தாமிரபரணி ஆறு

பொருநை அல்லது தன்பொருனை என அழைக்கப்படும் தாமிரபரணி ஆறு நெல்லை மாவட்டம் பாபநாசம் மேற்குதொடர்ச்சி மலைப் பகுதியில் தோன்றி தூத்துக்குடி மாவட்டம் பழையகாயலில் சங்குமுகம் அருகே கடலில் கலக்கிறது.

இவ்வாறு நெல்லை–தூத்துக்குடி மாவட்ட மக்களின் குடிநீர் தேவையைத் தீர்த்து, வேளாண்மைக்கும் பயன்பட்டு வருகிறது.

தாமிரபரணி
பொருநை
தாமிரபரணி ஆறு
ஆத்தூர் பாலத்தில் இருந்து பொருநை ஆறு
அமைவு
நாடுதாமிரபரணி ஆறு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்திருநெல்வேலி, தூத்துக்குடி
நகரங்கள்திருநெல்வேலி, அம்பாசமுத்திரம் , விக்கிரமசிங்கபுரம்,பாளையங்கோட்டை
சிறப்புக்கூறுகள்
மூலம்பொதியம்
 ⁃ ஆள்கூறுகள்8°36′07″N 77°15′51″E / 8.601962°N 77.264131°E / 8.601962; 77.264131
முகத்துவாரம் 
 ⁃ அமைவு
மன்னார் வளைகுடா
 ⁃ ஆள்கூறுகள்
8°38′29″N 78°07′38″E / 8.641316°N 78.127298°E / 8.641316; 78.127298
நீளம்128 கிமீ (80 மைல்)
வெளியேற்றம் 
 ⁃ அமைவுதிருவைகுண்டம்
 ⁃ சராசரி32 கனமீ/செ (1,100 கன அடி/செ)
வடிநில சிறப்புக்கூறுகள்
துணை ஆறுகள் 
 ⁃ இடதுகாரையாறு, சேர்வலாறு, கடனாநதி, சிற்றாறு
 ⁃ வலதுமணிமுத்தாறு, பச்சையாறு
தாமிரபரணி ஆறு
பாணதீர்த்தம் அருவி

பொருநையின் போக்கு

பொதிகை மலையிலிருந்து உருவாகி பாண தீர்த்தம், கலியாண தீர்த்தம், அகத்தியர் தீர்த்தம் முதலிய புண்ணிய தீர்த்தங்களைக் கடந்து பாபநாசம் என்ற ஊர் வழியாக வருகிறது தாமிரபரணி.தூத்துக்குடி மாவட்டம் பழைய காயலில் சங்குமுகத்தில் கடலில் இணைகிறது.

வரலாறு

கல்யாண தீர்த்தம்

முன்னொரு காலத்தில் கைலாயத்தில் சிவபெருமானுடைய திருக்கல்யாணத்தைத் தரிசிக்கச் சென்ற தேவர்கள் முனிவர்கள் முதலியோர் கூட்டத்தைத் தாங்கமாட்டாது வடதிசை தாழ்ந்து தென்திசை உயர அதைச்சமன் செய்யுமாறு திருவுளங்கொண்டு அகத்திய முனிவரை அழைத்து தென் திசைக்கு ஏகும்படிச் சிவபெருமான் கட்டளையிட, அவ்வாணையின்படி பொதிய மலைக்கு எழுந்தருளீய அகத்தியருக்கு கையிலையிலிருந்த தம்முடைய திருக்கல்யாணக் கோலத்தைக் காட்சி கொடுத்தருளியது பாபநாசம் என்னும் இத்தலத்தில் என கூறப்படுகிறது. பாபநாசத்திற்கு மேற்கே ஒரு மைல் தூரத்தில் உள்ள அருவி இதனால் 'கல்யாண தீர்த்தம்' என்று பெயர் பெற்றது.

மகாபாரதத்தில் தாமிரபரணி

பொதிகை மலையில் தோன்றி வங்கக்கடலில் கலக்கும் இந்த ஆறு 70 மைல் நீளமுடையது. வடமொழியில் உள்ள மகாபாரதத்தில்,

என்று ஒரு முனிவர் தர்மனைப் பார்த்துச் சொல்வதாக ஒரு பாடல் உண்டு. காளிதாசனின் ரகு வம்சத்திலும் தாமிரபரணி கடலில் கலக்கும் இடத்தில் விளைந்த உயர்தர முத்துக்களைக் கொண்டு வந்து ரகுவின் காலடியில் பணிந்ததாக ஒரு பாடல் உண்டு.

