உலகளாவிய வலை: நாகப்பட்டினம் மாவட்டம்

உலகளாவிய வலை (World Wide Web, www, பொதுவாக 'வலை எனச் சுருக்கமாக அழைக்கப்படுவது) என்பது இணையத்தின் வழியாக அணுகப்படும், ஒன்றுக்கொன்று இணைக்கப்பட்ட மீயுரை ஆவணங்களைக் கொண்டுள்ள அமைப்பாகும்.

ஓர் வலை உலாவியைக் கொண்டு உரை, படங்கள், வீடியோக்கள் மற்றும் பிற பல்லூடகக் கூறுகளைக் கொண்டுள்ள வலைப் பக்கங்களைக் காணவும், மிகை இணைப்புகளைப் பயன்படுத்தி அவற்றில் ஒன்றிலிருந்து ஒன்றுக்கு செல்லவும் முடியும். முன்னாளில் இருந்த மீயுரை முறைமைகளைப் பயன்படுத்தி, 1989 ஆம் ஆண்டு ஆங்கில இயற்பியல் ஆய்வாளரும் உலகளாவிய வலைச் சங்கத்தின் தற்போதைய இயக்குநருமான சர் திம் பெர்ணெர்சு-லீ என்பவர் உலகளாவிய வலையைக் கண்டறிந்தார். பின்னாளில் சுவிட்சர்லாந்தின் செனீவா நகரில் உள்ள CERN நிறுவனத்தில் இவருடன் ஒன்றாகப் பணிபுரிந்த இராபர்ட்டு கயில்லியவ் என்ற பெல்சியக் கணினி அறிவியலாளர் இதற்கு உதவியாளராக இருந்தார். இவர்கள் 1990 ஆம் ஆண்டு ஒரு பிணையத்தில் "உலாவிகள்" மூலமாகக் காணக்கூடிய வகையில் "மீயுரைப் பக்கங்களைச்" சேகரித்து வைக்கக்கூடிய "வெப் ஆஃப் நோட்ஸ்" என்னும் அமைப்பிற்கான திட்டத்தை உருவாக்கி, அந்த வலையை திசம்பரில் வெளியிட்டனர். முன்பே உள்ள இணையத்துடன் இணைக்கப்பட்டு, களப் பெயர்கள் மற்றும் எச்.டி.எம்.எல் (HTML) மொழிக்கான சர்வதேசத் தரநிலைகள் சேர்க்கப்பட்டு உலகளவில் பிற வலைத்தளங்களும் உருவாக்கப்பட்டன. அப்போது தொடங்கி, பெர்ணெர்சு-லீ (வலைப் பக்கங்களைத் தொகுக்கப் பயன்படும் மார்க்-அப் மொழிகள் போன்ற) வலைத் தரநிலைகளின் மேம்பாட்டுக்கு வழிகாட்டுவதிலும் வழிநடத்துவதிலும் முக்கியப் பங்கு வகித்து வந்தார், அண்மைய ஆண்டுகளில் தனது கவனத்தை பொருள் வலையில் செலுத்தி வருகிறார்.

உலகளாவிய வலை: வரலாறு, எப்படிச் செயல்படுகிறது, வலை முகவரிகளில் உள்ள டபிள்யூ.டபிள்யூ.டபிள்யூ (WWW) என்ற முன்னொட்டு
ராபர்ட் கயில்லியவ் வடிவமைத்த வலையின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த லோகோ

உலகளாவிய வலையானது, தகவல்களை இணையத்தின் வழியே, பயன்படுத்த எளியதும் நெகிழ்த்தன்மையுள்ளதுமான வடிவமைப்புகளின் மூலம் பரப்புவதைச் சாத்தியமாக்கியது. இவ்வாறாக, உலகளாவிய வலையானது இணையத்தின் பயன்பாட்டைப் பிரபலமாக்குவதில் முக்கியப் பங்கு வகித்தது. உலகளாவிய வலை மற்றும் இணையம் ஆகிய இரண்டு சொற்களும் வழக்கில் ஒரே பொருள்படக்கூடியவையாகப் பயன்படுத்தப்பட்டாலும், உலகளாவிய வலை என்பது இணையம் என்ற சொல்லுக்குப் பொருள் ஆகாது. வலை என்பது இணையத்தில் உருவாக்கப்பட்ட ஓர் பயன்பாடாகும்.

வரலாறு

1989 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில், பெர்னெர்ஸ் லீ ஒரு திட்ட அறிமுகத்தை உருவாக்கினார். அதில் தான் 1980 ஆம் ஆண்டு உருவாக்கிய ஒரு தரவுத்தளம் மற்றும் மென்பொருள் பணித்திட்டமான ENQUIRE என்பதைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். மேலும் அதில் விரிவான தகவல் மேலாண்மை முறைமையை விளக்கினார். ராபர்ட் கயில்லியவ் உதவியுடன் அவர், தரவைச் சேகரிப்பதற்கான "மீயுரை ஆவணங்களுடன்" கூடிய "வெப் ஆஃப் நோட்ஸ்" அமைப்பில் "உலகளாவிய வலையகம்" (அல்லது ஒரே சொல்லில் "W3" எனவும் அழைக்கப்படும்) என்றழைக்கப்படும் "மீயுரை பணித்திட்டத்தை" உருவாக்குவதற்கான முறையான திட்டம் ஒன்றை (1990 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 12 அன்று) வெளியிட்டார். "இணையத்தையும் DECnet நெறிமுறை உலகங்களையும்" இணைக்கும் "அணுகல் நெறிமுறையைப்" பயன்படுத்தி, கணினிப் பிணையத்தில் உள்ள பல்வேறு "உலாவிகளின்" (உரைப் பயன்முறை அல்லது முழுத்திரைப் பயன்முறை) மூலம் "மீயுரைப் பக்கங்களில்" (வலைப்பக்கங்கள்) அந்தத் தரவைக் காண முடியும்.

இந்தத் திட்டமானது, EBT இன் (பிரௌன் பல்கலைக்கழகத்தில் உள்ள தகவல் மற்றும் புலமை ஆராய்ச்சி நிறுவனத்தின் துணைத் தயாரிப்பாகிய தகவல் மற்றும் மின்னணு புத்தகத் தொழில்நுட்பம்) Dynatext SGML ரீடரின் மாதிரியாக உருவாக்கப்பட்டிருந்தது. அதன் உரிமம் CERN நிறுவனத்திடம் இருந்தது. Dynatext முறைமையானது, தொழில்நுட்பத்தில் மேம்பட்டது (SGML ISO 8879:1986 ஐ HyTime மொழிக்குள் அமைந்த Hypermedia ஆக நீட்டித்ததில் முக்கியப் பங்கு வகித்தது) எனினும், மிகுந்த செலவினம் கொண்டதாகவும் மேலும் பொதுவான HEP (உயர் ஆற்றல் இயற்பியல்) சமூகத்திற்கு பொருந்தாத உரிமக் கொள்கையையும் கொண்டிருந்தது: இதில் ஒவ்வொரு ஆவணத்திற்கும், மேலும் ஒவ்வொரு முறை ஆவணம் மாற்றப்படும்போதும் கட்டணம் வசூலிக்கப்பட்டது.

பெர்னெர்ஸ் லீ 1990 ஆம் ஆண்டு ஒரு NeXT கணினியை உலகின் முதல் வலைச் சேவையகமாகவும் உலகளாவிய வலையைத் தொகுக்கவும் மற்றும் முதல் வலை உலாவியை உருவாக்கவும் பயன்படுத்தினார். 1990 ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் தினத்திற்குள் பெர்னெர்ஸ் லீ, ஒரு செயல்படக்கூடிய வலைக்குத் தேவையான அனைத்துக் கருவிகளையும் உருவாக்கிவிட்டிருந்தார்: இதில் முதல் வலை உலாவியும் (வலைத் திருத்தியாகவும் செயல்படக்கூடியது), முதல் வலைச் சேவையகமும், மேலும் பணித்திட்டத்தைப் பற்றி விவரிக்கும் முதல் வலைப் பக்கங்களும் அடங்கின.

