ஆண்டிமனி பென்டாபுளோரைடு

ஆண்டிமணி பென்டாபுளோரைடு (Antimony pentafluoride) ஒரு SbF5 என்ற மூலக்கூறு வாய்ப்பாட்டை உடைய ஒரு கனிமச் சேர்மம் ஆகும்.

இது ஒரு நிறமற்ற, பாகுநிலையுடைய, மதிப்புமிக்க லுாயிசு அமிலமாகும். மேலும் இது, அறியப்பட்டுள்ள அமிலங்களுள் வலிமைமிக்க அமிலமான புளோரோ ஆண்டிமணிக் அமிலம் எனும் மீவீரிய அமிலத்தின் பகுதிப்பொருளாகவும் உள்ளது. இது தனது லுாயிசு அமிலத்தன்மைக்காகவும் எல்லா சேர்மங்களுடன் வினைபுரியும் தன்மைக்காகவும் நன்கறியப்பட்டதாக உள்ளது.

ஆண்டிமனி பென்டாபுளோரைடு
Antimony pentafluoride
Antimony pentafluoride
Antimony pentafluoride
Antimony pentafluoride
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
ஆண்டிமணி (V) புளோரைடு
வேறு பெயர்கள்
ஆண்டிமணிபென்டாபுளோரைடு
பென்டாபுளோரிடோஆண்டிமணி
இனங்காட்டிகள்
7783-70-2 ஆண்டிமனி பென்டாபுளோரைடுY
ChemSpider 22963 ஆண்டிமனி பென்டாபுளோரைடுN
InChI
  • InChI=1S/5FH.Sb/h5*1H;/q;;;;;+5/p-5 ஆண்டிமனி பென்டாபுளோரைடுN
    Key: VBVBHWZYQGJZLR-UHFFFAOYSA-I ஆண்டிமனி பென்டாபுளோரைடுN
  • InChI=1/5FH.Sb/h5*1H;/q;;;;;+5/p-5/rF5Sb/c1-6(2,3,4)5
    Key: VBVBHWZYQGJZLR-NMXCDXEPAW
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 24557
வே.ந.வி.ப எண் CC5800000
SMILES
  • F[Sb](F)(F)(F)F
UN number 1732
பண்புகள்
SbF5
வாய்ப்பாட்டு எடை 216.74 கி/மோல்
தோற்றம் நிறமற்ற எண்ணெய் போன்ற திரவம்
நீர் உறிஞ்சும் தன்மை உடையது
மணம் மூக்கைத்துளைக்கும் நெடி
அடர்த்தி 2.99 கி/செமீ3
உருகுநிலை 8.3 °C (46.9 °F; 281.4 K)
கொதிநிலை 149.5 °C (301.1 °F; 422.6 K)
வினைபுரிகிறது
கரைதிறன் பொட்டாசியம் புளோரைடில் கரையும், திரவ SO2 கரையும்
தீங்குகள்
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் ICSC 0220
ஈயூ வகைப்பாடு தீங்குவிளைவிக்கக்கூடியது (Xn)
சுற்றுச்சூழலுக்கு ஆபத்தானது (N)
R-சொற்றொடர்கள் R20/22, R51/53
S-சொற்றொடர்கள் (S2), S61
அமெரிக்க சுகாதார ஏற்பு வரம்புகள்:
அனுமதிக்கத்தக்க வரம்பு
TWA 0.5 மிகி/மீ3 (Sbயைப் போல)
பரிந்துரைக்கப்பட்ட வரம்பு
TWA 0.5 மிகி/மீ3 (Sbயைப் போல)
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் ஆண்டிமணி பெண்டாகுளோரைடு
ஏனைய நேர் மின்அயனிகள் பாசுபரசு பென்டாபுளோரைடு
ஆர்செனிக் பென்டாபுளோரைடு
பிசுமத் பென்டாபுளோரைடு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 ஆண்டிமனி பென்டாபுளோரைடுN verify (இதுஆண்டிமனி பென்டாபுளோரைடுY/ஆண்டிமனி பென்டாபுளோரைடுN?)
Infobox references

தயாரிப்பு

ஆண்டிமனி பென்டாபுளோரைடானது ஆண்டிமணி ஐங்குளோரைடுடன் நீரற்ற ஐதரசன் புளோரைடை வினைப்படுத்துவதன் மூலம் கிடைக்கிறது.

