மிக்கைல் கலாசுனிக்கோவ்

மிக்கைல் கலாசுனிக்கோவ் (லெப்டினன்ட் ஜெனரல் மிக்கைல் டிமோபெயெவிச் கலாஷ்னிக்கோவ், Mikhail Timofeyevich Kalashnikov, ரசிய மொழி: Михаи́л Тимофе́евич Кала́шников, நவம்பர் 10, 1919 - டிசம்பர் 23, 2013) உருசிய சிறு படைக்கலன்களை வடிவமைத்தவர், இவர் வடிவமைத்தவற்றுள் மிகவும் புகழ்பெற்றது ஏ கே 47 வகை எந்திரத் துப்பாக்கியாகும்.

இவரை கலாஷ்னிக்கோவ் என்று சுருக்கமாக அழைப்பர்.

மிக்கைல் டிமோபெய்விச் கலாஷ்நிக்கோவ்
மிக்கைல் கலாசுனிக்கோவ்
2009 ல் மிக்கைல் கலாஷ்நிக்கோவ்
பிறப்பு(1919-11-10)10 நவம்பர் 1919
குறியா, அல்த்தாய் கிராய், சோவியத் ஒன்றியம்
இறப்புடிசம்பர் 23, 2013
தேசியம்உருசியர்
பணிசிறு படைக்கலன் வடிவமைப்பாளர், ரசிய லெப்டினன்ட் ஜெனரல்
அறியப்படுவதுஏகே-47, ஏகே-74 துப்பாக்கிகளை வடிவமைத்தவர்
வாழ்க்கைத்
துணை
எக்கத்தரீனா கலாசுனிக்கோவா
பிள்ளைகள்விக்டர், நெல்லி, நத்தாசா, எலெனா
விருதுகள்சோவியத் ஒன்றிய அரசு விருது (1949)
சோசலிசத் தொழில் வாகையாளர் விருது (1958)
ஸ்டாலின் பரிசு (1949)
2x லெனின் பரிசு மேலும் பல

இளமைக்காலம்

1938 ல் செஞ்சேனைப் படைப்பிரிவில் கட்டாயமாக சேர்க்கப்பட்டார். அங்கே பீரங்கி வண்டியின் கம்மியர் (Mechanic) மற்றும் ஒட்டுநர் பணியாளராக பணியமர்த்தப்பட்டார். விரைவிலேயே டி 34 பீரங்கிப் படைக்கலனின் ஸ்டிரேயில் உள்ள 24 வது பிரிவுக்கு புரோடித் தாக்குதலில் ரஷ்யப்படைகள் பின்வாங்குவதற்கு முன் மாற்றப்பட்டார். குறிப்பிடத்தக்கப் பின்னடைவான பிரயன்ஸக் தாக்குதலில் ரஷ்யப் படைகள் மிகவும் மோசமான நிலையில் பின் வாங்கின. இந்தத் தாக்குதலே இச்சுடுகலனை உருவாக்கக் காரணமாயிற்று.

இராணுவம் நிராகரிப்பு

இந்த போருக்குப்பின் ஏற்பட்ட உடல்நலக்குறைவால் கலாஷ்நிக்கோவ் 6 மாதம் ஒய்வில் இருக்கும் நிலை ஏற்பட்டது, இவர் மருத்துவமனையில் இருக்கும் சமயத்தில் பல வீரர்கள் படையில் பயன்படுத்தும் துப்பாக்கிகளின் செயல்பாடுகள் குறித்து பாகார் தெரிவித்ததை அறிந்தார். ரஷ்யப் படைகளிடம் உறுதியான, செயல் திறன் கொண்ட துப்பாக்கிகள் இல்லா நிலைக்கு ரஷ்யப் படைகள் தள்ளப்பட்டதை உணர்ந்து எந்திரதுப்பாக்கி வடிவமைக்கும் எண்ணம் கொண்டார். உடல் நலிவடைந்த நிலையில் இருந்த நிலையிலும் இதில் உறுதியாக இருந்தார். இதனிடையே இவர் உருவாக்கிய முதல் எந்திரத்துப்பாக்கி இராணுவத்தினரால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. ஆனால் இவரின் முயற்சியைக் கண்காணித்தது.