1991 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6 அன்று, அவர் alt.hypertext செய்திக்குழுவில் உலகளாவிய வலைப் பணித்திட்டத்தைப் பற்றிய ஒரு சுருக்கமான விவரத்தை வெளியிட்டார். இந்தத் தேதியே இணையத்தில் வலையை ஒரு பொதுவான சேவையாக முதன்முறையாக வழங்கத் தொடங்கிய நாளாகக் குறிக்கப்படுகிறது.

ஐரோப்பாவிற்கு வெளியே முதல் சேவையகம், 1991 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் SLAC என்ற இடத்தில் அமைக்கப்பட்டது.

மீயுரை என்பதன் முக்கியமான அடிப்படைக் கருத்துக்கள் 1960 ஆண்டுகளின் பிரௌன் பல்கலைக் கழகத்தின் மீயுரைத் திருத்துதல் முறைமை (HES) போன்ற பழைய பணித்திட்டங்களில் இருந்து தோன்றியவை--- டெட் நெல்சன் மற்றும் ஆண்ட்ரீஸ் வேன் டாம் போன்றோரின் பங்களிப்பும் இருந்தன--- டெட் நெல்சனின் Project Xanadu மற்றும் டக்ளஸ் எங்கெல்பார்ட்டின் oN-Line System (NLS) ஆகியனவும் இவற்றில் அடங்கும். நெல்சன் மற்றும் எங்கெல்பார்ட் ஆகிய இருவரும் 1945 ஆம் ஆண்டு வெளியான "அஸ் வீ மே திங்க்" ("As We May Think") என்ற கட்டுரையில் விவரிக்கப்பட்ட வேன்னெவர் புஷ்ஷின் மைக்ரோஃபில்ம்-அடிப்படையிலான "memex," என்ற பணித்திட்டத்தால் கவரப்பட்டனர்.

பெர்னெர்ஸ்-லீ இன் முக்கியமான கண்டுபிடிப்பு, இணையத்துடன் மீயுரையை இணைத்ததேயாகும். 'வீவிங் த வெப் (Weaving The Web) என்ற தனது புத்தகத்தில், இரண்டு தொழில்நுட்பங்ளை இணைப்பதென்பது அவ்விரு தொழில்நுட்ப சமூகத்தின் உறுப்பினர்களாலும் சாத்தியபடக்கூடியது என்பதை, தான் தொடர்ச்சியாகப் பரிந்துரைத்ததாகவும், ஆனால் எவரும் இதைச் செய்யாதபட்சத்தில் தானாகவே அந்தப் பணித்திட்டத்தை ஒரு சவாலாக எடுத்துக்கொண்டதாகவும் குறிப்பிடுகிறார். அந்தச் செயலில், வலையிலும் மற்றும் வேறு எங்கும் உள்ள வளங்களுக்கு உலகளாவிய தனிப்பட்ட அடையாளங்காட்டிகள் முறைமையை உருவாக்கினார்: அது சீரான வள அடையாளங்காட்டி (Uniform Resource Identifier) என்று அறியப்படுகிறது.

உலகளாவிய வலைக்கும் அப்போது இருந்த பிற மீயுரை முறைமைகளுக்கும் பல வேறுபாடுகள் இருந்தன. வலைக்கு இரு-திசை இணைப்புகள் தேவைப்படவில்லை, ஒற்றைத் திசை இணைப்புகளே தேவைப்பட்டன. இதனால், ஒருவர் ஒரு குறிப்பிட்ட வளத்திற்கு, அதன் உரிமையாளரர் செயலின் துணையின்றியே இணைவது சாத்தியமானது. (அப்போதிருந்த முறைமைகளுடன் ஒப்பிடும்போது) இது, வலைச் சேவையகங்களையும் உலாவிகளையும் செயல்படுத்துவதன் சிரமத்தை குறிப்பிடுமளவு குறைத்தது, ஆனால் தொடர்ச்சியாக இணைப்புச் செயலிழப்பு சிக்கல்களை உண்டாக்கியது. முன்னர் இருந்த HyperCard போன்றவை போலன்றி, உலகளாவிய வலையகம் உரிமை சாராததாக இருந்தது, சேவையகங்கள் மற்றும் கிளையண்டுகளைச் சார்பின்றி உருவாக்கவும் உரிமம் பெறுதல் என்ற தடை இன்றி நீட்டிப்புகளைச் சேர்க்கவும் சாத்தியமாக்கியது.

1993 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 30 அன்று CERN நிறுவனம், உலகளாவிய வலையானது கட்டணம் ஏதுமின்றி அனைவருக்கும் இலவசமானதாக இருக்கும் என அறிவித்தது. Gopher நெறிமுறை இனி இலவசமாக வழங்கப்படாது என்ற அறிவிப்பு வெளியான இரண்டு மாதங்களில் இவ்வறிவிப்பு வெளிவந்ததால், Gopher இலிருந்து வலையை நோக்கி பெரும் மக்களை இது உடனடியாக மாறச் செய்தது. ViolaWWW என்பது அப்போதிருந்த ஒரு பிரபலமான வலை உலாவியாகும், அது HyperCard ஐ அடிப்படையாகக் கொண்டது.

1993 ஆம் ஆண்டு Mosaic வலை உலாவியை அறிமுகப் படுத்தியதிலேயே உலகளாவிய வலையின் முக்கியத் திருப்புமுனை தொடங்கியதாகக் கல்வியாளர்கள் பொதுவாக ஒப்புக்கொள்கின்றனர். அர்பனா-சாம்பைனில் (NCSA-UIUC) உள்ள இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தின் மீக்கணினிப் பயன்பாடுகளுக்கான தேசிய மையத்தில், மார்க் ஆண்டர்சன் என்பவரின் தலைமையிலான ஒரு குழு இந்த வரைவியல் உலாவியை உருவாக்கியது. Mosaic உலாவிக்கான நிதியானது அமெரிக்க ஒன்றியத்தின் செனட் உறுப்பினர் அல் கோர் அவர்களின் கணினித் துறை முன்னேற்ற நடவடிக்கைகளில் ஒன்றான, 1991 ஆம் ஆண்டின் உயர் செயல்திறன் கணினி மற்றும் தகவல்தொடர்பு சட்டத்தினால் தொடங்கப்பட்ட யூ.எஸ். உயர் செயல்திறன் கணினி மற்றும் தகவல்தொடர்புத் திட்டத்தின் மூலம் கிடைக்கப்பெற்றது. Mosaic வெளியிடப்படுவதற்கு முன்பு, வலைப் பக்கங்களில் உரையுடன் படங்கள் இடம்பெற்றிருக்கவில்லை, அதற்கு முன்பு இருந்த Gopher மற்றும் பெரும் பரப்பு தகவல் சேவையகங்கள் (WAIS) போன்ற இணையப் பயன்பாட்டில் இருந்த பிற நெறிமுறைகளை விடக் குறைந்த அளவே பிரபலமாக இருந்தது. Mosaic இன் வரைவியல் பயனர் இடைமுகமே, அது விரைவில் மிகப் பிரபலமான இணைய நெறிமுறையாக உருவாக உதவியது.

1994 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், திம் பெர்ணெர்சு-லீ அணு ஆராய்ச்சிக்கான ஐரோப்பிய நிறுவனத்திலிருந்து (CERN) வெளியேறிய பின்னர், உலகளாவிய வலைச் சங்கத்தை (W3C) நிறுவினார். இச்சங்கம், கணினி அறிவியலுக்கான ஆய்வகமான மாசசூசெட்ஸ் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் (MIT/LCS), பாதுகாப்பு மேம்பாட்டு ஆராய்ச்சி பணித்திட்டங்கள் முகமையின் (DARPA) ஆதரவுடன் நிறுவப்பட்டது, இந்த முகமையானது இணையத்தில் முன்னோடியாகவும் ஐரோப்பிய ஆணையமாகவும் இருந்தது.

