கின்னரப்பெட்டி

கின்னரப்பெட்டி (பியானோ) (piano) என்பது வதிப்பலகையால் (Keyboard) வாசிக்கப்படும் ஓர் இசைக்கருவி.

பெரிதாக மேற்கத்திய இசையில் தனித்து வசிப்பதற்கும், அறையிசையில் (Chamber music) வாசிப்பதற்கும், துணைக்கருவியாக (Accompaniment) வாசிப்பதற்குமே பயன்படுத்தப்படும் கின்னரப்பெட்டி, இசை அமைப்பதற்கும் ஒத்திகை பார்ப்பதற்கும் கூட மிக உதவியுள்ளதாக கருதப்படுகிறது. விலை உயர்ந்ததாகவும் கையடக்கமாக இல்லாத போதும், கின்னரப்பெட்டியின் அவதானமும் (versatility) வியாபகமும் (ubiquity) அதை இசைக்கருவிகளுள் மிகவும் அறியப்பட்ட ஒன்றாக உருவாக்கியுள்ளன.

கின்னரப்பெட்டி
பெருங் கின்னரப்பெட்டி (இடது) மற்றும் நிமிர்ந்த கின்னரப்பெட்டி (வலது)
பெருங் கின்னரப்பெட்டி (இடது) மற்றும் நிமிர்ந்த கின்னரப்பெட்டி (வலது)
பெருங் கின்னரப்பெட்டி (இடது) மற்றும் நிமிர்ந்த கின்னரப்பெட்டி (வலது)
விசைப்பலகை
ஓர்ன்பாஸ்டெல்-சாக்ஸ் வகை314.122-4-8
(Simple chordophone with keyboard sounded by hammers)
கண்டுபிடிப்பாளர்(கள்)பர்த்தலோமியோ கிறிஸ்டோபரி
கண்டுபிடிப்பு18ம் நூற்றாண்டின் ஆரம்பம்
வரிசை
கின்னரப்பெட்டி

கின்னரப்பெட்டியின் வதிப்பலகையிலுள்ள ஒரு வதியை (Key) அழுத்துவது, பின்னப்படாத துணியால் (Felt) சுற்றப்பட்ட ஒரு சுத்தியலை உருக்கு (Steel) கம்பிகளின் மீது அடிக்கச்செய்கிறது. அந்த சுத்தியல்கள் மீண்டும் அதனதன் இடத்திற்கு வருவதன் மூலம் அந்த உருக்குக் கம்பிகளை தொடர்ந்து அதிர்வுறச்செய்கிறது. இந்த அதிர்வுகள் ஒரு பாலத்தின் வழியாக ஒலிப்பலகையின்(Soundboard) மீது செலுத்தப்படுகிறது. பின்பு, இந்த ஒலிப்பலகையின் மூலமாக ஒலி அலைகள் காற்றில் கலந்து ஒலியாக வெளிப்படுகிறது. அழுத்தப்பட்ட வதியிலிருந்து விரல் எடுக்கப்படும்பொழுது, கம்பிகளின் அதிர்வுகள் ஒரு ஒலிதடு கருவியால்(Damper) நிறுத்தப்படுகின்றன. கின்னரப்பெட்டி, சில வேளைகளில் எருக்கு வாத்தியக்கருவியாகவும்(Percussion instrument) நரம்பு வாத்தியக்கருவியாகவும்(String instrument/Chordophone) வகைப்படுத்தப்படுகின்றது. ஹார்ன்பாச்டல் சாக்சின் இசை வகைப்படுத்துதலின்படி இது நரம்பு வாத்தியக்கருவிகளுடன்(Chordophones) சேர்க்கப்பட்டுள்ளது.

பொதுவாக ஒரு நவீன கின்னரப்பெட்டியில் 88 வதிகள் உள்ளன. கின்னரப்பெட்டியில் தனிநபர் இசை அல்லது குழு இசை வாசிக்கப்படுகிறது. கின்னரப்பெட்டியில் நடுப்புறத்தில் மேற்கொள்ளாக அமைந்த வதி "நடு C வதி" (Middle C Key) என அழைக்கப்படுகிறது. ஒரு பாடலின் இன்னிசை (melody) பொதுவாக நடு C யின் வலது வதிகளில் வாசிக்கப்படுகிறது. ஒரு பாடலின் ஒத்திசை (harmony) பொதுவாக நடு Cயின் இடது வதிகளில் வாசிக்கப்படுகிறது.

