கழுதைப்புலி: அனைத்துண்ணி விலங்கு

கழுதைப்புலி புதர் மற்றும் முட்காடுகளில் தனியாக அலைந்து திரிந்து இரை தேடும் ஓர் அனைத்துண்ணி விலங்காகும்.

கழுதைப்புலி Striped Hyena
புதைப்படிவ காலம்:Pliocene - Recent
கழுதைப்புலி: பெயர்கள், உடல் அமைப்பு, உள்சிற்றினங்கள்
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
கழுதைப்புலியினம் (Hyaenidae)
பேரினம்:
கழுதைப்புலி, Hyaena
இனம்:
H. hyaena
இருசொற் பெயரீடு
Hyaena hyaena
(லின்னேயஸ், 1758)
கழுதைப்புலி: பெயர்கள், உடல் அமைப்பு, உள்சிற்றினங்கள்
கழுதைப்புலி காணப்படும் இடங்கள் பச்சை நிறத்தில்

இவ்விலங்கு இந்தியா, ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் பாகிஸ்தான் உட்பட பல நாடுகளில் காணப்படுகிறது. இவ்விலங்குகள் ஒரே இடத்தில் வசிக்காதவை; ஒரு நீர் நிலையிலிருந்து மற்றொரு நீர்நிலையைத் தேடி அலைந்து திரிந்துகொண்டிருக்கும்.

பெயர்கள்

கழுதைப்புலிக்கு கடுவாய், என்புதின்றி, கொடுவாய், தரக்கு, புலிக்குடத்தி, கழுதைக்குடத்தி, கழுதைக்குறத்தி, வங்கு என்ற பிற பெயர்களும் வழங்கி வந்துள்ளன.

உடல் அமைப்பு

கழுதைப்புலி: பெயர்கள், உடல் அமைப்பு, உள்சிற்றினங்கள் 
கழுதைப்புலியின் மண்டை ஓடு

கழுதைப்புலி் உடலின் மேற்பகுதி சாம்பல் நிறத்திலான மயிற்போர்வையை கொண்டிருக்கும். இதன் உடல் முழுவதும் கறுப்பு நிறத்திலான 5 முதல் 9 வரை அடர்த்தியான வரிகள் காணப்படும். இதன் முகமுன்பகுதி, பிடரி மயிர்கள், தோள்பட்டை மற்றும் காதுகள் கறுப்பு நிறத்திலானவை. இவ்விலங்கு அச்சத்திலோ அல்லது சினத்திலோ அல்லது மற்ற விலங்கை பயமுறுத்தவோ தன் உடல் மயிர்களை செங்குத்தாக நிமிர்த்தும் ("சிலிர்க்கும்"), அப்பொழுது இதன் உருவம் இயல்பாக எப்பொழுதும் உள்ள அளவைவிட 30 முதல் 40 விழுக்காடு வரை பெரிதாக காணப்படும். இந்நடத்தை மற்ற கழுதைப்புலிகளை எதிர்க்கவும் பயன்படுத்தப்படுகின்றது.

கழுத்திற்கு கீழ் பகுதியில் கறுப்பு நிறத்திலான தொண்டை தோல்திட்டு ஒன்று காணப்படும். இதன் கால்கள் மிகவும் நீளமானவை. இதன் மயிர் அடர்த்தியான வால்கள் பின்னங்கள் வரை நீண்டவை. இந்தியாவில் காணப்படும் கழுதைப்புலிகள் 1.2 முதல் 1.45 மீட்டர் உயரமும், 26 முதல் 41 கிலோ எடையும் கொண்டவை. ஆண் மற்றும் பெண் கழுதைப்புலிகளின் உடல் அமைப்பில் வேறுபாடுகள் கிடையாது.

உள்சிற்றினங்கள்

கழுதைப்புலிகள் Hyaena hyaena என்ற சிற்றினத்தில் 5 உள்சிற்றினங்கள் உண்டு. இவ் உள்சிற்றினங்கள், மயிற்போர்வை மற்றும் மற்ற உடல் அளவுகளால் வேற்றுமைப்படுத்தப்படுகின்றது.