    SbCl5 + 5 HF → SbF5 + 5 HCl

இச்சேர்மமானது ஆண்டிமணி டிரைபுளோரைடுடன் புளோரினை வினைப்படுத்தியும் தயாரிக்கப்படலாம்.

அமைப்பு மற்றும் வேதிவினைகள்

வாயு நிலையில், SbF5, D3h புள்ளி சமச்சீர்மைத் தொகுப்பைச் சார்ந்த ஒரு முக்கோண இரட்டைப் பட்டைக்கூம்பு வடிவத்தை ஏற்கிறது. இச்சேர்மம் திரவ மற்றும் திண்ம நிலைகளில் மிகவும் சிக்கலான அமைப்புகளைப் பெறுகிறது.  திரவ நிலையில் Sb அணுக்கள் ஒவ்வொன்றும் எண்முகி அமைப்பைக் கொண்ட பலபடிகளைக் கொண்டவையாகவும், இந்த அமைப்பானது [SbF4(μ-F)2]n ((μ-F) என்ற வாய்ப்பாட்டாலும் குறிக்கப்படுகிறது. ((μ-F) என்பது, இரண்டு Sb மையங்களுக்கு பாலமாக புளோரைடு மையங்கள் விளங்குவதைக் குறிக்கிறது). படிக நிலையில் உள்ள சேர்மமானது டெட்ராமெராக (நான்குபடி மூலக்கூறாக), [SbF4(μ-F)]4 என்ற மூலக்கூறு வாய்ப்பாட்டை உடையதாக உள்ளது. Sb-F பிணைப்புகள் Sb4F4 வளையத்தில் 2.02 Å பிணைப்பு நீளத்தை உடையதாகவும்; நான்கு Sb மையங்களிலிருந்து புறப்படும் மற்ற நான்கு புளோரைடு ஈனிகள் 1.82 Å. நீளத்துடன் குறைவான பிணைப்பு நீளம் கொண்டவையாகவும் உள்ளன. இச்சேர்மத்தை ஒத்த மற்ற சேர்மங்களான PF5 மற்றும் AsF5 ஆகியவை மைய அணுக்களின் சிறிய அளவின் காரணமாக தத்தமது ஈதல் அணைவு எண்ணை குறைவான ஒன்றாக வரையறுத்துக் கொள்ளும் காரணத்தால், திண்ம மற்றும் திரவ நிலைகளில் ஒற்றை மூலக்கூறாக (ஒருமமாக) காணப்படுகிறது.  BiF5 மூலக்கூறானது ஒரு பலபடியாக உள்ளது.

இதே வழிமுறையின்படி SbF5 ஆனது, HF -இன் பிரான்சுடெட் அமிலத்தன்மையை  அதிகரிக்கிறது. இது F2 ஆக்சிசனேற்றும் சக்தியை அதிகப்படுத்துகிறது. இந்த விளைவானது, ஆக்சிசனின் ஆக்சிசனேற்ற வினையினால் விளக்கப்படுகிறது.

    2 SbF5 + F2 + 2 O2 → 2 [O
    2
    ]+
    [SbF
    6
    ]

முதன்முதலில் கண்டறியப்பட்ட புளோரினின் சேர்மங்களிலிருந்து புளோரின் வாயுவை உற்பத்தி செய்த வேதிவினையிலேயே ஆண்டிமணி ஐம்புளோரைடானது பயன்படுத்தப்பட்டுள்ளது:

    4 SbF
    5
    + 2 K
    2
    MnF
    6
    → 4 KSbF
    6
    + 2 MnF
    3
    + F
    2

இந்த வினைக்கான இயக்கு சக்தியாக, F அயனியின் மீதான SbF5 -இன் அதிக நாட்டம் அமைகிறது. இந்தப் பண்பே SbF5 இன் பயன்பாட்டை மீவலிமை மிக்க அமிலங்கள் தயாரிப்பதற்கு பரிந்துரைக்கக் காரணமாக அமைகின்றன.

எக்சாபுளோரோஆண்டிமணேட்டு

SbF5ஆனது F அயனிகளைத் தரும் மூலங்களிடம் ஒரு வலிமையான லுாயிசு அமிலமாக செயல்பட்டு, மிகவலிமையான எதிர் மின் அயனியான எக்சாபுளோரோஆண்டிமணேட்டு என்றழைக்கப்படுகின்ற [SbF6] அயனியைத் தருகிறது. எக்சாபுளோரோபாசுபேட்டுடன் PF6 ஒப்பிடும் போது [SbF6] ஒரு வலிமை குறைவான ஈந்திணைவு எதிரயனியாக உள்ளது. .

