ஆமிர் கான்

ஆமீர் கான் (Aamir Khan, இந்தி: आमिर ख़ान, ஆமிர் உசைன் கான், பிறப்பு: மார்ச் 14, 1965),ஒரு இந்திய திரைப்பட நடிகர், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார்.

இந்தி முன்னணி நடிகர்களில் ஒருவரான இவர், விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் வெற்றி பெற்ற பல படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் அமீர் கான் புரொடக்சன்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் நிறுவனரும் உரிமையாளரும் ஆவார்.

அமீர் கான்
आमिर ख़ान
ஆமிர் கான்
பிறப்பு மார்ச்சு 14, 1965 (1965-03-14) (அகவை 59)
மும்பை, இந்தியா
தொழில் நடிகர், திரைப்பட தயாரிப்பாளர்
நடிப்புக் காலம் 1973-1974, 1984, 1988-2001, 2005 - தற்போதுவரை
துணைவர் கிரன் ராவோ (2005 - தற்போதுவரை)
ரேனா தத்தா (1986 - 2002)
பிள்ளைகள் ஜுனைட் கான்
ஐரா கான்

அமீரின் மாமா நசீர் ஹூசைனின் யாதோன் கி பாரத் (1973) திரைப்படத்தில் அவர் குழந்தை நட்சத்திரமாக அவரது நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கினார், அதன் பின்னர் கான் பதினொறு ஆண்டுகள் கழித்து ஹோலி (1984) திரைப்படத்தின் மூலம் அவரது தொழில் வாழ்க்கையைத் தொடங்கினார். அவரது முதல் வணிக ரீதியான வெற்றியானது அவரது உறவினர் மன்சூர் கானின் குயாமத் செ குயாமத் டக் (1988) படத்தின் மூலம் கிடைத்தது, அந்த படத்திற்காக அவர் சிறந்த அறிமுக நடிகருக்கான பிலிம்பேர் விருது வென்றார். 1980கள் மற்றும் 1990களில் முந்தைய ஏழு விருதுப் பரிந்துரைகளுக்குப் பிறகு, கான் அவரது முதல் சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருதை, வசூல் சாதனை புரிந்த ராஜா இந்துஸ்தானி (1996) திரைப்படத்தில் நடித்தமைக்காகப் பெற்றார்.

2001 இல், அகாடெமி விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்ட லகான் படத்தின் மூலம் அவர் ஒரு திரைப்படத் தயாரிப்பாளராகவும் அறிமுகமானார். அந்தப் படத்தில் கான் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார், மேலும் அவரது நடிப்பிற்காக தனது இரண்டாவது சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருதினைப் பெற்றார். நான்கு ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு, கானின் மறுபிரவேசம் கேட்டன் மேத்தாவின் மங்கள் பண்டே: தி ரய்சிங் (2005) திரைப்படத்தின் மூலம் அமைந்தது, பின்னர் ரங் தே பசந்தி யில் (2006) அவரது பாத்திரத்திற்காக சிறந்த நடிப்புக்கான பிலிம்பேர் கிரிட்டிக்ஸ் விருதை வென்றார். 2007 இல், தாரே ஜமீன் பர் (லைக் ஸ்டார்ஸ் ஆன் எர்த் ) படத்தின் மூலம் அவர் ஓர் இயக்குநராகவும் அறிமுகமானார். அந்த படத்திற்காக சிறந்த இயக்குநருக்கான பிலிம் பேர் விருதினைப் பெற்றார். அதனைத் தொடர்ந்து கஜினி (2008) திரைப்படம் வெளிவந்தது. அது பணவீக்கத்தினால் எந்த பாதிப்பும் அடையாமல் அப்படம் எல்லாக் காலத்திலும் வெளிவந்த இந்தியத் திரைப்படங்களில் அதிக வசூல் செய்தது.

ஆரம்பகால வாழ்க்கை

கான் இந்தியாவில் உள்ள மும்பையின் பாந்த்ராவில் உள்ள ஹோலி ஃபேமிலி மருத்துவமனையில் முஸ்லிம் குடும்பத்தில் பிறந்தார், அவரது குடும்பம் பலதலைமுறைகளாக இந்தியத் திரைப்படத் துறையில் பங்களித்து வருகிறது. அவரது தந்தை தாஹிர் ஹூசைன் ஒரு திரைப்படத் தயாரிப்பாளர், அவரது மாமா மறைந்த நசீர் ஹூசைனும் ஒரு தயாரிப்பாளராகவும், அத்துடன் அவர் ஒரு இயக்குநராகவும், நடிகராகவும் இருந்தவர்.

