மாதம்

மாதம் அல்லது மாசம் அல்லது திங்கள் என்பது ஒரு கால அளவாகும்.

மாதம் என்ற ஒரே சொல்லே பல்வேறு சமுதாயங்களில் புழக்கத்திலுள்ள, இதையொத்த ஆனால் சிறிது வேறுபடுகின்ற கால அளவுகளைக் குறிக்கப் பயன்பட்டுவருகின்றது. வெவ்வேறு பண்பாடுகளில் இக் காலக் கணிப்பிற்குரிய அடிப்படைகள் வெவ்வேறாக அமைந்திருப்பதாலேயே மாறுபட்ட கால அளவுகளைக் கொண்ட மாதங்கள் வழக்கிலுள்ளன. சிறப்பாக இரண்டு வகையான மாதங்களைக் குறிப்பிடலாம்.

  1. சூரியமாதம்
  2. சந்திரமாதம்

சூரியமாதம் என்பது, பூமிக்குச் சார்பாகச் சூரியனுடைய இயக்கத்தை அடிப்படையாகக் கொண்டது. இந்தச் சார்பு இயக்கத்தில், சூரியன் பூமியை ஒரு முறை சுற்றி வருவதுபோல் தோன்றும் காலம் ஒரு ஆண்டு ஆகும். பூமியை மையமாகக் கொண்டு அதைச் சுற்றிய அண்டவெளி, ஒவ்வொன்றும் 30 பாகைகள் கொண்ட 12 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இந்த ஒவ்வொரு பிரிவும் ஒரு இராசி எனவும், 12 இராசிகளினதும் தொகுதி இராசிச் சக்கரம் எனவும் அழைக்கப்படுகின்றன. பூமியைச் சுற்றிய சூரியனின் சார்பு இயக்கத்தில் இந்த ஒவ்வொரு இராசியிலும், சூரியன் இருக்கும் காலப்பகுதியே சூரியமாதம் ஆகும். இந்தியாவில் மலையாளிகளும், தமிழரும் சூரியமாத முறையையே பின்பற்றுகிறார்கள்.

சந்திரமாதம் என்பது, சந்திரனானது பூமியை ஒரு முறை சுற்றி வர எடுத்துக்கொள்ளும் கால இடைவெளியாகும். சந்திரமாதத்தைக் கைக்கொள்ளும் சில சமுதாயங்களில் ஒவ்வொரு மாதமும் பூரணையில் தொடங்கி அடுத்த பூரணை வரையிலான காலமாக இருக்க, வேறு சில பண்பாடுகளில் மாதம், ஒரு அமாவாசையில் தொடங்கி அடுத்த அமாவாசைக்கு முன் முடிவடைகிறது. வட இந்தியாவில் பெரும்பாலும் சந்திரமாதமே புழக்கத்தில் உள்ளது. இஸ்லாமியர்களும் இம்முறையையே கடைப்பிடித்து வருகிறார்கள்.

இவற்றைவிட அனைத்துலக அளவில் இன்று புழங்கி வருகின்ற முறையின்படி, மாதம் என்பது நேரடியாகச் சந்திரன் அல்லது சூரியனின் இயக்கத்தை வைத்துக் கணிக்கப்படுவதில்லை.

மேற்கோள்கள்

Tags:

🔥 Trending searches on Wiki தமிழ்:

மண் பானைஇந்தியன் (1996 திரைப்படம்)திருப்பாவைதொல்லியல்கட்டுரைஅரவான்வாதுமைக் கொட்டைசைவத் திருமணச் சடங்குகாடுவெட்டி குருகுருதி வகைஆல்விநாயகர் அகவல்மனம் கொத்திப் பறவை (திரைப்படம்)சிவபெருமானின் பெயர் பட்டியல்சிற்பி பாலசுப்ரமணியம்அஜித் குமார்தமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியல்சைவ சமயம்சிவனின் தமிழ்ப் பெயர்கள்மருதம் (திணை)கபிலர் (சங்ககாலம்)குடும்ப அட்டைதேவாரப்பாடல் பெற்ற நடு நாட்டு தலங்களின் பட்டியல்வைரமுத்துஇந்திய மாநிலங்களின் தலைநகரங்களும் ஒன்றியப் பகுதிகளின் தலைநகரங்களும்ம. பொ. சிவஞானம்ஐந்தாம் பத்து (பதிற்றுப்பத்து)ஆறுமுக நாவலர்சரக்கு மற்றும் சேவை வரி (இந்தியா)பரிபாடல்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்எங்கேயும் காதல்காதல் கொண்டேன்மார்பகப் புற்றுநோய்தற்கொலை முறைகள்ரச்சித்தா மகாலட்சுமிகல்விபூரான்கைப்பந்தாட்டம்தொலைபேசிதமிழர் உலோகத் தொழில்நுட்பம்திருத்தணி முருகன் கோயில்முலாம் பழம்பகத் பாசில்கண்ணகிபட்டா (நில உரிமை)சீமான் (அரசியல்வாதி)ரோசுமேரிபட்டினப் பாலைநாலடியார்சிங்கம் (திரைப்படம்)இந்தியாஇந்திய தேசியக் கொடிபுங்கைஆய்வுஇசுலாமிய வரலாறுவிராட் கோலிசெஞ்சிக் கோட்டைவேற்றுமைத்தொகைகஞ்சாஇலங்கைதமிழ் இலக்கியப் பட்டியல்பிரீதி (யோகம்)தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்சிவாஜி கணேசன்நன்னூல்மறைமலை அடிகள்அக்பர்சயாம் மரண இரயில்பாதைதமிழர் அணிகலன்கள்திருநாவுக்கரசு நாயனார்இரட்டைக்கிளவிசோமசுந்தரப் புலவர்விண்ணைத்தாண்டி வருவாயாபல்லவர்திருமால்மனித மூளைமதராசபட்டினம் (திரைப்படம்)🡆 More