இலையுதிர்காலம்

இலையுதிர்காலம் (Autumn, அமெரிக்க ஆங்கிலத்தில் ஃபால் (fall) எனவும் அறியப்படுகிறது) என்பது நான்கு மிதவெப்பநிலை நிலவும் பருவங்களில் ஒன்றாகும்.

கோடைகாலத்தில் இருந்து குளிர்காலத்திற்கு மாற்றம் நடைபெறுகையில் இலையுதிர்காலம் ஏற்படுகிறது. குறிப்பிடும்படியாக இரவு முன்கூட்டியே வந்தடையும் போது, வழக்கமாக மார்ச் மாதத்தில் (தென் கோளப்பகுதி) அல்லது செப்டம்பரில் (வடகோளப்பகுதி) இலையுதிர்காலம் உண்டாகிறது.

! வானிலை ஆய்வு ! விண்மண்டலப் பெயர்ச்சி |- வடகோளப்பகுதி | 1 செப்டம்பர் – 30 நவம்பர் | இலையுதிர்கால சம இரவுப் புள்ளி (22-23 செப்டம்பர்) – குளிர்கால சூரியகணநிலைநேரம் (21–22 டிசம்பர்) |- தென்கோளப் பகுதி | 1 மார்ச் – 31 மே | இலையுதிர்கால சம இரவுப் புள்ளி (20-21 மார்ச்) – குளிர்கால சூரியகணநிலைநேரம் (20-21 ஜூன்) |}

சம இரவுப் புள்ளிகளானவை, இந்த பருவங்களின் மத்தியில் எதிர்பார்க்கப்படுகின்றன, ஆனால் (நிலம் மற்றும் கடலின் வெப்ப மறைநிலைக் காரணமாக) வெப்பநிலை பின்னடைவால் முழுமையான வானியல் தொலைநோக்கில் இருந்து கணக்கிடப்பட்ட நாட்களைக் கடந்து இந்தப் பருவங்கள் தோன்றலாம் என்பது இதன் பொருளாகும். பிரதேசங்களைப் பொருத்து இதன் உண்மையான பின்னடைதல் மாறுபடுகிறது, இலையுதிர்காலத்தின் தொடக்கமாக இதை பிற கலாச்சாரத்தினர் பாவிக்கும் போது (மேலே உள்ள அட்டவணையில் காட்டப்பட்டுள்ளது), இலையுதிர் புள்ளியைப் பற்றிய சில கலாச்சாரங்களில் "இலையுதிர்காலத்தின் மத்தியில்" ஏற்படுவதாகக் கூறப்படுகிறது.

கிழக்கு ஆசிய சூரியன் சார்ந்த பருவகாலமுறையில் இலையுதிர்காலமானது, ஆகஸ்ட் 8 ஆம் தேதி தொடங்கி நவம்பர் 7 ஆம் தேதி முடிவடைகிறது.

இலையுதிர்காலம்
இலையுதிர்காலத்தின் அவதாரம் (கரியர் & இவிஸின் கற்பாள அச்சு, 1871).

