ரொனால்டினோ

ரொனால்டோ டி அசிசு மொரைரா (Ronaldo de Assis Moreira பிறப்பு 21 மார்ச் 1980) பரவலாக ரொனால்டினோ கவுச்சோ அல்லது ரொனால்டினோ என்று அழைக்கப்படுகிறார்) என்பவர், ஒரு பிரேசிலிய மேனாள் தொழில்முறைக் காற்பந்து வீரர் ஆவார்.

இவர் நடுக்கள அல்லது விங்கராக விளையாடினார். அனைத்துக்காலத்திற்குமான மிகச்சிறந்த வீரர்களில் ஒருவராகப் பரவலாகக் கருதப்படும் இவர், இரண்டு ஃபிஃபா சிறந்த வீரர் விருதுகளையும், ஒரு பலோன் டி 'ஓர் விருதையும் வென்றார். உலகக் கோப்பை, கோபா அமெரிக்கா, பிபா கூட்டமைப்புக்களின் கோப்பைப் போட்டி, யூஈஎஃப்ஏ வாகையர் கூட்டிணைவு, கோபா லிபர்டாடோர்ஸ் மற்றும் பாலன் டி 'ஓர் விருதுகளை வென்ற ஒரே வீரர் ஆவார். கால்பந்து விளையாட்டின் பெயர் பெற்றவரான ரொனால்டினோ தனது தொழில்நுட்பத் திறன்கள், படைப்பாற்றல், டிரிப்லிங் திறன் மற்றும் தனி உதையின் துல்லியம், தந்திரங்கள், ஏமாற்றுதல், பந்தினைப் பார்க்காது பந்தை மற்றவர்களுக்குக் கடத்துதல், ஆகியவற்றிற்காக புகழ்பெற்றார். இவர் "ஓ ப்ரூக்ஸோ" (மந்திரவாதி) என்ற புனைப்பெயரால் அறியப்படுகிறார்.

ரொனால்டினோ
ரொனால்டினோ
2019 இல் ரொனால்டினோ
சுய தகவல்கள்
முழுப் பெயர்ரொனால்டோ டி அசிசு மொரைரா
பிறந்த நாள்21 மார்ச்சு 1980 (1980-03-21) (அகவை 44)
பிறந்த இடம்போர்ட்டோ அலெக்ரி, பிரேசில்
உயரம்1.82 மீ
ஆடும் நிலை(கள்)நடுக்கள வீரர் (காற்பந்துச் சங்கம்)
இளநிலை வாழ்வழி
1987–1998கிரேமியோ
முதுநிலை வாழ்வழி*
ஆண்டுகள்கழகம்தோற்.(கோல்)
1998–2001கிரேமியோ89(47)
2001–2003பாரிசு எஃப்சி55(17)
2003–2008பார்சிலோனா145(70)
2008–2011ஏ.சி. மிலான்76(20)
2011–2012பிளமென்கோ56(23)
2012–2014Atlético Mineiro58(20)
2014–2015Querétaro25(8)
2015Fluminense7(0)
மொத்தம்511(205)
பன்னாட்டு வாழ்வழி
199717 வயதிற்குட்பட்டோர் அணி13(3)
1998–1999பிரேசில் 20 வயதிற்குட்பட்டோர்17(8)
1999–2000பிரேசில் 23 வயதிற்குட்பட்டோர்19(15)
2008Brazil Olympic (O.P.)8(3)
1999–2013பிரேசில்97(33)
*கழக உள்ளூர் சுற்றுப் போட்டிகள் தோற்றங்களும் கோல்களும் அன்று சேகரிக்கப்பட்டது.

ஆரம்பகால வாழ்க்கை

ரொனால்டினோ 
1980 ஆம் ஆண்டில் போர்டோ அலெக்ரேவில்பிறந்த ரொனால்டினோ தனது எட்டு வயதில் ஒரு வசதியான புறநகர்ப் பகுதிக்கு குடிபெயர்ந்தார்.

