மார்வாரிக் குதிரை

மார்வாரி (Marwari) அல்லது மலானி (Malani) ஓர் அரிதான குதிரை இனம்.

இவை இந்தியாவின் இராஜஸ்தான் மாநிலத்தின் மார்வார் பிரதேசம் அல்லது ஜோத்பூர் பகுதியைச் சேர்ந்தவை. உட்புற வளைந்து நுனிகள் தொட்டுக்கொள்ளும் காதுகள் இந்த குதிரைகளின் சிறப்பு. இவை பல குதிரையின நிறங்களில் இருந்தாலும், கருப்பும் வெண்மையும் கலந்த திட்டு திட்டாக உள்ளவையும் வெண்ணிறப் பட்டைத்தோல் அமைப்பு கொண்டவையும் வாங்குவோர் மற்றும் வளர்ப்பவர்களிடையே மிகவும் பிரபலம். மார்வாரி குதிரைகள் அதன் கடினத்தன்மைக்காக அறியப்படுகிறது. மேலும் மார்வரியின் தென்மேற்கில் உள்ள கத்தியவார் பகுதியின் மற்றொரு இந்திய இனமான கத்தியவாரியுடன் மிகவும் ஒத்திருக்கிறது. மார்வாரிக் குதிரைகள், இந்திய குதிரைகள் மற்றும் அரேபிய குதிரைகளின் (குறிப்பாக மங்கோலிய குதிரைகள்) கலப்பினால் உருவானவை.

மார்வாரிக் குதிரை
மார்வாரிக் குதிரை
ஒரு மார்வாரிப் பொலிக்குதிரை
மற்றொரு பெயர்மார்வாடி, மலானி
தோன்றிய நாடுஇந்தியாவின் இராஜஸ்தான் மாநிலத்தின் மார்வார் பிரதேசத்தில்
பண்புகள்
நிறம்கறுப்பு, கஷ்கொட்டை, ரோன், சாம்பல், கருப்பு வெள்ளத் திட்டுகள் மற்றும் (கருப்பு வெள்ளைத் திட்டுகள்
தனித்துவ அம்சங்கள்நுனிகள் உட்புறமாக வளைந்து தொடும் காதுகள், நேராக அல்லது சற்றே ரோமன் தலை, உயர்ந்த தலை, தலை, வளைந்த மயில் கழுத்து, உயர் முதுகுப்பகுதி, மெலிந்த உடல், மெல்லிய தோல், கடுமையான குளம்பு மற்றும் உயர்ந்த வால்.

இகியுவசு ஃபெரசு கபால்லசு

மேற்கு இந்தியாவின் மார்வார் பகுதியின் பாரம்பரிய ஆட்சியாளர்களான ராத்தோர்கள், மார்வாரி குதிரைகளின் இனப் பெருக்கத்தை முதன்முதலில் செய்தனர். 12 ஆம் நூற்றாண்டில் தொடங்கி, அவர்கள் சிறந்த முறையில் இனப்பெருக்கம் செய்தனர். இதன் மூலம் கலப்பில்லாத மற்றும் சிறந்த மார்வாரிக் குதிரை இனம் உருவானது. மார்வார் பிராந்திய மக்களால் இவை குதிரைப்படையில் வரலாறு முழுவதும் பயன்படுத்தப்பட்டன. மார்வாரி, போரில் அதன் விசுவாசத்தையும் தைரியத்தையும் வெளிப்படுத்தியது.

