பாஸ்டன்

பாஸ்டன் (இலங்கை வழக்கு: பொஸ்ரன்) அமெரிக்காவின் மஸ்ஸாசூசெட்ஸ் மாநிலத்தின் தலைநகரம் ஆகும்.

மக்கள்தொகையின்படி ஐக்கிய அமெரிக்காவின் மாசச்சூசெட்ஸ் பொதுநலவாயத்தின் மிகப் பெரும் நகரமாக பாஸ்டன் விளங்குகின்றது. மாசச்சூசெட்சில் கவுன்டி அரசு 1999இல் கலைக்கப்படும் வரை பாஸ்டன் சஃபோக் கவுன்ட்டியின் தலைமையிடமாகவும் இருந்தது. 48 சதுர மைல்கள் (124 km2) பரப்பளவில் அமைந்துள்ள இந்த நகரத்தின் மக்கள்தொகை 2014இல் 655,884 உடன் நியூ இங்கிலாந்தின் மிகப் பெரும் நகரமாகவும் உள்ளது. ஐக்கிய அமெரிக்காவில் 24வது பெரிய நகரமாக உள்ளது. இதனை மையமாகக் கொண்ட பெருநகர பாஸ்டன் மக்கள்தொகை 4.7 மில்லியனாக உள்ளது.

பாஸ்டன் நகரம்
நகரம்
பாஸ்டன்
  • மேலிருந்து கீழாக, இடதிலிருந்து வலதாக: பங்கர் குன்று நினைவகத்திலிருந்து பாசுடன் வான்காட்சி; நுண்கலை அருங்காட்சியகம்; மசாசுசெட்சு அரசு மாளிகை; அறிவியலாளர் கிறித்துவின் முதல் தேவாலயம்; பாசுடன் பொது நூலகம்; ஜான் எஃப். கென்னடி தலைவர்க்குரிய நூலகம் மற்றும் அருங்காட்சியகம்; தெற்கு தொடருந்து நிலையம்; பாசுடன் பல்கலைக்கழகமும் சார்லசு ஆறும்; ஆர்னால்டு மரவியல் பூங்கா; பென்வே பூங்கா; இறுதியாக பாசுடன் பொதுப் பூங்கா
அலுவல் சின்னம் பாஸ்டன் நகரம்
சின்னம்
Location in Suffolk County in Massachusetts, USA
Location in Suffolk County in Massachusetts, USA
நாடுஐக்கிய அமெரிக்கா
மாநிலம்மசாசுசெற்ஸ்
கவுண்டிசஃபோக்
Settled1630
Incorporated (city)1822
அரசு
 • மேயர்தோமஸ் மெனினோ
பரப்பளவு
 • நகரம்89.6 sq mi (232.1 km2)
 • நிலம்48.4 sq mi (125.4 km2)
 • நீர்41.2 sq mi (106.7 km2)
 • Metro4,511.5 sq mi (11,684.7 km2)
ஏற்றம்141 ft (43 m)
மக்கள்தொகை (2006)
 • நகரம்5,90,763
 • அடர்த்தி12,327/sq mi (4,815/km2)
 • நகர்ப்புறம்43,13,000
 • பெருநகர்44,55,217
நேர வலயம்Eastern (ஒசநே-5)
 • கோடை (பசேநே)Eastern (ஒசநே-4)
தொலைபேசி குறியீடு617 / 857
FIPS25-07000
GNIS feature ID0617565
இணையதளம்www.cityofboston.gov

ஐக்கிய அமெரிக்காவின் பழமையான நகரங்களில் ஒன்றான பாஸ்டன், சாமுத் மூவலந்தீவில் 1630இல் இங்கிலாந்திலிருந்து புலம்பெயர்ந்த தூய்மையாளர்களால் நிறுவப்பட்டது. பாஸ்டன் படுகொலை, பாஸ்டன் தேநீர் கொண்டாட்டம், பங்கர் ஹில் சண்டை, பாசுடன் முற்றுகை போன்ற அமெரிக்கப் புரட்சியின் பல முக்கிய நிகழ்வுகள் இங்கு நடந்தேறியுள்ளன. பெரிய பிரித்தானியாவிடமிருந்து அமெரிக்கா விடுதலை பெற்ற பிறகும் இந்த நகரம் முதன்மைத் துறைமுகமாகவும் தயாரிப்பு மையமாகவும் விளங்கியது; கல்வி மற்றும் பண்பாட்டு மையமாகவும் விளங்கி வருகின்றது. கடலடி நிலமீட்பு மற்றும் நகராட்சி ஒன்றிணைப்பு மூலமாக பாஸ்டன் சாமுத் மூவலந்தீவிற்கப்பாலும் விரிவடைந்து வந்துள்ளது. வரலாற்றுச் சிறப்பு மிக்க நகரமாக சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்து வருகின்றது; பானுவல் கூடம் மட்டுமே ஆண்டுக்கு 20 மில்லியனுக்கும் கூடுதலானப் பயணிகளை ஈர்க்கின்றது. பாஸ்டனில் தான் ஐக்கிய அமெரிக்காவின் முதல் பொதுப் பள்ளி, பாஸ்டன் இலத்தீன் பள்ளி (1635), முதல் சுரங்க இரயில்பாதை அமைப்பு (1897), மற்றும் முதல் பொதுப் பூங்கா (1634) அமைந்தன.

