அப்துல்ரசாக் குர்னா

அப்துல்ரசாக் குர்னா (Abdulrazak Gurnah; பிறப்பு: 20 திசம்பர் 1948) ஐக்கிய இராச்சியத்தைச் சேர்ந்த புதின எழுத்தாளர் ஆவார்.

இவர் 1960களில் சான்சிபார் நாட்டில் இருந்து சான்சிபார் புரட்சியின் போது வெளியேறி அகதியாக ஐக்கிய இராச்சியத்தில் குடியேறினார். இவர் 1994 இல் எழுதிய சொர்க்கம் என்ற புதினம் மான் புக்கர் பரிசுக்குப் பரிந்துரைக்கப்பட்டது. இவருக்கு 2021 ஆம் ஆண்டுக்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

அப்துல்ரசாக் குர்னா
Abdulrazak Gurnah
குர்னா (மே 2009)
குர்னா (மே 2009)
பிறப்புஅப்துல்ரசாக்
20 திசம்பர் 1948 (1948-12-20) (அகவை 75)
சான்சிபார் (இன்றைய தான்சானியா)
கல்விகான்டர்பரி கிறைஸ்ட் சர்ச் பல்கலைக்கழகம் (இளங்கலை)
கெண்ட் பல்கலைக்கழகம் (முதுநிலை, முனைவர்)
வகைபுதினம்
குறிப்பிடத்தக்க படைப்புகள்
  • சொர்க்கம் (1994)
  • கைவிடல் (2005)
குறிப்பிடத்தக்க விருதுகள்இலக்கியத்திற்கான நோபல் பரிசு (2021)

வாழ்க்கைக் குறிப்பு

அப்துல்ரசாக் குர்னா 1948 திசம்பர் 20 இல் இன்றைய தான்சானியாவில் உள்ள சான்சிபார் சுல்தானகத்தில் பிறந்தார். சான்சிபார் புரட்சியின் போது அரபு மக்களுக்கெதிரான துன்புறுத்தலை அடுத்து, இவர் தனது 18-வது அகவையில் நாட்டை விட்டு வெளியேறினார். 1968 இல் இவர் ஏதிலியாக இங்கிலாந்து வந்து சேர்ந்தார்.

இங்கிலாந்து கான்டர்பரி கிறைஸ்ட் சர்ச் கல்லூரியில் கல்வி கற்று இலண்டன் பல்கலைக்கழகத்தின் பட்டத்தைப் பெற்றுக் கொண்டார்.. பின்னர் கெண்ட் பல்கலைக்கழகத்தில் 1982 இல் மேற்கு ஆப்பிரிக்கப் புதினங்களின் விமர்சனத்தின் அளவுகோல் என்பதில் ஆய்வு மேற்கொண்டு முனைவர் பட்டத்தைப் பெற்றார். 1980 முதல் 1983 வரை நைஜீரியாவில் உள்ள பயேரோ பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகப் பணியாற்றினார். பின்னர் இளைப்பாறும் வரை கெண்ட் பல்கலைக்கழகத்தின் ஆங்கில மொழித் துறையில் பேராசிரியராகப் பணியாற்றினார்.

விருதுகளும் சிறப்புகளும்

கருப்பொருள்

குர்னாவின் பெரும்பாலான படைப்புகள் கிழக்கு ஆப்பிரிக்காவின் கரையோரப் பகுதிகளை மையப்படுத்தி எழுதப்பட்டுள்ளன. இவரது புதினங்களில் ஒருவரைத் தவிர கதாநாயகர்கள் அனைவரும் சான்சிபாரில் பிறந்தவர்கள். குர்னாவின் புதினங்கள் கிழக்கு ஆப்பிரிக்க கதாநாயகர்களை அவர்களின் பரந்த சர்வதேச சூழலில் வைக்கின்றன என்று இலக்கிய விமர்சகர் புரூஸ் கிங் வாதிடுகிறார். எழுத்தாளர் ஐ. சாந்தன் தனது 'உள்ளங்கையில் உலக இலக்கியம்' (2010) என்ற நூலில் "குர்ணாவின் 'அமைதியை நாடுதல்' என்ற புதினம் இடப்பெயர்வு, பண்பாட்டு அடையாளங்கள் போன்றவற்றைப் பேசுகிறது," என்று குறிப்பிட்டுள்ளார்.

