கடக ரேகை

கடக ரேகை, (Tropic of Cancer) அல்லது கடக வரை என்பது வடக்குத் திசையின் வேனிற்கால கதிர்த் திருப்பத்தின் தொடக்க நாள் அல்லது தெற்கின் குளிர்காலக் கதிர்த் திருப்பத்தின் தொடக்க நாளன்று சூரியத் தடவழியின் வடவெல்லையை - நில நடுக்கோடு என்று காணப்படுவதைக்- குறிப்பிடும் வகையிலான ஒரு நில அகலாங்கு வட்டம் ஆகும்.

வடக்கு வெப்ப மண்டலப் பகுதி என்றும் இதனை அழைக்கின்றனர். இது, பருவ நிலை மாற்றங்களோடு மாறுவதாக, வானத்திற்குக் குறுக்கான சூரியத் தடவழியின் துருவங்களைக் குறிக்கும் (மகரக் கோட்டுடன் சேர்த்து) இரண்டு வெப்ப மண்டலப் பகுதிகளில் ஒன்றாகும்.

சூரியனைச் சுற்றி வரும் தனது பாதையின் பரப்புக்குச் சிறிது சாய்மானமான நிலையில், புவியின் சுற்றச்சு சற்றே சாய்ந்திருக்கும் காரணத்தினால் வேனிற் காலத்தின் முதல் நாள் வட கோளத்தில் கடக வரைக்கு நேர் மேலாக சூரியன் வருகிறது. இது தொடுவானத்திற்கு மேல் தனது உச்சத்தில் சூரியன் 90° கோண அளவையை அடைகிற வடவெல்லையின் நில அகலாங்கு ஆகும். இதனுடன் வடகோளம் சூரியனை நோக்கி தனது அதிகமான அளவில் சாய்மானம் கொண்டுள்ளது.

இந்த வெப்ப மண்டலங்களை முதன்மை ஐந்து கோண அளவீடுகளில் இரண்டு எனவோ அல்லது ஆர்க்டிக், அண்டார்க்டிக் அகலாங்குகளையும் நில நடுக்கோடு (புவி நடுவரை) ஆகியவற்றோடு சேர்த்து புவியின் வரைபடத்தைக் குறிக்கும் அகலாங்குகளின் வட்டங்கள் எனவோ கொள்ளலாம்.

இடப்பெயர்ச்சி

கடக ரேகை 
கரேட்டெரா 83 (கோர்ட்டா வழியாக செல்வது) சரகோசா-விக்டோரியா, கிமீ 27+800. மெக்சிக கூட்டு நெடுஞ்சாலையை வெட்டும் கடக வரைப் புள்லிகளில் இது மட்டுமே துல்லியமாகக் காட்டப்படுகிறது. இங்கு 2005 முதல் 2010 வரையிலான இடப்பெயர்வு துல்லியமாகக் குறிப்பிடப்பட்டுள்ளதைக் காணலாம் .

கடக வரையின் இருப்பு, புவி சூரியனைச் சுற்றிவரும் பவி நடுவரைத் தளத்தில் நிகழும் புவி நெட்டாங்கின் திசைவைப்பு அலைவால் தொடர்ந்து மாறிக் கொண்டே உள்ளது. புவியின் அச்சுச் சாய்வு கடந்த 41,000 ஆண்டுகளில் 22.1 இல் இருந்து 24.5 பாகைவரை மாறியுள்ளது. இது as of 2000 ஆண்டளவில் 23.4 பாகைகளாகும். இது அடுத்த ஓராயிரம் ஆண்டுகளுக்கு இப்படியே அமையும். இந்த அலைவால் கடக வரை ஆண்டுக்கு அகலாங்கின் அரை வட்டவில்நொடிகள் அளவுக்கு, அதாவது 5 மீ அளவுக்குத் தெற்காக இடம்பெயர்கிறது. இந்த அகலாங்கு வட்ட இருப்பு 1917 ஆம் ஆண்டில் சரிய்யக 23° 27′ வடக்கில் இருந்தது; இது 2045 ஆம் ஆண்டில் 23° 26' வடக்கில் இருக்கும். அந்தாட்டிக வட்டத்துக்கும் கடக வரைக்கும் உள்ள தொலைவு மாறுவதில்லை. ஏனெனில் இரண்டு அகலாங்குகளுமே ஒரே அளவில் இடம்பெயர்கின்றன. இந்தக் கற்பிதம் நிலையான புவி நடுவரையைச் சார்ந்து கூறப்படுகிறது: ஆனால் உண்மையான புவி நடுவரை நிலையாக இருப்பதில்லை. கூடுதல் தகவல்களுக்குக் காண்க, புவி நடுவரை, அச்சுச் சாய்வு அகலாங்கு வட்டம்#கடக வரை, புவிமுனை அகலாங்கு வட்டங்களின் நகர்வு.

