தியர்பாகர் மாகாணம்: துருக்கியின் மாகாணம்

தியர்பாகர் மாகாணம் (Diyarbakır Province, துருக்கியம்: Diyarbakır ili , திமிலி : Suke Diyarbekır Kurdish ), என்பது தென்கிழக்கு துருக்கியில் உள்ள ஒரு மாகாணமாகும் .

இந்த மாகாணம் 15,355  கிமீ 2 பரப்பளவைக் கொண்டுள்ளது. இதன் மக்கள் தொகையானது 1,528,958 ஆகும். மாகாண தலைநகராக தியர்பாகர் நகரம் உள்ளது.

தியர்பாகர் மாகாணம்
Diyarbakır ili
துருக்கியின் மாகாணம்
துருக்கியில் தியர்பாகர் மாகாணத்தின் அமைவிடம்
துருக்கியில் தியர்பாகர் மாகாணத்தின் அமைவிடம்
நாடுதுருக்கி
பகுதிதென்கிழக்கு அனதோலியா
துணைப் பகுதிசன்லூபா
அரசு
 • தேர்தல் மாவட்டம்தியர்பாகர்
 • ஆளுநர்முனிர் கரலோஸ்லு
பரப்பளவு
 • Total15,355 km2 (5,929 sq mi)
மக்கள்தொகை (2018)
 • Total17,32,396
 • அடர்த்தி110/km2 (290/sq mi)
தொலைபேசி குறியீடு0412
வாகனப் பதிவு21

வரலாறு

இப்பகுதி பல நாகரிகங்களுக்கு தாயகமாக இருந்து வருகிறது. மேலும் இப்பகுதியிலும் இதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் பல இடைக் கற்கால கல் செதுக்குதல்கள் மற்றும் கலைப்பொருட்கள் உள்ளன. இந்த மாகாணப்பகுதியை அக்காடியர்கள், ஹுரியத்துகள், மித்தானியர், மீடியர், இட்டைடுகள், ஆர்மீனியர்கள், சீரியர், புது-பாபிலோனியர்கள், அகாமனியர்கள், கிரேக்கர்கள், உரோமர், பார்த்தியர்கள், பைசாந்தியர்கள், சசானித்துகள், அரேபியர்கள், செல்ஜக்கியர்கள், மங்கோலியர், சபாவித்துகள், மார்வானியர், அய்யூபிட்ஸ் போன்றோர் ஆண்டுள்ளனர்.

இன்று மாகாணத்தின் பெரும்பான்மையான மக்களாக குர்து மக்கள் உள்ளனர்.

துருக்கியில்

உள்ளூர் மக்களை துருக்கியமயமாக்குவதற்காக, 1927 சூனில் சட்டம் 1164 நிறைவேற்றப்பட்டது இச்சட்டம் இன்ஸ்பெக்டரேட்டுகள்- ஜெனரல் பகுதிகளை உருவாக்க அனுமதித்தது ( துருக்கியம் : உமுமி மெஃபெடிலிக், யுஎம்). எனவே தியர்பாகர் மாகாணம் முதல் இன்ஸ்பெக்டரேட் ஜெனரல் ( துருக்கியம்: Birinci Umumi Müffetişlik ) என்று அழைக்கபட்டது. இதில் ஹக்கரி, சியர்ட், வான், மார்டின், பிட்லிஸ், சான்லூர்பா, எலாஜிக் தியர்பாகர் போன்ற மாகாணங்களை உள்ளடக்கியதாக இருந்தது. முதல் யுஎம் 1928 சனவரி முதல் நாள் உருவாக்கப்பட்டது. இது தியர்பாகர் நகரை மையமாகக் கொண்டிருந்தது. யு.எம் ஒரு இன்ஸ்பெக்டர் ஜெனரலால் நிர்வகிக்கப்பட்டது, அவர் குடிமை சமூகம், நீதித்துறை, இராணுவ விஷயங்களில் பரந்த அளவிலான அதிகாரங்களைக் கொண்டு ஆட்சி செய்தார். இன்ஸ்பெக்டர் ஜெனரலின் அலுவலகம் 1952 இல் ஜனநாயகக் கட்சியின் அரசாங்கத்தின் போது கலைக்கப்பட்டது. தியர்பாகர் மாகாணத்துக்குள் வெளிநாட்டு குடிமக்கள் வருவதற்கு 1965 வரை தடை விதிக்கப்பட்டிருந்தது. துருக்கியமயமாக்கள் கொள்கையின்படி, 1930 களில், மாகாணத்தின் பல இடங்களின் பெயர்கள் துருக்கிய பெயர்களாக மாற்றபட்டன.

