தாவரம் ஏலம்

ஏலம் (Elettaria cardamomum) என்னும் மருந்துச்செடி இஞ்சிச் செடிக் குடும்பத்தைச் (Zingiberaceae) சேர்ந்த ஒரு செடியினம்.

ஏலம்
Cardamom
தாவரம் ஏலம்
ஏலம் (Elettaria cardamomum)
உயிரியல் வகைப்பாடு
திணை:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
Commelinids
வரிசை:
இஞ்சிவரிசை
குடும்பம்:
Genera
  • Amomum
  • Elettaria

இஞ்சிக் குடும்பத்தில் உள்ள இரண்டு பேரினங்கள்: சிறிய ஏலக்காய் எலெட்டாரியா (Elettaria), பெரிய ஏலக்காய் அமோமம் (Amomum). இவை இரண்டும் மணம் மிக்க கரிய விதைகளும், அதனைச் சூழ்ந்த மென்புறத் தோலும் முப்பட்டகமான மேல்தோலும் கொண்ட காய்களைக் கொண்டவை. எலெட்டாரியாவின் காய்கள் இளம்பச்சை நிறமுடையவை, ஆனால் அமோமம் காய்கள் பெரியதாகவும் அடர் பழுப்பு நிறத்திலும் உள்ளவை.

இத்தகை ஏலக்காய், இந்திய துணைக் கண்டத்தில் உணவில் வாசனைக்காக பயன்படுத்தப்படுகிறது.

தாவரம் ஏலம்
சிறிய, பச்சை நிறமுடைய எலெட்டாரியா வகை ஏலமும் பெரிய, அடர் பழுப்பு நிறம் கொண்ட அமோமம் வகை ஏலமும்
தாவரம் ஏலம்
எலெட்டாரியா ஏலக்காயின் கறுப்பு விதைகள்

ஏலக்காயின் பயன்கள்

  • உணவு மற்றும் நீர்ம பொருள்களின் அகில்களாக (நறுமணப் பொருளாக)
  • சமையலின் நறுமணமாக
  • ஏலக்காய் எண்ணெய் பதப்படுத்தப்பட்ட உணவு, நீர்ம, மற்றும் வாசனைப் பொருள்களிலும் பயன்படுத்தப்படுகிறது.
  • தமிழர்கள் உருவாக்கும் தேநீர்களில் ஒரு மணம் சேர்ப்பதற்கு
  • வட இரோப்பாவில் இனியங்களில் ஓர் இன்றியமையாத உள் பொருளாக

மருத்துவ குணங்கள்

1. மருத்துவத்தில் பல் மற்றும் அதனை சார்ந்த நோய்களுக்கு மருந்தாக 2. செரிமானத்தை தூண்டுவதாக 3. குரல் வளை மற்றும் தோல் தொடர்பான பிரச்சினைகளுக்கு 4. மலட்டுத்தன்மை மற்றும் அரைகுறை விந்து வெளிப்படுதலை தீர்ப்பதற்கு

ஏலக்காய் உற்பத்தி செய்யும் நாடுகள்

தாவரம் ஏலம் 
ஏலக்காய்

மிகையான உற்பத்தியை இந்தியத் துணைக்கண்டம் அண்மைவரை தக்க வைத்திருந்தாலும், ஏலக்காய் ஏற்படும் நோய்களால் முதலிடத்தை குவாத்தமாலா(Guatemala) விடம் இழந்துள்ளது. இந்தியாவில் 60% உற்பத்தி கேரளாவிலும், 30% கர்நாடகாவிலும் மீதம் தமிழ் நாட்டிலும் உற்பத்தி செய்யப்படுகிறது. உற்பத்தி செய்யும் நாடுகள், BUSCHNEGER

ஏற்றுமதி

உலக நாடுகளின் இடையே ஒரு ஆண்டில் 35000 மெட்ரிக் டன் ஏலக்காய் உற்பத்தி செய்யப்படுகிறது. மேலும் 1200 மெட்ரிக் டன் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

மிகையாக ஏற்றுமதி செய்யும் நாடுகள்:

1. கோஸ்ட்டா ரிக்கா
2. குவாத்தமாலா
3. இந்தோனேசியா
4. பிரேசில்
5. நைஜீரியா
6. இந்தியா
7. தாய்லாந்து
8. நிக்கராகுவா
9. தென் ஆபிரிக்கா

