தீவு நியூ அயர்லாந்து

நியூ அயர்லாந்து (New Ireland, பிசின மொழி: Niu Ailan, நியூ ஐலான்) என்பது பப்புவா நியூ கினியில் அமைந்துள்ள ஒரு பெரிய தீவாகும்.

இதன் பரப்பளவு ஏறத்தாழ 7,404 கிமீ², மக்கள்தொகை ஏறத்தாழ 120,000 பேர். நியூ பிரிட்டன் தீவுக்கு வடகிழக்கே உள்ள இத்தீவு நியூ அயர்லாந்து மாகாணத்தின் மிகப் பெரிய தீவாகும். பிசுமார்க் தீவுக்கூட்டத்தில் உள்ள இவ்விரண்டு தீவுகளும் செயிண்ட் ஜோர்ஜசு கால்வாயால் பிரிக்கப்பட்டுள்ளன. இத்தீவின் நிருவாக மையம் அதன் வட முனையில் காவியெங் நகரில் உள்ளது. இத்தீவு செருமனியின் ஆட்சிக்குள்ளாயிருந்த போது "நியூமெக்லென்பெர்க்" (Neumecklenburg) என அழைக்கப்பட்டது.

நியூ அயர்லாந்து
New Ireland
Niu Ailan
தீவு நியூ அயர்லாந்து
நியூ அயர்லாந்தின் முக்கிய நகரங்களும், அயல் தீவுகளும்
புவியியல்
ஆள்கூறுகள்3°20′S 152°00′E / 3.33°S 152°E / -3.33; 152
தீவுக்கூட்டம்பிசுமார்க் தீவுக்கூட்டம்
பரப்பளவு7,404 km2 (2,859 sq mi)
நீளம்360 km (224 mi)
அகலம்10 km (6 mi) - 40 km (25 mi)
உயர்ந்த ஏற்றம்2,379 m (7,805 ft)
உயர்ந்த புள்ளிடரோன் குன்று
நிர்வாகம்
பப்புவா நியூ கினி
மாகாணம்நியூ அயர்லாந்து மாகாணம்
பெரிய குடியிருப்புகாவியெங் (மக். 10,600)
மக்கள்
மக்கள்தொகை118,350 (2002)

புவியியல்

தீவு நியூ அயர்லாந்து 
நியூ அயர்லாந்து தீவின் இடவமைப்பியல்

பிசுமார்க் தீவுக்கூட்டத்தில் அமைந்துள்ள இத்தீவு துப்பாக்கியின் வடிவமைப்பை ஒத்தது. இதன் நீளம் கிட்டத்தட்ட 360 கிலோமீட்டர்கள் ஆகும். அகலம் 10 கிமீ மிதல் 40 கிமீ வரை வேறுபடுகிறது. நடுவில் உள்ள மலைப் பகுதிகள் மிகவும் செங்குத்தாகவும் கரடுமுரடாகவும் காணப்படுகின்றன. டாரோன் மலை மிக உயரமானது (2,379 மீட்டர்) உயரமானது. இத்தீவு நிலநடுக் கோட்டில் இருந்து 2 முதல் 5 பாகைகள் தெற்கே உள்ளது. பெரும்பாலான நிலப்பகுதி அடர்ந்த மழைக்காடாகும்.

நியூ அயர்லாந்து தென்மெற்கே பிசுமார்க் கடலாலும், வடகிழக்கே பசிபிக் பெருங்கடலாலும் சூழப்பட்டுள்ளது.

வரலாறு

சுமார் 33,000 ஆண்டுகளுக்கு முன்னர் இன்றைய பப்புவா நியூ கினியில் இருந்து முதன் முதலாக மக்கள் இங்கு வந்து குடியேறினர் என நம்பப்படுகிறது. 3,000 ஆண்டுகளுக்கு முன்னர் லப்பித்தா பழங்குடி மக்கள் வந்தனர். நியூ அயர்லாந்தின் கபாய், மலகன், தும்புவான் ஆகிய மாவட்டங்கள் தற்போதும் இத்தீவுப் பழங்குடியினரின் பண்பாடுகளைப் பேணி வருகின்றன.