புவியியல்

கடக ரேகை 
மெக்சிகோ, ஜாகாடெகாசின் வில்லா டி கோஸ் என்பதன் வட கிழக்காக கடக ரேகையைக் குறிப்பதாக உள்ள சின்னம்

தற்போது கடக வரை நில நடுக்கோடுக்கு வடக்கே 23° 26′ 22″ என்ற அலகில் உள்ளது. இந்த நில அகலாங்கிற்கு வடக்கில் துணை வெப்பமண்டலமும் வடக்கு மித வெப்ப மண்டலமும் உள்ளன. நில நடுக்கோடுக்கு தெற்குப் புறமாக, இதற்கு ஈடாக உள்ள நில அகலாங்கு மகர வரையாகும். இவை இரண்டிற்கும் இடையில், புவி நடுவரையில் மையம் கொண்டுள்ள பகுதிகள் வட, தென் வெப்ப மண்டலங்களாகும்.

புவியில் 2000 ஆம் ஆண்டளவில் உலக மக்கல்தொகையில் பாதிக்கும் மேலாக வாழ்கின்றனர்.

கோடை சமப் பகலிரவு நாளில் கடக வரையின் பகல் நேரம் ழ்13 மணி, 35 மணித்துளியாக அமைகிறது. குளிர்காலச் சமப் பகலிரவு நாளில் இதன் பகல் நேரம் 10 மணி, 41 மணித்துளி ஆக அமைகிறது.

முதன்மை நெட்டாங்கில் தொடங்கி கிழக்குப் புறமாகச் செல்லும் கடக வரை பிவ்ருவனவற்றின் வழியே செல்கிறது:

ஆயத் தொலைவுகள் நாடு, நிலப்பரப்பு அல்லது கடல் குறிப்புகள்
23°26′N 0°0′E / 23.433°N 0.000°E / 23.433; 0.000 (Prime Meridian) கடக ரேகை  அல்ஜீரியா
23°26′N 11°51′E / 23.433°N 11.850°E / 23.433; 11.850 (Niger) கடக ரேகை  நைஜர்
23°26′N 12°17′E / 23.433°N 12.283°E / 23.433; 12.283 (Libya) கடக ரேகை  லிபியா சத் என்பதன் வடவெல்லைப் பகுதியை 23°26′N 15°59′E / 23.433°N 15.983°E / 23.433; 15.983 (Northernmost point of Chad) என்னும் இடத்தில் வெப்ப மண்டலம் தொடுகிறது.
23°26′N 25°0′E / 23.433°N 25.000°E / 23.433; 25.000 (Egypt) கடக ரேகை  எகிப்து
23°26′N 35°30′E / 23.433°N 35.500°E / 23.433; 35.500 (Red Sea) சிவப்புக் கடல்

style="background:#b0e0e6;"

23°26′N 38°38′E / 23.433°N 38.633°E / 23.433; 38.633 (Saudi Arabia) கடக ரேகை  சவூதி அரேபியா
23°26′N 52°8′E / 23.433°N 52.133°E / 23.433; 52.133 (United Arab Emirates) கடக ரேகை  ஐக்கிய அரபு அமீரகம்