தேசிய வானிலை சேவையான மெட் எயரானைப் பொறுத்தவரை, அயர்லாந்தில் செப்டம்பர், அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்கள் இலையுதிர்கால மாதங்களாக உள்ளன. எனினும், பண்டைய செல்டிக் மரபுகளைச் சார்ந்த ஐரிய நாட்காட்டியைப் பொறுத்தவரை. இலையுதிர்காலமானது ஆகஸ்ட், செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்கள் முழுவதும் நிலைத்திருக்கும் அல்லது குறிப்பிட்ட காலச்சூழல் சார்ந்து சில நாட்கள் கடந்து நிறைவுறவும் வாய்ப்புள்ளது. ஆஸ்திரேலியாவில் இலையுதிர்காலமானது, அதிகாரப்பூர்வமாக மார்ச் 1 ஆம் தேதி தொடங்கி மே 31 ஆம் தேதி நிறைவடைகிறது. ஆஸ்திரேலியா கண்டத்தின் சூழல் மண்டலங்களின் மிகப்பெரிய மாறுபாடானது, திண்மையான அமெரிக்க பருவநிலைக் நாட்காட்டிகளில் அளிக்கப்படுகிறது. தட்பவெப்பநிலைகளுக்கு பொருத்தமானதைக் காட்டிலும் பண்பாட்டுக் கருத்தில் இது பொருந்தி அமைக்கப்படுகிறது. இந்த பருவநிலை சுழற்சிகளானது, ஆஸ்திரேலியாவின் பல்வேறு உள்ளூர் பழங்குடி மக்களால் பெயரிடப்பட்டு விவரிக்கப்படுகிறது, அவர்களது உள்ளூர் புவியியலுக்குரிய சூழ்நிலைகளைப் பொறுத்து இது கணிசமாக ஒன்றுக்கொன்று மாறுபடுகிறது. மேலும் உள்ளூர் சூழ்நிலை நிகழ்வுகள் மற்றும் வளங்களைச் சார்ந்து தெளிவற்றதாகவும் இவை உள்ளன.

சொற்தோற்றம்

இலையுதிர்காலம் 
கலிபோர்னியாவின் நாபா பள்ளத்தாக்கின் இலையுதிர்க்கால திராட்சைத் தோட்டம்

ஆன்ட்டம் (autumn) என்ற வார்த்தையானது, பழைய பிரெஞ்ச் வார்த்தையான ஆட்டோம்ப்னே என்ற வார்த்தையில் இருந்து பிறந்ததாகும் (நவீன பிரெஞ்சில் ஆட்டோம்னே ஆகும்), பின்னர் துவக்க இலத்தீன் வார்த்தையான ஆட்டம்னஸ் என்பதில் இருந்து நெறிபடுத்தப்பட்டது. 12 ஆம் நூற்றாண்டில் இந்த வார்த்தையைப் பயன்படுத்தியதற்கு அரிதான எடுத்துக்காட்டுகள் உள்ளன, ஆனால் 16 ஆம் நூற்றாண்டில் இந்த வார்த்தை வழக்கமான ஒன்றாக மாறியது.

16 ஆம் நூற்றாண்டிற்கு முன்பு, இந்தப் பருவத்தைக் குறிப்பிடுவதற்கு ஹார்வெஸ்ட் என்ற சொல் வழக்கமாகப் பயன்படுத்தப்பட்டது. எனினும், நகரத்தில் வாழ்வதற்காக படிப்படியாக பெரும்பாலான மக்கள் வேலை செய்யும் நிலத்தில் இருந்து இடம் பெயர்ந்தனர் (குறிப்பாக எழுதப் படிக்கத் தெரிந்த மக்கள் மட்டுமே நமக்கு இப்போது அறியப்படும் மொழியைப் பயன்படுத்தியுள்ளனர்), ஹார்வெஸ்ட் (harvest) என்ற சொல்லானது ஆண்டின் அறுவடைப் காலத்தைக் குறிப்பிடுவதை விடுத்து, உண்மையான அறுவடை செயலை மட்டுமே குறித்தது, மேலும் இந்தப் பருவத்தைக் குறிப்பிடுவதற்காக ஹார்வெஸ்ட் (Harvest) என்ற வார்த்தைக்குப் பதிலாகப் ஃபால் (Fall) மற்றும் ஆட்டம் (Autumn) ஆகியவற்றை பயன்படுத்தத் தொடங்கினர்.

