புவிப்புறவியல் (Geomorphology) என்பது புவியின் மேற்பரப்பு அல்லது அருகே இயங்கும் இயர்பியல், வேதியியல் அல்லது உயிரியல் செயல்முறைகளால் உருவாக்கப்படுமலிடத்தியல், கடல் ஆழவியல் ஆற்றலின் தோற்றம், படிமலர்ச்சி பற்றிய புவியியல் ஆராய்ச்சி ஆகும்.
இந்த ஆராய்ச்சி, நிலப்பரப்புகள் எவ்வாறு உருவாகின்றன, நிலப்பகுதியின் வரலாறு, இயக்கவியலாகப் புரிந்து கொள்ளல், கள நோக்கீடுகள், புறநிலைச் செய்முறைகள், எண் படிமமாக்கம் ஆகியவற்றால் மாற்றங்களை முன்கணித்தல் போன்றவற்றைப், புவியியலாளர்கள் புரிந்து கொள்ளவும் பங்களிக்கவும் உதவுகிறது.புவிப்புறவியலாளர்கள் புறப் புவிப்பரப்பியல் புவியியல், புவியளவியல், புவிநுட்பப் பொறியியல், தொல்லியல், காலநிலையியல், பொறியியல்சார் புவியியல் ஆகிய பலதுறை அறிவைப் பயன்படுத்துகின்றனர். இப்புல ஆர்வங்கள் பல ஆய்வு முறைப் பாணிகளையும் ஆர்வங்களையும் உருவாக்கியுள்ளனd.
புவிப்புற இயற்கை நிகழ்வுகள் நிலச்சரிவுகளையும், புவிசார் செயல்முறைகளையும் உருவாக்குகிறது, இவை நிலத்தட்டுகளை மேலெழுப்புகின்றன; தட்பவெப்ப நிலையை மாற்ருகின்றன; கடலோரப் புவியியலை வடிவமைக்கின்றன. புவியின் மேற்பரப்பில் நீர், காற்று, பனி, நெருப்பு, உயிரினங்களின் செயல், மேற்பரப்பு மண் வடிவங்களை மாற்றியமைக்கின்றன; வேதியியல் எதிர்வினைகள், ஈர்ப்பு விசையின் கீழ் நிலப்பரப்பு மாற்றத்தின் நிலைத்தன்மையும் பிற காரணிகளும் பல காலநிலையைக் கடுமையாக சமப்படுத்துகின்றன. பூகோள எல்லைகள் உயர்ந்துள்ளன, எரிமலைகளின் வளர்ச்சி, நில மேற்பரப்பு உயரத்தில் (சிலநேரங்களில் மேற்பரப்பு செயல்முறைகளுக்த் துலங்குவது), புவியின் மேற்பரப்பு வீழ்ச்சியடைந்து, நிரப்பப்பட்டிருக்கும் ஆழமான வண்டல் நீர்மட்டங்கள் ஆகியவற்றின் உருவாக்கம், இயற்கை, மற்ற பகுதிகளில் புவியின் மேற்பரப்பும் அதன் பரப்பளவும், நிலவியல், நீரியல், உயிரியல் நடவடிக்கைகளை நிலவியல் செயல்முறைகள் அல்லது புவியின் பாறைக்கோளத்தின் குறுக்குவெட்டு, வளிமண்டலம், உயிர்க்கோளம் ஆகியவற்றின் செயல்முறைகளின் கலவையாக மாற்றியமைக்கின்றன.
மேற்கோள்கள்
Gilbert, Grove Karl, and Charles Butler Hunt, eds. Geology of the Henry Mountains, Utah, as recorded in the notebooks of GK Gilbert, 1875–76. Vol. 167. Geological Society of America, 1988.
This article uses material from the Wikipedia தமிழ் article புவிப்புறவியல், which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses. ®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.