கின்னரப்பெட்டி முதன் முதலில் இத்தாலியில் தோன்றியது. Piano என்கிற ஆங்கில சொல் இத்தாலிய மொழியிலிருந்து வந்தது. பியானோ என்பது பியானோபோர்டே(Pianoforte) என்பதன் சுருக்கமே. இன்றைய தினத்தில் இச்சொல் பெரிதாக பயன்படுத்தப்படுவதில்லை. இது, clavicembalo [அல்லது gravicembalo] col piano e forte என்னும் இதன் உண்மையான இத்தாலிய பெயரிலிருந்தே எடுக்கப்பட்டது (எழுத்தின்படி: ஹார்ப்சிகார்ட் - அமைதியுடனும் பெலனுடனும்). இது, இந்த இசைக்கருவியின் வதிப்பலகையை தொடுதலின் மூலம் உண்டாகும் இதன் பிரதிபலிப்பை குறிக்கிறது. இதனால், ஒரு கின்னரப்பெட்டி இசை கலைஞர், சுத்தியல் கம்பிகளை அடிக்கும் வேகத்தை கட்டுப்படுத்துவதன் மூலம் வெவ்வேறு வேகங்களில் வாதிகளை உண்டாக்கலாம்.

வரலாறு

கின்னரப்பெட்டி 
கின்னரப்பெட்டி

கின்னரப்பெட்டி முதன்முதலில் 1700-ல் கிறிஸ்திஃபோரி (Cristifori) என்கிற இத்தாலிய இசைக்கருவிக்காப்பாளால் கட்டப்பட்டது. இவர் வடிவமைப்பில் இசைக்கருவியின் நரம்புகள் சுத்தியல்களால் அடிக்கப்பட்டு விடப்பட்டன. இதன் கட்டமைப்பை பற்றி மாஃபெய் (Maffei) என்கிற இத்தாலிய எழுத்தாளர் ஒரு விளக்கமான கட்டுரை 1711-ல் எழுதினார். இந்த கட்டுரையை படித்து ஸில்பெர்மேன் என்பவர் ஒரு மேம்படுத்தப்பட்ட இசைக்கருவியை கட்டினார். இதின் சிறப்பம்சம் அடியில் உள்ள தேய்மான மிதி (damper pedal). இதன் பின்னர் கின்னரப்பெட்டியின் தயாரிப்பு 18ஆம் நூற்றாண்டில் வியன்னாவில் மலர்ச்சி பெற்றது.

1790 இலிருந்து 1860க்குள் கின்னரப்பெட்டியின் நரம்புகளின் தரம் மிகவும் உயர்ந்தது. நரம்புகள் எஃகினால் கட்டப்பட்டது. கின்னரப்பெட்டியில் உள்ள இரும்புச் சட்டங்கள் துல்லியமாக வார்ப்படமிடப்பட்டது. ஒலிநீடிப்பும் மேம்படுத்தப்பட்டது. 1821இல் எரார்டு (Érard) இரட்டை விடுவிப்பு முறையை (double escapement) படைத்தார். இதனால் ஒரு சுரத்தின் மறுவிசைவு மற்றும் வாசிக்கும் வேகம் அதிகப்பட்டது. 1820க்குள் ஒரு கின்னரப்பெட்டியில் 7 எண்மசுரங்கள் அடைக்கப்பட்டன.

தற்காலக் கின்னரப் பெட்டி

கின்னரப் பெட்டியின் பகுதிகள் பற்றிய படவிளக்கம்

சட்டகம் (1)
மூடி, முன் பகுதி (2)
கபோ பட்டி (3)
டெம்பர் (4)
மூடி, பின் பகுதி (5)
டெம்பர் தொழில்நுட்பம் (6)
sostenuto rail (7)
pedal mechanism, rods (8, 9, 10)
pedals: right (sustain/damper), middle (sostenuto), left (soft/una-corda) (11)
பாலம் (12)
hitch pin (13)
சட்டகம் (14)
ஒலிப் பலகை (15)
தந்தி (16)

கின்னரப்பெட்டி 

வகைகள்

தற்காலக் கின்னரப்பெட்டிகள் உருவ அமைப்பின் அடிப்படையில் இரண்டு வகைப் படுகின்றன அவையாவன:

  • பெருங் கின்னரப்பெட்டி (grand piano)
  • நிமிர்ந்த கின்னரப்பெட்டி (upright piano)

