வானூர்தி நிலையம்

விமான நிலையம் அல்லது வானூர்தி நிலையம் அல்லது பறப்பகம் என்பது பறனைகள் (விமானங்கள்) அல்லது உலங்கூர்திகள் வானேறவோ தரையிறங்கவோ அமைக்கப்பட்ட இடம் ஆகும்.

வானூர்திகள் வானூர்தி நிலையங்களில் பராமரிக்கப்படலாம். வானூர்திகள் வானூர்தி நிலையங்களில் வானூர்திகள் ஏறவும் இறங்குவதற்குமான ஓடுபாதை, அல்லது உலங்கூர்தித்தளம் (helipad), முனையங்கள், பராமரிப்புக் கூடாரங்கள் (hangars), வான்வழிகாட்டகக் கோபுரங்கள் (Air Traffic Control Towers) போன்றவை அமைகின்றன.

வானூர்தி நிலையம்
நியூசிலாந்து நாட்டில் உள்ள பரபரௌமு வானூர்தி நிலையம்

பெரிய வானூர்தி நிலையங்களில் உணவகங்கள், ஓய்விடங்கள், ஏற்றிடங்கள் (airport ramp/apron), அவசர சேவைகள் ஆகியவையும் அமையும். ராணுவப் பயனிற்கு மட்டும் அமைக்கப்படும் வானிலையங்கள் வான்தளம் (airforce base/air-base) எனப்படுகின்றன.

விமான நிலையக் கட்டமைப்பு

வானூர்தி நிலையங்கள் வான்பக்கப் பகுதி மற்றும் தரைப்பக்கப் பகுதி என்கிற இரு பக்கங்களாக பிரிக்கப்படுகின்றன. வான்பக்கப் பகுதிகளில் வானூர்திகளை அணுகும் பகுதிகள், ஓடுபாதைகள், நடையோடுபாதைகள் (taxiways), ஏற்றிடங்கள் போன்றவை அமைகின்றன. தரைப்பக்கப் பகுதிகளில் சீருந்து நிறுத்தங்கள், பொதுப் போக்குவரத்து, நகர அணுகு சாலைகள் போன்றவை சேரும். தரைப்பக்கத்திலுருந்து வான்பக்க அணுகல் தீவிரமாக கட்டுப்படுத்தப்படுகிறது. பயணிகள் வான்பக்கத்தை முனையங்கள் மூலம் பாதுகாப்புச் சோதனைகளைக் கடந்துதான் அணுகலாம்.

ஒரு வானிலையத்தின் நடமாட்டம் மற்றும் நிதிநிலையைப் பொறுத்து, அவ்வானிலையத்தில் வான்வழிகாட்டகம் உள்ளதா இல்லையா என உறுதிப்படுத்தும். வழக்கமாக அனைத்து பன்னாட்டு வானிலையங்களில் வான்வழிகாட்டகங்கள் அமைகின்றன. பன்னாட்டு வானிலையங்கள் சுங்கம் மற்றும் குடிநுழைவு வசதிகளும் கொண்டுள்ளன.

ஆய்வுகள்

விமான நிலையத்தின் அருகில் வசிப்பவர்கள், அல்லது விமான ஒலி அதிகமாக இருக்கும் பகுதியில் வசிப்பவர்களுக்கு இதய நோய் அல்லது ஸ்ட்ரோக் எனப்படும் மூளைக்கு ரத்தம் எடுத்துச் செல்லும் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு மூளை செயலிழக்கும் வாய்ப்பு அதிகம் காணப்படுவதாக பிரிட்டனில் நடத்தப்பட்ட மருத்துவ ஆய்வொன்று தெரிவிக்கிறது. இந்த ஆய்வை மேற்கு இலண்டனில் உள்ள ஹீத்ரோ விமான நிலையத்தில் வசிக்கும் 35 இலட்சம் மக்களிடம் நடத்தப்பட்டுள்ளது. இதற்கு விமான ஒலி மனிதர்களின் இரத்த அழுத்தத்தை அதிகப்படுத்துவதே காரணம் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

மேலும் காண்க

மேற்கோள்கள்

Tags:

வானூர்தி நிலையம் விமான நிலையக் கட்டமைப்புவானூர்தி நிலையம் ஆய்வுகள்வானூர்தி நிலையம் மேலும் காண்கவானூர்தி நிலையம் மேற்கோள்கள்வானூர்தி நிலையம்உலங்கூர்திஓடுபாதைமுனையம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

மண்ணீரல்நாய்தமிழ் மாதங்கள்வெந்து தணிந்தது காடுகொன்றை வேந்தன்தற்குறிப்பேற்ற அணிதொடர்பாடல்கருப்பை நார்த்திசுக் கட்டிமெட்ரோனிடசோல்தமிழ்விடு தூதுமருதமலை முருகன் கோயில்சூர்யா (நடிகர்)கன்னத்தில் முத்தமிட்டால்மதராசபட்டினம் (திரைப்படம்)வேலைகொள்வோர்சே குவேராராம் சரண்போக்குவரத்துஇந்தியாகிளிசிவாஜி கணேசன் நடித்த திரைப்படங்கள்கள்ளர் (இனக் குழுமம்)காதலும் கடந்து போகும்ஹரிஹரன் (பாடகர்)திரு. வி. கலியாணசுந்தரனார்உரைநடைவணிகம்குமரகுருபரர்திரௌபதிஇந்திய தேசிய சின்னங்கள்கல்லீரல்சங்க இலக்கியம்சிவனின் 108 திருநாமங்கள்ஒரு கல் ஒரு கண்ணாடி (திரைப்படம்)கெல்லி கெல்லிஔவையார் (சங்ககாலப் புலவர்)வாரிசுஅமீதா ஒசைன்மார்ச்சு 27என்டர் த டிராகன்தமிழ்ப் புத்தாண்டுஇன்ஸ்ட்டாகிராம்ம. பொ. சிவஞானம்வில்லங்க சான்றிதழ்பகவத் கீதைஇந்திய ரூபாய்நெகிழிநீரிழிவு நோய்நாடார்மனித உரிமைகிராம ஊராட்சிதியாகராஜா மகேஸ்வரன்இராமலிங்க அடிகள்சரக்கு மற்றும் சேவை வரி (இந்தியா)தற்கொலை முறைகள்திருப்பைஞ்ஞீலி ஞீலிவனேசுவரர் கோயில்வீரமாமுனிவர்புங்கைநாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்இந்திய வரலாறுகழுகுஓரங்க நாடகம்கன்னி (சோதிடம்)இரத்தப் புற்றுநோய்தேவநேயப் பாவாணர்வெண்பாகுணங்குடி மஸ்தான் சாகிபுஜவகர்லால் நேருஆத்திசூடிவேலுப்பிள்ளை பிரபாகரன்தஞ்சைப் பெருவுடையார் கோயில்இந்திய விடுதலை இயக்கம்செவ்வாய் (கோள்)புனர்பூசம் (நட்சத்திரம்)வீணைதமிழக வரலாறுஇந்திய மொழிகள்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்🡆 More