டேவிட் கேமரன்

டேவிட் வில்லியம் டொனால்ட் கேமரன் (David William Donald Cameron, பிறப்பு 9 அக்டோபர், 1966) மே 11, 2010 முதல் சூலை 13, 2016 வரை ஐக்கிய இராச்சியத்தின் பிரதம அமைச்சராகவும் கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவராகவும் பொறுப்பிலிருந்த பிரித்தானிய அரசியல்வாதியாவார்.

ஐக்கிய இராச்சியத்தில் 2010ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் யாருக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காததால் ஏற்பட்ட தொங்கு நாடாளுமன்றத்தில் தனிப்பெரும் கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சி லிபரல் டெமாக்ரட்டிக் கட்சியுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்தது. கேமரன் விட்னி நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினராகவும் உள்ளார்.

டேவிட் கேமரன்
எம்.பி.
டேவிட் கேமரன்
ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர்
பதவியில்
11 மே 2010 – 13 சூலை 2016
ஆட்சியாளர்இரண்டாம் எலிசபெத்
Deputyநிக் கிளெக்
முன்னையவர்கோர்டன் பிரவுன்
பின்னவர்தெரசா மே
ஐக்கிய இராச்சியத்தின் எதிர்க்கட்சித் தலைவர்
பதவியில்
6 டிசம்பர் 2005 – 11 மே 2010
ஆட்சியாளர்எலிசபெத் II
பிரதமர்டோனி பிளேர்
கோர்டன் பிரவுன்
முன்னையவர்மைக்கல் ஹவார்ட்
பின்னவர்ஹரியட் ஹார்மன்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு9 அக்டோபர் 1966 (1966-10-09) (அகவை 57)
லண்டன், ஐக்கிய இராச்சியம்
தேசியம்பிரித்தானியர்
அரசியல் கட்சிகன்சர்வேட்டிவ்
துணைவர்சமந்தா
பிள்ளைகள்ஐவன் (2002-2009)
நான்சி (பி. 2004)
ஆத்தர் (பி. 2006)
வாழிடம்10 டவுனிங் வீதி
முன்னாள் கல்லூரிபிரேஸ்னோஸ் கல்லூரி, ஆக்ஸ்போர்ட்
இணையத்தளம்கன்சர்வேட்டிவ் கட்சி இணையத்தளம்

பிரதம மந்திரி

11 மே 2010 ல், கார்டன் பிரவுன் பிரதமர் பதவியில் இருந்து விலகியதை தொடர்ந்து, அவரது பரிந்துரையின் பேரில் இரண்டாம் எலிசபெத், டேவிட் கேமரூனை அரசாங்கம் அமைக்க அழைத்தார். மீண்டும் 2015 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் வெற்றிபெற்று இரண்டாவது முறையாக பிரதமராக பதவி வகிக்கிறார்.

யாழ்ப்பாணத்திற்கு வரலாற்றுப் புகழ் மிக்க பயணம்

1948 ஆம் ஆண்டில் இலங்கை விடுதலை அடைந்த பின்னர், ஈழப்போரில் பெரிதும் பாதிக்கப்பட்ட வட மாகாணத் தலைநகர் யாழ்ப்பாணத்திற்கு பயணம் மேற்கொண்ட முதலாவது உலகத் தலைவர் கேமரன் ஆவார்.

இலங்கையில் நடைபெற்ற பொதுநலவாய அரசுத் தலைவர்களின் மாநாட்டில் கலந்து கொள்ளவென கொழும்பு சென்றிருந்த டேவிட் கேமரன் 2013 நவம்பர் 15 இல் யாழ்ப்பாணம் சென்றார். வட மாகாண முதலமைச்சர் க. வி. விக்னேசுவரனை யாழ்ப்பாணம் பொது நூலகத்தில் சந்தித்து உரையாடினார். பின்னர் இரா. சம்பந்தன் உட்பட பல தமிழ்த் தலைவர்களை சந்தித்தார். ஈழப்போரின் இறுதிக் கட்டத்தில் இராணுவத்தினரிடம் சரணடைந்து காணாமல் போனவர்களின் குடும்பத்தினர், மற்றும் போரினால் இடம்பெயர்ந்தவர்களையும் அவர் சந்தித்து உரையாடினார்.

யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியாகும் உதயன் பத்திரிகைக் காரியாலயத்துக்குச் சென்றிருந்த கேமரன், பத்திரிகை ஆசிரியர் மற்றும் பணியாளர்களை சந்தித்து உரையாடினார். 2005 ஆம் ஆண்டு முதல் இப்பத்திரிகைக் காரியாலயம் பல முறை எரிக்கப்பட்டும், தாக்கப்பட்டும் வந்துள்ளது. ஊழியர்கள் ஐவர் படுகொலை செய்யப்பட்டனர்.

மேற்கோள்கள்

Tags:

19669 அக்டோபர்ஐக்கிய இராச்சியம்கன்சர்வேட்டிவ் கட்சி (ஐக்கிய இராச்சியம்)

🔥 Trending searches on Wiki தமிழ்:

ஏப்ரல் 26சுடலை மாடன்நிதிச் சேவைகள்செவ்வாய் (கோள்)மூகாம்பிகை கோயில்நீதிக் கட்சிஆத்திசூடிதிருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில்சரக்கு மற்றும் சேவை வரி (இந்தியா)சங்ககால மலர்கள்தனுசு (சோதிடம்)குண்டூர் காரம்யூடியூப்கூத்தாண்டவர் திருவிழாகங்கைகொண்ட சோழபுரம்புங்கைகுருவாயூர் குருவாயூரப்பன் கோயில்கா. ந. அண்ணாதுரைமுல்லைப்பாட்டுஓடி விளையாடு பாப்பா (பாரதியார் பாடல்)சிவபுராணம்மதராசபட்டினம் (திரைப்படம்)ருதுராஜ் கெயிக்வாட்இந்தியக் குடியரசுத் தலைவர்பொருநராற்றுப்படைசட் யிபிடிஅணி இலக்கணம்திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்சிறுகதைதமிழ்விடு தூதுஆய்வுஏப்ரல் 25தமிழர் அளவை முறைகள்மே நாள்ரயத்துவாரி நிலவரி முறைநீர் மாசுபாடுகைப்பந்தாட்டம்தங்கம்பாரிகொடைக்கானல்சிவனின் தமிழ்ப் பெயர்கள்இளங்கோவடிகள்வைரமுத்துவடிவேலு (நடிகர்)அடல் ஓய்வூதியத் திட்டம்சுயமரியாதை இயக்கம்குகேஷ்ஐம்பெருங் காப்பியங்கள்திணைதமிழ்த் திரைப்பட நடிகைகளின் பட்டியல்தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல், 2019நாட்டு நலப்பணித் திட்டம்இயேசு காவியம்திருவிளையாடல் புராணம்அரச மரம்கலைஞர் மகளிர் உரிமைத் தொகைகல்லணைநீர்தாயுமானவர்திருவள்ளுவர்திருமலை (திரைப்படம்)சிவனின் 108 திருநாமங்கள்காடுகருப்பைகாம சூத்திரம்பெயர்ச்சொல்சூர்யா (நடிகர்)மானிடவியல்பதினெண்மேற்கணக்குமோகன்தாசு கரம்சந்த் காந்திபுதுக்கவிதைசக்ரவர்த்தி இராசகோபாலாச்சாரிபால்வினை நோய்கள்தமிழ்ஒளிமத கஜ ராஜாவிலங்குகளின் பெயர்ப் பட்டியல்திருமந்திரம்ஸ்ரீலீலாதைப்பொங்கல்🡆 More