இதன் மாற்றுச் சொல்லான ஃபால் என்பது இப்போது இந்தப் பருவத்திற்கான வட அமெரிக்க ஆங்கிலச் சொல் ஆகும். பண்டைய ஜெர்மானிய மொழிகளில் இருந்து இந்த வார்த்தைப் பிறந்ததாகும். இதன் துல்லியமான மூலம் தெளிவாக இல்லை, பழைய ஆங்கிலமான fiæll அல்லது பியல்லன் மற்றும் பழைய நார்சான ஃபால் இவையனைத்தும் இந்த வார்த்தை பிறந்ததற்கான வாய்ப்பாக உள்ளன. எனினும், இந்த வார்த்தைகள் அனைத்தும் "உயரத்தில் இருந்து விழுவது" என்ற அர்த்தத்தையே கொண்டுள்ளன, மேலும் இவையனைத்தும் பொதுவான ஒரு மூலத்தில் இருந்தோ அல்லது ஒவ்வொன்றும் தனியாகவோ பிறந்திருக்கலாம். 16 ஆம் நூற்றாண்டு இங்கிலாந்தின் பருவத்தை சுட்டிக்காட்டுவதற்கு இந்த சொல் பிறந்திருக்கலாம், "இலைகள் உதிர்தல்" மற்றும் "ஆண்டின் வீழ்ச்சி" போன்ற இடைக்கால ஆங்கிலத்தை வெளிப்படுத்தும் தன்மைகளில் இருந்து சுருங்கி இந்த வார்த்தை வெளிப்பட்டிருக்கலாம்.

17 ஆம் நூற்றாண்டில், வட அமெரிக்காவின் குடியேற்ற நாடுகளுக்கு ஆங்கிலேயர் குடியேற்றம் நடந்த போது, புதிதாய் குடியேறியவர்கள் இவர்களது மொழியைத் தங்களுடன் எடுத்துச் சென்றனர். ஃபால் என்ற சொல் படிப்படியாக பிரிட்டனில் கைவிடப்பட்ட போது, வட அமெரிக்காவில் இந்த சொல் மிகவும் வழக்கமான ஒன்றானது. இருந்த போதிலும் அறிவியலிலும், இலக்கியங்களிலும் ஆட்டம் என்ற சொல் பயன்படுத்தப்பட்டது.

பிரபல கலாச்சாரத்தில்

ஹார்வெஸ்ட் அமைப்பு

இலையுதிர்காலம் 
ஜான் எவெரெட் மில்லியஸ், "இலையுதிர்கால இலைகள்".

வெப்ப பருவநிலையிலிருந்து குளுமையான பருவநிலைக்கு மாற்றம் அடைதல் தொடர்பாகவும், முதன்மை அறுவடைப் பருவமாக இதனை சார்ந்த நிலையும், இதன் கருப்பொருள்கள் மற்றும் பிரபல கருத்துருக்களின் மேல் ஆதிக்கம் செலுத்தியது. மேற்கத்தியக் கலாச்சாரத்தில், இலையுதிர்காலம் தோன்றுவது வழக்கமாக மிகவும் அழகுவாய்ந்ததாய் இருக்கும், அச்சமயத்தில் அறுவடைக்குத் தயாராய் இருந்த பழங்கள், காய்கறிகள் மற்றும் தானியங்களை நன்கு-பக்குவப்பட்டப் பெண்கள் அழுகுபடுத்துவர். மிகவும் பண்டையக் கலாச்சாரங்களில் அறுவடையின் இலையுதிர்காலக் கொண்டாட்டங்களை சிறப்பாகக் கொண்டிருந்தனர். பெரும்பாலும் அவர்களது நாட்காட்டிகளில் மிகவும் முக்கியமான ஒன்றாக இது இருந்தது. அமெரிக்காவின் மத்திய-இலையுதிர்காலத்தில் கொண்டாடப்படும் தேங்ஸ்கிவ்விங் விடுமுறையை இந்த கொண்டாட்டங்களின் அழிந்துபோகாத எதிரொலியாக இருக்கிறது. மேலும் "டாபெர்னாக்லெஸின்" முழுநிலவு ஹார்வெஸ் விழாவை ஆதாரமாகக் கொண்ட ஜூவிஷ் சுக்கோட் விடுமுறையையும் இதில் அடக்கமாகும் (ஹார்வெஸ்ட் செயல்படுத்தப்படும் குடில்களானது பின்னர் சமயம் சார்ந்த முக்கியத்துவத்தைப் பெற்றது). மேலும் பல வட அமெரிக்க இந்திய விழாக்களானது, வனத்தில் கிடைக்கப்பெறும் இலையுதிர்காலத்தில் பழுத்த உணவுகள், சீன மத்திய-இலையுதிர்காலம் அல்லது நிலவு விழா மற்றும் பல பிற கொண்டாட்டங்களின் ஹார்வெஸ்டுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த இலையுதிர்காலக் கொண்டாட்டத்தில் முக்கியக்கூறாய் இருக்கும் மனப்பாங்கு என்பது கரடுமுரடான பருவநிலையில் வருவதாய் இருப்பதுடன் இணைக்கப்பட்டிருக்கும் குறிப்பிட்ட மனச்சோர்வுடன் பூமியில் கலந்திருக்கும் பழங்களின் மகிழ்ச்சியாகும்.