1994 ஆம் ஆண்டின் இறுதியில், மொத்த வலைத்தளங்களின் எண்ணிக்கை தற்போதைய எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது மிகக் குறைவாக இருந்தது, ஆனாலும் அதிக எண்ணிக்கையிலான பிரபலமான வலைத்தளங்கள் அப்போதே இருந்தன. அவையே இன்று நாம் பயன்படுத்தும் பிரபலமான வலைச் சேவைகளுக்குத் தூண்டுதலாகவும், முன்னோடிகளாகவும் விளங்கின.

எப்படிச் செயல்படுகிறது

இணையம் மற்றும் உலகளாவிய வலை ஆகிய சொற்கள் பேச்சு வழக்கில் பெரிதும் வேறுபாடின்றி அடிக்கடி பயன்படுத்தப்படுகின்றன.இருப்பினும், இணையமும் உலகளாவிய வலையும் ஒன்றல்ல.இணையம் என்பது உலகளாவிய தரவுத் தகவல்தொடர்பு முறைமையாகும்.அது கணினிகளுக்கு இடையே தொடர்பை வழங்கும் ஒரு வன்பொருள் மற்றும் மென்பொருள் அகக்கட்டமைப்பாகும்.மாறாக, வலை என்பது இணையத்தின் வழியாகத் தொடர்புகொள்ளும் சேவைகளில் ஒன்றாகும்.இது மிகை இணைப்புகள் மற்றும் URLகள் மூலம் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்ட ஆவணங்கள் மற்றும் பிற வளங்களின் தொகுப்பாகும். சுருக்கமாக, வலை என்பது இணையத்தில் இயங்கும் ஒரு பயன்பாடாகும்.

பொதுவாக, முதலில் ஓர் வலை உலாவியில் அந்த வலைப்பக்கத்தின் URL ஐத் தட்டச்சு செய்வதோ அல்லது அந்த தளம் அல்லது வளத்திற்கான மிகை இணைப்பைப் பின் தொடர்வதோ தான், உலகளாவிய வலையில் ஒரு வலைப்பக்கத்தைக் காண்பதன் தொடக்கமாகும். அந்தப் பக்கத்தைத் தேடி எடுத்துக் காண்பிப்பதற்கு, வலை உலாவியானது திரைமறைவில் தொடர்ச்சியான பல தகவல்தொடர்பு செய்திகளை அனுப்பவும் பெறவும் செய்கிறது.

முதலில், URL இன் சேவையகப் பெயர் பகுதியானது களப் பெயர் முறைமை அல்லது DNS எனப்படும் உலகளவில் பகிரப்பட்ட இணையத் தரவுத்தளத்தைப் பயன்படுத்தி ஓர் IP முகவரிக்கு வழங்கப்படுகிறது. இந்த IP முகவரியானது வலைச் சேவையகத்தைத் தொடர்புகொள்ள மிகவும் அவசியமானதாகும். பின்னர் உலாவியானது அந்தக் குறிப்பிட்ட முகவரியில் வலைச் சேவையகத்திற்கு ஒரு HTTP கோரிக்கையை அனுப்பி வளத்தைக் கோருகிறது. அது ஒரு வழக்கமான வலைப்பக்கமாக இருக்கும்பட்சத்தில், வலை உலாவியானது முதலில் அந்தப் பக்கத்தின் HTML உரையைக் கோரி, உடனடியாகப் பாகுபடுத்துகிறது. பின்னர் அந்தப் பக்கத்தில் உள்ள படங்கள் மற்றும் பிற கோப்புகளைக் கோருகிறது. ஒரு வலைத்தளத்தின் பிரபலத் தன்மையானது 'பக்கக் காட்சிகள்' அல்லது அந்த சேவையகத்துடனான சேவையக 'அணுகல்களை' (கோப்புக் கோரிக்கைகள்) அடிப்படையாகக் கொண்டு புள்ளிவிவரமாக அளவிடப்படுகிறது.

தேவையான கோப்புகளை வலைச் சேவையகத்திலிருந்து பெற்ற பின்னர், உலாவியானது அந்தப் பக்கத்திற்குரிய HTML, CSS மற்றும் பிற வலை மொழிகளால் குறிப்பிடப்பட்ட விதத்தில் திரையில் காட்சிப்படுத்துகிறது. அந்தப் பக்கத்திற்கான படங்கள், வளங்கள் போன்ற அனைத்தும் பயனர் காணக்கூடிய திரையில் வலைப் பக்கத்தைத் தோற்றுவிக்க ஒருங்கிணைக்கப்படுகின்றன.

பெரும்பாலான வலைப் பக்கங்கள், தொடர்புடைய பிற பக்கங்கள், பதிவிறக்கங்கள், மூல ஆவணங்கள், வரையறைகள் மற்றும் வலை வளங்களுக்கான மிகை இணைப்புகளைத் தாமே கொண்டுள்ளன. இப்படிப்பட்ட பயன்மிக்க தொடர்புடைய வளங்கள், மீயுரை இணைப்புகளைப் பயன்படுத்தி ஒன்றுக்கொன்று இணைக்கப்பட்டுள்ளதனால், இது தகவல்களின் "வலை" என்று அழைக்கப்படுகிறது. அதை இணையத்தில் கிடைக்கக்கூடியதாகச் செய்ததால், 1990 ஆம் ஆண்டு நவம்பரில் முதலில் திம் பெர்ணெர்சு-லீ அதை WorldWideWeb (ஆங்கிலத்தில் CamelCase என்று அழைக்கப்படும் இடைவெளியின்றி சொற்களின் முதலெழுத்துக்களை மட்டும் பேரெழுத்துக்களாக எழுதும் முறை, பின்னர் கைவிடப்பட்டது) என்று அழைத்தார்.

ஏஜாக்ஸ் (Ajax) புதுப்பிப்புகள்

ஜாவாசிகிரிப்ட் (JavaScript) என்பது நெட்ஸ்கேப் (Netscape) நிறுவனத்தின் ப்ரெண்டென் எய்ச் என்பவரால் 1995 ஆம் ஆண்டு வலைப் பக்கங்களில் பயன்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட ஒரு நிரலாக்க மொழி (ஸ்கிரிப்ட்டிங்) ஆகும். ECMAScript என்பதே தரப்படுத்தப்பட்ட நிலையான பதிப்பாகும். சில வலைப் பயன்பாடுகள், மேலே விவரிக்கப்பட்ட பக்கவாரியான முறையின் குறைபாடுகளை நிவர்த்தி செய்ய, Ajax (asynchronous JavaScript and XML) ஐப் பயன்படுத்துகின்றன. பயனரின் சுட்டியில் செய்யும் கிளிக்குகள் போன்ற செயல்களுக்கு மறுமொழியாகவோ அல்லது செலவான நேரத்தையோ அடிப்படையாகக் கொண்டு சேவையகத்திற்கு கூடுதல் HTTP கோரிக்ககளை அனுப்பக்கூடிய பக்கத்துடன் JavaScript வழங்கப்படுகிறது. சேவையகத்தின் மறுமொழிகள், ஒவ்வொரு மறுமொழிக்கும் புதிய பக்கத்தை உருவாக்காமல், நடப்புப் பக்கத்தில் தேவையான மாற்றங்களைச் செய்யப் பயன்பட்டன. இதனால், வரம்புக்குட்பட்ட மற்றும் படிப்படியான தகவலை மட்டுமே சேவையகம் வழங்க வேண்டியிருந்தது. ஒன்றுக்கு மேற்பட்ட Ajax கோரிக்கைகளை ஒரே நேரத்தில் கையாள முடியும் என்பதால், தரவை மீட்டெடுக்கும் நேரத்திலும் பயனரால் ஒரு பக்கத்தைக் கையாள முடியும். சில வலைப் பயன்பாடுகள் ஏதேனும் புதிய தகவல் உள்ளதா என அறிய, குறிப்பிட்ட கால இடைவெளியில் சேவையகத்தை வினவுகின்றன.[மேற்கோள் தேவை]