ஏ கே 47 உருவாதல்

மிக்கைல் கலாசுனிக்கோவ் 

1942 முதல் இவர் செஞ்சேனைப் படைப்பிரிவின் தலைமையகத்துக்காக துப்பாக்கிகளை வடிவமைக்கும் பிரிவில் உதவி புரிந்து கொண்டிருந்தார். 1944 இல் புதிய வாயுவினால் செயல்படக்கூடிய சிறிய துப்பாக்கியை அப்போது பயன்படுத்தப்பட்டு வந்த துப்பாக்கியின் முன் மாதிரியை வைத்து உருவாக்க ஆரம்பித்து 1946 ல் தாக்குதல் துப்பாக்கிகளை வடிவமைக்கும் நிலைக்குத் தன்னைத் தயார்படுத்திக் கொண்டார். அவர் உருவாக்கிய மூலம் பலத் துப்பாக்கிகளை வடிவமைக்கும் முன் மாதிரியை உருவாக்கியது. இதன் உச்சநிலையாக 1947 ல் ஏகே-47 வகை (தானியங்கி கலாஷினிகோவ் மாதிரி 1947) தாக்குதல் துப்பாக்கி உருவாகியது. இதன் பின் கலாஷினிகோவ் மிகவும் பிரபலமாகப் பேசப்பட்டார்.

பிற துப்பாக்கிகள்

இரண்டாம் உலகப்போருக்குப்பின் சோவியத் இராணுவத்தின் சிறிய படைக்கலன் பொது வடிவமைப்பாளராக பதவி உயர்வுபெற்றார். இவருடைய வடிவமைப்பு செருமனியின் யுகோ ஷிமெய்சர் மற்றும் வெர்னர் குருனர் வடிவமைப்புகள் 1950களில் சேர்க்கப்பட்டது. பின்னாளில் குழுத் தானியங்கி படைக்கருவிகள் ஏகே-47 க்கும் மேலான ஆர் பி கே (ருக்நாய் பியுல்மியாட் கலாஷ்னிக்கோவ் - இலகு எந்திரத்துப்பாக்கி) மற்றும் பி கே (பியுல் மியாட் கலாஷ்நிக்கோவா-கலாஷ்நிக்கோவ் எந்திரத் துப்பாக்கி) வகைத் துப்பாக்கிகளும் வடிவமைக்கப்பட்டது.

புகழ் பெறுதல்

1949 கலாஷ் நிக்கோவ் துப்பாக்கித் தயாரிப்புகளுக்காக தன்னை முழுமையாக உட்படுத்திக் கொண்டார். ரியுச்சர்ஸ் தொலைக்காட்சிக்கு அளித்தப் பேட்டியில்

கலாஷ் நிகோவ் துப்பாக்கிகள் மிகப் பிரபலமானத் துப்பாக்கியாகப் பலராலும் அறியப்பட்டதால் அவருடையப் பெயரும் அதே அளவிற்கு உயர்ந்தது என்றால் மிகையாகாது. அதன் பலனாக அவர் அதன் 1997- 50 ஆண்டுப் பொன் விழாவின் போது கூறியவை:

என்று ஜெர்மனியில் பேசினார்.

கிடைத்த சன்மானம்

கலாஷ்னிக்கோவ் இரு முறை சோசலிச தொழிலாளர்களின் மாவீரன் (Hero of the Socialist Labours) என்றப் பட்டத்தைப் பெற்றுள்ளார். தொழில்நுட்ப அறிவியலில் உயர்தர முனைவர் பட்டமும் பெற்றுள்ளார். 10 கோடித் துப்பாக்கிகளுக்கு மேல் தயாரிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் அதற்காக எந்தப் பயனும் அடைந்ததில்லை. அவர் சன்மானமாகப் பெற்றுக் கொண்டிருந்தது மாநில ஒய்வூதியம் மட்டுமே. வணிகச் சின்னமாக ஜெர்மன் நிறுவனம் இவர் துப்பாக்கிகளுக்கு குடையும், கத்திகளும் பொறித்து வெளியிடுகின்றன. அதில் ஒன்று ஏ கே 74.