கான் முஸ்லீம் அறிஞர் மற்றும் அரசியல்வாதி மவுலானா அப்துல் கலாம் ஆசாத்தின் பரம்பரையைச் சேர்ந்தவர், மேலும் முன்னாள் மக்களவைத் தலைவராக இருந்த டாக்டர் நஜ்மா ஹெப்துல்லாவின் உறவினர் ஆவார்.

திரைப்படத்துறை வாழ்க்கை

நடிகர்

கான் அவரது திரைப்பட வாழ்க்கையை அவரது குடும்பத் தயாரிப்பான நசீர் ஹூசைனால் உருவாக்கப்பட்ட யாடோன் கி பாரத் (1973) மற்றும் மத்தோஷ் (1974) ஆகிய திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்ததன் மூலம் தொடங்கினார். பதினொறு ஆண்டுகள் கழித்து, வாலிபனான பின் அவரது நடிப்பு அறிமுகம் கேட்டன் மேத்தாவின் ஹோலி (1984) திரைப்படத்தில் அதிகம் கவனிக்கப்படாத பாத்திரத்தின் மூலம் தொடங்கியது.

கானின் கவனிக்கத் தகுந்த முக்கிய பாத்திரம், 1988 இல் வெளிவந்த திரைப்படமான குயாமத் சே குயாமத் டக் கில் நடித்ததன் மூலம் அமைந்தது, அப்படத்தை அவரது உறவினர் நசீர் ஹூசைனின் மகன் மன்சூர் கான் இயக்கியிருந்தார். அந்த திரைப்படம் வணிகரீதியாக வெற்றி பெற்று சாதனை படைத்தது, அதன் விளைவாக கான் திரைப்படத் துறையில் ஒரு முன்னணி நடிகரானார். 'சாக்லேட் ஹீரோ' மாதிரியான தோற்றம் கொண்டிருந்ததால் அவர் இளம் கனவு நட்சத்திரமாகக் கருதப்பட்டார். மேலும் அவர், விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட ராக் திரைப்படத்தில் நடித்தார், அந்த படத்திற்காக கான் அவரது முதல் தேசிய விருதை சிறப்பு ஜூரி விருது பிரிவில் பெற்றார். அதன் பிறகு, 80 களின் பிற்பகுதியில் மற்றும் 90 களின் முற்பகுதிகளில் அவர், அந்த ஆண்டில் மிகவும் அதிகமாக வசூலித்த திரைப்படமான தில் (1990), தில் ஹாய் கி மன்டா நஹின் (1991), ஜோ ஜீடா ஓஹி சிக்கந்தர் (1992), ஹம் ஹெயின் ரஹி பியார் கே (1993) (அதில் அவர் திரைக்கதையும் எழுதியிருந்தார்) மற்றும் ரங்கீலா (1995) போன்ற பல்வேறு திரைப்படங்களில் நடித்தார். அந்தப் படங்களில் பெரும்பாலானவை விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் வெற்றி பெற்றவை. சல்மான் கானுடன் இணைந்து நடித்த அன்டாஸ் அப்னா அப்னா உள்ளிட்ட பிற படங்களும் வெற்றி பெற்றன. அந்த திரைப்படம் வெளியிடப்பட்ட நேரத்தில் விமர்சகர்களால் சாதகமாக விமர்சிக்கப்படவில்லை, ஆனால் ஆண்டுகள் கடந்த பிறகு திரைப்படங்களில் முக்கிய இடத்தைப் பிடித்தது.