வலை முகவரிகளில் உள்ள டபிள்யூ.டபிள்யூ.டபிள்யூ (WWW) என்ற முன்னொட்டு

இணையப் வழங்கிகள்(ஹோஸ்ட்ஸ்) (சேவைகள்), அவைகள் வழங்கும் சேவைகளுக்கு ஏற்ப இணையப் புரவன்களுக்குப் பெயரிடும் நீண்டகால வழக்கத்தின் காரணமாக பல வலை முகவரிகள் www என்ற முன்னொட்டுடன் தொடங்குகின்றன. இவ்வாறாக, பொதுவான புரவன் பெயர்கள் பின்வருமாறு: வலைச் சேவையகத்திற்கு www, FTP சேவையகத்திற்கு ftp மற்றும் USENET செய்தி சேவையகத்திற்கு news அல்லது nntp இன்னும் பல. இந்தப் புரவன் பெயர்கள் பின்னர் "www.example.com" இல் உள்ளதைப் போல, DNS துணைக் களப் பெயர்களாகக் காண்பிக்கப்படுகின்றன.

இது போன்ற துணைக் களப் பெயர்களைப் பயன்படுத்துவது என்பது, தொழில்நுட்ப அல்லது கொள்கைத் தரங்களின் அவசியங்களுக்காக இல்லை; உண்மையில், முதல் வலைச் சேவையகம் "nxoc01.cern.ch", என்று அழைக்கப்பட்டது. மேலும் பல வலைத் தளங்கள் www என்ற துணைக் கள முன்னொட்டு அல்லது "www2", "secure" அல்லது இவை போன்ற பிற முன்னொட்டுகள் இன்றியே உள்ளன. இந்தத் துணைக் கள முன்னொட்டுகள் எந்த விளைவையும் ஏற்படுத்துவதில்லை; அவை தேர்வு செய்யப்பட்ட வெறும் பெயர்கள் மட்டுமே. பெரும்பாலான வலைச் சேவையகங்கள், தனக்கே உரிய களம் (எ.கா., example.com) மற்றும் www துணைக் களம் (எ.கா., www.example.com) ஆகிய இரண்டும் ஒரே தளத்தைக் குறிக்கும்படி அமைக்கப்பட்டுள்ளன, மற்றவைக்கு ஒன்று அல்லது மற்றொரு வடிவம் தேவைப்படுகிறது அல்லது அவை வெவ்வேறு வலைத் தளங்களை வரையறுக்கலாம்.

சில வலை உலாவிகள், நாம் ஒரு சொல்லை முகவரிப் பட்டியில் தட்டச்சு செய்து return விசையை அழுத்தும்போது, அந்தச் சொல்லின் தொடக்கத்தில் "www." என்ற முன்னொட்டையும் பெரும்பாலும் முடிவில் ".com", ".org" மற்றும் ".net" போன்ற பின்னொட்டுகளையும் தானாகவே சேர்த்துக்கொள்ள முயற்சிக்கின்றன. எடுத்துக்காட்டுக்கு, 'microsoft' எனத் தட்டச்சு செய்தால் அது, http://www.microsoft.com என்றும் 'openoffice' எனத் தட்டச்சு செய்தால் அது, http://www.openoffice.org எனவும் மாற்றப்படும். Mozilla Firefox (அப்போது 'Firebird' என்ற பெயரில் வெளியாகி புழக்கத்தில் இருந்தது) 2003 ஆம் ஆண்டின் முந்தைய பதிப்புகளில் இந்த அம்சம் சேர்க்கப்பட்டிருந்தது. Microsoft நிறுவனம் 2008 ஆம் ஆண்டு இந்த அம்சத்தின் கருத்துக்கான யூ.எஸ். காப்புரிமையைப் பெற்றிருந்ததாக அறியப்படுகிறது, ஆனால் அது மொபைல் சாதனங்களுடனான பயன்பாட்டுக்கே என்று இருந்தது.

வலை முகவரிகளில் உள்ள 'http://' அல்லது 'https://' போன்ற பகுதிகள் பொருள் உள்ளவை : இவை மீயுரைப் பரிமாற்ற நெறிமுறை(Hypertext Transfer Protocol) மற்றும் பாதுகாப்பான HTTP(HTTP Secure) ஆகியவற்றைக் குறிக்கின்றன. மேலும் கோரிக்கைகளை அனுப்பவும் பக்கங்களையும் அவற்றின் படங்கள் மற்றும் பிற அனைத்து வளங்களையும் பெறவும் பயன்படுத்தும் நெறிமுறையையும் இவை குறிக்கின்றன. உலகளாவிய வலை செயல்படும் விதமானது HTTP பிணைய நெறிமுறையை அடிப்படையாகக் கொண்டே அமைகிறது. கடவுச்சொற்கள் அல்லது வங்கி விவரங்கள் போன்ற ரகசியமான தகவல்களை பொதுவான இணையத்தைப் பயன்படுத்தி அனுப்பும்பட்சத்தில் HTTPS நெறிமுறையிலுள்ள உட்பொதித்தல் அம்சம் அந்தப் பரிமாற்றங்களுக்கு ஓர் இன்றியமையாத பாதுகாப்பு அடுக்கைச் சேர்க்கிறது. இந்த முன்னொட்டுகள் தவிர்க்கப்பட்டால், பெரும்பாலும் வலை உலாவிகள் URLகளில் இந்த 'முன்னொட்டைச்' சேர்த்துக் கொள்கின்றன. சுருக்கமாக, வலை URLகள் பின்வரும் வடிவில் இருக்க வேண்டும் என RFC 2396 வரையறுத்துள்ளது: ://?#.

"டபிள்யூ.டபிள்யூ.டபிள்யூ" (WWW) என்பதன் உச்சரிப்பு

ஆங்கிலத்தில், www என்பது ஒவ்வொரு எழுத்துக்களின் பெயர்களையும் தனித்தனியாக உச்சரித்துக் கூறப்படுகிறது(டபள்யூ டபள்யூ டபள்யூ ). சில தொழில்நுட்பப் பயனர்கள் இதை டப்-டப்-டப் என உச்சரித்தாலும், அது பரவலாக வழக்கில் இல்லை. ஆங்கில எழுத்தாளர் டக்ளஸ் ஆடம்ஸ் இவ்வாறு நகைச்சுவையாகக் கூறுகிறார்:

The World Wide Web is the only thing I know of whose shortened form takes three times longer to say than what it's short for.

Douglas Adams, The Independent on Sunday, 1999

மாண்டரின் சீனத்தில், World Wide Web என்ற சொல்லானது பொதுவாக ஓர் ஒலிப் பொருள் பொருத்துதல் முறையில் வேன் வேய் வேங் (万维网) என மொழி பெயர்க்கப்படுகிறது, இது www என்பதற்கு போதுமானதாக உள்ளது. மேலும் சொற்றொடராகப் பார்க்கையில் "எண்ணற்ற பரிமாணங்களைக் கொண்ட வலை" என்று பொருள் தருகிறது. இந்த மொழிபெயர்ப்பானது உலகளாவிய வலையின் வடிவமைப்புக் கருத்துகளையும் துரித வளர்ச்சியையும் பெரும்பாலும் சரியாகவே உணர்த்துகிறது.