உள்சிற்றினங்களும் அவை வாழும் பகுதிகளும்:

  • Hyaena hyaena syriaca; மத்திய கிழக்கு
  • Hyaena hyaena sultana; அரபு நாடுகள்
  • Hyaena hyaena dubbah; வடகிழக்கு ஆப்பிரிக்கா
  • Hyaena hyaena barbara (de Blainville, 1844); வடமேற்கு ஆப்பிரிக்கா
  • வரிக் கழுதைப்புலி (லின்னேயஸ், 1758); இந்தியா

பரவலும் வாழிடமும்

கழுதைப்புலிகள் ஆப்பிரிக்கக் கண்டத்தில் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளிலும், மத்திய கிழக்கு நாடுகளிலும், ஆசியக் கண்டத்தில் பாகிஸ்தான் மற்றும் இந்தியாவில் காணப்படுகிறது. கழுதைப்புலிகள் ஐரோப்பியக் கண்டத்திலிருந்து அற்றுப்போய்விட்டது என்றாலும் அனடோலியா மற்றும் துருக்கியில் அரிதாகக் காணப்படுகிறது. இவ்விலங்கு புதர் மற்றும் உட்காடுகளை தன் வாழ்விடமாகக் கொண்டது.

சூழியல்

கழுதைப்புலி: பெயர்கள், உடல் அமைப்பு, உள்சிற்றினங்கள் 
கழுதைப்புலிகள் ஒரு குதிரையின் சடலத்தை உண்ணுகின்றன - வரைந்தவர் வால்டர் ஹெபாக் (1865–1923)

இவை வேட்டையாடி உண்ணும் திறன் கொண்டிருப்பினும் பெரும்பாலும் பிற கொன்றுண்ணிகள் விட்டுச்செல்லும் எச்சங்களையே தின்னும், மேலும் சிறு விலங்குகள், பழங்கள் மற்றும் பூச்சிகளையும் தின்னும். தமிழகத்தின் சத்தியமங்கலம் பகுதியில் கழுதைப்புலிகளின் உணவைப் பற்றிய சமீபத்திய ஆராய்ச்சிகள், இவை புள்ளி மான், முயல் மற்றும் கால்நடைகளை உண்பதாக தெரிவிக்கின்றது. சில நேரங்களில் கூட்டமாக வேட்டையாடும்..

இனப்பெருக்கம்

கழுதைப்புலி வருடம் முழுவதும் இனப்பெருக்கம் செய்யும் விலங்காகும். பெண் கழுதைப்புலிகள் 2-3 வருடங்களில் பருவமடைந்து இனப்பெருக்கத்திற்கு தயராகும். இதன் பேறுகாலம் 88 முதல் 92 நாட்களாகும். தாய் கழுதைப்புலி குட்டிகளை பெரும்பாலும் குகைகளில் ஈன்றெடுக்கும். பொதுவாக 1 முதல் 5 குட்டிகள் வரை ஈனும். குட்டிகள் பிறந்த 30 நாட்களுக்குப் பிறகு மாமிச உணவை உட்கொள்ள ஆரம்பிக்கும்.

காப்பு நிலை

இந்தியாவில் கழுதைப்புலிகளின் உயிர்தொகையை பற்றிய கணக்குகள் ஏதுமில்லை. கழுதைப்புலிகள் மனித பிணக்குகளே இவ்விலங்கின் வாழ்விற்கு மிகவும் அபாயமான அச்சுறுத்தலாகும். இவ்விலங்கு காடுகளுக்கு அருகிலுள்ள குடியிருப்புகளிலுள்ள கால்நடைகளை தாக்குவதால், இவை மனிதர்களால் கொல்லப்படுகின்றன. மேலும் இவ்விலங்கின் உடலுறுப்புகள் மருத்துவ குணம் கொண்டவை என்ற மூடநம்பிக்கையால், இவை சட்டத்திற்கு புறம்பாக வேட்டையாடப்படுகின்றன. இதன் வாழ்விட சீர்கேடுகளும் இவ்விலங்கின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்குகிறது.