பெருங் கின்னரப்பெட்டி (grand piano)

கின்னரப்பெட்டி 
Steinway grand piano in the White House
கின்னரப்பெட்டி 
August Förster upright piano

பெருங் கின்னரப்பெட்டிகளில் சட்டகமும் தந்திகளும் கிடையாக அமைந்து காணப்படும். அத்துடன் தந்திகள் விசைப்பலகையில் இருந்து விலகி நீட்டியபடி காணப்படும். இதன் ஒலியெழுப்பும் செயற்பாடானது தந்திகளிலெயே தங்கியுள்ளது. அத்தோடு தந்திகள் ஈர்ப்பு விசையைப் பயன்படுத்தியே ஓய்வு நிலைக்குத் திரும்புகின்றன.

பெருங் கின்னரப்பெட்டிகள் பல அளவுகளிலும் காணப்படுகின்றன.

  • கச்சேரிகளில் பயன்படுத்தப்படும் பெருங் கின்னரப்பெட்டிகள் - 2.2 மீற்றர் முதல் 3 மீற்றர் வரை ( 7-10 அடிகள் ) நீளமானது.
  • பார்லர் பெருங் கின்னரப்பெட்டிகள் - 1.7 மீற்றர் முதல் 2.2 மீற்றர் வரை ( 6–7 அடிகள் ) நீளமானது.
  • சிறிய குழந்தைப் பெருங் கின்னரப்பெட்டிகள் - 1.5 மீற்றர் ( 5 அடிகள் ) நீளமானது.

நிமிர்ந்த கின்னரப்பெட்டி

நிமிர்ந்த கின்னரப்பெட்டிகள் நிலைக்குத்துக் கின்னரப்பெட்டிகள் எனவும் அழைக்கப்படுகின்றன. அத்தோடு இவற்றின் சட்டகமும் தந்திகளும் நிலைக்குதாகக் காணப்படுவதால் இவை சிறிய இடப்பரப்பையே எடுத்துக்கொள்கின்றன. இவற்றில் சுத்தியல்கள் கிடையாக அசைவதுடன் தந்திகளின் ஊடாக ஓய்வு நிலையை அடைகின்றன. வழக்கத்திற்கு மாறாக உயரமான சட்டகத்தையும் நீளமான தந்திகளையும் உடைய நிமிர்ந்த கின்னரப்பெட்டிகள் சிலவேளைகளில் நிமிர்ந்த பெருங் கின்னரப்பெட்டிகள் என அழைக்கப்படுகின்றன.

Player piano from 1920 (Steinway)

பங்கு பாத்திரம்

ஜாஸ்,புளூஸ், ராக் இசை, நாட்டுப்புற இசை மற்றும் பல மேற்கத்திய இசை வடிவம் போன்ற மேற்கத்திய பாரம்பரிய இசையில் கின்னரப்பெட்டி மிக முக்கிய பங்கினை வகிக்கிறது. மிகப்பெரும் எண்ணிக்கையிலாக இசையமைப்பாளர்களும் பாடலாசிரியர்களும் கின்னாரப்பெட்டி கலைஞர்களாக இருந்திருக்கின்றனர். ஏனெனில் கின்னாரப்பெட்டியில் உள்ள விசைப்பலகைகள் சிக்கலான மெல்லிசைகளையும் அனுசுர இடைவினைகளையும், பல்வேறு சுதந்திரமான மெல்லிசை வரிகளை ஒரே நேரத்தில் உருவாக்க முடிகிறது. கின்னரப்பெட்டிகள் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பின்னணி இசைக்காகவும் பயன்படுத்தப்படுகின்றன, மேலும் இசையமைப்பாளர்கள் இசைக்கருவிகளைப் பயன்படுத்துவதற்கும்,மேலும் மற்ற இசைக்கருவிகளோடு இவை சேர்த்து பயன்படுத்தப்பட்டாலும் மெல்லிசை மற்றும் அடிநாதங்களை உருவாக்கவும் இந்த இசைக்கருவியே பயன்படுத்தப்படுகிறது. இசைக்குழு நடத்துனர்கள் பெரும்பாலும் கின்னாரப்பெட்டியை கற்றுக் கொள்கின்றனர் ஏனெனில் மேடைக்கச்சேரிகளில் பார்வையாளர்களையும் இசைப்பிரியர்களையும் கவரும் வகையிலான பாடல்களை இசைக்க இது ஒரு சிறந்த கருவியாகும். கின்னரப்பெட்டியானது ஆரம்ப மற்றும் உயர்நிலை பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் இசைக் கல்வியில் முக்கியப் பங்கு வகிக்கும் இசைக் கருவியாகும். பெரும்பாலான இசை வகுப்பறைகள் மற்றும் பயிற்சி அறைகள் கின்னாரப்பெட்டியைக் கொண்டுள்ளன. இசைக் கோட்பாடுகள், இசை வரலாறுகள் மற்றும் இசை மதிப்பீட்டு வகுப்புகள் ஆகியவற்றை கற்பிப்பதற்கு கின்னாரப்பெட்டி பயன்படுத்தப்படுகின்றன.

