அந்தோணி ஹோப்கின்ஸ்

சர் பிலிப் அந்தோனி ஹாப்கின்ஸ் CBE (Sir Philip Anthony Hopkins பிறப்பு 31 டிசம்பர் 1937) ஒரு வெல்ஷ் நடிகர், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார்.

1992 ஆம் ஆண்டில் சிறந்த நடிகருக்கான அகாதமி விருதை வென்றார், மேலும் மூன்று முறை  விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டார். ஹாப்கின்ஸ் மூன்று  முறை பாப்டா  விருதினையும், இரண்டு  முறை எம்மிகள் மற்றும் சிசில் பி. டிமில்லே  போன்ற விருதுகளையும் வென்றுள்ளார் . 1993 ஆம் ஆண்டில், இரண்டாம் எலிசபெத் மகாராணியால் கலைக்கான சேவைகளுக்காக அவர் நைட்   பட்டம் பெற்றார். 2003 ஆம் ஆண்டில் ஹாப்கின்ஸ் ஹாலிவுட் வாக் ஆஃப் ஃபேமில்  இடம்பெற்றார், மேலும் 2008 ஆம் ஆண்டில், பிரித்தானிய அகாதமி ஆஃப் பிலிம் அண்ட் டெலிவிஷன் ஆர்ட்ஸிலிருந்து வாழ்நாள் சாதனையாளராக  அறிவிக்கப்பட்டார்.

அந்தோணி ஹோப்கின்ஸ்
அந்தோணி ஹோப்கின்ஸ்
பிறப்பு31 திசம்பர் 1937 (அகவை 86)
போர்ட் டால்போட்
படித்த இடங்கள்
  • Royal Academy of Dramatic Art
  • Royal Welsh College of Music & Drama
பணிஇயக்குநர், நிகல் கலைஞர், நடிகர்
வாழ்க்கைத்
துணை/கள்
Stella Arroyave
விருதுகள்Donostia Award, Academy Fellowship Award, சிறந்த நடிகருக்கான அகாதமி விருது, Golden Globe Cecil B. DeMille Award, David di Donatello for Best Foreign Actor, London Film Critics Circle Award for Actor of the Year, Kansas City Film Critics Circle Award for Best Actor, British Academy Television Award for Best Actor, National Board of Review Award for Best Actor, New York Film Critics Circle Award for Best Actor, National Board of Review Award for Best Supporting Actor, சிறந்த நடிகருக்கான சனி விருதுகள், Chicago Film Critics Association Award for Best Actor, BAFTA Award for Best Actor in a Leading Role, Los Angeles Film Critics Association Award for Best Actor, Broadcast Film Critics Association Award for Best Supporting Actor, Boston Society of Film Critics Award for Best Supporting Actor, Southeastern Film Critics Association Award for Best Actor, Dallas-Fort Worth Film Critics Association Award for Best Actor, Drama Desk Award for Outstanding Actor in a Play, Knight Bachelor, கோல்டன் குளோப் விருது, Primetime Emmy Award for Outstanding Lead Actor in a Miniseries or a Movie, சிறந்த நடிகருக்கான அகாதமி விருது, European Film Award for Best Actor
கையெழுத்து
அந்தோணி ஹோப்கின்ஸ்

1957 ஆம் ஆண்டில் ராயல் வெல்ஷ் இசை மற்றும் நாடகக் கல்லூரியில் பட்டம் பெற்ற பிறகு, லண்டனில் உள்ள ராயல் அகாதமி ஆஃப் டிராமாடிக் ஆர்ட்டில் பயிற்சி பெற்றார், பின்னர் லாரன்ஸ் ஆலிவர் ,ராயல் நேஷனல் தியேட்டரில் சேர அழைத்தார். 1968 ஆம் ஆண்டில், தி லயன்   திரைப்படத்தில் விண்டரில் ரிச்சர்டாக நடித்தார்.  1970 களின் நடுப்பகுதியில், ரிச்சர்ட் அட்டன்பரோ இவரை இந்தத்  தலைமுறையின் சிறந்த நடிகர் என்று பாராட்டினார்.

ஹாப்கின்ஸ் தி சைலன்ஸ் ஆஃப் தி லாம்ப்ஸ் திரைப்படத்தில் இவர் ஹன்னிபால் லெக்டராக நடித்தார். இதற்காக அவர் சிறந்த நடிகருக்கான அகாதமி விருது பெற்றார். அதன் தொடர்ச்சியாக  ஹன்னிபால், மற்றும் ரெட் டிராகனிலும் நடித்தார். தி ரெமெயின்ஸ் ஆஃப் தி டே (1993), நிக்சன் (1995), மற்றும் அமிஸ்டாட் (1997) ஆகிய படங்களில்  நடித்ததன் மூலம் ஹாப்கின்ஸ் அகாதமி விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டார். 84 சேரிங் கிராஸ் ரோடு (1987), தி எலிபண்ட் மேன் (1980), ஹோவர்ட்ஸ் எண்ட் (1992), பிராம் ஸ்டோக்கரின் டிராகுலா (1992), லெஜண்ட்ஸ் ஆஃப் தி ஃபால் (1994), மீட் ஜோ பிளாக் (1998), தி மாஸ்க் சோரோ (1998), மற்றும் தோர் (2011) மற்றும் அதன் 2013 மற்றும் 2017 பதிப்புகள் ஆகியன மற்ற குறிப்பிடத்தக்க திரைப்படங்கள் ஆகும்.  2015 ஆம் ஆண்டில், பிபிசி தொலைக்காட்சியின் தி டிரஸ்ஸரில் நடித்தார், 2016 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில், வெஸ்ட்வொர்ல்டு என்ற எச்.பி.ஓ தொலைக்காட்சித் தொடரில் நடித்தார்.