கான் ஆண்டுக்கு ஒன்று அல்லது இரண்டு திரைப்படங்களில் மட்டுமே தொடர்ந்து நடித்து வருகிறார், இது இந்தி திரைப்பட நடிகர்களின் வழக்கத்திற்கு மாறான குறிப்பிடத்தக்க பண்பாகும். 1996 இல் வெளிவந்த அவரது ஒரே திரைப்படம், தர்மேஸ் தர்ஷன் இயக்கிய வணிக ரீதியிலான பிளாக்பஸ்ட்டர் திரைப்படமான ராஜா இந்துஸ்தானி ஆகும், அதில் அவர் கரிஸ்மா கபூருடன் இணைந்து நடித்திருந்தார். அந்த திரைப்படம் முந்தைய ஏழு விருதுப் பரிந்துரைகளுக்குப் பிறகு அவரது முதல் சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருதைப் பெற்றுத் தந்தது, மேலும் அந்த ஆண்டின் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது, அத்துடன் 1990களில் அதிகமாக வசூலித்த படங்களில் மூன்றாவது இடத்தைப் பிடித்தது. அந்த நேரத்தில் கான் திரைப்படத் துறையில் நிலையான இடத்தைப் பிடித்தார், அதனைத் தொடர்ந்து சில ஆண்டுகள் வெளிவந்த அவரது பெரும்பாலான திரைப்படங்கள் ஓரளவிற்கே வெற்றி பெற்றன. 1997 இல், அவர் அஜய் தேவ்கானுடன் இணைந்தும், ஜூகி சாவ்லாவுடன் ஜோடியாகவும் நடித்த இஷ்க் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வெற்றியைப் பெற்றது. 1998 இல், கான் ஒரளவுக்கு வெற்றி பெற்ற குலாம் திரைப்படத்தில் நடித்தார், மேலும் அந்த திரைப்படத்தில் பின்னணிப் பாடலும் பாடியிருந்தார். 1999 இல் கானின் முதல் வெளியீடு ஜான் மேத்யூ மத்தனின் சர்ஃபரோஸ் (1999) ஆகும், அத்திரைப்படமும் ஓரளவிற்கு வெற்றி பெற்று பாக்ஸ் ஆபிஸில் சராசரிக்கும் சற்று அதிகமான வெற்றி என்ற நிலையை எட்டியது, எனினும் அந்தத் திரைப்படம் விமர்சகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது, மேலும் அதில் கானின் பாத்திரமான எல்லைத் தீவிரவாதத்திற்கு எதிராக போராடும் அர்ப்பணிப்புள்ள, நேர்மையான மற்றும் களங்கமில்லாத காவல் துறை அதிகாரி பாத்திரம் தீபா மேத்தாவின் கலைத்திரைப்படமான எர்த்தின் பாத்திரத்தைப் போல நல்ல வரவேற்பைப் பெற்றது. புதிய சகத்திராண்டில் அவரது முதல் வெளியீடாக மேளா வெளியானது, அதில் அவரது சகோதரர் ஃபைசல் கானுடன் அவர் நடித்திருந்தார், அந்த திரைப்படம் பாக்ஸ் ஆபிஸிலும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது.

2001 இல் அவர் லகான் திரைப்படத்தில் தோன்றினார். அந்த திரைப்படம் பெரியளவில் விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் வெற்றி பெற்றது, மேலும் 71 ஆவது அகாடெமி விருதுகளில் சிறந்த அந்நிய மொழித் திரைப்படத்துக்கான பரிந்துரையைப் பெற்றது. கூடுதலாக, அந்தத் திரைப்படம் பல்வேறு சர்வதேசத் திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு விமர்சன ரீதியான பாராட்டைப் பெற்றது, மேலும் தேசிய திரைப்பட விருதுகள் உள்ளிட்ட குறிப்பிடத்தகுந்த இந்திய விருதுகளையும் வென்றது. கான் தனது இரண்டாவது சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருதை வென்றார்.

லகானின் வெற்றியைத் தொடர்ந்து அந்த ஆண்டின் பிற்பகுதியில் அக்‌ஷய் கண்ணா மற்றும் சைஃப் அலி கான் ஆகியோருடன் இணைந்து தில் சாத்தா ஹை படத்தில் நடித்தார், அத்திரைப்படத்தில் பிரீத்தி ஜிந்தா அவரைக் காதலிப்பவராக நடித்தார். அந்தத் திரைப்படம் புதியவரான ஃபாரான் அக்தரால் எழுதி இயக்கப்பட்டது. விமர்சகர்களின் கருத்துப்படி, அந்தத் திரைப்படம் இந்திய நகரங்களிலுள்ள இளைஞர்களின் இன்றைய நிலையை வெளிப்படுத்துவதில் ஒரு புதிய அத்தியாயத்தை உருவாக்கியது. அந்த திரைப்படத்தில் நவீன, நற்பண்புள்ள மற்றும் பொது நோக்குடைய பாத்திரங்கள் விளக்கப்பட்டிருந்தன. அந்தத் திரைப்படம் ஓரளவிற்கு நன்மதிப்பைப் பெற்றது, மேலும் பெரும்பாலும் நகரங்களில் வெற்றி பெற்றது.

