பன்னாட்டுக் காற்பந்துச் சங்கங்களின் கூட்டமைப்பு

பன்னாட்டுக் கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு

பன்னாட்டுக் காற்பந்தாட்டக் கழகங்களின் கூட்டமைப்பு
உருவாக்கம்மே 21, 1904
வகைவிளையாட்டுக் கூட்டமைப்பு
தலைமையகம்சூரிச், சுவிட்சர்லாந்து
உறுப்பினர்கள்
211 தேசியக் கழகங்கள்
ஆட்சி மொழி
ஆங்கிலம், பிரெஞ்சு, செருமன், எசுப்பானியம்,
தலைவர்
Sepp Blatter
வலைத்தளம்www.fifa.com

FIFA - The Federation of International Football Association.

(பிரெஞ்சு மொழி: FIFA - Fédération Internationale de Football Association) என்பது கழகக் காற்பந்தாட்ட விளையாட்டுக்கான உலகம் தழுவிய கட்டுப்பாட்டு அமைப்பு ஆகும். இது பொதுவாக "ஃபிஃபா" என அறியப்படுகிறது. இப்பெயர், இக் கூட்டமைப்பின் பிரெஞ்சு மொழிப் பெயரான "Fédération Internationale de Football Association" என்பதன் சுருக்க வடிவம் ஆகும். இதன் தலைமையகம், சுவிட்சர்லாந்தின் தலைநகரமான சூரிச் நகரில் அமைந்துள்ளது. உலக அளவில் நடைபெறும் முக்கியமான காற்பந்துப் போட்டிகளை ஒழுங்கு செய்து கட்டுப்படுத்தும் பொறுப்பு இவ்வமைப்பைச் சாரும். இவற்றுள் முக்கியமானது "உலகக்கோப்பை காற்பந்து" (FIFA World Cup) ஆகும். இது 1930 ஆம் ஆண்டிலிருந்து நடைபெற்று வருகிறது. இக் கூட்டமைப்பில் 211 தேசியக் காற்பந்தாட்டக் கழகங்கள் உறுப்பினராக உள்ளன.

கட்டமைப்பு

பன்னாட்டுக் காற்பந்துச் சங்கங்களின் கூட்டமைப்பு 
உலக வரைபடத்தில் ஆறு கால்பந்துக் கூட்டமைப்புகள்.

ஃபிஃபா சுவிட்சர்லாந்தின் சட்டங்களுக்கு உட்பட்டு நிறுவப்பட்ட ஓர் சங்கமாகும். இதன் தலைமையகம் சூரிக்கு நகரில் உள்ளது.

ஃபிஃபாவின் முதன்மையான அமைப்பு ஃபிஃபா பேராயம் ஆகும். இது ஃபிஃபாவில் உறுப்பினராக இணைந்துள்ள ஒவ்வொரு கால்பந்துச் சங்கத்தின் சார்பாளர்கள் அடங்கிய மன்றம் ஆகும். 1904 முதல் இதுவரை இப்பேராயம் 66 முறைகள் கூடியுள்ளது. தற்போது சாதாரண அமர்வாக ஒவ்வொரு ஆண்டும் ஒருமுறை கூடுகிறது. கூடுதலாக சிறப்பு அமர்வுகள் 1998 முதல் ஆண்டுக்கு ஒருமுறை நடக்கின்றன. கூட்டமைப்பின் ஒழுங்குபடுத்தும் சட்டங்கள், அவற்றின் தாக்கங்கள், செயலாக்கங்கள் குறித்து பேராயத்தில் விவாதிக்கப்பட்டு முடிவுகள் எடுக்கப்படுகின்றன.இப்பேராயம் மட்டுமே கூட்டமைப்பு சட்டங்களில் மாற்றங்களை நிறைவேற்ற முடியும். மேலும் பேராயம் ஆண்டு அறிக்கையை ஏற்றுக்கொள்ளுதல், புதிய தேசிய சங்கங்களை ஏற்றுக் கொள்ளுதல், தேசிய சங்கங்களில் தேர்தல்கள் நடத்துவது போன்ற செயல்களுக்கு பொறுப்பாகின்றது. உலகக்கோப்பை காற்பந்து நடந்ததற்கு அடுத்த ஆண்டில் இப்பேராயம் ஃபிஃபாவின் தலைவர், பொதுச்செயலாளர் மற்றும் ஃபிஃபா செயற்குழு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றது. நாட்டின் அளவு அல்லது கால்பந்து வலிமையைக் கருதாது ஒவ்வொரு தேசிய கால்பந்துச் சங்கத்திற்கும் சீராக ஒரு வாக்கு அளிக்க உரிமை உள்ளது.

ஃபிஃபாவின் முதன்மை அலுவலர்களாக தலைவரும் பொதுச்செயலாளரும் செயல்படுகின்றனர். ஏறத்தாழ 280 ஊழியர்கள் பணிபுரியும் பொதுச் செயலகத்தின் உதவியுடன் இவர்கள் நாளுக்கு நாள் நிர்வாகத்தை நடத்துகின்றனர். ஃபிஃபா தலைவரின் தலைமையில் கூடும் ஃபிஃபாவின் செயற்குழு பேராயத்திற்கிடையேயான காலத்தில் முதன்மையான முடிவுகளை எடுக்கும் பொறுப்பை மேற்கொள்கிறது. ஃபிஃபாவின் உலகளாவிய அமைப்புசார் கட்டமைப்பில் பல நிலைக் குழுக்களை செயற்குழுவும் பேராயமும் ஏற்படுத்துகின்றன. அவற்றில் நிதிக் குழு, ஒழுங்கு நிலைநாட்டல் குழு, நடுவர்கள் குழு என்பன சிலவாகும்.