தொடுதிரை கின்னாரப்பெட்டி

தொழிநுட்பத்தின் மூலம் கின்னாரப்பெட்டி இசை கருவியை செல்பேசி அல்லது கணிணியில் நிறுவி தொடுதிரை மூலமாக இசைக்கும் அளவிற்கு இன்றைய அறிவியல் வளர்ச்சியடைந்துள்ளது. இதனை எவர் வேண்டுமானாலும் அரவரவர் செல்பேசியில் நிறுவி கின்னார இசையினை செல்பேசி அல்லது தொடுதிரைக் கணிணித் திரையில் தோன்றும் விசைப்பலகையை தொட்டு இசைக்க முடியும்.

மின், மின்னியல் மற்றும் எண்முறை கின்னாரப்பெட்டி

மின் கின்னாரப்பெட்டி

மின்சாரத்தைக் கொண்டு செயல்படும் கின்னாரப்பெட்டிகள் மின் கின்னாரப்பெட்டிகள் (electric piano) ஆகும். 1920 களின் பிற்பகுதியில் புழக்கத்தில் இருந்த கின்னாரப்பெட்டியானது ஒரு காந்தம், ஒரு பெருக்கி மற்றும் ஒலிபெருக்கியுடன் உலோக கம்பி வடம் கொண்டு மின்சாரத்தால் இயங்கக்கூடியதாகவும் இருந்தன.. 1960 மற்றும் 1970 களில் பாப் மற்றும் ராக் இசைக்கச்சேரிகளில் மின் கின்னாரப்பெட்டி மிகவும் பிரபலமாக இருந்தன. பெண்டர் ரோட்ஸ் மின்சார கின்னாரப்பெட்டியில் மின்சார கித்தாரில் உள்ளதைப் போலவே கம்பிகளுக்குப் பதிலாக உலோகத் தகரம் பயன்படுத்தப்பட்டது.

மின்னியல் கின்னாரப்பெட்டி

மின்னியல் கின்னாரப்பெட்டியானது (Electronic Piano) கேட்பொலியிலா கருவியாகும். இவற்றில் தந்திக் கம்பியிழையோ, சுத்தி போன்ற அமைப்புகளோ காணப்படுவதில்லை. ஆனால் இதில் ஒரு வகையான கூட்டிணைப்பி தூண்டுதல் அல்லது பின்பற்றுதல் செயல்கள் மூலம் கின்னாரப்பெட்டி ஒலிகளை ஒருங்கிணைத்து வடிகட்டிகளைப் பயன்படுத்தி ஒலிகள் உருவாக்கப்படுகிறது. இதற்கு விசைப்பலகையுடன் இணைக்கப்பட்ட பெருக்கி உதவி தேவைப்படாது. (இருப்பினும் சில கின்னாரப்பெட்டிகளில் மின்னியல் விசைப்பலகையுடன் பெருக்கி மற்றும் ஒலிபெருக்கியும் சேர்த்தே கட்டமைக்கப்பட்டுப் பயன்படுத்தப்படுகிறது.) இதற்கு மாற்றாக இவ்வகை கின்னாரப்பெட்டிகளைக் கொண்டு ஒருவர் பிறரை தொல்லை செய்யாமல் தலையணி உதவியுடன் பயிற்சி செய்யலாம்.

எண்ம கின்னாரப்பெட்டி

எண்ம கின்னாரப்பெட்டியும் (Digital Piano) கேட்பொலியிலா கருவியாகும். இவற்றிலும் தந்திக் கம்பியிழையோ, சுத்தி போன்ற அமைப்புகளோ காணப்படுவதில்லை. இதில் உருவாக்கப்படும் இசையொலிகள் மிகவும் துல்லியமாக உள்ளன.