அதன் பிறகு கான் அவரது தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சினைகள் காரணமாக நான்கு ஆண்டுகள் இடைவெளி எடுத்துக்கொண்டார், பின்னர் 2005 இல் அவரது மறுபிரவேசமாக கேட்டன் மேத்தாவின் மங்கள் பண்டே: தி ரய்சிங் திரைப்படத்தில் 1857 இந்தியக் கிளர்ச்சி அல்லது 'இந்திய சுதந்திரத்திற்கான முதல் போருக்கு' உதவி செய்யும் ஒரு இயல்பு வாழ்க்கை வாழும் சிப்பாய் மற்றும் தியாகியாக தலைப்புப் பாத்திரத்தில் நடித்தார்.

2006 இல் கானின் முதல் வெளியீடு ராகேஷ் ஓம்பிரகாஷ் மிஸ்ராவின் விருது வென்ற ரங் தே பசந்தி திரைப்படமாகும். அதில் அவரது பாத்திரம் விமர்சன ரீதியான பாராட்டைப் பெற்றது, மேலும் அத்திரைப்படத்திற்காக அவர் சிறந்த நடிப்புக்கான பிலிம்பேர் கிரிட்டிக்ஸ் விருதையும் சிறந்த நடிகருக்கான பல்வேறு பரிந்துரைகளையும் பெற்றார். அந்தத் திரைப்படம் அந்த ஆண்டில் அதிக வசூல் செய்த திரைப்படங்களில் ஒன்றானது, மேலும் ஆஸ்கார் செல்வதற்குத் தகுதியான இந்தியாவின் அதிகாரப்பூர்வமான திரைப்படமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. எனினும் அத்திரைப்படம் பரிந்துரைப்பட்டியலில் இடம்பெறவில்லை, அத்திரைப்படம் இங்கிலாந்தில் சிறந்த வெளிநாட்டுத் திரைப்படத்துக்கான BAFTA விருதுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டது. கானின் அடுத்த படமான ஃபனாவிலும் (2006) அவரது நடிப்பு பாராட்டப்பட்டது, மேலும் அந்த திரைப்படம் 2006 இல் அதிக வசூல் செய்த திரைப்படங்களில் ஒன்றானது.

2007 இல் அவரே தயாரித்திருந்த அவரது திரைப்படம் தாரே ஜமீன் பர் ஆகும், மேலும் அந்த படத்தின் மூலம் இயக்குநராகவும் அறிமுகமானார். அந்த திரைப்படம், அமீர் கான் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் வெளிவந்த இரண்டாவது தயாரிப்பாகும், அந்த திரைப்படத்தில் கான் கற்றல் குறைபாடுள்ள குழந்தையின் நண்பராகவும் உதவி செய்பவராகவும் உள்ள ஆசிரியராக வரும் துணைக் கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். அந்த திரைப்படம் விமர்சகர்களிடமும் பார்வையாளர்களிடமும் சிறந்த வரவேற்பைப் பெற்றது. கானின் நடிப்பு நல்ல வரவேற்பைப் பெற்றது, எனினும் குறிப்பாக அவரது இயக்கத்துக்காக அவர் பெரிதும் பாராட்டப்பட்டார்.

2008 இல், கான் கஜினி திரைப்படத்தில் தோன்றினார். அந்த திரைப்படம் வணிக ரீதியாக பெரிய வெற்றியைப் பெற்றது, மேலும் அந்த திரைப்படம் எந்த பாதிப்புமின்றி (அதாவது பணவீக்கம் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாமல்) அதுவரை வெளிவந்த திரைப்படங்களில் அதிக வசூல் செய்த பாலிவுட் திரைப்படமானது. அந்தத் திரைப்படத்தில் அவரது நடிப்புக்காக, கான் பல்வேறு விருது நிகழ்ச்சிகளில் சிறந்த நடிகருக்கான பரிந்துரைகள் பலவற்றைப் பெற்றார், அதேபோன்று அவரது பதினைந்தாவது சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் பரிந்துரையையும் பெற்றார்.

