்குள்ள சிறுபான்மையோருக்கு பிரான்சிய மொழியில் சேவைகளை வழங்குகின்றனர். போர்ட் ஔ போர்ட் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பிரதேசங்கள் இரு மொழி மாவட்டமாக உருவாக்கப்பட்டுள்ளது (இவ்விடங்களில் நியூபவுன்லாந்து பிரான்சியம் என்ற வழக்கு பரவலாகப் பேசப்பட்டுள்ளது).ஏனைய எல்லா மாகாணங்களிலும் சிறியளவான பிரான்சிய சமூகத்தினர் உள்ளனர்.

கிட்டத்தட்ட 9,487,500 கனேடியர்கள் அல்லது சனத்தொகையில் 30%மானோர் பிரான்சியத்தைத் தாய்மொழியாகக் கொண்டுள்ளனர். 2,065,300 பேர் பிரான்சியத்தை இரண்டாம் மொழியாகப் பேசுகின்றனர். இருமொழிப் பாடசாலைத் திட்டம் மற்றும் பிரான்சிய வகுப்புகள் போன்றவற்றால் கடந்த இரு தசாப்த காலங்களில் பிரான்சிய மொழி தெரிந்த கனேடியர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.[சான்று தேவை]

கியூபெக்கில் பேசப்படும் பிரான்சிய மொழிக்கும், பிரான்சில் பேசப்படும் பிரான்சிய மொழிக்குமான வித்தியாசம் அமெரிக்க மற்றும் பிரித்தானிய ஆங்கிலங்களுக்கிடையிலான வேறுபாட்டை ஒத்தது. பெரும்பான்மை பிரான்சிய மொழி பேசுவோர் வசிக்கும் பகுதியான கியூபெக்கில் அமைந்துள்ள பிரான்சிய மொழிக்கான கியூபெக் சபை, கியூபெக் பிரான்சியத்துக்கான நெறிமுறைகளைச் செயற்படுத்தி வருவதுடன், பிரான்சிய மொழிக்கான பட்டயம் (சட்டமூலம் 101 & 104) மதிக்கப்படுவதையும் உறுதிப் படுத்துகிறது.

எயிட்டி

எயிட்டியின் இரண்டு உத்தியோகபூர்வ மொழிகளில் பிரான்சியமும் ஒன்றாகும். எழுத்து, பாடசாலை நெறிமுறைகள் மற்றும் நிர்வாக நடவடிக்கைகளில் இது முதன்மை மொழியாகப் பயன்படுத்தப்படுகிறது. இது அனைத்து கல்விகற்ற எயித்தியர்களாலும் பேசப்படுவதுடன் வணிகத்துறையிலும் பயன்படுத்தப்படுகிறது. மேலும், திருமணம், பட்டமளிப்பு விழா மற்றும் தேவாலயப் பிரார்த்தனை போன்ற நிகழ்வுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நாட்டின் மக்கள்தொகையில் 10-15%மானோர் பிரான்சியத்தைத் தமது தாய்மொழியாகக் கொண்டுள்ளனர். ஏனையோர் இதனை இரண்டாம் மொழியாகப் பேசுகின்றனன்ர். இரண்டாவது உத்தியோகபூர்வ மொழி அண்மையில் தரப்படுத்தப்பட்ட, எயித்தியின் அனைத்து மக்களும் பேசும் எயித்திய கிரியோல் ஆகும். எயித்திய கிரியோல் என்பது பிரான்சியத்தை அடிப்படையாகக் கொண்ட கிரியோல் மொழிகளில் ஒன்றாகும். இதிலுள்ள பெரும்பாலான சொற்கள் பிரான்சிய மொழியிலிருந்து பெறப்பட்டுள்ளதோடு, மேற்கு ஆபிரிக்க மொழிகள் மற்றும் சில ஐரோப்பிய மொழிகளின் தாக்கத்தையும் கொண்டுள்ளன. எயித்திய கிரியோல் மொழியானது லூசியானா கிரியோல் மற்றும் ஏனைய பிரான்சிய கிரியோல் மொழிகளுடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டுள்ளது.

