இசுக்கொட்லாந்து

சுகாட்லாந்து (ஆங்கிலம்: Scotland) வடமேற்கு ஐரோப்பாவில் பெரிய பிரித்தானியத் தீவில் உள்ள நாடு.

இது ஐக்கிய இராச்சியத்தின் ஒரு பாகமாகும். இதன் கிழக்கில் வட கடலும், வடமேற்கிலும் மேற்கிலும் அட்லாண்டிக் பெருங்கடலும், தென்மேற்கில் வடக்குக் கால்வாயும் ஐரியக் கடலும் சூழ்ந்துள்ளது. இதன் தெற்கில் இங்கிலாந்துடன் தனது எல்லையைக் கொண்டிருக்கிறது. முதன்மையான பெரும் தீவு மட்டுமின்றி 790க்கும் மேற்பட்ட சிறு தீவுகளும் சுகாட்லாந்தில் அடங்கும்.

சுகாட்லாந்து
அல்பா (சுகாட்டிய கேலிக் மொழி)
கொடி of சுகாட்லாந்து
கொடி
படைக்கலச் சின்னம் of சுகாட்லாந்து
படைக்கலச் சின்னம்
குறிக்கோள்: Nemo me impune lacessit (Latin for "No one provokes me with impunity")1
சுகாட்லாந்துஅமைவிடம்
தலைநகரம்எடின்பரோ
பெரிய நகர்கிளாசுக்கோ
ஆட்சி மொழி(கள்)ஆங்கிலம், சுகாட்டிய கேலிக் மொழி, சுகாட்டு மொழி
அரசாங்கம்அரசியல்சட்ட முடியாட்சி
அரசி எலிசபெத் II
டேவிட் கேமரன்
ஐக்கியப்படுத்துதல்
பரப்பு
• மொத்தம்
78,771 km2 (30,414 sq mi)
• நீர் (%)
1.9
மக்கள் தொகை
• 2005 மதிப்பிடு
5,094,800 (2ஆவது)
• 2001 கணக்கெடுப்பு
5,062,011
மொ.உ.உ. (கொ.ஆ.ச.)2002 மதிப்பீடு
• மொத்தம்
$130 பில்லியன்
• தலைவிகிதம்
$25,546
மமேசு (2003)0.939
அதியுயர் · 15ஆவது
நாணயம்பிரித்தானிய பவுண்டு (GBP)
நேர வலயம்ஒ.அ.நே0 (கிரீன்விச் இடைநிலை நேரம்)
• கோடை (ப.சே.நே.)
ஒ.அ.நே+1 (BST)
அழைப்புக்குறி44
இணையக் குறி.uk
1ஐக்கிய இராச்சியத்தின் மற்றப் பகுதிகளில் பயன்படுத்தப்படும் குறிக்கோளுரை: தியு யெ மொன் துவா (பிரெஞ்சு மொழியில் "கடவுளும் எனது உரிமையும்")

நாட்டின் இரண்டாம் பெரிய நகரும், ஐரோப்பாவின் மிகப்பெரிய வணிக மையங்களுள் ஒன்றான எடின்பரோ நகரம் இதன் தலைநகரமாகும். இந்நகரில்தான் 18ஆவது நூற்றாண்டில் சுகாட்லாந்திய அறிவொளி நிகழ்ந்தது. சுகாட்லாந்தின் பெரிய நகரமான கிளாசுக்கோ முன்னொரு காலத்தில் உலகின் முன்னணி தொழில்நகரங்களில் ஒன்றாக விளங்கியது. சுகாட்லாந்தின் வட அத்திலாந்திக்குப் பெருங்கடல் மற்றும் வட கடல் கடற்பரப்புகளில் ஐரோப்பிய ஒன்றியத்தின் மிகப் பெரும் எண்ணெய் இருப்பு உள்ளது. இதனால் சுகாட்லாந்தின் மூன்றாவது பெரிய நகரமான அபர்தீனுக்கு ஐரோப்பாவின் எண்ணெய்த் தலைநகர் என்ற பட்டம் கிடைத்துள்ளது.

துவக்க நடுக் காலத்தில் தனியான இறையாண்மையுள்ள சுகாட்லாந்து இராச்சியம் உருவானது. இந்நிலை 1707 வரை தொடர்ந்தது. 1603இல் இங்கிலாந்தின் ஆறாம் சேமுசின் முடிசூடலை அடுத்து இங்கிலாந்துடனும் அயர்லாந்துடனும் விரும்பிய ஒன்றிணைப்பு செய்துகொண்ட சுகாட்லாந்து மே 1,1707இல் பெரிய பிரித்தானிய இராச்சியம் உருவாக்க அரசியல் ஒன்றிணைப்பை ஏற்றது. இதனையடுத்து இரு நாட்டு நாடாளுமன்றங்களும் ஒன்றிணைப்புச் சட்டங்களை நிறைவேற்றின. இந்த ஒன்றிணைப்பிற்கு எதிராக பரவலாக எடின்பர்கு, கிளாசுக்கோ, மற்றும் பிற இடங்களில் கிளர்ச்சி எழுந்தது. பெரிய பிரித்தானியா பின்னர் சனவரி 1, 1801இல் அயர்லாந்துடன் அரசியல் ஒன்றிணைப்பை மேற்கொண்டு பெரிய பிரித்தானியா மற்றும் அயர்லாந்தின் ஐக்கிய இராச்சியத்தை உருவாக்கியது.