இறப்பு

தனது‍ 94 ஆவது‍ வயதில் டிசம்பர் 23, 2013 இல் இறந்தார்.

மேற்கோள்கள்

வெளி இணைப்புக்கள்

Tags:

மிக்கைல் கலாசுனிக்கோவ் இளமைக்காலம்மிக்கைல் கலாசுனிக்கோவ் இராணுவம் நிராகரிப்புமிக்கைல் கலாசுனிக்கோவ் ஏ கே 47 உருவாதல்மிக்கைல் கலாசுனிக்கோவ் பிற துப்பாக்கிகள்மிக்கைல் கலாசுனிக்கோவ் புகழ் பெறுதல்மிக்கைல் கலாசுனிக்கோவ் கிடைத்த சன்மானம்மிக்கைல் கலாசுனிக்கோவ் இறப்புமிக்கைல் கலாசுனிக்கோவ் மேற்கோள்கள்மிக்கைல் கலாசுனிக்கோவ் வெளி இணைப்புக்கள்மிக்கைல் கலாசுனிக்கோவ்உருசியாஏகே-47ரசிய மொழி

🔥 Trending searches on Wiki தமிழ்:

விசயகாந்துசடுகுடுவேற்றுமை (தமிழ் இலக்கணம்)அரவிந்த் கெஜ்ரிவால்பாண்டியர்திருவண்ணாமலை மக்களவைத் தொகுதிபச்சைக்கிளி முத்துச்சரம்முடக்கு வாதம்தேசிக விநாயகம் பிள்ளைகல்லீரல்மஞ்சும்மல் பாய்ஸ்காச நோய்கர்மாஇந்திய நாடாளுமன்றம்சிறுபாணாற்றுப்படைசித்தார்த்பொது ஊழிஅருந்ததியர்நெடுநல்வாடை (திரைப்படம்)ஜெயகாந்தன்நிணநீர்க்கணுதமிழ்த் திரைப்பட நடிகைகளின் பட்டியல்சிவனின் 108 திருநாமங்கள்அல் அக்சா பள்ளிவாசல்சிலுவைமலையாளம்மு. கருணாநிதிநருடோதமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 2024அறிவியல்சிற்பி பாலசுப்ரமணியம்சரண்யா துராடி சுந்தர்ராஜ்திருவாலங்காடு வடாரண்யேசுவரர் கோயில்இந்திய அரசியலமைப்புதிருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்பெரம்பலூர் மக்களவைத் தொகுதிவைகோகேபிபாராஅவிட்டம் (பஞ்சாங்கம்)இசுலாமிய வரலாறுபாரத ரத்னாதிருநெல்வேலிதிதி, பஞ்சாங்கம்டி. டி. வி. தினகரன்சிறுநீர்ப்பாதைத் தொற்றுஉமாபதி சிவாசாரியர்இந்திய மக்களவைத் தொகுதிகள்உயர் இரத்த அழுத்தம்ரவிச்சந்திரன் அசுவின்கள்ளர் (இனக் குழுமம்)மாதேசுவரன் மலைவிந்துநாயன்மார்உவமையணிநெடுநல்வாடைமோகன்தாசு கரம்சந்த் காந்திமார்ச்சு 28அகத்தியமலைஇந்தியன் (1996 திரைப்படம்)கட்டுவிரியன்இயேசுவின் உயிர்த்தெழுதல்அல்லாஹ்துரை வையாபுரிகாடைக்கண்ணிதொல்காப்பியம்முகம்மது நபி நிகழ்த்திய அற்புதங்கள்தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்இரட்டைக்கிளவிசவூதி அரேபியாஎங்கேயும் காதல்அதிதி ராவ் ஹைதாரிசங்க காலம்தூத்துக்குடி மக்களவைத் தொகுதிதிருமூலர்சட் யிபிடிஇந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்பனிக்குட நீர்பதினெண்மேற்கணக்குசுற்றுலா🡆 More