ஏலத் தாவரத்தைத் தாக்கும் தீ நுண்மம்

ஏல மொசைக் (mosaic) தீ நுண்மம், ஏலத் தாவரத்தைத் தாக்கி அதன் விளைச்சலைக் குறைக்கின்றது. இந்நுண்மம் ஓரிழை ஆர்.என்.ஏ கொண்ட , நேர்வகை இழை (+ strand virus) தீநுண்மம் ஆகும். இவை போட்டிவிரிடீ (Potyviridae) என்னும் செடிகொடி தீநுண்மக் குடும்பத்தில், மெக்ளாரா தீநுண்மம் (genus Macluravirus ) என்னும் பேரினத்தில் உள்ள ஒன்றாகும். தமிழ்நாட்டில் கோயம்புத்தூருக்கு அருகே உள்ள வால்பாறையில் இருந்து கர்நாடகா வரை காணப்படும் ஏலக்காய் பயிரில் பெரும் தாக்கங்களை ஏற்படுத்துவதோடு, அதன் ஆர்.என்.ஏ வரிசையில் சில வேறுபாடுகளை கொண்டுள்ளதாக மதுரை காமராசர் பலகலைகழகத்தில் ஆய்வு செய்து வரும் பேராசிரியர் உசா அவர்களின் குழு கண்டுபிடித்துள்ளது. இத்தீநுண்மதிற்கு எதிராக நோய் எதிர்ப்பு தன்மை மிக்க மரபணு மாற்றப்பட்ட பயிரை கொண்டு வருவதற்காகவும் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார்.

மேலும் படிக்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

தாவரம் ஏலம் ஏலக்காயின் பயன்கள்தாவரம் ஏலம் மருத்துவ குணங்கள்தாவரம் ஏலம் ஏலக்காய் உற்பத்தி செய்யும் நாடுகள்தாவரம் ஏலம் ஏற்றுமதிதாவரம் ஏலம் ஏலத் தாவரத்தைத் தாக்கும் தீ நுண்மம்தாவரம் ஏலம் மேலும் படிக்கதாவரம் ஏலம் மேற்கோள்கள்தாவரம் ஏலம் வெளி இணைப்புகள்தாவரம் ஏலம்இஞ்சிக் குடும்பம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

தீபிகா பள்ளிக்கல்சீரடி சாயி பாபாஎட்டுத்தொகைமங்காத்தா (திரைப்படம்)ம. பொ. சிவஞானம்இட்லர்விளையாட்டுதமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்தேஜஸ்வி சூர்யாதேவாங்குராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம்ஐங்குறுநூறு - மருதம்குலசேகர ஆழ்வார்பெருமாள் திருமொழிசேமிப்புடாக்டர். முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டம்சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில்இலிங்கம்மரவள்ளிவிஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல்வ. உ. சிதம்பரம்பிள்ளைசங்க காலப் பெண்பாற் புலவர்கள்மட்பாண்டம்ரெட் (2002 திரைப்படம்)கொடைக்கானல்விஜய் (நடிகர்)நுரையீரல் அழற்சிமுன்னின்பம்மதுரைகன்னியாகுமரி மாவட்டம்அயோத்தி தாசர்வெ. இராமலிங்கம் பிள்ளைஅதிமதுரம்புனித யோசேப்புபத்து தலபாரத ரத்னாமுத்தரையர்திருநங்கைபரதநாட்டியம்தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல், 2019முத்துராமலிங்கத் தேவர்பாவலரேறு பெருஞ்சித்திரனார்மரபுச்சொற்கள்ஆத்திசூடிஇராமலிங்க அடிகள்ம. கோ. இராமச்சந்திரன்கடல்திருப்பாவைவிடுதலை பகுதி 1சமுத்திரக்கனிவைர நெஞ்சம்குறவஞ்சிகண்ணதாசன்ஆய்த எழுத்துமதுரை நாயக்கர்காசோலைஉத்தரகோசமங்கைகில்லி (திரைப்படம்)கேழ்வரகுநஞ்சுக்கொடி தகர்வுநீதிக் கட்சிஅயோத்தி இராமர் கோயில்மறைமலை அடிகள்கிருட்டிணன்இலக்கியம்சிதம்பரம் நடராசர் கோயில்ராஜீவ் காந்தி பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம்அன்பே ஆருயிரே (2005 திரைப்படம்)முடிவேதம்தமிழ்த் திரைப்பட நடிகைகளின் பட்டியல்திருப்பதிதிருமூலர்சப்ஜா விதைஇந்திய தேசியக் கொடிசீர்காழி சட்டைநாதசுவாமி கோயில்ஆண்டாள்திருவிழாஅன்னை தெரேசா🡆 More