தயாரிப்பாளர்

2001 இல் அமீர்கான் புரொடக்சன்ஸ் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை கான் நிறுவினார். அவரது முதல் தயாரிப்பு லகான் திரைப்படமாகும். அந்த திரைப்படம் 2001 இல் வெளிவந்தது, அதில் நடித்ததன் மூலம் கான் முன்னணி நடிகரானார். அந்த திரைப்படம் சிறந்த வேற்று மொழி திரைப்படப் பிரிவில் 74 ஆவது அகாடெமி விருதுகளுக்கு செல்வதற்கு இந்தியாவின் அதிகாரப்பூர்வ திரைப்படமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. அந்தத் திரைப்படம் முடிவாக அந்தப் பிரிவில் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிந்துரை செய்யப்பட இருந்தது, ஆனால் நோ மேன்'ஸ் லேண்ட் திரைப்படமே அந்தப் பிரிவில் தேர்ந்தெடுக்கப்பட்டது. அந்த திரைப்படம் பிலிம்பேர் மற்றும் IIFA போன்ற பல்வேறு திரைப்பட விழாக்களில் குறிப்பிடத்தகுந்த விருதுகளை வென்றது, மேலும் மிகவும் பிரபலமான திரைப்படத்துக்கான தேசியத் திரைப்பட விருதை வென்றது, அந்த விருது கானுக்கும் அந்த படத்தின் இயக்குநர் ஆஷுதோஷ் கோவாரிகருக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டது. பின்னர் லகான் திரைப்படம் ஆஸ்கார் தேர்ந்தெடுக்கப்படுவதிலிருந்து தோற்றதைப் பற்றி கான் பின்வருமாறு குறிப்பிட்டார்: "நிச்சயமாக நாங்கள் ஏமாற்றமடைந்தோம். ஆனால் உண்மையில் நம் நாட்டினர் அனைவருமே எங்களது பின்னால் உள்ளார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு தைரியமளித்தது".

2007 இல் அவர் தயாரித்த நாடகவகைத் திரைப்படமான தாரே ஜமீன் பர் படத்தில் ஒரு இயக்குநராகவும் அறிமுகமானார். கான் அந்த திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான தர்ஷீல் சபாரியுடன் ஒரு துணைப்பாத்திரத்திலும் நடித்திருந்தார். அந்த திரைப்படம் முதலில், அமோல் குப்தே மற்றும் தீபா பாட்டியா ஆகிய கணவன் மனைவி குழுவின் கற்பனையில் உருவாக்கப்பட்டது. அந்த திரைப்படம், கற்றல் குறைபாடு அவனுக்கு இருக்கிறது என்பதை ஆசிரியர் கண்டுபிடிக்கும் வரை பள்ளியில் சிரமப்பட்டு வந்த இளம் சிறுவனைப் பற்றிய கதையாகும். அந்த திரைப்படம் விமர்சன ரீதியாக பாராட்டப்பட்டது, அத்துடன் பாக்ஸ் ஆபிஸிலும் வெற்றி பெற்றது. தாரே ஜமீன் பர் 2008 இன் பிலிம்பேர் சிறந்த திரைப்பட விருதை வென்றது, அத்துடன் இதர பிலிம்பேர் மற்றும் ஸ்டார் ஸ்கிரீன் விருதுகள் பலவற்றை வென்றது. கானின் பணிகளுக்காக அவர் பிலிம்பேரில் சிறந்த திரைப்படம் மற்றும் சிறந்த இயக்குநர் பிரிவில் இரண்டு விருதுகளைப் பெற்றுள்ளார், இதனால் பாலிவுட்டில் அவரைத் தரம் வாய்ந்த திரைப்படம் உருவாக்குபவராக நிலைநிறுத்தியுள்ளது.

2008 இல், கான் அவரது தயாரிப்பில் வெளிவந்த ஜானே டு யா ஜானே நா திரைப்படத்தில் அவரது உறவினர் இம்ரான் கானை அறிமுகப்படுத்தினார். அந்தப் படம் இந்தியாவில் பெரும் வெற்றியடைந்தது, முடிவாக அத்திரைப்படம் கானுக்கு சிறந்த திரைப்படத்திற்கான பிலிம்பேர் விருதுப் பரிந்துரையைப் பெற்றுத் தந்தது.

தனிப்பட்ட வாழ்க்கை

குயாமத் செ குயாமத் டக் வெளிவந்த காலகட்டத்தில், ரீனா தத்தாவை கான் மணந்தார். அவர்களுக்கு ஜூனெயிட் என்ற மகனும் இரா என்ற மகளும் உள்ளனர். ரீனா லகான் திரைப்படத்தில் தயாரிப்பாளராகப் பணியாற்றியதன் மூலம் கானின் திரைப்பட வாழ்க்கையில் சிறிதளவு ஈடுபட்டுள்ளார். டிசம்பர் 2002 இல் விவாகரத்துக்கு விண்ணப்பித்தார், இதனால் கான் 15 ஆண்டுகால திருமண வாழ்க்கைக்கு முடிவுற்று, அவரது குழந்தைகள் ரீனாவின் பொறுப்பில் சென்றனர். டிசம்பர் 28, 2005 இல் கான் லகான் திரைப்படம் எடுக்கப்பட்ட போது அதன் இயக்குநர் ஆஷூதோஷ் கொவாரிகரிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த கிரண் ராவை மணந்தார்.