நவீன வரலாறு

1987 முதல் 2002 வரை, தியர்பாகிர் மாகாணம் ஓஹால் (அவசரகால நிலை) பிராந்தியத்தின் ஒரு பகுதியாக இருந்தது. இது குர்திசுத்தான் தொழிலாளர் கட்சிக்கு (பி.கே.கே) எதிராக அறிவிக்கப்பட்டது. மேலும் சாதாரண ஒரு ஆளுநரை விட கூடுதல் அதிகாரங்களைக் கொண்ட சூப்பர்கவர்னர் என்று அழைக்கப்பட்ட ஆளுநரால் இது நிர்வாகிக்கபட்டது. 1987 ஆம் ஆண்டில் மாகாணத்தின் அனைத்து கிராமங்கள், ஊர்கள், குடியிருப்புகளில் உள்ளவர்களை இடமாற்றம் செய்து மீள்குடியேற்றும் அதிகாரம் அவருக்கு வழங்கப்பட்டது. 1990 திசம்பரில் ஆணை எண் 430 படி, ஓஹால் பிராந்தியத்தில் உள்ள சூப்பர் கவர்னரும் மாகாண ஆளுநர்களும் ஆணை எண் 430 இன்படி பெற்ற அதிகாரங்கள் காரணமாக அவர்களின் நடவடிக்கைகள் தொடர்பாக எந்தவொரு சட்டப்படியான வழக்குக்கிலிருந்தும் விலக்கு பெற்றனர்..

மாவட்டங்கள்

தியர்பாகர் மாகாணம் 14 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது:

  • பிஸ்மில்
  • செர்மிக்
  • அர்னர்
  • கங்கூஸ்
  • டிகில்
  • தியர்பாகர்
  • இகில்
  • எர்கானி
  • ஹனி, துருக்கி
  • ஹஸ்ரோ
  • கோகாக்கி
  • குல்ப்
  • பேன்
  • சில்வன்

குறிப்புகள்

Tags:

தியர்பாகர் மாகாணம் வரலாறுதியர்பாகர் மாகாணம் மாவட்டங்கள்தியர்பாகர் மாகாணம் குறிப்புகள்தியர்பாகர் மாகாணம்திமிலி மொழிதுருக்கிதுருக்கிய மொழி

🔥 Trending searches on Wiki தமிழ்:

கரிகால் சோழன்வெண்குருதியணுமகேந்திரசிங் தோனிமரகத நாணயம் (திரைப்படம்)ஆய கலைகள் அறுபத்து நான்குதிராவிட இயக்கம்ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்காவல் தெய்வங்கள் பட்டியல், தமிழ்நாடுஜவகர்லால் நேருமெய்யெழுத்துஇராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோயில்கபிலர் (சங்ககாலம்)பச்சைக்கிளி முத்துச்சரம்கணையம்108 வைணவத் திருத்தலங்கள்இந்து சமயம்உமறுப் புலவர்மனித வள மேலாண்மைஎருதுதமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம்தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்முத்துராஜாகீழாநெல்லிஐராவதேசுவரர் கோயில்மயக்கம் என்னதேனீவ. உ. சிதம்பரம்பிள்ளைசுற்றுலாபோயர்ஐம்பெருங் காப்பியங்கள்பண்ணாரி மாரியம்மன் கோயில்நீர் மாசுபாடுதேவநேயப் பாவாணர்சுந்தரமூர்த்தி நாயனார்தமன்னா பாட்டியாஜெ. ஜெயலலிதாமதுரைக் காஞ்சிஅன்னை தெரேசாஆனைக்கொய்யாவேற்றுமை (தமிழ் இலக்கணம்)இரண்டாம் உலகப் போர்செக் மொழிதிருநெல்வேலிகுப்தப் பேரரசுநயன்தாராஅத்தி (தாவரம்)சூரியன்காப்பியம்அண்ணாமலை குப்புசாமிஇசுலாத்தின் ஐந்து தூண்கள்குடும்ப அட்டைசப்ஜா விதைசிறுகதைகொள்ளுகாதல் மன்னன் (திரைப்படம்)தமிழ் மன்னர்களின் பட்டியல்திருக்குர்ஆன்ரோபோ சங்கர்சீவக சிந்தாமணிமு. க. ஸ்டாலின்இந்திய நாடாளுமன்றம்பாண்டவர் பூமி (திரைப்படம்)சடுகுடுமதராசபட்டினம் (திரைப்படம்)கண்ணே கனியமுதேமாமல்லபுரம்ஜி. யு. போப்பரணி (இலக்கியம்)தாராபாரதிநீக்ரோமயங்கொலிச் சொற்கள்கலாநிதி வீராசாமிஅக்பர்திருப்பூர் மக்களவைத் தொகுதிமுகம்மது நபி நிகழ்த்திய அற்புதங்கள்தமிழ்ப் புத்தாண்டுஜோதிகாதமிழர் கலைகள்தமிழ் விக்கிப்பீடியா🡆 More