இப்பகுதியிலுள்ள பல கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களும் பாஸ்டனை உயர்கல்விக்கான பன்னாட்டு மையமாக ஆக்கியுள்ளன. சட்டம், மருத்துவம், பொறியியல், மற்றும் வணிகவியல் கல்விக்கு முதன்மை சேரிடமாக பாஸ்டன் விளங்குகின்றது. புத்தாக்கத்திற்கும் தொழில் முனைவிற்கும் பாஸ்டன் உலகிற்கு முன்னோடியாக விளங்குகின்றது. பாஸ்டனின் பொருளாதாரத்தில் நிதியம், தொழில்முறை வணிக சேவைகள், உயிரித் தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்பம், மற்றும் அரசு செயல்பாடுகள் முதன்மையாக உள்ளன. இங்குள்ள குடும்பங்கள் நாட்டிலேயே மிகுந்த ஈகைக்குணம் கொண்டவர்களாக அறியப்படுகின்றனர்; பேண்தகுநிலை மற்றும் முதலீட்டில் இங்குள்ள நிறுவனங்கள் முன்னிலை வகிக்கின்றன. உலகின் வாழத்தகுந்த நகரப் பட்டியல்களில் முதலிடங்களைப் பெற்றபோதும் ஐக்கிய அமெரிக்காவிலேயே மிகுந்த வாழ்நிலைச் செலவு கொண்ட நகரமாக பாஸ்டன் விளங்குகின்றது.

மேற்கோள்கள்

Tags:

ஐக்கிய அமெரிக்க நாடுகள்ஐக்கிய அமெரிக்க மாநிலத் தலைநகரங்கள்நியூ இங்கிலாந்துபெருநகர பாஸ்டன்பொதுநலவாயம் (ஐக்கிய அமெரிக்கா)மஸ்ஸாசூசெட்ஸ்மாசச்சூசெட்ஸ்

🔥 Trending searches on Wiki தமிழ்:

பெண் தமிழ்ப் பெயர்கள்சிங்கம் (திரைப்படம்)சீறாப் புராணம்தமிழ் இலக்கியப் பட்டியல்இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றம்காவிரி ஆறுஐங்குறுநூறு - மருதம்ஐஞ்சிறு காப்பியங்கள்தொல்லியல்பஞ்சபூதத் தலங்கள்இரைச்சல்நிதிச் சேவைகள்பத்து தலஓடி விளையாடு பாப்பா (பாரதியார் பாடல்)வௌவால்சிவனின் 108 திருநாமங்கள்மீராபாய்திருக்குறள்ஏப்ரல் 25ருதுராஜ் கெயிக்வாட்மரகத நாணயம் (திரைப்படம்)எட்டுத்தொகைசிற்பி பாலசுப்ரமணியம்திராவிட மொழிக் குடும்பம்பெருமாள் திருமொழிசெவ்வாய் (கோள்)குறை ஒன்றும் இல்லை (பாடல்)முடியரசன்பட்டினப் பாலைதாஜ் மகால்தட்சிணாமூர்த்தி (சிவ வடிவம்)சுந்தர காண்டம்செப்புவிசாகம் (பஞ்சாங்கம்)இரண்டாம் உலகப் போர்திரு. வி. கலியாணசுந்தரனார்ஜோக்கர்ஈரோடு தமிழன்பன்அழகர் ஆற்றில் இறங்குதல் (விழா)கருப்பசாமிதாய்ப்பாலூட்டல்வேற்றுமையுருபுதமிழ்கண்ணனின் 108 பெயர் பட்டியல்தமிழ் இலக்கணம்பீப்பாய்கஞ்சாமுத்துராமலிங்கத் தேவர்கருப்பை நார்த்திசுக் கட்டிசங்க இலக்கியம்வ. உ. சிதம்பரம்பிள்ளைஅறிவியல்சூல்பை நீர்க்கட்டிவிஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல்இந்தியன் (1996 திரைப்படம்)ஆண்டு வட்டம் அட்டவணைஇயற்கை வளம்உலா (இலக்கியம்)தமிழ் மன்னர்களின் பட்டியல்மகாபாரதம்அயோத்தி இராமர் கோயில்மத கஜ ராஜாபாரதிதாசன்பறவைஔவையார்புதிய ஏழு உலக அதிசயங்கள்கொடைக்கானல்சங்கம் (முச்சங்கம்)ஸ்ரீஉணவுநற்கருணைசுற்றுச்சூழல் பாதுகாப்புவெற்றிக் கொடி கட்டுஅகநானூறுதமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்வைகைமயக்கம் என்ன🡆 More