முருங்கை: மருத்துவம்

முருங்கை மரத்தில் (Moringa oleifera) இருந்து பெறப்படும் முருங்கைக்காய், முருங்கை இலை (முருங்கைக் கீரை), முருங்கைப் பூ உண்ணப்படும் ஒரு உணவு ஆகும்.

Moringa oleifera
முருங்கை: சொற்பிறப்பு, பயிர் செய்யும் நாடுகள், வளரியல்பு
உயிரியல் வகைப்பாடு
திணை:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
Rosids
வரிசை:
Brassicales
குடும்பம்:
Moringaceae
பேரினம்:
Moringa
இனம்:
M. oleifera
இருசொற் பெயரீடு
Moringa oleifera
Lam.
வேறு பெயர்கள்
  • Guilandina moringa L.
  • Hyperanthera moringa (L.) Vahl
  • Moringa pterygosperma Gaertn. nom. illeg.

சொற்பிறப்பு

முரி எனும் சொல் ஒடிதல், கெடுதல் எனப் பொருள்படும். முருங்கு என்னும் சொல் முரி என்னும் சொல்லொடு தொடர்புள்ளது. முருங்குவது, அதாவது எளிதில் ஒடியக் கூடிய கிளைகளை கொண்டதே முருங்கை மரம் ஆகும்.

பயிர் செய்யும் நாடுகள்

முருங்கை மரவகையைச் சேர்ந்தது. இது 30 அடி உயரம் வரை வளரக்கூடியது. இதன் ஆரம்பம் இமயமலை அடிவாரம் பின் பாக்கித்தான், வங்கதேசம் மற்றும் ஆப்கானித்தான் ஆகும். பிலிப்பைன்சிலும் ஆப்பிரிக்காவிலும் அதிகமாக இருந்துள்ளது. இது இந்தியாவில் ஆந்திரா, கர்நாடகா மற்றும் தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் அதிகமாகப் பயிரிடப்படுகிறது. இலங்கையிலும் காணப்படுகிறது. தாய்லாந்து, தைவானிலும் பயிராகிறது.

வளரியல்பு

முருங்கை அனைத்து வகை மண்ணிலும் வளரக் கூடியது எனினும், மணல் சார்ந்த அங்ககத் தன்மை அதிகமுள்ள நிலங்களில் நன்றாக வளரும் தன்மையுடையது. இது வறண்ட, பாசன வசதி குறைந்த, வெப்பம் அதிகமுள்ள பகுதியிலும் நன்கு வளரக்கூடியது.

தமிழ்நாட்டிலுள்ள வகைகள்

தமிழ்நாட்டில் யாழ்ப்பாண முருங்கை, சாவகச்சேரி முருங்கை, பால் முருங்கை, பூனை முருங்கை மற்றும் அந்தந்த இடங்களில் கிடைக்கும் வேறு சில வகைகளும் வீடுகளில் வளர்க்கப்படுகின்றன. விவசாயிகளால் குடுமியான் மலை-1, பெரியகுளம்-1 திண்டுக்கல் பகுதியில் உள்ள தெப்பத்துபட்டியிலும் ஆகிய வகைகள் பயிரிடப்பட்டு வளர்க்கப்படுகின்றன. ஓராண்டுப் பயிர்களான இவை ஆறு மாதங்களுக்குப் பின் காய்களை அளிக்கத் தொடங்கும். ஒரு மரத்திலிருந்து 200 முதல் 400 காய்கள் வரை கிடைக்கும்.