World Wide Web என்பது அலுவலகரீதியாக இடையில் இணைக்கோடு எதுவும் இன்றி, மூன்று தனித்தனி சொற்களாக, ஒவ்வொன்றும் பேரெழுத்தாகக் குறிக்கப்படுகிறது என திம் பெர்ணெர்சு-லீயின் வெப்-ஸ்பேஸில் குறிப்பிடப்பட்டுள்ளது. கூடுதலாக, Web (இங்கு W பேரெழுத்தாகக் குறிக்கப்படும்) என்ற சொல் அது ஒரு சுருக்க வடிவமாக உள்ளதைக் குறிப்பிடப் பயன்படுகிறது.

தரநிலைகள்

உலகளாவிய வலை, இணையம், கணினித் தகவல் பரிமாற்றம் போன்ற வெவ்வேறு கூறுகளின் செயல்பாட்டை, பல முறையான தரநிலைகளும் பிற தொழில்நுட்பத் தனிக்குறிப்பீடுகளும் வரையறுக்கின்றன.இந்த ஆவணங்களில் பெரும்பாலானவை பெர்னெர்ஸ்- லீ தலைவராக இருந்த உலகளாவிய வலைச் சங்கத்தால் (W3C) உருவாக்கப்பட்டவை, ஆனால் இவற்றில் சில, இணையப் பொறியியல் செயல் அமைப்பாலும்(Internet Engineering Task Force) (IETF) மற்றும் பிற நிறுவனங்களாலும் உருவாக்கப்பட்டவை.

வழக்கமாக வலைத் தரநிலைகளைப் பற்றிக் கூறும்போது, பின்வரும் வெளியீடுகள் அடிப்படையாகக் கருதப்படுகின்றன:

  • W3C இன், மார்க்-அப் மொழிகளுக்கான குறிப்பாக, HTML மற்றும் XHTML க்கான பரிந்துரைகள். இவை மீயுரை ஆவணங்களின் கட்டமைப்பையும் பொருள் விளக்கத்தையும் வரையறுக்கின்றன.
  • W3C இன், நடைதாள்களுக்கான(stylesheets) குறிப்பாக, CSSக்கான பரிந்துரைகள்.
  • Ecma International இன், ECMAScript (பொதுவாக JavaScript வடிவமைப்பில்) க்கான பரிந்துரைகள்.
  • W3C இன் ஆவணக் கூறு மாதிரிக்கான பரிந்துரைகள்.

பின்வருவன மட்டுமின்றி மேலும் சில கூடுதல் வெளியீடுகள், உலகளாவிய வலையின் பிற இன்றியமையாத தொழில்நுட்பங்களின் வரையறைகளை வழங்குகின்றன:

  • இணையத்திலுள்ள, மீயுரை ஆவணங்கள் மற்றும் படங்கள் போன்ற வளங்களைக் குறிக்கும் உலகளாவிய முறைமையான சீரான வள அடையாளங்காட்டி(Uniform Resource Identifier) (URI).URIகள் சில நேரங்களில் URLகள் எனவும் அழைக்கப்படுகின்றன. இவை IETF இன் RFC 3986 / STD 66: Uniform Resource Identifier (URI): Generic Syntax , அதற்கு முன்பிருந்த மற்றும் எண்ணற்ற URI வடிவத்தை வரையறுக்கும் RFC ஆவணங்களாலும் வரையறுக்கப்படுகின்றன;
  • மீயுரைப் பரிமாற்ற நெறிமுறை(HyperText Transfer Protocol) (HTTP) என்பது குறிப்பாக RFC 2616: HTTP/1.1 மற்றும் RFC 2617: HTTP Authentication ஆகிய ஆவணங்களில் வரையறுக்கப்பட்டபடி, சேவையகமும் உலாவியும் ஒன்றை ஒன்று எவ்வாறு அங்கீகரிக்கின்றன என்பதைக் குறிப்பிடுகின்றன.

தகவல் பாதுகாப்பு

தங்கள் பணத்தையும் நேரத்தையும் சேமித்து வசதி மற்றும் பொழுதுபோக்கைப் பெறும் கணினிப் பயனர்கள் வலை உள்ளிட்ட எண்ணற்ற தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தும்போது, அதற்காக தங்கள் தனியுரிமைக்கான உரிமையை ஒப்படைக்கலாம் அல்லது ஒப்படைக்காமல் இருக்கலாம். உலகளவில் 50 கோடிக்கும் அதிகமான மக்கள் ஏதேனும் ஒரு சமூக வலைப்பின்னல் சேவையைப் பயன்படுத்தி வருகின்றனர். இணையத்துடனே பிறந்து வளர்ந்த அமெரிக்கர்களில் பாதி மக்கள் தங்கள் ஆன்லைன் சுயவிவரத்தை உருவாக்கியுள்ளனர், தலைமுறை மாற்றத்தால் இவர்களின் எண்ணிக்கை மாறிக்கொண்டே இருக்கிறது. அமெரிக்க ஒன்றியத்தின் கல்லூரி மாணவர்களை மட்டும் உறுப்பினர்களாகக் கொண்டிருந்த Facebook இன் உறுப்பினர்களின் எண்ணிக்கை 70% அமெரிக்க ஒன்றியத்தைச் சாராத நபர்களாக முன்னேறியுள்ளது, மேலும் 2009 ஆம் ஆண்டில் தனியுரிமை விருப்பத்தேர்வுகளை அமைப்பதற்கான "நகர்வுக் கருவிகளின்" பீட்டா சோதனையைத் தொடங்கும் முன்பு, அதன் உறுப்பினர்களில் 20% நபர்களே தனியுரிமை அமைப்புகளைப் பயன்படுத்துவதாகக் கணக்கிட்டுள்ளது.

60 நாடுகளைச் சேர்ந்த தனியுரிமைப் பிரதிநிதிகள், வலையைப் பயன்படுத்தும் சிறார் மற்றும் பிற சிறுவர்களின் கல்விக்காகவும், சமூக வலைப்பின்னல்களைப் பயன்படுத்தும் பயனர்களுக்கான இயல்பான பாதுகாப்புக்காகவும், தொழிற்துறை சுய-ஒழுக்க நெறிகளை நிர்ணயிக்கத் தேவையான சட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும் எனக் கேட்கத் தீர்மானித்தனர். தனிப்பட்ட முறையில் அடையாளங்காணக்கூடிய தகவல்களை விற்பதைக் காட்டிலும், அவற்றைப் பாதுகாப்பதே வணிகத்திற்கு மிகுந்த இலாபத்தை ஈட்டித்தரும் எனவும் அவர்கள் நம்பினர். பயனர்களுக்கு, தங்கள் தனிப்பட்ட தகவல்களை கணினியிலிருந்து நீக்கவும், சில குக்கீகளையும் (cookie) விளம்பர நெட்வொர்க்குகளையும் தடுக்கவும் தேர்வு செய்துகொள்ளும் அம்சம் உலாவிகளில் உள்ளது. ஆனாலும் அவை வலைத்தளங்களின் சேவையகப் பதிவுகளால் குறிப்பாக வலை பீக்கான்களால் (வழிகாட்டி)கண்காணிக்கப்படுகின்றன. பெர்னெர்ஸ்-லீயும் அவரது சக பணியாளர்களும் தணிக்கைப் பதிவு, காரணப் பதிவு மற்றும் பயன்பாட்டுக் கூறுகள் போன்றவற்றைக் கொண்டு வலையின் கட்டமைப்பை, கொள்கை விழிப்புணர்வு நிலைக்கு நீட்டிப்பது சிறப்பானதாகவும் சரியான பயன்பாட்டுக்கு உதவியாகவும் இருக்கும் எனக் கருதினர்.