கட்டமைப்பு மற்றும் பாகங்கள்

கின்னரப்பெட்டி 
(1) சட்டகம் (2) மூடி, முகப்பு பகுதி (3) கோபோ பட்டை (4) அதிர்வு மாற்றி (5) மூடி, பின் பக்கம் (6) அதிர்வு மாற்றி தொழினுட்பம் (7) sostenuto rail (8) மிதிப்படி .இயக்கம், தடி (9, 10,11)மிதிப்படி : வலது (sustain/damper), நடுப்பகுதி (sostenuto), இடது (soft/una-corda) (12) பாலம் (13) உந்த ஊசி (14) சட்டகம் (15) ஒலி பலகை (16) தந்திக் கம்பியிழை

கின்னாரப்பெட்டியில் 12,000 தனித்தனி பாகங்களைக் கொண்டுள்ளன.

மேலும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

கின்னரப்பெட்டி வரலாறுகின்னரப்பெட்டி தற்காலக் கின்னரப் பெட்டிகின்னரப்பெட்டி வகைகள்கின்னரப்பெட்டி பங்கு பாத்திரம்கின்னரப்பெட்டி தொடுதிரை கின்னாரப்பெட்டிகின்னரப்பெட்டி மின், மின்னியல் மற்றும் எண்முறை கின்னாரப்பெட்டிகின்னரப்பெட்டி கட்டமைப்பு மற்றும் பாகங்கள்கின்னரப்பெட்டி மேலும் காண்ககின்னரப்பெட்டி மேற்கோள்கள்கின்னரப்பெட்டி வெளி இணைப்புகள்கின்னரப்பெட்டிஇசைக்கருவிமேற்கத்திய இசை

🔥 Trending searches on Wiki தமிழ்:

முதற் பக்கம்தன்னுடல் தாக்குநோய்கருத்தரிப்புவில்லிபாரதம்அழகர் ஆற்றில் இறங்குதல் (விழா)மனித உரிமைஅகத்திணைநெசவுத் தொழில்நுட்பம்கேள்விதிருப்பூர் குமரன்சூரரைப் போற்று (திரைப்படம்)அக்கினி நட்சத்திரம்பரிபாடல்இன்ஸ்ட்டாகிராம்அபிராமி பட்டர்சித்தர்முத்தரையர்ஆசாரக்கோவைஇந்தியன் (1996 திரைப்படம்)சங்க இலக்கியம்சின்ன வீடுஅரிப்புத் தோலழற்சிசுந்தர காண்டம்வெந்து தணிந்தது காடுபிரீதி (யோகம்)பெரும்பாணாற்றுப்படைதமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 2019பாண்டவர்சத்திமுத்தப் புலவர்வரலாறுஇலங்கையின் தலைமை நீதிபதிமூலம் (நோய்)பாரிதமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்புலிமுருகன்திருவிழாதமிழ் படம் 2 (திரைப்படம்)கம்பராமாயணத்தின் அமைப்புபரிதிமாற் கலைஞர்ஐந்திணைகளும் உரிப்பொருளும்பஞ்சதந்திரம் (திரைப்படம்)முருகன்தேர்தல்தமிழிசை சௌந்தரராஜன்பஞ்சாயத்து ராஜ் சட்டம்காதல் கோட்டைஅஸ்ஸலாமு அலைக்கும்தொல்காப்பியர்நயன்தாராநிதி ஆயோக்கல்லீரல்அண்ணாமலை குப்புசாமிதிருவாசகம்எஸ். பி. பாலசுப்பிரமணியம்செம்மொழிமு. மேத்தாசட் யிபிடிநாலடியார்சுகன்யா சம்ரிதி திட்டம் (செல்வமகள் சேமிப்பு திட்டம்)திராவிட இயக்கம்சமுத்திரக்கனிஇயேசுஉவமையணிவிளக்கெண்ணெய்சிறுதானியம்அவதாரம்மோகன்தாசு கரம்சந்த் காந்திவீரப்பன்புதினம் (இலக்கியம்)வராகிஇங்கிலீஷ் பிரீமியர் லீக்திரைப்படம்திருவருட்பாஐஞ்சிறு காப்பியங்கள்திருநெல்வேலிமஞ்சும்மல் பாய்ஸ்🡆 More