மார்வாரிக் குதிரை
உட்புற வளைந்த மற்றும் நுனிகள் தொடும் காதுகள் இந்த குதிரைகளின் சிறப்பு

1930 களில் இந்த இனங்களின் இனப்பெருக்கம், மோசமான நிர்வாக நடைமுறைகளால் குறைந்தது. ஆனால் இன்று அதன் புகழ் மீண்டுள்ளது. மார்வாரிக் குதிரைகள் குறைந்தளவு பாரமிழுக்கவும் வேளாண் வேலைக்காகவும் பயன்படுத்தப்படுகிறது. அத்துடன் சவாரி மற்றும் பேக்கிங் (packing) செய்ய பயன்படுத்தப்படுகிறது. 1995 இல், இந்தியாவில் மார்வாரிக்கு ஒரு இனப்பெருக்க சமூகம் உருவானது. மார்வாரியின் ஏற்றுமதி பல ஆண்டுகள் தடை செய்யப்பட்டது, ஆனால் 2000 க்கும் 2006 க்கும் இடையில், சிறிய எண்ணிக்கையிலான ஏற்றுமதிகள் அனுமதிக்கப்பட்டன. 2008 ஆம் ஆண்டிலிருந்து, இந்தியாவிற்கு வெளியில் மார்வார்யின் அயல்நாட்டு நுழைவுச்சான்று சிறிய எண்ணிக்கையில் கிடைக்கிறது. மார்வாரிக் குதிரைகள் அரிதாக இருப்பினும், இந்தியாவிற்கு வெளியே அவைகளின் தனித்துவமான தோற்றம் காரணமாக மிகவும் பிரபலமாகி வருகின்றன.

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

மார்வாரிக் குதிரை 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
மார்வாரி
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

Tags:

இந்தியாஇராஜஸ்தான்ஜோத்பூர் சமஸ்தானம்மார்வார் பிரதேசம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

முடியரசன்ஆடுஜீவிதம் (திரைப்படம்)நவரத்தினங்கள்திருப்போரூர் கந்தசாமி கோயில்இராமலிங்க அடிகள்தமிழ்நாட்டின் நகராட்சிகள்தமிழர் அளவை முறைகள்தமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியல்பதினெண்மேற்கணக்குபச்சைக்கிளி முத்துச்சரம்ஸ்ரீலீலாஇந்திய மக்களவைத் தொகுதிகள்மாநிலங்களவைஇந்தியன் (1996 திரைப்படம்)வட்டாட்சியர்அரக்கோணம் மக்களவைத் தொகுதிகெத்சமனிகுமரி அனந்தன்கே. மணிகண்டன்காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதிஏ. ஆர். ரகுமான்பத்து தலகாடைக்கண்ணிவெந்து தணிந்தது காடுகிராம ஊராட்சிதமிழர் பண்பாடுமேழம் (இராசி)சுவாதி (பஞ்சாங்கம்)சேலம் மக்களவைத் தொகுதிபுங்கைகோயம்புத்தூர் மாவட்டம்ஜெ. இராபர்ட் ஓப்பன்கைமர்வெண்குருதியணுநீலகிரி மாவட்டம்தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 2019இரசினிகாந்துதீரன் சின்னமலைசுடலை மாடன்அருணகிரிநாதர்எயிட்சுபதினெண் கீழ்க்கணக்குதிரு. வி. கலியாணசுந்தரனார்அ. கணேசமூர்த்திதிருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோயில்மதுராந்தகம் தொடருந்து நிலையம்விஷ்ணுகல்விதமிழ்நாட்டின் மாநகராட்சிகள்சீமான் (அரசியல்வாதி)இந்தியன் பிரீமியர் லீக்காளமேகம்புதுமைப்பித்தன்ஹோலிஅத்தி (தாவரம்)மனத்துயர் செபம்பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்ராசாத்தி அம்மாள்முருகன்தேர்தல் பத்திரம் (இந்தியா)எனை நோக்கி பாயும் தோட்டாசுற்றுலாலோ. முருகன்தமிழ்நாடுமங்கோலியாபரணி (இலக்கியம்)இலவங்கப்பட்டைகலைஞர் மகளிர் உரிமைத் தொகைநெல்லிஎம். கே. விஷ்ணு பிரசாத்எஸ். ஜெகத்ரட்சகன்காம சூத்திரம்குருபுதிய ஏழு உலக அதிசயங்கள்ஹதீஸ்மேற்குத் தொடர்ச்சி மலைஇந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்இந்தியாவின் உயிர்க்கோளக் காப்பகங்கள்எலுமிச்சைகேபிபாரா🡆 More