எழுத்து முறைகள்

எழுத்துகள்

பிரான்சிய எழுத்துக்கள் தலைப்பு எழுத்துக்கள்
A
B பே
C சே
D தே
E
F எஃப்
G ஷ்ஜே
H ஆஷ்
I
J ஷ்ஜி
K
L எல்
M எம்
N என்
O
P பே
Q குய்
R எற்
S எஸ்
T தே
U உய்
V வே
W தூப்ள-வே
X இக்ஸ்
Y இ-க்ரேக்
Z இஜத்

எண்கள்

தமிழ் எண்கள் பிரெஞ்சு எண்கள் உச்சரிப்பு
ஒன்று un (m)/une (f) அ (ஆண்)/யுன் (பெண்)
இரண்டு deux தெ
மூன்று trois த்ருஆ
நான்கு quarte கார்த்
ஐந்து cinq சேங்க்
ஆறு six ஸீஸ்
ஏழு sept செப்த்
எட்டு huit உய்த்
ஒன்பது neuf நெஃப்
பத்து dix தீஸ்
பதினொன்று onze ஓன்ஸ்
பதினெண்டு douze தூஸ்
பதிமூன்று treize த்ரெய்ஸ்
பதினான்கு quatorze கத்தோர்ஸ்
பதினைந்து quinze கைன்ஸ்
பதினாறு seize செய்ஸ்
பதினேழு dix-sept தீஸ்-செப்த்
பதினெட்டு dix-huit தீஸ்-உய்த்
பத்தொன்பது dix-neuf தீஸ்-நெஃப்
இருபது vingt வேன்

வார்த்தைகள்

ஆங்கிலத்தில் பிரான்சியத்தில் உச்சரிப்பு
பிரான்சியம் Français ஃப்ரா(ன்)ஸே
ஆங்கிலம் Anglais ஆங்லே
தமிழ் Tamoul தமூல்
ஆம் Oui வி
இல்லை Non நோ
ஹலோ Salut ! "Allô" ஸல்யூ
காலை வணக்கம் Bonjour ! போ(ன்) ஷூர்
மாலை வணக்கம் Bonsoir ! போ(ன்) ஸ்வார்
இரவு வணக்கம் Bonne nuit ! போ(ன்) ந்வி
காதல் Amour அமூர்
தயவுசெய்து S’il vous plaît ஸில்-வு-ப்லே
நன்றி Merci மெர்ஸி
நல்வரவு Bienvenue பியா-வென்யூ
மன்னிக்கவும் Pardon / Désolé / Je suis désolé / Excusez-moi / "Je regrette" பார்தொ(ன்)/திஸோலெ
யார்? Qui ? கி
என்ன? Quoi ? க்வா
எங்கே? Où ?
எப்போது? Quand ? கா
ஏன்? Pourquoi ? பூர்குவா
உன் பெயர் என்ன? Comment vous appelez-vous ? கோமோ வூ அப்பலே வூ
என் பெயர் ... Je m'appelle... ஷ மப்பல்...
ஏனெனில் Parce que பார்ஸ் கு
இதனால் Donc தோங்க்
எப்படி? Comment ? கோமோ
எவ்வளவு? Combien ? கோம்பியா
எனக்கு புரியவில்லை Je ne comprends pas. ஷ ந காம்ப்ரோ பா
எனக்கு புரிகிறது Oui, je comprends. வி, ஷ காம்ப்ரோ
நீங்கள் ஆங்கிலம் பேசுவீர்களா? Parlez-vous (l') anglais ? பார்லே வூ ஆங்லே?
எனக்கு பிரான்சியம் பேச தெரியாது Je ne parle pas français. ஷ ந பார்ல் பா ஃப்ராஸே
எனக்கு தெரியாது Je (ne) sais pas. ஷ (ந) ஸே பா
எனக்கு தெரியும் Je sais. ஷ ஸே
எப்படி இருக்கிறாய்? Comment allez-vous ? Comment ça va ? கோமோந்த்த்தலே வூ? கோமோ ஸ வா?
நன்றாக இருக்கிறேன் Je vais (très) bien. Ça va (très) bien. ஷ வே (த்ரே) பியா. ஸ வா (த்ரே) பியா
நான் உன்னை காதலிக்கிறேன் Je vous aime, Je t'aime ஷ வூஸ்ஸெம், ஷ த்தெம்

