பிரெட்ரிக் எங்கெல்சு

பிரெட்ரிக் எங்கெல்சு (ஃபிரெட்ரிக் எங்கெல்ஸ்; Friedrich Engels; நவம்பர் 28, 1820 – ஆகஸ்டு 5, 1895) 19ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஜெர்மன் அரசியல் மெய்யியலாளராவார்.

இவர் கார்ல் மார்க்ஸ் உடன் இணைந்து கம்யூனிச சித்தாந்தத்தை உருவாக்கியதுடன், கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை மார்க்சுடன் சேர்ந்து எழுதினார்.

பிரெட்ரிக் எங்கெல்சு
Friedrich Engels
பிறப்பு28 நவம்பர் 1820
பார்மென், புரூசியா
இறப்பு5 ஆகத்து 1895(1895-08-05) (அகவை 74)
லண்டன், இங்கிலாந்து
காலம்19 ஆம் நூற்றாண்டு தத்துவம்
பகுதிமேற்கத்திய தத்துவம்
பள்ளிமார்க்சியம்
முக்கிய ஆர்வங்கள்
அரசியல் தத்துவம், அரசியல், பொருளியல், வர்க்கப் போராட்டம், முதலாளித்துவம்
குறிப்பிடத்தக்க
எண்ணக்கருக்கள்
மார்க்சியத்தைத் தோற்றுவித்தவர்களில் ஒருவர்
செல்வாக்குச் செலுத்தியோர்
செல்வாக்குக்கு உட்பட்டோர்
கையொப்பம்பிரெட்ரிக் எங்கெல்சு

ஆரம்ப வாழ்க்கை

இவர் பிரசியாவிலுள்ள, பர்மன் என்னுமிடத்தில் 1820-ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் 28-ஆம் நாள் பிறந்தவர். 20 அகவை வரை வணிகத்தில் ஈடுபட்டார். சிறுவனாக இருக்கும் பொழுதே மதங்களின் மீதும் முதலாளித்துவத்தின் மீதும் வெறுப்பு கொண்டிருந்தார். இக்காலகட்டத்தில் பெர்னிலுள்ள மெய்யியல் அறிஞர் ஹேக்கல் கொள்கையைப் பின்பற்றுபவர்களோடு தொடர்பிலிருந்தார். மான்செஸ்டரில் தன்னுடைய தந்தையின் நூற்பு ஆலையில் 1845ஆம் ஆண்டு வேலை செய்த பொழுது தொழிலாளர்களின் மேல் முதலாளித்துவத்தின் வரையற்ற அடிமைத்தனத்தை நேரடியாக உணர்ந்தார்.

மார்க்சுடன் நட்பு

செருமனிக்கு செல்லும் வழியில் பாரீசில், கார்ல் மார்க்சை சந்தித்து நட்பை வளர்த்துக் கொண்டார். 1849-இல் செருமனியிலிருந்து தப்பி இங்கிலாந்து வந்து கார்ல் மார்க்சுக்கு உதவத் தொடங்கினார். பணமின்றி துயரப்பட்டுக் கொண்டிருந்த மார்க்சுக்கு உதவுதற்காகவே மீண்டும் தன் தந்தையின் நூற்பு ஆலையில் வேலை செய்தார். 1869- சூலை 1 அன்று தனது ஆலையின் பங்கை விற்றார். அதை ஒரு மிகப்பெரிய மகிழ்ச்சியான நாளாகக் கருதினார். 1870- செப்டம்பரில் மார்க்சுக்கு அதிகமாக ஒத்துழைக்க எண்ணி மார்க்சின் இல்லத்தருகிலேயே வந்து தங்கினார். தன்னை முன்னிலைப்படுத்தாமல் மார்க்சை முன்னிலைப்படுத்தினார் எங்கெல்சு. மார்க்சின் கருத்துக்களை வளமுள்ளதாக்க அவ்வப்போது உறவாடி பல புதிய கருத்துக்களையும் மார்க்சுக்குக் கொடுத்தார்.

மதவாதத்தைப் பற்றி

மதவாதம் மக்களின் வாழ்வை மூச்சடக்கச் செய்து‍ கடுமையானதாக்கிக் கொண்டிருக்கிறது. மதவாத தத்துவமானது‍ சாதாரண மக்களின் அரசியல் நலன்களுக்கு‍ எதிரானது. முதலாளி/ நிலப்பிரபுத்துவ வர்க்கத்தின் நலனைக் காப்பதற்காகவே உள்ளது.

முதலாளித்துவத்தைப் பற்றி

முதலாளித்துவமானது‍ தொழிலாளிகளுக்கு‍ வேலை பாதுகாப்பின்மையை உருவாக்கி உள்ளது. தன் வாழ்‌க்கை என்னவாகுமோ என்ற பயத்தை உண்டாக்கியுள்ளது.

