கீலான் மாகாணம்

கிலான் மாகாணம் (Gilan Province (பாரசீக மொழி: اُستان گیلان‎, Ostān-e Gīlān, also Latinized as Guilan) என்பது ஈரானின் முப்பத்தோறு மாகாணங்களில் ஒன்றாகும்.

இது காசுப்பியன் கடல் ஓரமாக, ஈரானின் மூன்றாம் வட்டாரத்தில் உள்ளது. இது மஜன்தரன் மாகாணத்திற்கு மேற்காகவும், அர்தாபில் மாகாணத்தின் கிழக்கிலும், சஞ்சன் மாகாணம் மற்றும் கஜின் மாகாணங்களுக்கு வடக்கிலும் உள்ளது. இதன் வடக்கில் அஜர்பைஜான் குடியரசையும், காசுபியன் கடல் பகுதியில் உருசியாவையும் எல்லையாக கொண்டுள்ளது.

கிலான் மாகாணம்
Gilan Province

اُستان گیلان
மாகாணம்
கீலான் மாகாணம்
கிலான் மாகாண மாவட்டங்கள்
கிலான் மாகாண மாவட்டங்கள்
ஈரானில் கிலான் மாகாணத்தின் அமைவிடம்
ஈரானில் கிலான் மாகாணத்தின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 37°16′39″N 49°35′20″E / 37.2774°N 49.5890°E / 37.2774; 49.5890
நாடுகீலான் மாகாணம் Iran
வட்டாரம்மூன்றாம் வட்டாரம்
தலைநகரம்இராசுத்து
மாவட்டங்கள்16
அரசு
 • ஆளுநர்முஸ்தபா சலாரி.
பரப்பளவு
 • மொத்தம்14,042 km2 (5,422 sq mi)
மக்கள்தொகை (2016)
 • மொத்தம்25,30,696
 • அடர்த்தி180/km2 (470/sq mi)
நேர வலயம்IRST (ஒசநே+03:30)
 • கோடை (பசேநே)IRST (ஒசநே+04:30)
முதன்மை மொழிகள்கிலாக்கி
தாலீஷ்
பிற மொழிகள்பாரசீகம்

குர்தி
அசர்பைஜான்

தாரி மொழி (ஈரான்)

இந்த மாகாணத்தின் வட பகுதியானது தெற்கு (ஈரானிய) தாலீசின் ஒரு பகுதி பகுதியாகும். மாகாணத்தின் மையத்தில் அதன் முதன்மை நகரான ராஷ்ட் நகரம் உள்ளது. இந்த மாகாணத்தில் அஸ்தாரா, அஸ்தானே-இ அஷ்பிரிய்யா, புமன், லஹிஜான், லாங்ரூட், மாசூல், மஞ்சுல், ருட்கர், ருட்ஸர், ஷாஃப்ட், ஹாஷ்ட்பார் (நகரம்), சோம்மே சாரா ஆகிய பிற நகரங்கள் உள்ளன.

இதன் பிரதான துறைமுகமாக பந்தர்-இ அன்சாலி (முன்பு பண்டார்-இ பாஹ்லவி) துறைமுகம் உள்ளது.

புவியியலும் காலநிலையும்

கீலான் மாகாணம் 
மழைக்கால ஞாயிற்றுக்கிழமையில் ரவுட்சர் சந்தை
கீலான் மாகாணம் 
லஹீகன், கிலானில் நெற் பயிர்

கிலான் மாகாணமானது ஈரப்பத வெப்பமண்டல கால நிலையை உடையது. இது ஈரானில் அதிக மழைப்பொழிவு கொண்ட பகுதியாகும். தென்கிழக்கு கடற்கரைப் பகுதியில் 1,900 மில்லி மீட்டர் (75 அங்குலம்) வரையில் கூட அதிகமான மழைப்பொழிவு இருக்கும். என்றாலும் பொதுவான மழையளவு கிட்டத்தட்ட 1,400 மில்லி மீட்டர் (55 அங்குலம்) ஆகும். மாகாணத்தின் தலைநகராக ராஷ் நகரம் உள்ளது. இந்த நகரமானது சர்வதேச அளவில் "வெள்ளி மழை நகரம்" என்றும், ஈரானில் "மழை நகரம்" எனவும் அறியப்படுகிறது.

இங்கு செப்டம்பர் மற்றும் திசம்பர் மாதங்களுக்கு இடையே மிகக் கடுமையான மழைப்பொழிவு இருக்கும். ஏனெனில் அச்சமயத்தில் சைபீரிய உயர்நில கடல் காற்று வலுவாக வீசுவதே காரணமாகும். ஆனால் ஏப்ரல் முதல் சூலை வரை குறைந்த அளவு மழை இருந்தாலும் ஆண்டு முழுவதும் மழை பொழிகிறது. கடலோர சமவெளிகளில் சதுப்பு தன்மை காரணமாக மிக அதிகமான ஈரப்பதம் நிலவுகிறது.

இங்கு கடலோரத்தில் வீசும் குளிர்ந்த காறாறானது உள்நாட்டு மற்றும் சர்வதேச சுற்றுலாப் பயணிகளை பெரும் எண்ணிக்கையில் கவர்கிறது. மாகாணத்தின் பெரும் பகுதியானது மலைப் பகுதியாகவும், பசுமையான காடுகளைக் கொண்டதாக உள்ளது. காஸ்பியன் கடற்கரையை ஒட்டியுள்ள கடலோர சமவெளிப் பகுதியானது முக்கியமாக நெல் பயிரிடப் பயன்படுகிறது. இங்கு உள்ள விவசாயிகளால் கெர்டே, ஹஷெமி, ஹசானி, கரிப் போன்ற பலவகை நெல் வகைகள் தொடர்ந்து விளைவிக்கப்படுகிறது.

