அகண்ட சீனா

அகண்ட சீனா (ஆங்கிலத்தில்: Greater China) அல்லது அகண்ட சீன பிராந்தியம் என்றழைக்கப்படும் சொல் சீனாவின் நிலப்பகுதி, ஹாங்காங், தாய்வான், மக்காவு ஆகியவற்றை ஒரே பகுதியாகக் குறிக்கப் பயன்படுத்தும் சொல்லாகும்.

தற்போது இந்தச் சொற்றொடருக்குத் துல்லியமான அர்த்தம் முற்றிலும் தெளிவாக எதுவுமில்லை என்றபொழுதும், மக்கள் வணிகத் தொடர்புகள் அல்லது கலாச்சார நடவடிக்கைகளுக்காக மட்டும் பயன்படுத்துகின்றனர். இந்த வார்த்தை பொதுவாக அரசியல் ரீதியாக குறிக்கப்படுவதில்லை, மாறாக பல்வேறு பூகோளப் பகுதிகள் இடையேயுள்ள பொதுவான தொடர்புகளை, உதாரணமாக சீன மொழியில் வெளிவரும் தொலைக்காட்சி, திரைப்படம் மற்றும் இசை பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் போன்றவற்றின் மூலம் "அகண்ட சீனாவிற்கிடையேயுள்ள" கலாச்சார தொடர்புகளை குறிக்கப் பயன்படுகிறது. மேலும் இந்த வார்த்தை பொருளாதார மேம்பாடு ஆகியவற்றில், அகண்ட சீனா பிராந்தியத்துடன் "கவனமையம் தைவான்"(Focus Taiwan) என ஒருங்கிணைந்து அறிக்கையளிக்கிறது. இந்த சொற்றோடர் பூகோள ரீதியாக குறிப்பதில் வேறுபடலாம்.

அகண்ட சீனா
அகண்ட சீனாவின் நவீன வடிவம் மஞ்சள் நிறத்தில்     

அகண்ட சீனா என்ற சொற்றோடர் பொதுவாக ஒத்த பிரதேசங்களுக்கிடையேயுள்ள கலாச்சார மற்றும் பொருளாதார உறவுகளையே குறிக்கிறது, மாறாக அரசுரிமையைக் குறிப்பதில்லை. அரசியல் உட்கருத்துக்களை தவிர்க்கும் வண்ணம், "அகண்ட சீனா" என்ற சொற்றோடருக்கு பதிலாக "சீனமொழி-பேசும் உலகம்" அல்லது "சீனோபோன் உலகம்" என்ற சொற்றோடர்கள் அதிகம் உபயோகிக்கப்படுகிறது.

வரலாறு

அகண்ட சீனா 
1944ல் வெளிவந்த அமெரிக்க பிரச்சாரப் படம் "சீனா போரில்" குறிப்பிடப்பட சீன வரைபடம் 'முறையான சீனாவை' மங்கோலியா, மஞ்சுரியா, திபெத் மற்றும் சிஞ்சியாங் பகுதிகளிலிருந்து வேறுபடுத்துகிறது.

1930-ல் ஜார்ஜ் கெரஸ்சி, சீன பேரரசுவைக் குறிக்க முறையான சீனாவிற்கு பதிலாக அகண்ட சீனா என்ற சொற்றோடரைப் பயன்படுத்தினார்.. 1970களின் பிற்பகுதியில் 'மெயின் லேண்ட் சீனா' மற்றும் 'ஹாங்காங்' இடையே அதிகரித்துவரும் வணிகத் தொடர்புகள் மட்டுமின்றி தைவானுடன் அதிகரிக்கவிருக்கும் வாய்ப்புகளினால், 1979ல் தைவான் பத்திரிக்கை 'சாங்கியோ'வில் முதலில் இந்த சொற்றோடர் மேற்கோள்காட்டப்பட்டது. 1980களில் இந்த சொற்றோடர் இந்த பிராந்தியங்களுக்கிடையே வளர்ந்துவரும் பொருளாதார உறவுகளை மட்டுமின்றி அரசியல் ஒருங்கிணைப்பின் சாத்தியக்கூறுகளையும் குறிக்கப் புதுப்பிக்கப்பட்டது. இது ஐரோப்பிய ஒன்றியம் அல்லது ஆசியான் அமைப்புகளைப் போன்று நிறுவனமயமாக்கப்படவில்லை. பொருளாதார ரீதியாக சில சந்தைகளை பொதுமைப்படுத்தும் இந்த கருத்தாக்கம் அரசியல் ரீதியாக குறிப்பதாக அர்த்தப்படாது.