அபு தாபி: பொதுவாக இந்த எமிரேட் மட்டுமே

23°26′N 55°24′E / 23.433°N 55.400°E / 23.433; 55.400 (Oman) கடக ரேகை  ஓமன்
23°26′N 58°46′E / 23.433°N 58.767°E / 23.433; 58.767 (Indian Ocean) இந்தியப் பெருங்கடல் அரேபியக் கடல்
23°26′N 68°23′E / 23.433°N 68.383°E / 23.433; 68.383 (India) கடக ரேகை  இந்தியா குசராத், இராசத்தான், மத்தியப் பிரதேசம் (உஜ்ஜெயின்), அத்தீசுகார், ஜார்க்கண்ட், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்கள்
23°26′N 88°47′E / 23.433°N 88.783°E / 23.433; 88.783 (Bangladesh) கடக ரேகை  வங்காளதேசம் குலானா, தாக்கா மற்றும் சிட்டகாங் ஆகிய பிரிவுகள்
23°26′N 91°14′E / 23.433°N 91.233°E / 23.433; 91.233 (India) கடக ரேகை  இந்தியா திரிபுரா மாநிலம்
23°26′N 91°56′E / 23.433°N 91.933°E / 23.433; 91.933 (Bangladesh) கடக ரேகை  வங்காளதேசம் சிட்டகாங் பிரிவு
23°26′N 92°19′E / 23.433°N 92.317°E / 23.433; 92.317 (India) கடக ரேகை  இந்தியா மிசோரம் மாநிலம்
23°26′N 93°23′E / 23.433°N 93.383°E / 23.433; 93.383 (Myanmar) கடக ரேகை  மியான்மார் மியன்மார்
23°26′N 98°54′E / 23.433°N 98.900°E / 23.433; 98.900 (China) கடக ரேகை  சீனா யுன்னான், குவாங்க்சி மற்றும் குவாங்க்டாங் ஆகிய பிரதேசங்கள்
23°26′N 117°8′E / 23.433°N 117.133°E / 23.433; 117.133 (Taiwan Strait) தாய்வான் கடற்கால் style="background:#b0e0e6;"
23°26′N 120°8′E / 23.433°N 120.133°E / 23.433; 120.133 (Taiwan) கடக ரேகை  சீனக்குடியரசு (தாய்வான்)
23°26′N 121°29′E / 23.433°N 121.483°E / 23.433; 121.483 (Pacific Ocean) பசிஃபிக் பெருங்கடல் நெக்கர் தீவு, ஹவாய் ஆகியவற்றிற்குச் சற்று தெற்காகச் செல்வதுகடக ரேகை  ஐக்கிய அமெரிக்கா
23°26′N 110°15′W / 23.433°N 110.250°W / 23.433; -110.250 (Mexico) கடக ரேகை  மெக்சிகோ பயா கலிஃபோர்னியா சுர் மாநிலம்
23°26′N 109°24′W / 23.433°N 109.400°W / 23.433; -109.400 (Gulf of California) கலிஃபோர்னியா வளைகுடா style="background:#b0e0e6;"
23°26′N 106°35′W / 23.433°N 106.583°W / 23.433; -106.583 (Mexico) கடக ரேகை  மெக்சிகோ சினோலா, துராங்கோ, ஜாகேடெசுகாசு, சான் உலூயிசு போடோசி, நியூவோ இலியோன் மற்றும் தமுலிபசு ஆகிய மாநிலங்கள்
23°26′N 97°45′W / 23.433°N 97.750°W / 23.433; -97.750 (Gulf of Mexico) மெக்சிக வளைகுடா style="background:#b0e0e6;"
23°26′N 83°0′W / 23.433°N 83.000°W / 23.433; -83.000 (Atlantic Ocean) அத்லாந்திகப் பெருங்கடல் புளோரிடா கடற்கால், நிக்கோலாசு கால்வாய் வழியாகச் சென்று
ஆங்குவில்லா கேசு என்பதற்கு சற்றே தெற்காக
சாந்தாரென் கால்வாய் வழியாகத் திறந்த கடலில் வீழ்வதுகடக ரேகை  பகாமாசு
23°26′N 76°0′W / 23.433°N 76.000°W / 23.433; -76.000 (Bahamas) கடக ரேகை  பகாமாசு எக்சூமா தீவுகள், இலாங் தீவு.
23°26′N 75°10′W / 23.433°N 75.167°W / 23.433; -75.167 (Atlantic Ocean) அத்லாந்திகப் பெருங்கடல் style="background:#b0e0e6;"
23°26′N 15°57′W / 23.433°N 15.950°W / 23.433; -15.950 (Western Sahara) மேற்கு சகாரா கடக ரேகை  மொரோக்கோவால் கோரப்படுகிறது
23°26′N 12°0′W / 23.433°N 12.000°W / 23.433; -12.000 (Mauritania) கடக ரேகை  மவுரித்தேனியா
23°26′N 6°23′W / 23.433°N 6.383°W / 23.433; -6.383 (Mali) கடக ரேகை  மாலி
23°26′N 2°23′W / 23.433°N 2.383°W / 23.433; -2.383 (Algeria) கடக ரேகை  அல்ஜீரியா

பெயர்

கடக ரேகை 
(மொராக்கோவினால் கோரப்படும்) மேற்கு சகாராவில் தாக்லாவின் தெற்குப் புறத்தில் கடக வரையைக் குறிப்பிடும் ஒரு சாலைக் குறியீடு. இந்தக் குறியீட்டினை புதாபசுத்து-பகாகோ பேரணியில் பங்கேற்றவர்கள் வைத்தனர். இதனால், இது, அங்கேரியில் உள்ள ஆங்கிலம்-அல்லாத குறியீடானது.

