புரூணை

புரூணை (மலாய் மொழி: Negara Brunei Darussalam; ஆங்கிலம்: Brunei Darussalam; சாவி: Jawi: نݢارا بروني دارالسلام) என்பது போர்னியோ தீவில் அமைந்துள்ள ஒரு நாடு ஆகும்.

இதன் வடக்கில் தென் சீனக் கடல் உள்ளது. இதர பாகங்களில் மலேசியாவின் சரவாக் மாநிலத்தால் சூழப்பட்டுள்ளது. சுல்தான்களால் ஆளப்படும் இந்த நாடு 1984 சனவரி 1-ஆம் தேதி ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலைப் பெற்றது.

புரூணை
Brunei Darussalam
بروني دارالسلام
கொடி of
கொடி
சின்னம் of
சின்னம்
குறிக்கோள்: "Always in service with God's guidance"  (இறைவனின் துணை கொண்டு எப்போதும் சேவையில்)
நாட்டுப்பண்: Allah Peliharakan Sultan
இறைவன் சுல்தானுக்கு ஆசீர்வாதம் வழங்குவாராக
அமைவிடம்
தலைநகரம்
மற்றும் பெரிய நகரம்
பண்டார் செரி பகவான்
ஆட்சி மொழி(கள்)மலாய்
மக்கள்புரூணையர்
அரசாங்கம்இசுலாமிய சுல்தானிய முடியாட்சி
• சுல்தான்
அசனல் போல்கியா
விடுதலை
• பிரித்தானிய இராச்சியத்திலிருந்து
சனவரி 1 1984
பரப்பு
• மொத்தம்
5,765 km2 (2,226 sq mi) (172ஆவது)
• நீர் (%)
8.6
மக்கள் தொகை
• 2020 மதிப்பிடு
460,345
• அடர்த்தி
65/km2 (168.3/sq mi) (127-ஆவது)
மொ.உ.உ. (கொ.ஆ.ச.)2022 மதிப்பீடு
• மொத்தம்
$33.389 பில்லியன் (125-ஆவது)
• தலைவிகிதம்
$74,952 (29-ஆவது)
மமேசு (2007)0.838
அதியுயர் · 47-ஆவது
நாணயம்புரூணை டாலர் (BND)
நேர வலயம்ஒ.அ.நே+8.1
அழைப்புக்குறி673
இணையக் குறி.bn
  1. Also 080 from East Malaysia

சரவாக் மாநிலத்தின் லிம்பாங் மாவட்டத்தால் இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. போர்னியோவில் ஒரே இறையாண்மை கொண்ட நாடு புரூணை மட்டுமே. போர்னியோ தீவின் எஞ்சிய பகுதி மலேசியா மற்றும் இந்தோனேசியா நாடுகளுக்கு இடையே பிரிக்கப்பட்டுள்ளது.

புரூணை அரசாங்கம் அதன் சுல்தானால் ஆளப்படும் ஒரு முழுமையான முடியாட்சியாகும். யாங் டி-பெர்துவான் என்று அழைக்கப்படுகிறார். இந்த நாடு ஆங்கில பொதுச் சட்டம்; சரியா சட்டம் மற்றும் பொது இசுலாமிய நடைமுறைகளின் கலவையைச் செயல்படுத்துகிறது.

பொது

புரூணை பேரரசின் உச்சத்தில், சுல்தான் போல்கியா (1485-1528 ஆட்சி) போர்னியோவின் பெரும்பாலான பகுதிகளின் மீது கட்டுப்பாட்டைக் கொண்டு இருந்ததாகக் கூறப்படுகிறது.

இன்றைய சரவாக் மற்றும் சபா, அத்துடன் போர்னியோவின் வடகிழக்கு முனையில் உள்ள சுலு தீவுக்கூட்டம் (Sulu Archipelago) உட்பட பல பகுதிகள் புரூணை பேரரசின் ஆளுமையின் கீழ் இருந்தன. பிலிப்பைன்ஸ் நாட்டின் மணிலா பகுதியும் இந்தப் பேரரசின் கீழ் இருந்தது.

புரூணை சுல்தானகத்தின் வீழ்ச்சி

19-ஆம் நூற்றாண்டில், ​​புரூணை பேரரசு வீழ்ச்சி அடையத் தொடங்கியது. புரூணை சுல்தானகம் சரவாக்கை (கூச்சிங்) ஜேம்ஸ் புரூக்கிற்கு விட்டுக் கொடுத்து; அவரை வெள்ளை ராஜாவாக நியமித்தது.