ரொனால்டோ டி அசிசு மொரைரா 21 மார்ச் 1980 இல் பிரேசிலின் ரியோ கிராண்டே டோ சுல் மாநிலத்தின் தலைநகரான போர்டோ அலெக்ரே நகரில் பிறந்தார். இவரது தாயார் மிகுலினா எலோய் அசிசு டோஸ் சாண்டோசு, ஒரு விற்பனையாளர் ஆவார். இவர் செவிலியர் கல்வியினை முடித்துள்ளார். இவரது தந்தை, ஜோவோ டி அசிசு மொரைரா, ஒரு கப்பல் கட்டும் தொழிலாளி மற்றும் உள்ளூர் கழகமான எஸ்போர்ட் கிளப் கிரூசிரோவின் கால்பந்து வீரர் ஆவார் (பெரிய கிரூசிரோ கழகம் அல்ல). ரொனால்டோவின் மூத்த சகோதரர் ராபர்டோ கிரேமியோக் கழகத்தில் இணைவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிறகு, இவரது குடும்பம் போர்டோ அலெக்ரேவின் மிகவும் வசதியான குவாருஜா பிரிவில் உள்ள ஒரு வீட்டிற்குக் குடிபெயர்ந்தது. இராபர்டோ, ரொனால்டினோவின் மேலாளராகச் செயல்பட்டுள்ளார், அதே நேரத்தில் இவரது சகோதரி டீசி இவரது பத்திரிகை ஒருங்கிணைப்பாளராகப் பணியாற்றியுள்ளார்.

காற்பந்துக் கழகத் தொழில் வாழ்க்கை

கிரேமியோ

ரொனால்டினோவின் தொழில் வாழ்க்கை கிரேமியோ இளைஞர் அணியில் தொடங்கியது. 1998 கோபா லிபர்டாடோர்சு போட்டியின் போது இவர் தனது மூத்த அணியில் அறிமுகமானார். 1999 ஆம் ஆண்டில் 18 வயதான ரொனால்டினோ 47 போட்டிகளில் 22 இலக்குகளை அடித்ததன் மூலமும் ரியோ கிராண்டே டோ சுல் மாநில வாகையாளர் இறுதிப் போட்டியின் மூலமும் பரவலாக அறியப்பட்டார்.

பார்சிலோனா

புதிதாத் தேர்ந்தெடுக்கப்பட்ட எஃப்சி பார்சிலோனாவின் தலைவர் ஜோன் லாபோர்டா, "நாங்கள் பார்சிலோனாவை கால்பந்து உலகில் முன்னணியில் கொண்டு செல்வோம் என்று சொன்னேன், அது நடக்க இந்த மூன்று வீரர்களில் ஒருவரான டேவிட் பெக்காம், தியரி ஹென்றி அல்லது ரொனால்டினோவை நாங்கள் ஒப்பந்தம் செய்ய வேண்டியிருந்தது" என்று கூறினார்.

2003-2004 பருவங்கள்

சூலை 27, 2003 இல் மாசசூசெட்ஸின் பாக்ஸ்பரோவில் உள்ள ஜில்லெட் மைதானத்தில் ஜுவென்டசுக்கு எதிரான சகோதரப் போட்டியில் பார்சிலோனா கழகத்திற்காக அறிமுகமானார். இந்தக் கழகத்தின் விளையாடியபோது தான் உலகம் முழுவதிலும் பரவலாக அரியப்பட்ட வீரரானார். கழகப் பயிற்சியாளரான பிராங்க் ரிஜ்கார்ட் போட்டிக்குப் பிறகு, "ரொனால்டினோ பந்தைத் தொடும் ஒவ்வொரு முறையும் சிறபான திறனை வெளிப்படுத்துகிறார்" என்று கூறினார். ரொனால்டினோ காயத்திலிருந்து மீண்டு வந்து 2003-04 பருவத்தில் லா லிகாவில் 15 இலக்குகளை அடித்தார், இறுதியில் அணி லீக்கில் இரண்டாவது இடத்தைப் பிடிக்க உதவினார்.