பிற நாட்டு ஆராய்ச்சியாளர்கள் பார்வையில் தாமிரபரணி

இதன் ஒரு துணையாறு சிற்றாறு குற்றால அருவியாக விழுகிறது. "உலகத்திலேயே மிக அருமையானதும், தூய்மையானதுமான நீராடுதுறை குற்றாலமே என்று துணிந்து கூறுதல் சற்றும் மிகையாகாது"என்று கால்டுவெல் எழுதுகிறார்.

இராமாயணத்தில் தாமிரபரணி

தாமிரபரணி தமிழகத்தின் ஒரே, வற்றாத ஆண்டு முழுவதும் நீரோடும் ஆறாகும் . இது பொதிகை மலையில் உள்ள மூலிகைகளின் நற்குணங்களையும் கொண்டுள்ளது. வால்மீகி இராமாயணத்தில் கிட் கிந்தா காண்டம் 41 ஆம் சருக்கத்தில் சில சுலோகங்கள் உள்ளன. அதில் ஒன்று

அதஸ்யாஸ்னம் நகல்யாக்ரே மலயங்ய தாம்ரபரணம் க்ராஹ ஜிஷ்டாம்த்ரச்யத்

அதாவது மலை சிகரத்தில் (பொதிகை) அமர்ந்தவர் அகத்திய முனிவர். தாமிரபரணி ஆறு முதலைகள் நிறைந்தது என்று பொருளாகும்.

தாமிரபரணியும் தமிழர் நாகரிகமும்

திருநெல்வேலி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் கடந்த வருட துவக்கத்தில் மிகப் பழமை வாய்ந்த புதைந்து போயிருந்த நாகரிகத்தின் அடையாளங்கள் கண்டெடுக்கப்பட்டன; அவை, அந்த இடம் மக்கள் கூடி வாழ்ந்த நாகரிகம் செறிந்த ஊரின் எல்லா அடையாளங்களையும் கொண்டிருந்ததாக அறியப்பட்டது. பண்டைக்காலத்தில், 'பொருநை' ஆறு (தாமிரபரணி) தமிழர்களின் நாகரீகப் படிநிலைகளில் முக்கிய இடத்தைக் கொண்டிருந்ததை நமது பண்டை இலக்கியங்கள் வாயிலாகவும், வரலாற்றுக் குறிப்புகள் வாயிலாகவும் அறிய முடியும்.

துணையாறுகள்

துணையாறு தொலைவு உற்பத்தி சேருமிடம் தாமிரபரணி அதுவரை கடந்திருந்த தொலைவு
காரையாறு களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் காரையாறு அணை 6 கிலோமீட்டர்கள் (4 mi)
சேர்வலாறு களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் பாபநசம் சரணாலயம் 22 கிலோமீட்டர்கள் (14 mi)
மணிமுத்தாறு 9 கிலோமீட்டர்கள் (6 mi) மாஞ்சோலை மலை ஆலடியூர் 36 கிலோமீட்டர்கள் (22 mi)
கடனாநதி அகத்தியமலை உயிரிக்கோளம் திருப்புடைமருதூர் 43 கிலோமீட்டர்கள் (27 mi)
பச்சையாறு 32 கிலோமீட்டர்கள் (20 mi) களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் தருவை 61 கிலோமீட்டர்கள் (38 mi)
சிற்றாறு 80 கிலோமீட்டர்கள் (50 mi) குற்றாலம் அருவிகள் சீவலப்பேரி 73 கிலோமீட்டர்கள் (45 mi)

தாமிரபரணி பாசனமும், அணைக்கட்டுகளும்

தாமிரபரணியின் இருபுறமும் பாசனம் செழிக்க முதல் ஏழு அணைக்கட்டுகளும் கால்வாய்களும் பண்டைய கால அரசர்களினால் அமைக்கப்பட்டிருந்தன. கடைசியாக 1869ல் ஆங்கிலேயர் காலத்தில் சிறீவைகுண்டம் அணைக்கட்டு கட்டப்பட்டது.