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி

கிளாமோர்கனின் போர்ட் டால்போட்டின் புறநகர்ப் பகுதியான மார்கமில் 1937 ஆம் ஆண்டு புத்தாண்டு தினத்தில் ஹாப்கின்ஸ் பிறந்தார். அவரது பெற்றோர் அன்னி முரியல் மற்றும் ரிச்சர்ட் ஆர்தர் ஹாப்கின்ஸ் ஆவர். நான் விசேஷமானவனாகவோ அல்லது வித்தியாசமாகவோ இருக்கலாம் என்ற உணர்வு வரும்போதெல்லாம், நான் என் தந்தையைப் பற்றி நினைத்துக்கொள்கிறேன்.. இவர் தனது பள்ளிநாட்களில் கல்வி கற்பதை விட ஓவியம் வரைதல் அல்லது பியானோ வாசித்தல் போன்றவற்றில் அதிக ஈடுபாடு கொண்டிருந்தார்.ஜோன்ஸின் மேற்கு மோன்மவுத் சிறுவர் பள்ளியில் இவர் கல்வி பயின்றார் ஐந்து ஆண்டுகள் அங்கு கல்வி கற்ற பின்னர் வேல் ஆஃப் கிளாமோர்கனில் உள்ள கவ்பிரிட்ஜ் இலக்கண பள்ளியில் கல்வி பயின்றார். 2002 ஆம் ஆண்டு ஒரு நேர்காணலில் அவர் இவ்வாறு கூறினார்:நான் கல்வி கற்றலில் மிகவும் பின் தங்கி இருந்தேன் இதனால் சில சமயங்களில்  கேலி செய்யப்பட்ட தான் ஒரு முட்டாள் என்று நினைத்தாக கூறினார்.

குறிப்புகள்

Tags:

எம்மி விருதுஐக்கிய இராச்சியத்தின் இரண்டாம் எலிசபெத்சிறந்த நடிகருக்கான அகாதமி விருது

🔥 Trending searches on Wiki தமிழ்:

பிலிருபின்பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்பழந்தமிழ் இசைநன்னன்ந. மு. வேங்கடசாமி நாட்டார்வெண்பாநிணநீர்க் குழியம்அன்னம்நான்மணிக்கடிகைதொன்மம்இயற்கை வளம்திருவண்ணாமலைதிருவிளையாடல் புராணம்சீர் (யாப்பிலக்கணம்)மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தமிழ்நாடுஇலங்கையின் வரலாறுஅரண்மனை (திரைப்படம்)திருநாவுக்கரசு நாயனார்உளவியல்ராஜஸ்தான் ராயல்ஸ்திரு. வி. கலியாணசுந்தரனார்கண்ணதாசன்காடழிப்புகுதிரைமலை (இலங்கை)தசாவதாரம் (இந்து சமயம்)நீதி இலக்கியம்கவிதைஎஸ். பி. பாலசுப்பிரமணியம்அண்ணாமலை குப்புசாமிதிரிசாதிராவிட மொழிக் குடும்பம்முருகன்நிதி ஆயோக்வாணிதாசன்தொகாநிலைத் தொடர்சுவர்ணலதாபாரதிதாசன்சூளாமணிமுடக்கு வாதம்தமிழ் தேசம் (திரைப்படம்)மருது பாண்டியர்ஏலாதிதிருநங்கைசோழர்சிறுபாணாற்றுப்படைஇராமாயணம்புதிய ஏழு உலக அதிசயங்கள்மருதம் (திணை)இந்தியாவின் தேசிய மனித உரிமை ஆணையம்தமிழ் இலக்கியப் பட்டியல்பள்ளுசன் தொலைக்காட்சி நாடகத் தொடர்கள் பட்டியல்முதுமொழிக்காஞ்சி (நூல்)இந்திய ரூபாய்புறப்பொருள் வெண்பாமாலைஆய்த எழுத்து (திரைப்படம்)பெட்டிவிடை (இராசி)மூதுரைதிருமலை நாயக்கர் அரண்மனைசுற்றுச்சூழல் கல்விசித்தர்தமிழர் நிலத்திணைகள்மண்ணீரல்ரோசுமேரிசித்த மருத்துவம்வெ. இராமலிங்கம் பிள்ளைஒழுகு வண்ணம்இந்தியாவில் இட ஒதுக்கீடுகூகுள்மேற்குத் தொடர்ச்சி மலைஉவமையணிபுணர்ச்சி (இலக்கணம்)பட்டா (நில உரிமை)சங்ககால மலர்கள்வினைச்சொல்அயோத்தி தாசர்புதுச்சேரிஸ்ரீலீலா🡆 More