விளம்பரங்களின் முலம் கட்டணம் வசூலிக்கப்படும் சேவைகளில், Yahoo! வலைத்தளமே வணிகரீதியான வலைத்தளங்களின் பயனர்களைப் பற்றிய அதிகபட்ச தரவைச் சேகரித்தது, அது மாதம் ஒன்றுக்கு தனது மற்றும் தனது துணைத் தளங்களான விளம்பர நெட்வொர்க் தளங்களின் ஒவ்வொரு பயனரைப் பற்றியும் 2,500 பிட்டுகள் அளவுக்கு தகவலைச் சேகரித்தது. Yahoo! ஐத் தொடர்ந்து MySpace தளம் அதில் பாதி அளவிற்கு உயர்ந்தது, பின்னர் தொடர்ச்சியாக AOL-TimeWarner, Google, Facebook, Microsoft மற்றும் eBay போன்ற நிறுவனங்களும் வளர்ந்தன.

பாதுகாப்பு

வலை என்பது, குற்றவாளிகள் மால்வேர் (malware)பரப்புவதற்கான மிக வசதியான வழியாகிவிட்டது. இணையத்தில் மேற்கொள்ளப்படும் சைபர்க்ரைம் வகைக் குற்றங்களில் அடையாளத் திருட்டு, மோசடி, உளவு பார்ப்பதுமற்றும் இரகசியங்கள் சேகரித்தல் போன்றவை அடங்கும். வழக்கமான கணினிப் பாதுகாப்பு அம்சங்களைக் காட்டிலும் வலை அடிப்படையிலான தீங்குகளின் எண்ணிக்கை இப்போது மிகவும் பெருகிவிட்டது. மேலும் Google இன் கணக்கெடுப்பின்படி, பத்து வலைப் பக்கங்களில் ஒரு வலைப் பக்கம் தீங்கிழைக்கும் குறியீடுகளைக் கொண்டிருக்கலாம் எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. வலை அடிப்படையிலான குற்றங்களில் பெரும்பாலானவை சிறந்த மற்றும் சட்டப்பூர்வமான வலைத்தளங்களிலேயே நிகழ்கின்றன, மேலும் Sophos இன் கணக்கெடுப்பின்படி அவற்றில் பெரும்பாலானவை அமெரிக்க ஐக்கிய நாடுகள், சீனா மற்றும் ரஷ்யாவிலேயே ஹோஸ்ட் செய்யப்படுகின்றன.

தீம்பொருள் அச்சுறுத்தல்கள் அனைத்திலும் பெரும்பாலும் பொதுவானது, வலைத்தளங்களுக்கு எதிராக SQL injection தாக்கும் என்பதாகும். JavaScript இன் அறிமுகத்தின் போது உருவான க்ராஸ்-சைட் ஸ்கிரிப்டிங்(cross-site scripting) (XSS) போன்ற தாக்குதல்களுக்கும் வாய்ப்புள்ளன, இவை HTML மற்றும் URIகள் மூலமாகத் தாக்குகின்றன. Web 2.0 மற்றும் ஸ்கிரிப்ட் வசதி கொண்ட Ajax வலை வடிவமைப்பு போன்றவற்றால் இந்த ஸ்கிரிப்டிங் தாக்குதலானது ஓரளவுக்கு சரிசெய்யப்பட்டது. இன்றளவில் ஒரு கணக்கெடுப்பின்படி, மொத்தம் உள்ள வலைத்தளங்களில் 70% வலைத்தளங்களில் பயனர்களுக்கு XSS தாக்குதல்களுக்கு வாய்ப்புள்ளது.

இதற்காக முன்மொழியப்பட்ட தீர்வுகள் பெருமளவு வேறுபடுகின்றன. McAfee போன்ற பெரிய பாதுகாப்பு நிறுவனங்கள் post-9/11 ஒழுக்க நெறிமுறைகளுக்குட்பட்ட ஆணையங்கள் மற்றும் இணக்க விதிமுறைகளை முன்பே உருவாக்கி வைத்துள்ளனர். மேலும் Finjan போன்ற சில நிறுவனங்கள், குறியீடுகளையும் அனைத்து உள்ளடக்கத்தையும் அவற்றின் மூலத்தைக் கருத்தில்கொள்ளாமல் ஆய்வு செய்யும், செயல்மிகு நிகழ்நேர ஆய்வு முறையைப் பரிந்துரைத்துள்ளன. சிலர் பாதுகாப்பு என்பதை ஒரு செலவாகப் பார்க்காமல் துணிந்து ஒரு வணிக வாய்ப்பாகப் பார்க்க வேண்டுமானால், குறிப்பிட்ட சில நிறுவனங்களில் நடைமுறையில் உள்ள "எங்கும் எப்போதும் காக்கப்படும் டிஜிட்டல் உரிமைகள் மேலாண்மையானது", தரவையும் நெட்வொர்க்குகளையும் பாதுகாக்கும் பிற நூற்றுக்கணக்கான நிறுவனங்களை இடமாற்ற வெண்டும் என விவாதிக்கின்றனர். பயனர்கள், கணினியைப் பாதுகாப்பாகப் பயன்படுத்த, தகவல்களைப் பகிரும்போது மிகுந்த பொறுப்புடன் இருப்பதே இணையத்தைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்க மிகவும் பரிந்துரைக்கப்படும் வழியாகும் என ஜொனாதன் ஜிட்ரயின் கூறியுள்ளார்.

அணுகல் தன்மை

இணையத்திற்கான அணுகல் அனைவருக்கும் உள்ளது. கண் பார்வைக் குறைபாடு, காது கேளாமை, உடல் ஊனம், பேச இயலாமை, அறிவுத்திறன் குறைபாடு மற்றும் நரம்பியல் கோளாறு ஆகியவை உள்ளிட்ட எந்தக் குறைபாடும் ஒரு பொருட்டல்ல. கை முறிந்தவர்கள் போன்ற தற்காலிக உடல் குறைபாடு உள்ளவர்களுக்கும் முதுமையின் காரணமாக தங்கள் உடல் இயலாதவர்களுக்கும் அணுகல் அம்சங்கள் மிக உதவிகரமானவை. வலையமைப்பு தகவல்களைப் பெறவும் அனுப்பவும் மற்றும் சமூகத்துடன் தொடர்புகொள்ளவும் பயன்படுத்தப்படுகிறது. இதனால் உடல் குறைபாடு உள்ளவர்களுக்கும் சம அணுகலையும் சம வாய்ப்பையும் வழங்க, வலையானது அனைவரும் அணுகும்படி இருக்க வேண்டியது இன்றியமையாததாகிறது.

பல நாடுகளில் வலை அணுகல் தன்மை என்பது வலைத்தளங்களின் கட்டாயத் தேவையாகவே நிர்ணயிக்கப்பட்டுள்ளது. W3C வலை அணுகல் தன்மை திட்டத்தின் சர்வதேச ஒத்துழைப்பானது, துணைத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தக்கூடிய அல்லது பயன்படுத்தாத அனைத்து பயனர்களும் அணுகும் விதத்தில் வலையை வழங்குவதற்கான சில எளிய வழிகாட்டல்களை வலை உள்ளடக்க உரிமையாளர்களுக்கும் மென்பொருள் வடிவமைப்பாளர்களுக்கும் வழங்கியுள்ளது.