மேற்கோள்கள்

உசாத்துணைகள்

வெளி இணைப்புகள்

Tags:

அப்துல்ரசாக் குர்னா வாழ்க்கைக் குறிப்புஅப்துல்ரசாக் குர்னா விருதுகளும் சிறப்புகளும்அப்துல்ரசாக் குர்னா கருப்பொருள்அப்துல்ரசாக் குர்னா மேற்கோள்கள்அப்துல்ரசாக் குர்னா உசாத்துணைகள்அப்துல்ரசாக் குர்னா வெளி இணைப்புகள்அப்துல்ரசாக் குர்னாஇலக்கியத்திற்கான நோபல் பரிசுஐக்கிய இராச்சியம்சான்சிபார்மான் புக்கர் பரிசு

🔥 Trending searches on Wiki தமிழ்:

சிலம்பம்ஆனந்தம் விளையாடும் வீடுஐராவதேசுவரர் கோயில்அஇஅதிமுக தலைமையிலான கூட்டணிஅம்பேத்கர்கல்லணைஇராமலிங்க அடிகள்மோகன்தாசு கரம்சந்த் காந்திவேதாத்திரி மகரிசிதேசிக விநாயகம் பிள்ளைதூத்துக்குடி மக்களவைத் தொகுதிசட்டமன்ற உறுப்பினர் (இந்தியா)ஆவுடையார் கோயில் ஆத்மநாதசுவாமி கோயில்செம்மொழிஎஸ். சத்தியமூர்த்திதண்டியலங்காரம்அரண்மனை (திரைப்படம்)லைலத்துல் கத்ர்நாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்யானைஅதிமதுரம்சிறுபஞ்சமூலம்குருகருப்பை நார்த்திசுக் கட்டிமக்காதெலுங்கு மொழிநாயன்மார் பட்டியல்போயர்மங்கோலியாபனைமு. கருணாநிதிநாலடியார்சிறுகதைதிமிரு புடிச்சவன் (திரைப்படம்)கொடுமுடி மகுடேசுவரர் கோயில்குறிஞ்சி (திணை)மதுரை மக்களவைத் தொகுதிவிவேக் (நடிகர்)பாண்டியர்நான்மணிக்கடிகைசன் தொலைக்காட்சி நாடகத் தொடர்கள் பட்டியல்கருப்பசாமிஅருணகிரிநாதர்2024 இந்தியப் பொதுத் தேர்தல்ஆடுஜீவிதம் (திரைப்படம்)கலம்பகம் (இலக்கியம்)ராசாத்தி அம்மாள்பாண்டவர்பதிற்றுப்பத்துதமிழ் நாடு மாநிலத் தேர்தல் ஆணையர்சிறுநீரகம்திருக்குர்ஆன்கட்டுவிரியன்அக்கி அம்மைகாமராசர்சுற்றுலாதகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005வரிபேரூராட்சிஎலுமிச்சைகிராம நத்தம் (நிலம்)தைராய்டு சுரப்புக் குறைஇடலை எண்ணெய்வல்லினம் மிகும் இடங்கள்இந்திய ரூபாய்ம. பொ. சிவஞானம்இரண்டாம் உலகப் போர்அல் அக்சா பள்ளிவாசல்மூலிகைகள் பட்டியல்இந்திய தேசியக் கொடிவன்னியர்சித்த மருத்துவம்நவக்கிரகம்திருவண்ணாமலைகருப்பைதங்கர் பச்சான்கீர்த்தி சுரேஷ்காம சூத்திரம்உப்புச் சத்தியாகிரகம்🡆 More