குருதி ஊட்டக்குறை இதய நோய்

குருதியூட்டக்குறை இதய நோய் (Ischaemic heart disease) அல்லது முடியுருநாடி இதய நோய் என்பது இதயத் தசைக்குக் குருதியோட்டம் குறைவாகச் செல்வதால் ஏற்படும் நோய்களின் தொகுப்பாகும்.

இந்நோயின் அனைத்து வகைகளிலும் முடியுரு நாடி கூழ்மத்தடிப்பு நோய்க் காரணியாகத் திகழ்கின்றதெனினும் இவை உண்டாக வேறு காரணங்களும் உண்டு. இந்நோய் வயது, புகைப்பிடித்தல், உயர் குருதிக் கொலசுடிரோல், நீரிழிவு, உயர் குருதி அழுத்தம் போன்ற சில காரணிகளால் பெருகுகின்றது; இது பெண்களை விட ஆண்களிலேயே பொதுவாகக் காணப்படுகின்றது, இந்நோய் மரபணு வழியாகவும் கடத்தப்படலாம். ஒரு குடும்பத்தில் பெற்றோருக்கு இந்நோய் இருந்தால் பிள்ளைகளும் பாதிக்கப்படும் இடர்ப்பாடு உள்ளது.

குருதியூட்டக்குறை இதய நோய்
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள்
சிறப்புஇதயவியல், pediatric cardiac surgery
ஐ.சி.டி.-10I20.-I25.
ஐ.சி.டி.-9410-414
நோய்களின் தரவுத்தளம்8695
ஈமெடிசின்med/1568
பேசியண்ட் ஐ.இகுருதி ஊட்டக்குறை இதய நோய்
ம.பா.தD017202

குருதியூட்டக்குறை இதய நோய் உண்டாவதற்கான மிக முக்கியமான காரணி முடியுரு நாடி கூழ்மத்தடிப்பு ஆகும். இதனால் குறிப்பிட்ட இதயத் தசைப் பகுதிக்கு குருதி விநியோகம் குறைகின்றது. மேலும் கூழ்மத்தடிப்பு சிதையும் போது அங்கிருந்து குருதி வெளியேறி குருதியுறைமை ஏற்பட்டு முடியுரு நாடியை அடைப்பதனால் நிலையில்லா மார்பு நெரிப்பு மற்றும் இதயத்தசை இறப்பு ஆகிய கடிய முடியுருக் கூட்டறிகுறிகள் ஏற்படுகின்றன.

குருதியூட்டக்குறையால் மார்பு நெரிப்பு போன்ற கோளாறுகள் ஏற்படுகின்றன. நிலையான மார்பு நெரிப்பு மற்றும் நிலையில்லா மார்பு நெரிப்பு என்று மார்பு நெரிப்பு மேலும் வகுக்கப்படுகின்றது. இவற்றில் அறிகுறிகள் முற்றிலும் அற்ற நிலை தொடங்கி நோய் அறிகுறிகள் தீவிரம் பெறும் நிலை வரை நோய் காணப்படலாம், மேலும் இவை ஒருவரது செயற்பாட்டிலும் தங்கி உள்ளது; சிலருக்கு ஓய்விலேயே நோய் அறிகுறிகள் தென்படும் அதேவேளையில் வேறு சிலருக்கு சிறிய வேலைகளின் போது அல்லது பெரிய வேலைகளின் போது மட்டும் ஏற்படலாம்.

உசாத்துணைகள்

Tags:

தமனிக்கூழ்மைத் தடிப்பு

🔥 Trending searches on Wiki தமிழ்:

திருக்குறள்மக்களாட்சிதிரிகடுகம்தங்க தமிழ்ச்செல்வன்ஞானபீட விருதுஜெயம் ரவிதிருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோயில்நீதிக் கட்சிதஞ்சாவூர் மக்களவைத் தொகுதிவ. உ. சிதம்பரம்பிள்ளைதேசிய முற்போக்குத் திராவிடக் கழகம்குடும்பம்நெல்லியாளம்அபுல் கலாம் ஆசாத்பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்நீக்ரோகூகுள்வாய்மொழி இலக்கியம்மகாபாரதம்கலாநிதி வீராசாமிஇரச்சின் இரவீந்திராபிரேமலதா விஜயகாந்த்பொதுவாக எம்மனசு தங்கம்கிரிமியா தன்னாட்சிக் குடியரசுபதினெண்மேற்கணக்குஉயர் இரத்த அழுத்தம்அபூபக்கர்திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில்சுபாஷ் சந்திர போஸ்பஞ்சபூதத் தலங்கள்பால்வினை நோய்கள்அழகிய தமிழ்மகன்மயிலாடுதுறை மக்களவைத் தொகுதிபனிக்குட நீர்நாடார்மலையாளம்இந்திய தேசிய சின்னங்கள்வாதுமைக் கொட்டைவிண்ணைத்தாண்டி வருவாயாநேர்பாலீர்ப்பு பெண்விவிலிய சிலுவைப் பாதைதிருமூலர்பட்டினப் பாலைஇராமலிங்க அடிகள்விஷ்ணுகணியன் பூங்குன்றனார்காயத்ரி மந்திரம்சுரதாஇந்திய ஐந்தாண்டு திட்டங்கள்இளையராஜாசிந்துவெளி நாகரிகம்திருமணம்தனுசு (சோதிடம்)எம். கே. விஷ்ணு பிரசாத்வேலு நாச்சியார்வி.ஐ.பி (திரைப்படம்)சப்தகன்னியர்ஐ.எசு.ஓ 3166-1 ஆல்ஃபா-2ஜவகர்லால் நேருபிரேமலுவரிபட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்பாக்கித்தான்தனித் தொகுதிகள், தமிழ்நாடு சட்டமன்றம்இரட்சணிய யாத்திரிகம்நற்கருணைவெ. இராமலிங்கம் பிள்ளைஆயிரத்தில் ஒருவன் (2010 திரைப்படம்)மூலம் (நோய்)ஐரோப்பாநபிபழனி பாபாசித்திரைஆழ்வார்கள்சுடலை மாடன்தமிழ்இந்தியப் பிரதமர்விஜயநகரப் பேரரசுசுந்தரி (தொலைக்காட்சித் தொடர்)🡆 More