இந்த அயனியானது மிகவும் வலிமை குறைந்த காரமாக இருப்பினும், [SbF6] கூடுதல் SbF5 உடன் வினைபுரிந்து மையச்சீர்மைகொண்ட சேர்க்கை விளைபொருளைத் தருகிறது:

    SbF5 + [SbF6] → [Sb2F11]

பாதுகாப்பு

SbF5 பல சேர்மங்களுடன் தீவிரமான வினையில் ஈடுபட்டு ஐதரசன் புளோரைடு என்ற ஆபத்தை விளைவிக்கும் பொருளை வெளிவிடுகிறது. இச்சேர்மம் தோல் மற்றும் கண்களை அரிக்கும் தன்மையுடையது.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

ஆண்டிமனி பென்டாபுளோரைடு தயாரிப்புஆண்டிமனி பென்டாபுளோரைடு அமைப்பு மற்றும் வேதிவினைகள்ஆண்டிமனி பென்டாபுளோரைடு பாதுகாப்புஆண்டிமனி பென்டாபுளோரைடு மேற்கோள்கள்ஆண்டிமனி பென்டாபுளோரைடு வெளி இணைப்புகள்ஆண்டிமனி பென்டாபுளோரைடுலூயிசு அமிலங்களும் காரங்களும்

🔥 Trending searches on Wiki தமிழ்:

ஒழுகு வண்ணம்சித்தர்கள் பட்டியல்பாரதிதாசன்மயில்இந்திய தேசிய சின்னங்கள்மனித உரிமைசைவத் திருமணச் சடங்குஇயற்கைப் பேரழிவுகுறிஞ்சிப் பாட்டுதமிழ்ஒளிகரிகால் சோழன்பத்துப்பாட்டுஒற்றைத் தலைவலிபில் சோல்ட்இடைச்சொல்பெருமாள் திருமொழிபிரியா பவானி சங்கர்தாஜ் மகால்கர்மாஇந்தியன் பிரீமியர் லீக்அரிப்புத் தோலழற்சிஉளவியல்வேற்றுமையுருபுநேர்பாலீர்ப்பு பெண்இலவச மதிய உணவுத் திட்டம், தமிழ்நாடுகூகுள்உமறுப் புலவர்திருப்போரூர் கந்தசாமி கோயில்மேற்குத் தொடர்ச்சி மலையானையின் தமிழ்ப்பெயர்கள்சிவனின் தமிழ்ப் பெயர்கள்கன்னத்தில் முத்தமிட்டால்வெ. இராமலிங்கம் பிள்ளைஆண் தமிழ்ப் பெயர்கள்கருப்பை நார்த்திசுக் கட்டிஅகநானூறுஜெயகாந்தன்வெந்து தணிந்தது காடுதொகாநிலைத்தொடர்வராகிஇந்திய நாடாளுமன்றம்வாணிதாசன்நெசவுத் தொழில்நுட்பம்ஆத்திசூடிஇராமலிங்க அடிகள்முதுமொழிக்காஞ்சி (நூல்)இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்எயிட்சுதொன்மம்பூப்புனித நீராட்டு விழாநீதி நெறி விளக்கம்மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தமிழ்நாடுகுதிரைமலை (இலங்கை)கண்ணதாசன்தேவாங்குதமிழ்விடு தூதுசீவகன்திட்டக் குழு (இந்தியா)பெட்டிஇயற்கை வளம்வானிலைகவின் (நடிகர்)திருத்தணி முருகன் கோயில்ஏலாதிமாத்திரை (தமிழ் இலக்கணம்)பட்டினப்பாலைசப்ஜா விதைதிருப்பாவைஅஜித் குமார்சேரர்சித்த மருத்துவம்பிரெஞ்சுப் புரட்சிசுயமரியாதை இயக்கம்இரட்டைமலை சீனிவாசன்சரக்கு மற்றும் சேவை வரி (இந்தியா)மருதமலைசிற்பி பாலசுப்ரமணியம்செக் மொழிதமிழ் மாதங்கள்🡆 More