பலமுறை பரிந்துரைக்கப்பட்டிருந்த போதும், கான் இதுவரை எந்தவொரு இந்திய விருது விழாவிலும் பங்கு பெறவில்லை, அதுபற்றி அவர் குறிப்பிடும்போது "இந்திய திரைப்பட விருதுகளில் நம்பகத்தன்மை குறைந்து விட்டது" என்றார்.

2007 இல், கான் அவரது தந்தை தாஹிர் ஹூசைன் தொடர்பாக ஏற்பட்ட பொறுப்புத் தகராறில் அவரது இளைய சகோதரர் ஃபைசலிடம் தோற்றார்.

2007 இல் கான் லண்டனில் உள்ள மேடமி துஸ்ஸவுட்ஸ் அருங்காட்சியகத்தில் அவரது மெழுகுச்சிலையைத் திறந்து வைக்க அழைக்கப்பட்டார். எனினும், கான் அதனை மறுத்து, "இது எனக்கு முக்கியமல்ல... மக்கள் வேண்டுமென்றால் எனது திரைப்படத்தைப் பார்க்கட்டும். மேலும், என்னால் பலவற்றை மேற்கொள்ள முடியாது, என்னால் முடிந்த அளவிற்கு மட்டுமே செய்ய இயலும்" என்றார்.

2009 இல் ஒரு பேட்டியில், கான் திரைப்பட உருவாக்க உலகத்தில் தான் சுதந்திரமான அணுகுமுறையுடன் இருக்க விரும்புவதாகக் குறிப்பிட்டார், மேலும் அவர், "வித்தியாசமான செயல்களை செய்வதில்லை; நான் வித்தியாசமான முறையில் செய்யவே முயற்சிக்கிறேன். என்னைப் பொருத்தவரை ஒவ்வொரு நபரும் அவரது கனவைப் பின் தொடர வேண்டும், பின்னர் நடைமுறைக்கு ஏற்றவாறு அதனை அடைவதற்கு தேவையான சாத்தியமுள்ள ஆற்றலை உருவாக்க வேண்டும்" என்றார். மேலும் அவர், படத்தின் இறுதி முடிவை விடவும் படத்தை உருவாக்கும் செயல்முறைகளிலேயே பெரிதும் ஆர்வமுடையவராக இருப்பதாகக் குறிப்பிட்டு: "எனக்கு, செயல்முறை மிகவும் முக்கியம், அவை எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிப்பதாய் உள்ளன. நான் செயல்முறையின் முதல் படியிலிருந்தும் என்னுடைய முழு கவனத்தையும் செலுத்த விரும்புகிறேன்" என்று கூறினார். அவரது முன்மாதிரியைப் பற்றி கேட்கப்பட்ட போது, "காந்திஜி என்னைக் கவர்ந்த மனிதர்!" என்று குறிப்பிட்டார்.[relevant? ]