மாகாணத்தின் பெரும்பகுதியில் 1990 மே மாதம் ஏற்பட்ட கடும் நிலநடுக்கத்தால் பேரழிவு ஏற்பட்டது. இதில் சுமார் 45,000 பேர் இறந்தனர். இந்த நிகழ்வை அடிப்படையாகக் கொண்டு ஈரானிய திரைப்பட இயக்குநரான அப்பாஸ் கியரோஸ்தமி தனது திரைப்படங்களான லைஃப் அண்ட் நத்திங் மோர் ... மற்றும் தி ஆலிவ் ட்ரீஸ் ஆகிய படங்களை உருவாக்கினார்.

மக்கள்வகைப்பாடு

கிலான் மாகாணத்தில் பெரும்பான்மையினராக கிலாக் மற்றும் தலேஷ் மக்கள் உள்ளனர். சிறுபான்மையினராக அஜர்பைஜான்கள் மக்கள் உள்ளனர். மற்றும் சிறிய குழுக்களாக ஜோர்ஜியர்கள், ஆர்மீனியர்கள், சர்கேசியர்கள் ஆகியோர் குறிப்பிடத்தக்க சிறுபான்மையினர் ஆவர்.

மாகாணத்தில் கிலான் - கிலாக்கி மொழி, தலேஷி மொழி, பாரசீக மொழி, சிறிய அளவில், டாடி மொழி மற்றும் குர்தி மொழி ஆகிய ஐந்து ஈரானிய மொழிகள் பேசப்படுகின்றன. இந்த மொழிகளில் (பாரசீக மொழி தவிர்த்து) ஏனைய மொழிகள் ஈரானிய வடமேற்கு கிளை மொழிகள் ஆகும். மேலும் ஈரானிய மொழிகளைச் சேராதவைகளில் முதன்மையாக அசர்பைஜான் மொழி, சியார்சிய மொழி, அருமேனிய மொழி, செர்கேசியன் மொழி, மற்றும் சில ஜிப்சி மொழிகள் (ரோமானியம்) போன்ற மொழிகளும் இங்கு பேசப்படுகின்றன. மூன்று மில்லியன் மக்கள் கிலாக்கி மொழியை முதலாவது அல்லது இரண்டாவது மொழியாகப் பேசுகின்றனர்.

ஆண்டு
1996 2006 2011
தோராயமான மக்கள் தொகை 2,241,896 2,404,861 2,480,874

மேற்கோள்கள்

Tags:

அசர்பைஜான்அர்தாபில் மாகாணம்ஈரானின் மாகாணங்கள்ஈரான்உருசியாகாசுப்பியன் கடல்பாரசீக மொழி

🔥 Trending searches on Wiki தமிழ்:

வெ. இறையன்புமாமல்லபுரம்மனித வள மேலாண்மைதிருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்பாரிஅண்ணாமலை குப்புசாமிபெயர்ச்சொல்ஐக்கிய நாடுகள் அவைஆடுதிராவிட இயக்கம்மொழியியல்கருணாநிதி குடும்பம்மக்காச்சோளம்ராஜீவ் காந்தி பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம்திருநாவுக்கரசு நாயனார்திருநங்கைசைவத் திருமுறைகள்குதிரைதிருவாலங்காடு வடாரண்யேசுவரர் கோயில்ஐராவதேசுவரர் கோயில்கொள்ளுநீர் மாசுபாடுதமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல், 2019கணினிவிவேகானந்தர்விழுப்புரம் மக்களவைத் தொகுதிஇரட்டைக்கிளவிசெண்பகராமன் பிள்ளைதமிழக வரலாறுமலைபடுகடாம்கலாநிதி மாறன்மகாபாரதம்ஜி. யு. போப்வானொலிஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்தீரன் சின்னமலைவிருதுநகர் மக்களவைத் தொகுதிஇங்கிலாந்துதமிழர் விளையாட்டுகள்சவ்வாது மலைதிரு. வி. கலியாணசுந்தரனார்வேற்றுமையுருபுஇராபர்ட்டு கால்டுவெல்குருதிச்சோகைவேலு நாச்சியார்சிப்பாய்க் கிளர்ச்சி, 1857மருதம் (திணை)வினைச்சொல்பரணி (இலக்கியம்)தீபிகா பள்ளிக்கல்தாஜ் மகால்இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றம்ரயத்துவாரி நிலவரி முறைகருப்பைகுடும்ப அட்டைவிஜய் (நடிகர்)அருங்காட்சியகம்முகம்மது நபிஅபினிமுக்குலத்தோர்ஒற்றைத் தலைவலிஆரணி மக்களவைத் தொகுதிதமிழ் உரைநூல் ஆசிரியர்கள்திருமந்திரம்வி.ஐ.பி (திரைப்படம்)தமிழச்சி தங்கப்பாண்டியன்நெடுநல்வாடைசப்ஜா விதைகள்ளுதமிழ்விடு தூதுசிறுபஞ்சமூலம்ஆப்பிள்நான் அவனில்லை (2007 திரைப்படம்)செக் மொழிசோழர் காலக் கட்டிடக்கலைவிளையாட்டுபதினெண் கீழ்க்கணக்குகலாநிதி வீராசாமிஇந்திய அரசியலமைப்பு🡆 More