பயன்கள்

முருங்கைக் காய் நீளமான அளவில் தடி போன்ற வடிவில் இருக்கும். முன்பெல்லாம் சிறிதாக இருந்த முருங்கைக்காய் தற்போது ஒரு மீட்டர் நீளத்திற்கு வளரக் கூடிய அளவில் புதிய ரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தமிழர்களிடையே முருங்கைக்காய் பிரட்டல், குழம்பு போன்றவை செய்யப் பயன்படுத்தப்படுகிறது. முருங்கை இலை கீரை போல வதக்கி, அல்லது வறுத்து உணவுக்குப் பயன்படுத்தப்படுகிறது. இது நீர் சுத்திகரிப்பு மற்றும் இதன் நஞ்சு எதிர்ப்பு பண்புகள் மற்றும் சோப்பு பண்புகளால் கை கழுவுதலில் பயன்படுத்த முடியும், மற்றும் பழங்காலத்தில் இருந்து முருங்கை மூலிகை மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது.

இலைகள் மிகவும் சத்தான பகுதியாகும். இலைகளில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் தாதுக்கள் அடங்கி உள்ளது. இதில் வைட்டமின்கள் பி , சி, கே, புரோவிட்டமின் ஏ என்னும் பீட்டா கரோட்டின், மேலும் மாங்கனீசு, மற்றும் புரதம் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் கணிசமாக இருப்பதால் வளரும் நாடுகளில் இது ஊட்டச்சத்து உணவாக பரிந்துரைக்கப்பட்டு வருகின்றது.

மேற்கோள்கள்

Tags:

முருங்கை சொற்பிறப்புமுருங்கை பயிர் செய்யும் நாடுகள்முருங்கை வளரியல்புமுருங்கை தமிழ்நாட்டிலுள்ள வகைகள்முருங்கை பயன்கள்முருங்கை மேற்கோள்கள்முருங்கை

🔥 Trending searches on Wiki தமிழ்:

சன்ரைசர்ஸ் ஐதராபாத்குணங்குடி மஸ்தான் சாகிபுசாருக் கான்கலைபெண் தமிழ்ப் பெயர்கள்தொலைக்காட்சிவிலங்குசங்க காலம்ரயத்துவாரி நிலவரி முறைசுற்றுச்சூழல்நெசவுத் தொழில்நுட்பம்பறவைநீர் பாதுகாப்புபத்து தலதமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்அமெரிக்க ஐக்கிய நாடுகள்மு. மேத்தாசெக் மொழிஐந்திணைகளும் உரிப்பொருளும்மு. க. ஸ்டாலின்பனிக்குட நீர்மனித மூளைஆத்திசூடிகேள்விநேர்பாலீர்ப்பு பெண்இரசினிகாந்துசுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில்தமிழ் மாதங்கள்தலைவி (திரைப்படம்)தமிழர் விளையாட்டுகள்ஒற்றைத் தலைவலிமயக்கம் என்னகள்ளர் (இனக் குழுமம்)இலக்கியம்தேசிக விநாயகம் பிள்ளைஇந்திய மக்களவைத் தொகுதிகள்பொருளாதாரம்பதினெண்மேற்கணக்குகட்டுரைஎலுமிச்சைதமிழ்த் தேசியம்திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயில்அஜித் குமார்கம்பர்திரிசாஇட்லர்யுகம்சச்சின் டெண்டுல்கர்அன்புமணி ராமதாஸ்அழகர் ஆற்றில் இறங்குதல் (விழா)ஏப்ரல் 24எட்டுத்தொகை தொகுப்புநெல்பிக் பாஸ் தமிழ்தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்வெப்பநிலைசினைப்பை நோய்க்குறிவடிவேலு (நடிகர்)மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்தனிப்பாடல் திரட்டுதிருமால்108 வைணவத் திருத்தலங்கள்ஐம்பூதங்கள்பித்தப்பைபொன்னியின் செல்வன்சிறுகதைகிராம ஊராட்சிகள்ளுபிள்ளைத்தமிழ்சிவபெருமானின் பெயர் பட்டியல்தில்லி சுல்தானகம்தமிழ்இலங்கையின் மாவட்டங்கள்அன்மொழித் தொகைசென்னைஎல் நீனோ-தெற்கத்திய அலைவுசெஞ்சிக் கோட்டைபெரியாழ்வார்🡆 More