சுகாட்லாந்தின் சட்ட முறைமை இங்கிலாந்து, வேல்சு மற்றும் வட அயர்லாந்து சட்ட முறைமைகளிலிருந்து வேறுபட்டே இருந்து வந்துள்ளது. சுகாட்லாந்தில் பொதுச் சட்டத்திற்கும் தனிச் சட்டத்திற்கும் தனித்தனி நீதிபராமரிப்பு இருந்தது. ஐக்கிய இராச்சியத்தின் பிற பகுதிகளிலிருந்து வேறுபட்ட சட்ட, கல்வி, சமய நிறுவனங்களை தொடர்ந்து வருவதால் சுகாட்டிய பண்பாடும் தேசிய அடையாளமும் 1707 ஒன்றிணைப்பிற்குப் பிறகும் காக்கப்பட்டுள்ளது. 1999இல், ஒப்படைப்பு சட்டமன்றமான சுகாட்டிய நாடாளுமன்றம் உருவான பிறகு உள்துறை விவகாரங்களில் பலவற்றில் அதிகாரம் பகிரப்பட்டுள்ளது. மே 2011இல் சுகாட்டிய தேசியக் கட்சி சுகாட்டிய நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை வென்றது. இதனைத் தொடர்ந்து செப்டம்பர் 18, 2014இல் விடுதலைக்கான பொது வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது.

மேற்சான்றுகள்

Tags:

அட்லாண்டிக் பெருங்கடல்இங்கிலாந்துஐக்கிய இராச்சியம்ஐரியக் கடல்ஐரோப்பாபெரிய பிரித்தானியாவட கடல்வடக்குக் கால்வாய்

🔥 Trending searches on Wiki தமிழ்:

திருமந்திரம்மக்களவை (இந்தியா)தமிழ்நாடு அமைச்சரவைதமிழ்த்தாய் வாழ்த்துபௌர்ணமி பூஜைபரிவுஇமயமலைநவக்கிரகம்பழமொழி நானூறுஇசுலாம்இராமலிங்க அடிகள்மயில்அடல் ஓய்வூதியத் திட்டம்கமல்ஹாசன்சித்ரா பௌர்ணமி (திரைப்படம்)சிறுபஞ்சமூலம்கலிங்கத்துப்பரணிகருப்பைதமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024உன்னாலே உன்னாலேபட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்ஜீரோ (2016 திரைப்படம்)பசி (திரைப்படம்)உ. வே. சாமிநாதையர்ராஜா (நடிகர்)முடக்கு வாதம்ரோசுமேரிகட்டுரைவல்லினம் மிகும் இடங்கள்சுற்றுச்சூழல்யாப்பிலக்கணம்ஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோயில்நம்ம வீட்டு பிள்ளைவீட்டுக்கு வீடு வாசப்படிமாலைத்தீவுகள்ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்புங்கைமத கஜ ராஜாமெட்பார்மின்கார்லசு புச்திமோன்யோகக் கலைரோகிணி (நட்சத்திரம்)பாரதிய ஜனதா கட்சிமுல்லைப்பாட்டுசடுகுடுமறைமலை அடிகள்ஒத்துழையாமை இயக்கம்ஹர்திக் பாண்டியாநாழிகைபிரசாந்த்மாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்முல்லை (திணை)உயர் இரத்த அழுத்தம்மதராசபட்டினம் (திரைப்படம்)வைதேகி காத்திருந்தாள்வண்ணம் (யாப்பு)தமிழ் இலக்கணம்சூர்யா (நடிகர்)தமிழ் எண்கள்108 வைணவத் திருத்தலங்கள்ஆகு பெயர்மங்கலதேவி கண்ணகி கோவில்சிவனின் 108 திருநாமங்கள்காடுவெட்டி குருகல்லுக்குள் ஈரம்சங்கம் (முச்சங்கம்)கணியன் பூங்குன்றனார்மழைநீர் சேகரிப்புமட்பாண்டம்கட்டபொம்மன்முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்திருமலை (திரைப்படம்)குருதி வகைஅரிப்புத் தோலழற்சிதிருப்பதிபதிவேற்றம் மற்றும் பதிவிறக்கம்சித்திரகுப்தர் கோயில்🡆 More