திரைப்பட விவரம்

நடிகர்

ஆண்டு திரைப்படம் பாத்திரம் குறிப்புகள்
1973 யாடோன் கி பாரத் இளம் ராடன்
1974 மத்தோஷ் குழந்தை நட்சத்திரம்
1984 ஹோலி மதன் ஷர்மா
1988 குயாமத் சே குயாமத் டக் ராஜ் வெற்றியாளர் , சிறந்த அறிமுக நடிகருக்கான பிலிம்பேர் விருது
சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருதிற்கு பரிந்துரைக்கப்பட்டார்
1989 ராக் அமீர் ஹூசைன் சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருதிற்கு பரிந்துரைக்கப்பட்டார்
லவ் லவ் லவ் அமித்
1990 அவ்வல் நம்பர் சன்னி
தும் மேரே ஹோ சிவா
dil ராஜா சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருதிற்கு பரிந்துரைக்கப்பட்டார்
தீவானா முஜ் சா நஹின் அஜய் ஷர்மா
ஜவானி ஜிந்தாபாத் ஷஷி
1991 அஃப்சானா பியார் கா ராஜ்
தில் ஹாய் கி மன்டா நஹின் ரகு ஜெட்லி சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருதிற்கு பரிந்துரைக்கப்பட்டார்
இசி கா நாம் ஜிந்தகி சோட்டு
டவ்லட் கி ஜங்க் ராஜேஷ் சௌத்ரி
1992 ஜோ ஜீடா ஓஹி சிக்கந்தர் சஞ்சய்லால் ஷர்மா சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருதிற்கு பரிந்துரைக்கப்பட்டார்
1993 பரம்பரா ரன்பீர் பிருத்வி சிங்
ஹம் ஹெயின் ரஹி பியார் கே ராகுல் மல்ஹோத்ரா சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருதிற்கு பரிந்துரைக்கப்பட்டார்
1994 அன்டாஸ் அப்னா அப்னா அமர் மனோகர் சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருதிற்கு பரிந்துரைக்கப்பட்டார்
1995 பாசி இன்ஸ்பெக்டர் அமர் தாம்ஜீ
ஆடங்க் ஹை ஆடங்க் ரோஹன்
ரங்கீலா முன்னா சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருதிற்கு பரிந்துரைக்கப்பட்டார்
அகேலே ஹம் அகேலே தம் ரோஹித்
1996 ராஜா இந்துஸ்தானி ராஜா இந்துஸ்தானி வெற்றியாளர் , சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது
1997 இஷ்க் ராஜா
1998 குலாம் சித்தார்த் மராத்தே சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருதிற்கு பரிந்துரைக்கப்பட்டார்
பிலிம்பேர் சிறந்த ஆண் பின்னணிப் பாடகர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டார்
1999 சர்ஃபரோஸ் அஜய் சிங் ரத்தோட் சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருதிற்கு பரிந்துரைக்கப்பட்டார்
மாண் தேவ் கரண் சிங்
எர்த் (1947 ) தில் நவாஷ்
2000 மேலா கிஷன் பியாரே
2001 லகான் புவன் வெற்றியாளர் , சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது
தில் சாத்தா ஹை ஆகாஷ் மல்ஹோத்ரா சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருதிற்கு பரிந்துரைக்கப்பட்டார்
2005 மங்கள் பண்டே: தி ரய்சிங் மங்கள் பாண்டே சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருதிற்கு பரிந்துரைக்கப்பட்டார்
2006 ரங் தே பசந்தி தல்ஜித் சிங் 'DJ' சிறந்த நடிப்புக்கான பிலிம்ஃபேர் கிரிட்டிக்ஸ் விருது வென்றார்
சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருதிற்கு பரிந்துரைக்கப்பட்டார்
ஃபனா ரேஹன் குவாத்ரி
2007 தாரே ஜமீன் பர் (லைக் ஸ்டார்ஸ் ஆன் எர்த் ) ராம் ஷங்கர் நிகும்ப் சிறந்த துணை நடிகருக்கான பிலிம்பேர் விருதிற்கு பரிந்துரைக்கப்பட்டார்
2008 கஜினி சஞ்சய் சிங்கானியா. சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருதிற்கு பரிந்துரைக்கப்பட்டார்
2009 லக் பை சான்ஸ் அவராகவே சிறப்புத் தோற்றம்
திரீ இடியட்ஸ் ரன்ச்சொட்தாஸ்
ஷமலல்தாஸ்
சந்சாத் (ராஞ்சோ )/
ப்ஹன்சுக் வான்கடு
சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருதிற்கு பரிந்துரைக்கப்பட்டார்
2010 டெல்லி பெல்லி கௌரவத் தோற்றம்
2013 தூம் 3

பின்னணி பாடியவை

ஆண்டு திரைப்படம் பாடல்
1998 குலாம் ஆடி க்யா கண்டலா
2000 மேளா தேகோ 2000 ஜமானா ஆ கயா
2005 மங்கள் பண்டே: தி ரய்சிங் ஹோலி ரே
2006 ரங் தே பசந்தி லால்கார்
ஃபனா சந்தா சம்கே
2007 தாரே ஜமீன் பர் (லைக் ஸ்டார்ஸ் ஆன் எர்த் ) பம் பம் போலே