சர்வதேசமயமாக்கல்

W3C இன் சர்வதேசமயமாக்கல் செயல்பாடு, வலைத் தொழில்நுட்பமானது எல்லா மொழிகள், ஸ்கிரிப்ட்கள் மற்றும் கலாச்சாராங்களிலும் செயல்படும் என உறுதிசெய்கிறது. 2004 அல்லது 2005 ஆம் ஆண்டு தொடங்கி, யூனிகோட் குறியாக்க முறையானது தொடர்ந்து முன்னேறி 2007 ஆம் ஆண்டு டிசம்பரில் ASCII மற்றும் Western European ஆகிய இரண்டையும் முந்தி, வலையில் அதிகமாகப் பயன்படுத்தும் எழுத்துக்குறி குறியாக்கமாக முன்னிலை வகித்தது. முதலில் RFC 3986 ஆவணமானது வளங்கள் US-ASCII இன் துணைத் தொகுதிக்குள் உள்ள URI மூலம் அடையாளங்காணப்படுவதை அனுமதித்தது. RFC 3987 ஆவணமானது அதிக எண்ணிக்கையிலான எழுத்துக்குறிகளை அனுமதிக்கிறது—உலகளாவிய எழுத்துக்குறித் தொகுதியின் எழுத்துக்குறிகள் எதையும் அனுமதித்தது—மேலும் இப்போது ஒரு வளத்தை IRI மூலமாக எந்த மொழியிலும் அடையாளங்காண முடியும்.

புள்ளிவிவரங்கள்

2001 ஆம் ஆண்டின் ஒரு கணக்கெடுப்பின்படி, மொத்தமாக வலையில் 550 பில்லியன் (55000 கோடி) ஆவணங்கள் இருந்ததாக அறியப்பட்டுள்ளது, பெரும்பாலும் அவை கண்ணுக்குப் புலப்படாத அல்லது ஆழ் வலையில் இருப்பவை. 2002 ஆம் ஆண்டில் 2,024 மில்லியன் வலைப் பக்கங்களைக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட ஒரு கணக்கெடுப்பின்படி, இணையத்தின் பெரும்பாலான உள்ளடக்கம் ஆங்கிலத்தில் உள்ளதாக அறியப்பட்டது: அதன் அளவு 56.4%; அடுத்ததாக ஜெர்மென் மொழியில் இருந்தவை - (7.7%),ஃப்ரெஞ்சு- (5.6%) மற்றும் ஜாப்பனீஸ் - (4.9%). மாதிரிக்காக 75 மொழிகளில் வலைத் தேடல்களை மேற்கொண்ட வெகு சமீபத்திய ஆய்வின்படி, 2005 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தின் இறுதிவாக்கில் பொதுவில் அட்டவணையிடக்கூடிய வலையில் 11.5 பில்லியன் வலைப் பக்கங்கள் இருப்பதாக அறியப்பட்டது.As of மார்ச்சு 2009, அட்டவணையிடக்கூடிய வலையில் குறைந்தது 25.21 பில்லியன் பக்கங்கள் இருந்தன. 2008 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 25 ஆம் தேதி Google மென்பொருள் எஞ்சினீயர்களான ஜெஸ்ஸி ஆல்பர்ட்டும், நிஸான் ஹஜாஜ் என்பவரும் Google தேடலில் ஒரு ட்ரில்லியன் தனிப்பட்ட URLகளைக் கண்டறிந்துள்ளதாக அறிவித்தனர்.

As of மே 2009, 109.5 மில்லியனுக்கும் மேற்பட்ட வலைத்தளங்கள் இயங்குகின்றன. இவற்றில் 74% வலைத்தளங்கள், .com என்ற பொதுவான உயர்நிலை களத்தில் இயங்கும், வணிகரீதியான அல்லது பிற வலைத்தளங்களாகும்.

வேகம் தொடர்பான சிக்கல்கள்

இணைய அகக்கட்டமைப்பில் உள்ள நெரிசல் சிக்கல்கள் மற்றும் அதிக அளவிலான மறுமொழிக்கான நேரத்தின் விளைவான, மிக மெதுவான உலாவல் ஆகியவற்றால் உண்டான மன உளைச்சல், மக்களை, World Wide Web என்பதை World Wide Wait என்று வெறுப்பாக அழைக்கச் செய்தது. பியரிங் மற்றும் QoS போன்ற தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி இணையத்தின் வேகத்தை அதிகரிப்பது குறித்த விவாதங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. World Wide Wait என்று கூறக் காரணமான, காத்திருக்கும் நேரத்தைக் குறைப்பதற்கான பிற தீர்வுகள் W3C இல் கிடைக்கின்றன.

சிறந்த, வலை மறுமொழிக்கான காத்திருப்பு நேரத்திற்கான நிலையான வழிகாட்டல்கள் பின்வருமாறு:

  • 0.1 வினாடி (ஒரு வினாடியில் பத்தில் ஒரு பங்கு) - இது சிறந்த மறுமொழிக்கான காத்திருப்பு நேரமாகும். இந்த நிலையில், குறுக்கீடுகள் எதுவும் இருப்பதாக பயனர் உணரமாட்டார்.
  • 1 வினாடி - இது ஏற்றுக்கொள்ளக்கூடிய அதிகபட்ச, மறுமொழிக்கான காத்திருப்பு நேரமாகும். 1 வினாடிக்கும் அதிகமான பதிவிறக்க காலஅளவுகள் பயனர் அனுபவத்தில் குறுக்கிடும்.
  • 10 வினாடிகள். இது ஏற்றுக்கொள்ள முடியாத மறுமொழிக்கான காத்திருப்பு நேரமாகும். இதில் பயனர் அனுபவம் குறுக்கிடப்படுகிறது, பெரும்பாலும் பயனர் தான் பார்வையிடும் தளத்தையோ அல்லது கணினியையோ விட்டுச் சென்றுவிடும் வாய்ப்புள்ளது.

தேக்ககப்படுத்தல்

ஒரு பயனர், வலைப் பக்கம் ஒன்றை குறுகிய கால இடைவெளியில் மீண்டும் பார்வையிட்டால், அந்தப் பக்கத்தின் தரவை மூல வலைச் சேவையகத்திலிருந்து மீண்டும் பெற வேண்டியதில்லை. பெரும்பாலும் எல்லா வலை உலாவிகளும் சமீபத்தில் பெற்ற தரவை, கணினியின் வட்டியக்ககத்தில் தேக்ககப்படுத்துகின்றன. வழக்கமாக, உலாவியானது அனுப்பும் HTTP கோரிக்கைகள் கடைசியாகப் பதிவிறக்கப்பட்ட நேரத்திற்குப் பின்னர் மாறிய தரவை மட்டுமே கேட்கும். கணினியில் தேக்கம் செய்யப்பட்ட தரவானது முன்னர் பதிவிறக்கம் செய்யப்பட்ட அதே தரவாக இருந்தால், அந்தத் தரவானது மீண்டும் பயன்படுத்தப்படுகிறது.

தேக்ககப்படுத்துவது, இணையத்தின் வலைப் போக்குவரத்து நெரிசலின் அளவைக் குறைக்க உதவுகிறது. காலாவதியாவது என்பது பதிவிறக்கப்பட்ட ஒவ்வொரு கோப்பிற்கும் தனிப்பட்ட முறையில் முடிவு செய்யப்படுகிறது, அது படம், நடைதாள், JavaScript, HTML அல்லது அந்தக் குறிப்பிட்ட தளம் வழங்கும் எந்த உள்ளடக்கமாகவும் இருக்கலாம். இதனால், அதிகம் மாறக்கூடிய உள்ளடக்கம் இடம்பெற்றுள்ள தளங்களிலும், அடிப்படை வளங்களில் பெரும்பாலானவை எப்போதாவது ஒரு முறை மட்டும் புதுப்பிக்கப்பட வேண்டியவையாகவே இருக்கின்றன. CSS தரவு மற்றும் JavaScript போன்ற வளங்களை, தளவாரியான கோப்புகளாக வகைப்படுத்துவதென்பது செயல்திறன் மிக்க தேக்ககப்படுத்தலுக்கு உதவியாக இருக்கும் என வலை வடிவமைப்பாளர்கள் கண்டறிந்தனர். இது பக்கப் பதிவிறக்கத்தின் நேரத்தைக் குறைக்கவும் வலைச் சேவையகத்தின் தேவைகளைக் குறைக்கவும் உதவியாக இருக்கும்.