இவை இந்தியாவிற் காணப்படும் இடங்கள்

முதுமலை புலிகள் காப்பகம் (தமிழ் நாடு)

சத்தியமங்கலம் காடுகள் (தமிழ் நாடு)

சிகூர் சமவெளி (தமிழ் நாடு)

நீலகிரி வனச்சராகம்-வடக்கு பகுதி (தமிழ் நாடு)

களக்காடு மற்றும் முண்டந்துறை புலிகள் காப்பகம் (தமிழ் நாடு) - இங்கு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது

பந்திப்பூர் புலிகள் காப்பகம் (கர்நாடகா)

சஞ்சய் டுபிரி வனவிலங்கு சரணாலயம் (மத்தியப் பிரதேசம்)

வெலவாடார் தேசிய பூங்கா (குஜராத்)

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்


Tags:

கழுதைப்புலி பெயர்கள்கழுதைப்புலி உடல் அமைப்புகழுதைப்புலி உள்சிற்றினங்கள்கழுதைப்புலி பரவலும் வாழிடமும்கழுதைப்புலி சூழியல்கழுதைப்புலி இனப்பெருக்கம்கழுதைப்புலி காப்பு நிலைகழுதைப்புலி இவை இந்தியாவிற் காணப்படும் இடங்கள்கழுதைப்புலி மேற்கோள்கள்கழுதைப்புலி வெளி இணைப்புகள்கழுதைப்புலிஅனைத்துண்ணிஆப்பிரிக்காஇந்தியாபாகிஸ்தான்மத்திய கிழக்கு நாடுகள்

🔥 Trending searches on Wiki தமிழ்:

கலித்தொகைசோளம்திருநெல்வேலிசூல்பை நீர்க்கட்டிநாட்டு நலப்பணித் திட்டம்இரட்டைக்கிளவிகண்ணகிசிறுநீர்ப்பைசுந்தர காண்டம்இலங்கையின் பொருளாதாரம்அருந்ததியர்ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம்பறவைசிறுகதைபிள்ளைத்தமிழ்கே. எல். ராகுல்பாரதிய ஜனதா கட்சிநோட்டா (இந்தியா)ஆற்றுப்படைவேதம்இந்திய அரசியல் கட்சிகள்ஐங்குறுநூறுமோகன்தாசு கரம்சந்த் காந்திகூலி (1995 திரைப்படம்)பாரிசிங்கப்பூர் உணவுதமிழர் பண்பாடுதிராவிட மொழிக் குடும்பம்நீர் பாதுகாப்புஇந்தியப் பிரதமர்காடழிப்புகௌதம புத்தர்இந்திய செஞ்சிலுவைச் சங்கம்மாதவிடாய்சுபாஷ் சந்திர போஸ்தென்னிந்தியாசிலப்பதிகாரம்திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில்இலட்சம்தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005தமிழக சுற்றுலாத் தலங்களின் பட்டியல்சைவ சமயம்திருமந்திரம்ரவைஅருணகிரிநாதர்வண்ணம் (யாப்பு)அழகர் கோவில்காதல் கொண்டேன்தற்குறிப்பேற்ற அணிசிலம்பம்முத்துராமலிங்கத் தேவர்உயிரளபெடைஅத்தி (தாவரம்)யாதவர்காடுஈ. வெ. இராமசாமிதஞ்சாவூர்இராமலிங்க அடிகள்சதுரங்க வேட்டை 2 (திரைப்படம்)ஜலியான்வாலா பாக் படுகொலைமஞ்சள் காமாலைஇராமர்தமிழ்ப் புத்தாண்டுகாளை (திரைப்படம்)தேவநேயப் பாவாணர்உயிரியற் பல்வகைமைஅந்தமான் நிக்கோபார் தீவுகள்திணை விளக்கம்குறை ஒன்றும் இல்லை (பாடல்)நாணயம்சிவபெருமானின் பெயர் பட்டியல்சுயமரியாதை இயக்கம்தமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியல்பொன்னுக்கு வீங்கிகோயம்புத்தூர் மக்களவைத் தொகுதிமருதமலை முருகன் கோயில்அம்பேத்கர்உ. வே. சாமிநாதையர்நான் அவனில்லை (2007 திரைப்படம்)🡆 More