எண் அணைக்கட்டின் பெயர் பதிவுசெய்யப்பட்ட
ஆயக்கட்டு
(ஹெக்டரில்)
கால்வாயின் பெயிர்
1. கோடைமேழளகியான் அணைக்கட்டு 1281.67 1. தெற்கு கோடைமேழளகியான் கால்வாய்

2. வடக்கு கோடைமேழளகியான் கால்வாய்

2. நதியூன்னி அணைக்கட்டு 1049.37 நதியூன்னி கால்வாய்
3. கனடியன் அணைக்கட்டு 2266.69 கனடியன் கால்வாய்
4. அரியநாயகிபுரம் அணைக்கட்டு 4767.30 கோடகன் கால்வாய்
5. பழவூர் அணைக்கட்டு 3557.26 பாளையம் கால்வாய்
6. சுத்தமல்லி அணைக்கட்டு 2559.69 திருநெல்வேலி கால்வாய்
7. மருதூர் அணைக்கட்டு 7175.64 1. மருதூர் மேலக்கால்

2. மருதூர் கீழக்கால்

8. சிறீவைகுண்டம் அணைக்கட்டு 1. தெற்கு முதன்மை அணைக்கட்டு

2. வடக்கு முதன்மை அணைக்கட்டு

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

தாமிரபரணி ஆறு பொருநையின் போக்குதாமிரபரணி ஆறு வரலாறுதாமிரபரணி ஆறு துணையாறுகள்தாமிரபரணி ஆறு தாமிரபரணி பாசனமும், அணைக்கட்டுகளும்தாமிரபரணி ஆறு மேற்கோள்கள்தாமிரபரணி ஆறு வெளி இணைப்புகள்தாமிரபரணி ஆறுகடல்குடிநீர்தூத்துக்குடிநெல்லைபாபநாசம்வேளாண்மை

🔥 Trending searches on Wiki தமிழ்:

உயர் இரத்த அழுத்தம்அகத்திணைஆசிரியப்பாபிரீதி (யோகம்)கண்ணாடி விரியன்கட்டுவிரியன்அளபெடைசித்த மருத்துவம்ஆய்வுஆண் தமிழ்ப் பெயர்கள்தினமலர்ராஜீவ் காந்தி பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம்வேலையில்லா பட்டதாரி (திரைப்படம்)செயங்கொண்டார்இரசினிகாந்துஓடி விளையாடு பாப்பா (பாரதியார் பாடல்)தமிழர் அளவை முறைகள்கார்ல் மார்க்சுகாரைக்கால் அம்மையார்உலா (இலக்கியம்)ஐந்திணைகளும் உரிப்பொருளும்வணிகம்இரைச்சல்விண்டோசு எக்சு. பி.பிள்ளையார்வெண்பாதமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021ஜெயகாந்தன்அன்னை தெரேசாபறையர்தமிழர் அணிகலன்கள்கண் (உடல் உறுப்பு)வீரப்பன்தஞ்சைப் பெருவுடையார் கோயில்வேலுப்பிள்ளை பிரபாகரன்திருவாசகம்பதிவேற்றம் மற்றும் பதிவிறக்கம்சிவன்புனித ஜார்ஜ் கோட்டைதிருவிழாவன்கொடுமைத் தடுப்புச் சட்டம்வே. செந்தில்பாலாஜிஆண்டுஅறுபடைவீடுகள்முகம்மது நபிசேரன் செங்குட்டுவன்புதிய ஏழு உலக அதிசயங்கள்வன்னியர்டி. என். ஏ.சப்ஜா விதைமயங்கொலிச் சொற்கள்வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாதர் கோயில்தமிழர்பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில்மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்பூப்புனித நீராட்டு விழாமுருகன்தமிழ் விக்கிப்பீடியாபோதைப்பொருள்மியா காலிஃபாகடையெழு வள்ளல்கள்நிதி ஆயோக்வேதநாயகம் பிள்ளைநாச்சியார் திருமொழிமெய்யெழுத்துதொடை (யாப்பிலக்கணம்)இராமானுசர்மதுரை நாயக்கர்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தாஜ் மகால்இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்களின் பட்டியல்அருந்ததியர்குண்டலகேசிஉமறுப் புலவர்அங்குலம்ஜிமெயில்நற்கருணைசோமசுந்தரப் புலவர்🡆 More