இந்த கற்பனை வரையினைக் கடக வரை என்றழைக்கின்றனர். காரணம், இதற்குப் பெயர் சூட்டிய வேளையில் சூரியன், ஜூன் மாதக் கதிர்த் திருப்பம் கொண்டு (நண்டு என்பதற்கான இலத்தீன் சொல்லான) கான்சர் என்னும் கடக விண்மீன் கூட்டத்தை நோக்கியிருந்தது. இருப்பினும், சம இராப்பகல் நாட்களின் முந்துநிலையின் விளைவாக, இது தற்சமயம் உண்மையான நிலையாக இல்லை. பன்னாட்டு வானவியல் கூட்டமைப்பு அறிவித்துள்ள எல்லைகளின்படி சூரியன் தற்போது ஜூன் கதிர்த் திருப்பத்தில் மேழத்தில் அமைந்துள்ளது. ஓரை வட்டத்தினைப் பன்னிரண்டு பிரிவுகளாக வகைப்படுத்தும் விண்மீன்சார் வானவியல் கூற்றுப்படி, சூரியன் அந்தச் சமயத்தில் மிதுனத்தில் இருந்தது. "வெப்ப மண்டலம்" எனப் பொருள்படும் டிராப்பிகல் என்னும் சொல்லே, திருப்புதல், என்று பொருள்படும் கிரேக்கச் சொல்லான டிராப்போஸ் என்பதிலிருந்து வந்ததாகும். இது சூரியன் கதிர்த் திருப்பங்களிலிருந்து திரும்புகிற உண்மையைக் குறிப்பதாக அமைந்தது.

காலநிலை

வடத் திருப்பப்புள்ளியில் காலநிலை, சீன உயர்நிலச் சமவெளியின் குளிரானப் பகுதி, அவாய் நெய்தற்சூழல்,கிழகத்தியக் கடற்கரை ஆகிய ஆண்டுக்கு 4 மீ உயர்மழை பொழியும் பகுதிகள் ஆகியவற்றைத் தவிர வெப்பமான உலர்ந்த பகுதியாகவே அமைகிறது. இந்த வட வெப்ப மண்டலம் இருவேறு பருவங்களைச் சந்திக்கிறது: வெப்பநிலை 45 செ அளவுக்கு உயரும் மீவெப்பக் கோடை, பேரளவு வெப்பநிலையாக 22 செ நிலவுவு மிதவெப்பக் குளிர்காலம். இந்த வெப்ப மண்டலப் பகுதியிலும் அதற்கு அருகிலும் சகாரா பாலைநிலமும் அதேவேளையில் கிழக்கே, சூன் முதல் செபுதம்பர் வரை பருவம் கொந்தளிப்பான பருவமழையும் ஆண்டின் பிற காலத்தில் மிகக் குறைவான மழையும் அமைகின்றன.

இந்த வட வெப்ப மண்டலப் பகுதியிலும் அண்மையிலும் உயரமான மலை தாய்வானில் உள்ள யூ சான் ஆகும். கடந்த பெருமப் பனியூழி காலத்தில் இம்மண்டலத்தில் 2800 மீ அளவு தாழ் உயரத்திலேயே அங்கிருந்து பனியாறுகள் கீழிறங்கின. அண்மையில் இன்னும் பனியாறுகள் இம்மண்டலத்தின் 470 கிமீ உயர அளவு அருகாமை சுற்றி அமைந்துள்ளன. இதற்கு மிக அருகாமையில் இமயமலையின் வடக்கே மின்யோங், பைசுயி பணியாறுகள் நிலவுகின்றன; மெக்சிகோவுக்குத் தெற்கே சுதாச்சிகுவாட் பனியாறு அமைந்துள்ளது.