முதலாளித்துவ பொருளாதாரத்தைப் பற்றி

முதலாளித்து‍வ பொருளாதாரத்தைப் பற்றி 1839 ஆம் ஆண்டு‍ அவர் இவ்வாறு‍ கூறுகிறார். முதலாளித்துவ சமூகத்தில் மக்களின் சிந்தனைகளும், செயல்பாடுகளும் பொருளாதார நலன் குறித்தே சுற்றி வருகின்றன.

வரலாற்று‍ நூல்கள்

கார்ல் மார்க்சின் இறப்புக்கு பின் மூலதனம் நூலின் பல தொகுதிகளை தொகுத்தார். கம்யூனிச சித்தாந்தத்தின் மூலவர்களுள் ஒருவராக இவர் கருதப்படுகிறார். மற்றவர் கார்ல் மார்க்சு ஆவார். மார்க்சின் "மூலதனம்" நூல் இவருடைய தனித்தன்மையை நன்கு வெளிக்காட்டுகிறது. மேலும் 1847-48 காலவாக்கில் பொதுவுடைமை அறிக்கையையும் இவர் வெளியிட்டார்.

மறைவு

1895-ஆம் ஆண்டு ஆகஸ்டு‍ 5-ஆம் நாள் இறந்தார்.

மேற்கோள்கள்


Tags:

பிரெட்ரிக் எங்கெல்சு ஆரம்ப வாழ்க்கைபிரெட்ரிக் எங்கெல்சு மார்க்சுடன் நட்புபிரெட்ரிக் எங்கெல்சு மதவாதத்தைப் பற்றிபிரெட்ரிக் எங்கெல்சு முதலாளித்துவத்தைப் பற்றிபிரெட்ரிக் எங்கெல்சு வரலாற்று‍ நூல்கள்பிரெட்ரிக் எங்கெல்சு மறைவுபிரெட்ரிக் எங்கெல்சு மேற்கோள்கள்பிரெட்ரிக் எங்கெல்சு18201895ஆகஸ்டு 5கம்யூனிசம்கார்ல் மார்க்ஸ்ஜெர்மன்நவம்பர் 28மெய்யியல்

🔥 Trending searches on Wiki தமிழ்:

நாலடியார்யூடியூப்மஞ்சள் காமாலைமத்திய சென்னை மக்களவைத் தொகுதிஇரட்டைக்கிளவிமுதலாம் உலகப் போர்மதுரைக் காஞ்சிநாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்செரால்டு கோட்சீமுகம்மது நபியின் மதீனா வாழ்க்கைஅசிசியின் புனித கிளாராசுபாஷ் சந்திர போஸ்தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரி பட்டியல்அறுபது ஆண்டுகள்தமிழ்இசுலாத்தின் ஐந்து தூண்கள்இந்தியன் பிரீமியர் லீக்சமந்தா ருத் பிரபுநீக்ரோமக்காச்சோளம்இலட்சம்ஐங்குறுநூறுநவக்கிரகம்மாநிலங்களவைதிருவாரூர் தியாகராஜர் கோயில்உப்புச் சத்தியாகிரகம்தமிழர் கலைகள்அம்மனின் பெயர்களின் பட்டியல்வெள்ளியங்கிரி மலைகாவிரி ஆறுதமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்தங்க தமிழ்ச்செல்வன்பாவலரேறு பெருஞ்சித்திரனார்முரசொலி மாறன்கமல்ஹாசன்உன்னாலே உன்னாலேஅத்தி (தாவரம்)தமிழக மக்களவைத் தொகுதிகள்நீலகிரி மக்களவைத் தொகுதிசோழர் காலக் கட்டிடக்கலைராசாத்தி அம்மாள்ஐராவதேசுவரர் கோயில்குமரி அனந்தன்தொலைக்காட்சியாதவர்வல்லினம் மிகும் இடங்கள்தமிழ்த் திரைப்பட நடிகர்களின் பட்டியல்நாம் தமிழர் கட்சிஆறுமுக நாவலர்திருத்தணி முருகன் கோயில்சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில்சூல்பை நீர்க்கட்டிகல்விரோசுமேரிசைவ சமயம்தேர்தல் நடத்தை நெறிகள்ஈ. வெ. இராமசாமிகனிமொழி கருணாநிதிஅஜித் குமார்நவரத்தினங்கள்விண்ணைத்தாண்டி வருவாயாவேலுப்பிள்ளை பிரபாகரன்வே. தங்கபாண்டியன்பரணி (இலக்கியம்)சித்தர்கள் பட்டியல்பாபுர்தீரன் சின்னமலைவிரை வீக்கம்சத்ய பிரதா சாகுஇந்தியப் பிரதமர்தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில்கார்லசு புச்திமோன்நீரிழிவு நோய்மெய்யெழுத்துமலையாளம்ஹதீஸ்🡆 More