வலை உள்ளடக்கத்தைத் தேக்ககப்படுத்தக்கூடிய பிற இணையக் கூறுகளும் உள்ளன. பெருநிறுவன அல்லது கல்விநிறுவன தீஞ்சுவர்கள், அனைவரின் நன்மைக்காக ஒரு பயனர் கோருகின்ற குறிப்பிட்ட வலை வளங்களைத் தேக்ககப்படுத்துகின்றன. (தேக்ககப்படுத்தும் பதிலி சேவையகம் என்பதையும் காணவும்.) கூகுள் அல்லது யாகூ! போன்ற சில தேடுபொறிகளும் வலைத்தளங்களிலிருந்து தேக்ககப்படுத்திய உள்ளடக்கத்தைச் சேகரிக்கின்றன.

வலைச் சேவையகங்களில் உள்ள கோப்புகள் எப்போது புதுப்பிக்கப்பட்டன மற்றும் மீண்டும் அனுப்பப்பட வேண்டும் என்பனவற்றைத் தீர்மானிக்கும் வசதிகள் இருந்தாலும், மாறக்கூடிய முறையில் உருவாக்கப்பட்ட வலைப் பக்கங்களை வடிவமைப்பவர்கள், கோரிக்கைகளை அனுப்பும் பயனர்களுக்கு மீண்டும் அனுப்பப்படும் HTTP மேற்குறிப்புகளைக் கட்டுப்படுத்த முடியும், இதனால் இடைப்பட்ட நிலையில் உள்ள மற்றும் நுட்பமான வலைப் பக்கங்களைத் தேக்ககப்படுத்தப்படுவதில்லை. இணைய வங்கிப் பயன்பாடு மற்றும் செய்தித் தளங்கள் ஆகியவை இந்த வசதியை அதிகமாகப் பயன்படுத்துகின்றன.

HTTP இன் 'GET' கட்டளையால் கோரப்பட்ட தரவானது, பிற நிபந்தனைகள் பூர்த்தியாகும்பட்சத்தில் தேக்ககப்படுத்த வாய்ப்புள்ளன; ஒரு 'POST' கட்டளையின் மறுமொழியாக பெறப்படும் தரவானது POST செய்யப்பட்ட தரவைப் பொறுத்ததாகக் கருதப்படுகிறது, மேலும் அதனால் அவை தேக்ககப்படுத்தப்படுவதில்லை.

இணைப்புச் செயலிழப்பும் வலைக் காப்பகப்படுத்தலும்

மிகை இணைப்புகளால் குறிக்கப்படும் பல வலை வளங்கள் காலப்போக்கில் காணாமல் போகின்றன, இடம் பெயர்கின்றன, அல்லது வேறு உள்ளடக்கத்தால் இடமாற்றப்படுகின்றன. இந்த நிகழ்வை சிலர் "இணைப்புச் செயலிழப்பு" எனக் குறிப்பிடுகின்றனர், மேலும் இதனால் பாதிக்கப்படும் மிகை இணைப்புகளை "செயலிழந்த இணைப்புகள்" எனவும் அழைக்கின்றனர்.

வலையின் குறுகிய காலமே நிலைத்திருக்கும் தன்மையின் காரணமாக, வலைத் தளங்களைக் காப்பகப்படுத்தும் பல முறைகளை உருவாக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. இணையக் காப்பகப்படுத்தல் என்பது அதில் சிறந்த முறைகளில் ஒன்றாகும்; இந்த முறை 1996 ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் இருந்து வருகிறது.

குறிப்புகள்

புற இணைப்புகள்

வார்ப்புரு:Link FA

Tags:

உலகளாவிய வலை வரலாறுஉலகளாவிய வலை எப்படிச் செயல்படுகிறதுஉலகளாவிய வலை வலை முகவரிகளில் உள்ள டபிள்யூ.டபிள்யூ.டபிள்யூ (WWW) என்ற முன்னொட்டுஉலகளாவிய வலை டபிள்யூ.டபிள்யூ.டபிள்யூ (WWW) என்பதன் உச்சரிப்புஉலகளாவிய வலை தரநிலைகள்உலகளாவிய வலை தகவல் பாதுகாப்புஉலகளாவிய வலை பாதுகாப்புஉலகளாவிய வலை அணுகல் தன்மைஉலகளாவிய வலை சர்வதேசமயமாக்கல்உலகளாவிய வலை புள்ளிவிவரங்கள்உலகளாவிய வலை வேகம் தொடர்பான சிக்கல்கள்உலகளாவிய வலை தேக்ககப்படுத்தல்உலகளாவிய வலை இணைப்புச் செயலிழப்பும் வலைக் காப்பகப்படுத்தலும்உலகளாவிய வலை குறிப்புகள்உலகளாவிய வலை புற இணைப்புகள்உலகளாவிய வலை19891990இணையம்எச்.டி.எம்.எல்காணொளிசுவிட்சர்லாந்துஜெனீவாடிம் பேர்னேர்ஸ்-லீபடம்மல்டிமீடியாவலை உலாவிவலைத்தளம்வலைப் பக்கம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

சுரதாதிருப்பதிகளப்பிரர்வாக்காளர் சரிபார்க்கும் காகித தணிக்கை சோதனைகடல்வேதநாயகம் பிள்ளைஇந்திய வரலாறுபொருளாதாரம்வித்துபொது ஊழிஅன்னை தெரேசாநினைவே ஒரு சங்கீதம்அயோத்தி தாசர்ராஜா ராணி (1956 திரைப்படம்)மதீச பத்திரனகொடைக்கானல்சதுரங்க விதிமுறைகள்விடுதலை பகுதி 1சினேகாதினகரன் (இந்தியா)பக்கவாதம்சிறுநீரகம்குடலிறக்கம்நாட்டு நலப்பணித் திட்டம்தமிழர் கலைகள்இந்திய தேசிய காங்கிரசுகாற்றுகண்ணனின் 108 பெயர் பட்டியல்சிறுதானியம்குறிஞ்சிப் பாட்டுகாதலுக்கு மரியாதை (திரைப்படம்)பாரதிதாசன்ஐந்திணைகளும் உரிப்பொருளும்தேவாரம்ஜீரோ (2016 திரைப்படம்)மயங்கொலிச் சொற்கள்கிருட்டிணன்மனித வள மேலாண்மைபட்டினப்பாலைதமிழ்நாடு சட்டப் பேரவைதிராவிட முன்னேற்றக் கழகம்சித்திரைத் திருவிழாசுப்பிரமணியசுவாமி கோயில், எட்டுக்குடிசாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்திணையும் காலமும்உலக ஆய்வக விலங்குகள் நாள்கார்த்திக் (தமிழ் நடிகர்)நம்ம வீட்டு பிள்ளைஇந்தியாவில் இட ஒதுக்கீடுகேரளம்பெயர்ச்சொல்திட்டக் குழு (இந்தியா)சுற்றுச்சூழல் பாதுகாப்புதாராபாரதிஇல்லுமினாட்டிதரணிதமிழ்நாட்டின் மாநகராட்சிகள்ஜெயம் ரவிதிதி, பஞ்சாங்கம்மழைநீர் சேகரிப்புகட்டுரைமாதவிடாய்ரஜினி முருகன்இந்தியக் குடியுரிமை (திருத்தச்) சட்டம் 2019தமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியல்விடுதலைச் சிறுத்தைகள் கட்சிபிரெஞ்சுப் புரட்சிநெசவுத் தொழில்நுட்பம்மண்ணீரல்உரிச்சொல்கட்டுவிரியன்இந்தியன் பிரீமியர் லீக்வைரமுத்துதளபதி (திரைப்படம்)முலாம் பழம்பார்க்கவகுலம்தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்நவக்கிரகம்பெண்களின் உரிமைகள்🡆 More