தயாரித்தவை

ஆண்டு திரைப்படம் இயக்குநர் குறிப்புகள்
2001 லகான் ஆஷூதோஷ் கோவாரிகர் முழுமையான பொழுதுபோக்கு வழங்கிய சிறந்த பிரபல திரைப்படத்துக்கான தேசிய திரைப்பட விருது வென்றது
சிறந்த திரைப்படத்துக்கான பிலிம்பேர் விருது வென்றது
2007 தாரே ஜமீன் பர் (லைக் ஸ்டார்ஸ் ஆன் எர்த் ) அமீர் கான் சிறந்த திரைப்படத்துக்கான பிலிம்பேர் விருது வென்றது
2008 ஜானே தூ யா ஜானே நா அப்பாஸ் டயர்வாலா சிறந்த திரைப்படத்துக்கான பிலிம்பேர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டது
2009 டெல்லி பெல்லி அபினய் டியோ

எழுத்தாளர்/இயக்குநர்

ஆண்டு திரைப்படம் குறிப்புகள்
1988 குயாமத் சே குயாமத் டக் கதாசிரியர்
1993 ஹம் ஹெயின் ரஹி பியார் கே திரைக்கதை ஆசிரியர்
2007 தாரே ஜமீன் பர் (லைக் ஸ்டார்ஸ் ஆன் எர்த் ) இயக்குநர்
பிலிம்பேர் சிறந்த இயக்குநருக்கான விருது வென்றார்

குறிப்புகள்

புற இணைப்புகள்

ஆமிர் கான் 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
ஆமிர் கான்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

Tags:

ஆமிர் கான் ஆரம்பகால வாழ்க்கைஆமிர் கான் திரைப்படத்துறை வாழ்க்கைஆமிர் கான் தனிப்பட்ட வாழ்க்கைஆமிர் கான் திரைப்பட விவரம்ஆமிர் கான் குறிப்புகள்ஆமிர் கான் புற இணைப்புகள்ஆமிர் கான்1965இந்திஇயக்குநர்நடிகர்மார்ச் 14

🔥 Trending searches on Wiki தமிழ்:

நாலாயிர திவ்வியப் பிரபந்தம்தமிழ்த் தேசியம்தமிழ் மாதங்கள்தமன்னா பாட்டியாகிறிஸ்தவம்சிறுநீர்ப்பாதைத் தொற்றுபாரிஅயோத்தி இராமர் கோயில்பூரான்வினோஜ் பி. செல்வம்மருதமலை முருகன் கோயில்நற்றிணைநவதானியம்சேரர்தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்சூரியக் குடும்பம்வெப்பம் குளிர் மழைகபிலர்கருப்பை நார்த்திசுக் கட்டிபூலித்தேவன்கணையம்சுரைக்காய்இந்தியப் பிரதமர்மஞ்சும்மல் பாய்ஸ்வேலு நாச்சியார்மாசிபத்திரிகன்னி (சோதிடம்)தமிழக வரலாறுஅடல் ஓய்வூதியத் திட்டம்திருவரங்கக் கலம்பகம்லிங்டின்தமிழ்த்தாய் வாழ்த்துசெம்மொழிசங்கம் (முச்சங்கம்)அக்கிமோகன்தாசு கரம்சந்த் காந்திஐக்கிய நாடுகள் அவைதங்கம்அனுஷம் (பஞ்சாங்கம்)யாதவர்தேவநேயப் பாவாணர்முல்லைக்கலிஅவுரி (தாவரம்)தெலுங்கு மொழிசங்க காலம்நயன்தாராதமிழ்நாடு அமைச்சரவைமுக்குலத்தோர்புனித ஜார்ஜ் கோட்டைமுடியரசன்தேவாரப்பாடல் பெற்ற நடு நாட்டு தலங்களின் பட்டியல்நக்கீரர், சங்கப்புலவர்கலைஞர் மகளிர் உரிமைத் தொகைவிநாயகர் அகவல்மாதவிடாய்இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்இந்திய அரசியலமைப்பிலுள்ள அடிப்படை உரிமைகள்நல்லெண்ணெய்தமிழர் பண்பாடுஏப்ரல் 25புறப்பொருள் வெண்பாமாலைஇந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்களின் பட்டியல்இலட்சம்திருநாகேசுவரம் நாகநாதசுவாமி கோயில்வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாதர் கோயில்மே நாள்நோய்அப்துல் ரகுமான்தமிழக சுற்றுலாத் தலங்களின் பட்டியல்கங்கைகொண்ட சோழபுரம்புலிசெஞ்சிக் கோட்டைருதுராஜ் கெயிக்வாட்போதைப்பொருள்சில்லுனு ஒரு காதல் (திரைப்படம்)நாயன்மார்மதராசபட்டினம் (திரைப்படம்)மகேந்திரசிங் தோனி🡆 More