1616 ஆம் ஆண்டில் டச்சுக் கடலோடிகள் யாக்கோபு லெ மாயிர், வில்லெம் சோட்டென் ஆகியோர் இத்தீவில் வந்திறங்கிய முதலாவது ஐரோப்பியர் ஆவர். 1870கள், 1880களில், மார்க்கி டி ரேய்சு என்ற பிரான்சியர் நியூ பிரான்சு என்ற பெயரில் இங்கு ஒரு குடியேற்றத்தை ஆரம்பிக்க முயன்றார். இவர் இத்தீவுக்கு நான்கு முறை குடியேறிகளை அனுப்பினார். இவற்றில் ஒரு பயணத்தின் போது 123 குடியேறிகள் உயிரிழக்க வேண்டி ஏற்பட்டது.

1885 முதல் 1914 வரை செருமனியின் கட்டுப்பாட்டில் இருந்த செருமன் நியூ கினி இராச்சியத்தின் ஒரு பகுதியாக நியூமெக்லென்பர்கு என்ற பெயரில் இத்தீவு இருந்தது. செருமானியர்கள் இங்கு கொப்பரை உற்பத்தியில் பெரும் வெற்றி கண்டனர். தமது பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கு பெருஞ்சாலை ஒன்றையும் அமைத்தனர். இச்சாலை தற்போதும் பொலுமின்ஸ்கி நெடுஞ்சாலை என சேவையில் உள்ளது. முதலாம் உலகப் போரை அடுத்து நியூ அயர்லாந்து ஆத்திரேலியாவின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. அவர்கள் இதற்கு நியூ அயர்லாந்து எனப் பெயரிட்டனர். 1942 சனவரியில், இரண்டாம் உலகப் போரின் போது, இத்தீவு சிறிது காலம் சப்பானியரின் கட்டுப்பாட்டில் இருந்தது.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

தீவு நியூ அயர்லாந்து புவியியல்தீவு நியூ அயர்லாந்து வரலாறுதீவு நியூ அயர்லாந்து மேற்கோள்கள்தீவு நியூ அயர்லாந்து வெளி இணைப்புகள்தீவு நியூ அயர்லாந்துசெருமனிதீவுநியூ பிரிட்டன்பப்புவா நியூ கினிபிசின மொழிபிசுமார்க் தீவுக்கூட்டம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

ஜன கண மனவேளாண்மைமேழம் (இராசி)திருமூலர்உணவுசென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிகளின் பட்டியல்அணி இலக்கணம்இராமாயணம்முன்னின்பம்மேற்குத் தொடர்ச்சி மலைகாடுகுறிஞ்சிப்பாட்டுபத்ம பூசண்எழுத்து (இலக்கணம்)கொல்லி மலைஎயிட்சுதிருவிழாகார்த்திக் (தமிழ் நடிகர்)ரவி வர்மாஅண்ணாமலை குப்புசாமிசரக்கு மற்றும் சேவை வரி (இந்தியா)தங்கராசு நடராசன்சுந்தரமூர்த்தி நாயனார்இசுலாம்அன்னி பெசண்ட்திரிகூடராசப்பர்தாஜ் மகால்வைசாகம்நயன்தாராபுரி ஜெகன்நாதர் கோயில்சாக்கிரட்டீசுமாமல்லபுரம்நாகப்பட்டினம்மதீச பத்திரனசித்தர்கள் பட்டியல்சுபாஷ் சந்திர போஸ்எங்கேயும் காதல்சென்னை உயர் நீதிமன்றம்வியாழன் (கோள்)முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்முலாம் பழம்ஐங்குறுநூறுதிருக்காளத்தி காளத்தியப்பர் கோயில்திணை விளக்கம்கொடைக்கானல்கடல்ஏற்காடுபுதிய ஏழு உலக அதிசயங்கள்அறிந்தும் அறியாமலும் (திரைப்படம்)தமிழ் மன்னர்களின் பட்டியல்பொது ஊழிமதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்சுப்பிரமணிய பாரதிசிதம்பரம் நடராசர் கோயில்காப்பியம்முதலாம் இராஜராஜ சோழன்புதுச்சேரிந. மு. வேங்கடசாமி நாட்டார்ஆபிரகாம் லிங்கன்சின்னத்தாயிபெட்டிதொகாநிலைத் தொடர்குற்றாலக் குறவஞ்சிதிருநங்கைதமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பௌத்தம்கார்லசு புச்திமோன்வீரப்பன்இந்திய நாடாளுமன்றம்கலிங்கத்துப்பரணிசிறுபஞ்சமூலம்பொய்கையாழ்வார்சூரியக் குடும்பம்69பால் (இலக்கணம்)முல்லைப்பாட்டுமுகம்மது நபிஇந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்🡆 More