நிதிப் பயன்பாடு

நிதிச் சூழலில், பல கிரேட்டர் சீனா பங்குகள் உள்ளன. உதாரணமாக, 'ஐஎன்ஜி கிரேட்டர் சீனா பங்கு'-தனில் 80சதவீத சொத்துக்கள் கிரேட்டர் சீனா என்றழைக்கப்படும் மெயின்லேண்ட் சீனா, ஹாங்காங் மற்றும் தைவானில் முதலீடு செய்துள்ளது. அதேபோன்று டிரைபஸ் கிரேட்டர் சீன பங்குகள்' கிரேட்டர் சீனா என்றழைக்கப்படும் பகுதிகளான மெயின்லேண்ட் சீனா, ஹாங்காங் மற்றும் தைவானில் சொத்துக்கள் மற்றும் வணிகங்களை மேற்கொள்ளும் நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளது. கிரேட்டர் சீனாவை உள்ளடக்கிய சொத்துக்களில் முதலீடு செய்திருந்த 'ஹெச்பிசி கிரேட்டர் சீனா பங்குகள்', 2009க்கு பிறகு தைவான் பிராந்திய சொத்துக்களை கைவிட்டபின்பு 'ஹெச்பிசி சீனா பிராந்திய பங்குகள்' எனப் பெயரிடப்பட்டது.. இப்படி எண்ணற்ற உதாரணங்கள் உண்டு.

இந்தியாவுடன் முரண்பாடு

மேற்கே அக்சாய் சின் என்றழைக்கப்படும் இந்தியாவின் லடாய் பிராந்தியத்தின் ஒரு பகுதி சீனாவின் சிஞ்சியாங் பிராந்தியத்தின் தன்னாட்சி பகுதியாக சீனாவால் நிர்வகிக்கப்படுகிறது. மற்றுமொரு சர்ச்சைக்குள்ள பகுதி மெக் மோகன் எல்லைக்கு தென்புறமுள்ள அருணாச்சலப் பிரதேசம் பகுதியை சீனா தனது என்று உரிமை கோருகிறது. 1975ல் இந்தியாவின் வரைபடத்தில் குறிக்கப்பட்ட சிக்கிம் மாநிலத்தினை சீனா ஏற்கவில்லை, பின்பு இது 2003ல் இந்திய-சீன குறிப்பாணையில் ஏற்கப்பட்டது. சீன வெளியறவுத் துறை தனது பிராந்தியந்துக்குட்பட்ட பகுதிகளிலிருந்து சிக்கிமை நீக்கியது.

சான்றுகள்

Tags:

அகண்ட சீனா வரலாறுஅகண்ட சீனா நிதிப் பயன்பாடுஅகண்ட சீனா இந்தியாவுடன் முரண்பாடுஅகண்ட சீனா சான்றுகள்அகண்ட சீனாதாய்வான்மக்காவுஹாங்காங்

🔥 Trending searches on Wiki தமிழ்:

தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சிவகங்கை மக்களவைத் தொகுதிநிதி ஆயோக்இந்திய அரசியலமைப்பின் சிறப்பு அம்சங்கள்கமல்ஹாசன்மக்களாட்சிகேழ்வரகுமகாபாரதம்பிரபுதேவாவால்ட் டிஸ்னிதிரு. வி. கலியாணசுந்தரனார்முகம்மது நபியின் இறுதிப் பேருரைஆகு பெயர்கொல்லி மலைதிண்டுக்கல் மக்களவைத் தொகுதிபெங்களூர்ஆசாரக்கோவைகருப்பை நார்த்திசுக் கட்டிநம்மாழ்வார் (ஆழ்வார்)அமெரிக்க ஐக்கிய நாடுகள்நாட்டார் பாடல்ஓம்சிறுதானியம்குருத்து ஞாயிறுமுடக்கு வாதம்புங்கைசீறாப் புராணம்மதுரை மக்களவைத் தொகுதிவிருதுநகர் மக்களவைத் தொகுதிவி. சேதுராமன்உரைநடைஇங்கிலாந்தின் முதலாம் எலிசபெத்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்ஜெயம் ரவிவிஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல்வரைகதைமொழிபெயர்ப்புபுதினம் (இலக்கியம்)வேளாண்மைமூலிகைகள் பட்டியல்உயர் இரத்த அழுத்தம்திருப்பூர் மக்களவைத் தொகுதிபிரேசில்லொள்ளு சபா சேசுடைட்டன் (துணைக்கோள்)சிங்கப்பூர்பாரதிதாசன்சுப்பிரமணிய பாரதிசரத்குமார்அண்ணாதுரை (திரைப்படம்)முதலாம் இராஜராஜ சோழன்கன்னியாகுமரி மாவட்டம்இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாராவெந்து தணிந்தது காடுஅதிமதுரம்இலட்சம்ம. பொ. சிவஞானம்திருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோயில்கம்பராமாயணம்தேனி மக்களவைத் தொகுதிஆங்கிலம்பாடுவாய் என் நாவேபுறநானூறுஇராபர்ட்டு கால்டுவெல்சனீஸ்வரன்பெயர்ச்சொல்ஆண் தமிழ்ப் பெயர்கள்கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதிபொருநராற்றுப்படைபங்குச்சந்தைகருப்பைவீரப்பன்ஆடுவல்லினம் மிகும் இடங்கள்தமிழ்நாட்டின் மாநகராட்சிகள்சிவபெருமானின் பெயர் பட்டியல்ரோபோ சங்கர்சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்🡆 More