ஆங்கிலக் கவிஞர் ஜான் கெட்ஸின்' கவிதையான டூ ஆட்டம்னில் இந்தப் பார்வை வழங்கப்பட்டுள்ளது, அமோக வளமுடைய நேரமாகவும், 'கனிந்த பழங்கள்' கிடைக்கும் நேரமாகவும் இந்தப் பருவத்தை அவர் அதில் விளக்கியுள்ளார்.

எழுச்சி குன்றிய அமைப்பு

இலையுதிர்காலக் கவிதையில் எழுச்சி குன்றிய அமைப்பானது பெரும்பாலும் இணைந்து வருகிறது. கோடைகாலத்தின் சாதகமான தன்மைகள் மறைந்து விட்டன, இப்போது குளிர்காலத்தின் குளுமை அடிவானத்தில் உள்ளது. வானம் மூப்படைந்து விட்டது, மக்கள் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் உள்ளார்ந்து விட்டனர். ஜெர்மன் கவிஞரான ரெயினர் மரியா ரில்க், அவரது மிகவும் பிரபலமான கவிதைகளில் ஒன்றான ஹர்ர்ப்ஸ்டாக் கில் (இலையுதிர் தினம் ) அதைப் போன்ற மன உணர்ச்சிகளை வெளிப்படுத்தியுள்ளார், அதில் கூறப்பட்டதாவது:

    வீடில்லாதவர்கள், கட்டமுடியாது (எப்போதும்).
      தனிமையில் இருப்பவர்கள், நீண்ட நாள் அவ்வாறே நீடிப்பர்,
        எழுவர், வாசிப்பர் மற்றும் நீண்ட எழுத்துக்களால் எழுதுவர்
          மரங்கள் நிறைந்த அகன்ற சாலையில் முன்னும், பின்னுமாய்
            இலைகள் மலர்கையில் அமைதியற்று அலைந்து திரிவர்.

அதே போன்ற எடுத்துக்காட்டுகளை ஐரிஷ் கவிஞரான வில்லியம் பட்லர் யெட்ஸின்' கவிதையான த வைல்ட் ஸ்வான்ஸ் அட் கூலி என்பதில் கண்டறியலாம், முதிர்ச்சியடையும் பருவமானது கவிஞரில் அவரது சொந்த அனுபவமாக சங்கேத முறையில் உணரப்படுகின்றது. இயற்கையான உலகத்தைப் போன்று, அவர் தனது முதிர்ச்சியை அடைந்து விட்டதையும் தற்போது கண்டிப்பாக தவிர்க்க இயலாத முதுமையையும், இறப்பையும் பார்க்கவிருப்பதை உணர்கிறார். பிரெஞ்ச் கவிஞர் பால் வெலரினின் "சான்சன் டி'ஆட்டோம்னே " ("இலையுதிர்க்கால பாடல்") வலிமையாகவும், கவலையின் வலிநிறைந்த உணர்வுகளையும் வகைப்படுத்துகின்றது. செப்டம்பர் 1819 ஆம் ஆண்டு கெட்ஸ்' டூ ஆட்டம் எழுதப்பட்டது, மனச்சோர்வு கொண்ட பிரதிபிம்பத்தை இது உணர்வால் எதிரொலிக்கிறது, ஆனால் இந்தப் பருவத்தின் புதிய வளத்தையும் முக்கியப்படுத்துகிறது.