தனது உலகளாவிய கட்டமைப்பைத் தவிர (தலைமையகம், செயற்குழு, பேராயம்...) ஃபிஃபா உலகின் பல்வேறு கண்டங்களிலும் வட்டாரங்களிலும் கால்பந்தாட்டத்தை மேலாண்மையிட ஆறு கூட்டமைப்புகளை அங்கீகரித்துள்ளது. தேசியச் சங்கங்கள் மட்டுமே ஃபிஃபாவின் உறுப்பினர்களாவர்; கண்ட கூட்டமைப்புகளல்ல. இருப்பினும் இந்த கண்டக் கூட்டமைப்புகள் ஃபிஃபாவின் சட்டங்களில் இணைக்கப்பட்டுள்ளதால், கண்டக் கூட்டமைப்பில் அத்தேசிய சங்கம் உறுப்பினராக இருப்பது ஃபிபாவில் உறுப்பினராக முற்படு தேவையாக உள்ளது.

மொத்தமாக, ஃபிஃபா 209 தேசிய சங்கங்களையும் அவர்களது ஆடவர் அணிகளையும் அங்கீகரித்துள்ளது; 129 மகளிர் அணிகளை அங்கீகரித்துள்ளது. ஃபிஃபாவில் ஐக்கிய இராச்சியத்தின் உள்நாடுகள், பாலத்தீனம் போன்ற 23 அங்கீகரிக்கப்படாத அமைப்புக்களையும் நாடுகளாக ஏற்றுக்கொள்வதால் ஐக்கிய நாடுகளை விட கூடுதலான உறுப்பினர்கள் உள்ளனர். ஃபிஃபாவில் உறுப்பினராகாத ஒன்பது இறையாண்மையுள்ள நாடுகளாவன:மொனக்கோ,வாத்திகன் நகரம்,ஐக்கிய இராச்சியம், மைக்ரோனேசியா, மார்ஷல் தீவுகள், கிரிபாத்தி, துவாலு, பலாவு, நயாரு

குறிப்புகள்

வெளி இணைப்புகள்

Tags:

🔥 Trending searches on Wiki தமிழ்:

திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்தேசிய உழவர் நாள்கொடைக்கானல்சிறுத்தைபாட்டுக்கு ஒரு தலைவன்பாரத ரத்னா108 வைணவத் திருத்தலங்கள்தலைவி (திரைப்படம்)முன்மார்பு குத்தல்சித்த மருத்துவம்தேம்பாவணிஐங்குறுநூறுகளத்தில் சந்திப்போம்விசயகாந்துகுடும்பம்அம்மனின் பெயர்களின் பட்டியல்சூரைஇராம. வீரப்பன்பி. காளியம்மாள்சிறுபஞ்சமூலம்தமிழச்சி தங்கப்பாண்டியன்சிதம்பரம் நடராசர் கோயில்கர்ணன் (மகாபாரதம்)திருவாஞ்சியம் வாஞ்சிநாதசுவாமி கோயில்தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005வல்லினம் மிகும் இடங்கள்சங்க காலப் புலவர்கள்இந்தியன் பிரீமியர் லீக்குற்றாலக் குறவஞ்சிகே. ஆர். விஜயாசெவ்வாய் (கோள்)தமிழ் மன்னர்களின் பட்டியல்தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 2014ஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோயில்முதல் மரியாதைதிருச்சிராப்பள்ளி மக்களவைத் தொகுதிஅலாவுதீன் கில்சிபாட்ஷாகொன்றைகருத்தரிப்புபனைஎஸ். பி. பாலசுப்பிரமணியம்நான் அவனில்லை (2007 திரைப்படம்)இயேசு காவியம்பொருநராற்றுப்படைநம்ம வீட்டு பிள்ளைதமிழ்நாடு காவல்துறைபதிற்றுப்பத்துஐக்கிய நாடுகள் அவைஆடு ஜீவிதம்கடல்உலக நாடுகள் பட்டியல் (கண்டங்கள் வாரியாக)வேற்றுமை (தமிழ் இலக்கணம்)பாண்டியன் ஸ்டோர்ஸ் (தொலைக்காட்சித் தொடர்)விழுப்புரம் மக்களவைத் தொகுதிபெருவிருப்ப கட்டாய மனப்பிறழ்வுதிருவோணம் (பஞ்சாங்கம்)ஆ. ராசாகோயில்டுவிட்டர்சித்திரைமழைநீர் சேகரிப்புகுணங்குடி மஸ்தான் சாகிபுமன்னார்குடி ராசகோபால சுவாமி கோயில்கருக்கலைப்புகுருதி வகைசாருக் கான்ஏப்ரல் 11எஸ். ஜானகிமாதவிடாய்அம்லோடிபின்புதுமைப்பித்தன்சூரரைப் போற்று (திரைப்படம்)அண்ணாமலை குப்புசாமிவரலட்சுமி சரத்குமார்விடுதலைச் சிறுத்தைகள் கட்சிடிராபிக் ராமசாமிமயிலாடுதுறை மக்களவைத் தொகுதி🡆 More