ஓய்வு

சனவரி 16, 2018 இல், ரொனால்டினோ தனது சகோதரர்/முகவர் மூலம் கால்பந்தில் இருந்து ஓய்வு பெறுவதை உறுதிப்படுத்தினார்: "அவர் நிறுத்திவிட்டார், அது முடிந்துவிட்டது. ரஷ்யா உலகக் கோப்பைக்குப் பிறகு, அநேகமாக ஆகஸ்ட் மாதத்தில் மிகப் பெரிய மற்றும் நல்ல ஒன்றைச் செய்வோம்" என்று கூறினார். உலகக் கோப்பை, யூஈஎஃப்ஏ வாகையளர் கூட்டிணைவு மற்றும் பாலன் டி 'ஓர் ஆகியவற்றை வென்ற எட்டு வீரர்களில் ஒருவராக இவர் ஓய்வு பெற்றார்.

குறிப்புகள்

மேற்கோள்கள்

Tags:

ரொனால்டினோ ஆரம்பகால வாழ்க்கைரொனால்டினோ காற்பந்துக் கழகத் தொழில் வாழ்க்கைரொனால்டினோ ஓய்வுரொனால்டினோ குறிப்புகள்ரொனால்டினோ மேற்கோள்கள்ரொனால்டினோகாற்பந்துகோப்பா அமெரிக்காநடுக்கள வீரர் (காற்பந்துச் சங்கம்)பிபா கூட்டமைப்புக்களின் கோப்பைப் போட்டியூஈஎஃப்ஏ வாகையர் கூட்டிணைவு

🔥 Trending searches on Wiki தமிழ்:

திரு. வி. கலியாணசுந்தரனார்அவுன்சுவே. செந்தில்பாலாஜிமகேந்திரசிங் தோனிதமிழ்ப் புத்தாண்டுமொழிபெயர்ப்புகாமராசர்விவேகானந்தர்முதலாம் உலகப் போர்கருக்காலம்ஆத்திசூடிபதினெண் கீழ்க்கணக்குசீமான் (அரசியல்வாதி)தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்சிவபெருமானின் பெயர் பட்டியல்தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்நிலாதேவேந்திரகுல வேளாளர்மரவள்ளிசிறுதானியம்நீர்நிலைபூரான்சிவன்மலை சுப்பிரமணியர் கோயில்கிராம நத்தம் (நிலம்)மேகக் கணிமைசங்க காலம்அகத்தியம்தாவரம்ந. பிச்சமூர்த்திநீக்ரோசிவன்ஆந்திரப் பிரதேசம்பொன்னுக்கு வீங்கிமண் பானைநல்லெண்ணெய்புற்றுநோய்சூர்யா (நடிகர்)காதல் கொண்டேன்புதுக்கவிதைஹரி (இயக்குநர்)அகத்தியர்நாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்நரேந்திர மோதிகுற்றியலுகரம்சேரன் செங்குட்டுவன்வன்னியர்நீதிக் கட்சிபெரியபுராணம்சித்தர்கள் பட்டியல்குமரகுருபரர்கொடைக்கானல்சன்ரைசர்ஸ் ஐதராபாத்கம்பராமாயணத்தின் அமைப்புஆண் தமிழ்ப் பெயர்கள்அழகர் ஆற்றில் இறங்குதல் (விழா)காடுவெட்டி குருவியாழன் (கோள்)வனப்புஇந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்இலக்கியம்தமிழ் நீதி நூல்கள்நாடார்வெந்தயம்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)இயேசு காவியம்கைப்பந்தாட்டம்சூரியக் குடும்பம்இணையம்பள்ளிக்கூடம்வளையாபதிபடையப்பாஐக்கிய நாடுகள் அவைமுல்லைக்கலிநீரிழிவு நோய்பெருவிருப்ப கட்டாய மனப்பிறழ்வுதிருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோயில்கல்லீரல்மதுரை வீரன்முலாம் பழம்🡆 More