    மூடுபனிப் பருவமும் கனிந்த பழமும்,
      முதிர்ச்சியடைந்த சூரியனின் நெருங்கிய நண்பன்;
        கூரை வேய்தலுக்கு முதல்நாளில் சுழன்று ஓடும் திராட்சைப் பழங்களுடன்
          எவ்வாறு சுமையேற்றுவது மற்றும் ஆசிர்வதிப்பது பற்றி அவனுடன் சதித்திட்டம் தீட்டுகிறது;
            பாசிபடர்ந்த குடில்களின் மரங்களை ஆப்பிள்களுடன் வளைத்து,
              விதைக்காக முதிர்ந்த அனைத்து பழங்களையும் நிரப்புகின்றது; '''

பிற அமைப்புகள்

இலையுதிர்காலம் 
ஹாலோவீன் பூசணிக்காய்கள்

இலையுதிர் காலமானது, ஹாலோவீன் பருவத்துடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது (செல்ட்டிக் இலையுதிர்கால விழாவான சாம்ஹெயின் மூலமாக ஈர்க்கப்பட்டுக் கொண்டாடப்படுகிறது), மேலும் இதை எடுத்துரைப்பதற்கு பரவலான சந்தைப்படுத்தல் விளம்பரப் பிரச்சாரங்களும் உள்ளன. ஆண்டின் இந்த சமயத்தில் விடுமுறையுடன் நெருங்கி சம்பந்தப்பட்ட தொலைக்காட்சி, திரைப்படம், புத்தகம், ஆடை, வீட்டு அலங்காரம் மற்றும் தின்பண்டத் தொழில்துறைகளில் உற்பத்திப் பொருள்கள் விளம்பரப்படுத்தப்படும், செப்டம்பரின் ஆரம்பத்திலிருந்து இருந்து அக்டோபர் 31 ஆம் தேதி வரை இந்த விளம்பரப் பிரச்சாரங்கள் நிகழும். விடுமுறை முடிவுற்று அவர்களது கருப்பொருள்கள் வெகுவாக வலிமையை இழக்கும் போது, கிறிஸ்துமஸை மையமாகக் கொண்டு விளம்பரங்கள் வெளிவரத் துவங்கும்.

1997 ஆம் ஆண்டில் இருந்து, அமெரிக்காவில் பெண் குழந்தைகளுக்கான சிறந்த 100 பெயர்களில் ஒன்றாக ஆட்டம் இருக்கிறது.

இந்தியப் புராணக்கதைகளில், "இலையுதிர்காலத்தின் தெய்வம்" (சாரதா) என அறியப்படும் பெண் தெய்வமான மற்றும் கல்வித் தெய்வமான சரஸ்வதிக்கு உகந்த பருவமாக இலையுதிர்காலம் கருதப்படுகிறது.

சுற்றுலாத்துறை

இலையுதிர் மரங்கள் காணப்படும் இடங்களில் வர்ணமயமான நிறங்களில் காட்சி அளிக்கிறது மாறுதல்கள் . உலகில் மிக முக்கியமான பின்வரும் மூன்று பிரதேசங்கள் சிறப்பு வாய்ந்ததாக குறிப்பிடப்படுகிறது.