மேலும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

பிரான்சிய மொழி: புவியியல் பரம்பல், மேலும் காண்க, மேற்கோள்கள் 
Wiki
கட்டற்ற கலைக்களஞ்சியம் விக்கிபீடியாவின் பிரான்சிய மொழிப் பதிப்பு

Tags:

பிரான்சிய மொழி புவியியல் பரம்பல்பிரான்சிய மொழி மேலும் காண்கபிரான்சிய மொழி மேற்கோள்கள்பிரான்சிய மொழி வெளி இணைப்புகள்பிரான்சிய மொழிஉதவி:IPA/Frenchசுவிட்சர்லாந்துபடிமம்:Fr-le français-fr-ouest.oggபிரான்சு

🔥 Trending searches on Wiki தமிழ்:

தீபிகா பள்ளிக்கல்கா. ந. அண்ணாதுரைஇரட்டைக்கிளவிபிரேமலுமறைமலை அடிகள்சைவத் திருமுறைகள்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024முன்னின்பம்தமிழ்நாடு காவல்துறைதமிழிசை சௌந்தரராஜன்மாமல்லபுரம்சேரர்இந்திய வரலாறுகருக்காலம்சேக்கிழார்தமிழக வரலாறுஅண்ணாமலையார் கோயில்ஔவையார்விழுப்புரம் மக்களவைத் தொகுதிஅறுபடைவீடுகள்அன்னி பெசண்ட்ஔவையார் (சங்ககாலப் புலவர்)மகேந்திரசிங் தோனிமுத்தரையர்மயில்பெரும்பாணாற்றுப்படைமாணிக்கம் தாகூர்ஈ. வெ. இராமசாமிபத்து தலதிருமணம்மட்பாண்டம்பரதநாட்டியம்புனர்பூசம் (நட்சத்திரம்)இந்தியக் குடியியல் பணிகள் தேர்வுஉருவக அணிவரலாறுஅகமுடையார்இந்தியாவின் உயிர்க்கோளக் காப்பகங்கள்ஒட்டகம்நாடாளுமன்றம்கல்லீரல்வேற்றுமை (தமிழ் இலக்கணம்)பெரம்பலூர் மக்களவைத் தொகுதிபெ. ஜான் பாண்டியன்சட் யிபிடிநீதி இலக்கியம்விசயகாந்துஇந்தியக் குடியுரிமை (திருத்தச்) சட்டம் 2019சித்தன்னவாசல் குகை ஓவியங்கள்ஐம்பெருங் காப்பியங்கள்அவதாரம்சுனில் நரைன்தொகாநிலைத் தொடர்துரைமுருகன்மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தமிழ்நாடுதிணை விளக்கம்சுரதாகும்பகோணம்இராமலிங்க அடிகள்சிவாஜி (பேரரசர்)செங்குந்தர்நாலடியார்தருமபுரி மக்களவைத் தொகுதிமிதாலி ராஜ்கண்ணாடி விரியன்இணையம்ஆசாரக்கோவைமோகன்தாசு கரம்சந்த் காந்திசத்ய பிரதா சாகுஇந்திய அரசியலமைப்பின் முகப்புரைஎடப்பாடி க. பழனிசாமிவைப்புத்தொகை (தேர்தல்)அறுசுவைபொன்னியின் செல்வன்நாடார்உவமையணிவிஜயநகரப் பேரரசுவீரன் சுந்தரலிங்கம்வ. உ. சிதம்பரம்பிள்ளை🡆 More