மேலும் அது சபாவைப் பிரித்தானிய வடக்கு போர்னியோ நிறுவனத்திடம் (British North Borneo Chartered Company) ஒப்படைத்தது. தன்னுடைய நிலப் பகுதிகளை விட்டுக் கொடுத்ததனால் காலப் போக்கில் வீழ்ச்சி அடைந்தது.

சுல்தான் அசனல் போல்கியா

1888-இல், புரூணை பிரித்தானியர்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. இரண்டாம் உலகப் போரின் ஜப்பானிய ஆக்கிரமிப்புக்குப் பின்னர், 1959-இல் ஒரு புதிய அரசியலமைப்பு எழுதப்பட்டது. 1962-இல், முடியாட்சிக்கு எதிரான ஒரு சிறிய ஆயுதக் கிளர்ச்சி நடந்தது. ஆங்கிலேயர்களின் உதவியுடன் அந்தக் கிளர்ச்சி முடிவுக்கு வந்தது.

1967-ஆம் ஆண்டு முதல் சுல்தான் அசனல் போல்கியாவால் (Hassanal Bolkiah) புரூணை வழிநடத்தப்பட்டு வருகிறது. 1984 ஜனவரி 1-ஆம் தேதி, பிரித்தானியர்களிடம் இருந்து சுதந்திரம் பெற்றது.

மேற்கோள்கள்

Tags:

புரூணை பொதுபுரூணை மேற்கோள்கள்புரூணை1984ஆங்கிலம்ஐக்கிய இராச்சியம்சரவாக்சாவி எழுத்துமுறைதென் சீனக் கடல்போர்ணியோமலாய்மலேசியா

🔥 Trending searches on Wiki தமிழ்:

தமிழ் நாடு மாநிலத் தேர்தல் ஆணையர்அரக்கோணம் மக்களவைத் தொகுதிபக்தி இலக்கியம்பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்அன்புதமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியல்ஜெயகாந்தன்தமிழ்சூரரைப் போற்று (திரைப்படம்)நீதிக் கட்சிமீனா (நடிகை)இரட்டைக்கிளவிநவக்கிரகம்பூக்கள் பட்டியல்வானிலைகடையெழு வள்ளல்கள்கரூர் மக்களவைத் தொகுதிகிருட்டிணன்சுந்தர காண்டம்அதிதி ராவ் ஹைதாரிஇலங்கைதிராவிட மொழிக் குடும்பம்வேற்றுமையுருபுதமிழ் தேசம் (திரைப்படம்)நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதிமுல்லை (திணை)கலைதமிழ்நாடு சட்டப் பேரவைநான் அவனில்லை (2007 திரைப்படம்)தயாநிதி மாறன்பெரியாழ்வார்வே. தங்கபாண்டியன்வீரப்பன்தேவதாசி முறைதிருவேட்களம் பாசுபதேசுவரர் கோயில்தேர்தல் பத்திரம் (இந்தியா)நாளந்தா பல்கலைக்கழகம்இந்திய வரலாறுவாட்சப்வட்டாட்சியர்யாவரும் நலம்தமிழில் கணிதச் சொற்கள்துரை வையாபுரிசைவ சமயம்அபிசேக் சர்மாமரகத நாணயம் (திரைப்படம்)இசுலாத்தின் ஐந்து தூண்கள்ஆசாரக்கோவைதங்கம்நீலகிரி மக்களவைத் தொகுதிசிங்கம் (திரைப்படம்)செஞ்சிக் கோட்டைபனிக்குட நீர்திருமந்திரம்சூரியன்சூரைகாஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில்ஆண்டாள்தமிழ் இலக்கியம்பரிதிமாற் கலைஞர்திருநங்கைதொல். திருமாவளவன்அஸ்ஸலாமு அலைக்கும்எங்கேயும் காதல்இணையம்குமரிக்கண்டம்ஆபிரகாம் லிங்கன்சப்தகன்னியர்ஆரணி மக்களவைத் தொகுதிசுடலை மாடன்உவமையணிபரதநாட்டியம்சிதம்பரம் மக்களவைத் தொகுதிதமிழ் விக்கிப்பீடியாஇந்திய மக்களவைத் தொகுதிகள்கொல்கத்தா நைட் ரைடர்ஸ்ஐராவதேசுவரர் கோயில்எட்டுத்தொகை தொகுப்புசுயமரியாதை இயக்கம்🡆 More