  • கனடாவின் பெரும்பகுதிகள்
  • அமெரிக்கா,
  • கிழக்கு ஆசியா (சீனா, கொரியா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட)
  • ஐரோப்பா
  • அமெரிக்காவின் கிழக்கு கனடா மற்றும் புது இங்கிலாந்து பிரதேசங்கள் இலையுதிர்காலப் பசுமைக்கு புகழ்பெற்று விளங்குகின்றன, மேலும் இது பெரும்பாலான சுற்றுலாப்பயணிகளையும் ஈர்க்கிறது .

படங்களின் தொகுப்பு

குறிப்புதவிகள்

தலைப்புப் பகுதி

புற இணைப்புகள்

Tags:

இலையுதிர்காலம் சொற்தோற்றம்இலையுதிர்காலம் பிரபல கலாச்சாரத்தில்இலையுதிர்காலம் சுற்றுலாத்துறைஇலையுதிர்காலம் படங்களின் தொகுப்புஇலையுதிர்காலம் குறிப்புதவிகள்இலையுதிர்காலம் தலைப்புப் பகுதிஇலையுதிர்காலம் புற இணைப்புகள்இலையுதிர்காலம்இரவு

🔥 Trending searches on Wiki தமிழ்:

பரிதிமாற் கலைஞர்திருமலை நாயக்கர்சைவத் திருமுறைகள்ம. கோ. இராமச்சந்திரன்மனம் கொத்திப் பறவை (திரைப்படம்)ரயத்துவாரி நிலவரி முறைமொழிவரலாறுஇந்திய அரசியலமைப்பின் முகப்புரைஅன்பே ஆருயிரே (2005 திரைப்படம்)புவிபரணர், சங்ககாலம்முல்லைக்கலிபூரான்கலம்பகம் (இலக்கியம்)தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பெண்களுக்கு எதிரான வன்முறைஐஞ்சிறு காப்பியங்கள்இலவச மதிய உணவுத் திட்டம், தமிழ்நாடுஅண்ணாமலையார் கோயில்காடுவெட்டி குருதினமலர்திருவள்ளுவர்அறுசுவைஇந்திய அரசியலமைப்பிலுள்ள அடிப்படை உரிமைகள்வசுதைவ குடும்பகம்பரணி (இலக்கியம்)மஞ்சும்மல் பாய்ஸ்திக்கற்ற பார்வதிபள்ளிக்கூடம்உரிச்சொல்ஜன கண மனவைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாதர் கோயில்தமிழக வரலாறுஅஸ்ஸலாமு அலைக்கும்குறவஞ்சிஅவதாரம்அருந்ததியர்திருக்குர்ஆன்இராசேந்திர சோழன்காசோலைகுறுந்தொகைசின்னம்மைபோயர்சித்ரா பௌர்ணமிகண்ணகிநெசவுத் தொழில்நுட்பம்இந்திய மாநிலங்களின் தலைநகரங்களும் ஒன்றியப் பகுதிகளின் தலைநகரங்களும்பீப்பாய்இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றம்ஆசிரியப்பாநிலாவேற்றுமை (தமிழ் இலக்கணம்)யாழ்இராவணன்நான்மணிக்கடிகைநாடகம்திருவோணம் (பஞ்சாங்கம்)புனித யோசேப்புதமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல், 2019உத்தரகோசமங்கைகல்விஜிமெயில்இந்திய நாடாளுமன்றம்நீ வருவாய் எனஎட்டுத்தொகை தொகுப்புபாம்புமகரம்திருக்கடையூர் அமிர்தகடேசுவரர் கோயில்உடுமலை நாராயணகவிதிருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில்ம. பொ. சிவஞானம்இன்னா நாற்பதுபழமொழி நானூறுஅமலாக்க இயக்குனரகம்அன்னை தெரேசாமுள்ளம்பன்றி🡆 More