சுற்றிச் செலுத்துதல்

பன்னாட்டு வானூர்தியியல் பேரவை அறிவித்துள்ள விதிமுறைகளின்படி, உலகைச் சுற்றிப் பறக்கும் வேகப் பதிவை நிறைவு செய்வதற்கு, ஒரு விமானம் கடக வரையின் நீளத்திற்குக் குறையாத அளவந்தொலைவு உயரத்தில் பறந்திருக்க வேண்டும். மேலும் அது நெட்டாங்குகள் அனைத்தையும் கடக்க வேண்டும். மேலும் தான் பறக்கத் தொடங்கிய விமானத் திடலிலேயே பயணத்தை முடிக்கவும் வேண்டும். இந்த நீளம் 36,787.559 கிலோ மீட்டர்களாகும். மேற்காணும் கடக வரையின் மாறுபாடுகளைக் கருத்தில் கொள்கையில், இந்த எண் உறுதியற்றதொரு துல்லிய அளவைக் குறிப்பிடுவதாகவே உள்ளது.

வழமையான முறையில் சுற்றிச் செலுத்தும் செயற்பாட்டிற்கான விதிகளைச் சற்றே தளர்த்தி, தொலைவு என்பது குறைந்தது, 37,000 கிலோ மீட்டர்களாக முழுமையாகியுள்ளது.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

மேலும் காண்க

Tags:

கடக ரேகை இடப்பெயர்ச்சிகடக ரேகை புவியியல்கடக ரேகை பெயர்கடக ரேகை காலநிலைகடக ரேகை சுற்றிச் செலுத்துதல்கடக ரேகை மேற்கோள்கள்கடக ரேகை வெளி இணைப்புகள்கடக ரேகை மேலும் காண்ககடக ரேகை

🔥 Trending searches on Wiki தமிழ்:

எஸ். ஜானகிகவிதைஇந்தியன் பிரீமியர் லீக்பாடாண் திணைசச்சின் (திரைப்படம்)எலுமிச்சைதமிழர் தொழில்நுட்பம்சிலம்பம்ஆழ்வார்கள்பதிற்றுப்பத்துதங்க மகன் (1983 திரைப்படம்)ஐந்தாம் பத்து (பதிற்றுப்பத்து)தமிழில் சிற்றிலக்கியங்கள்பள்ளுநாடார்வாட்சப்அவிட்டம் (பஞ்சாங்கம்)பீப்பாய்வணிகம்ஐராவதேசுவரர் கோயில்கொடைக்கானல்முகுந்த் வரதராஜன்விசயகாந்துமுல்லைப் பெரியாறு அணைசித்திரைத் திருவிழாஇலவச மதிய உணவுத் திட்டம், தமிழ்நாடுவிசாகம் (பஞ்சாங்கம்)சிவபெருமானின் பெயர் பட்டியல்காதல் கொண்டேன்சிறுதானியம்தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்சுகன்யா சம்ரிதி திட்டம் (செல்வமகள் சேமிப்பு திட்டம்)நல்லெண்ணெய்தமிழ்நாட்டின் நகராட்சிகள்திருத்தணி முருகன் கோயில்கன்னி (சோதிடம்)தமிழ் தேசம் (திரைப்படம்)நாளந்தா பல்கலைக்கழகம்திருவாசகம்வேதாத்திரி மகரிசிஅட்சய திருதியைபுற்றுநோய்கருப்பை நார்த்திசுக் கட்டிகலாநிதி மாறன்சிறுகதைஇந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்சடுகுடுபாரதிய ஜனதா கட்சிசங்க காலம்பதினெண்மேற்கணக்குபாலின விகிதம்ஐந்திணைகளும் உரிப்பொருளும்அயோத்தி இராமர் கோயில்திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில்கோயம்புத்தூர்தேசிக விநாயகம் பிள்ளைஇந்தியாவின் உயிர்க்கோளக் காப்பகங்கள்சேரன் செங்குட்டுவன்கருக்கலைப்புகன்னியாகுமரி மாவட்டம்அவுரி (தாவரம்)பீனிக்ஸ் (பறவை)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்தினகரன் (இந்தியா)முத்தொள்ளாயிரம்இராமானுசர்மண் பானைநன்னன்வளைகாப்புசுந்தரமூர்த்தி நாயனார்சச்சின் டெண்டுல்கர்அகத்தியர்கேழ்வரகுஏலாதிஆத்திசூடிகுகேஷ்சதுரங்க விதிமுறைகள்🡆 More