பொறியியல்

பொறியியல் (Engineering) என்பது கட்டமைப்புகள், எந்திரங்கள், பொருட்கள், ஏற்பாடுகள் (கருவிகள்), அமைப்புகள், செயல்முறைகள், நிறுவனங்கள் ஆகியவற்றின் புத்தாக்கம், வடிவமைப்பு, கட்டுமானம், இயக்குதலும் பேணுதலும் சார்ந்த செயல்பாடுகளுக்கு அறிவியல், கணிதவியல் முறைகள், பட்டறிவு சான்று ஆகியவற்றின் முறையியலைப் பயன்படுத்தும் ஆக்கநிலைச் செயல்பாடாகும்.

பொறியியல் துறை அல்லது திணைக்களம் அகல்விரிவான பொறியியல் துறைகளைக் கொண்ட தொகுப்பாகும். இவற்றின் ஒவ்வொரு பொறியற் புலம் தனக்கே உரிய களங்களில் பொறியியல் சார்ந்த் மேற்கூறிய முறையியலைப் பயன்படுத்திச் செயல்படுகின்றன.

பொறியியல்
தொழிற்புரட்சிக்குப் பேருந்துதல் அளித்த நீராவிப் பொறி, புத்தியற் கால வரலாற்றில் பொறியியலின் முதன்மையை நிறுவியது. இந்த நீராவிப் பொறி மாட்ரிடு தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

பொறியியல் எனும் சொல், இலத்தீன மொழிச் சொல்லான ingenium என்ற வேர்ச்சொல்லில் (கிபி1250) இருந்து வந்தது. இதன் பொருள் " தந்திரம் அல்லது மதிநுட்பம்" என்பதாகும். மேலும் ingeniare எனும் இலத்தின மொழி வினைச்சொல்லின் பொருள் "புனை(வி), ஏற்படுத்து(வி)" என்பதாகும்.


எனவே, பொறியியல் அறிவியல், கணிதவியல்]] கோட்பாடுகளைத் திறமுடன் பயன்படுத்தி தக்க முறையில் இயற்கை வளங்களை மனித பயன்பாட்டிற்காக மாற்றும் தொழிற்பாட்டுக் கலையாகும். இது இயற்பியல், கணிதம், வேதியியல், உயிரியல் ஆகிய அறிவியற்துறைகளையும், அவற்றின் சிறப்புத் துறைகளான பொருள் அறிவியல்(materials science), திண்ம / பாய்ம இயக்கவியல் (Solid/Fluid Mechanics), வெப்ப இயக்கவியல் (Thermodynamics) போன்றவற்றை அடிப்படையாகக் கொள்கிறது. இத்துறையில் பயிற்சிபெற்றவர்கள் பொறியாளர்கள் எனப்படுவர். பொறியாளர்கள் ஆற்றல், பொருட்கள் எனும் இருவகை இயற்கை வளங்களைப் பயன்படுத்துகின்றனர்.

பொருட்களின் பயன்பாடு அவற்றின் தாங்கு திறன், முறைப்படுத்த உகந்ததாயிருத்தல், எடை குறைவாயிருத்தல், நெடுங்காலம் சிதையாதிருத்தல், கடத்து திறன், வேதியியல், ஒலியியல், மின்னியல் பண்புகள் போன்ற பற்பல தன்மைகளைப் பொருத்து இருக்கும். ஆற்றலுக்கான முக்கிய மூலங்கள், தொல்படிவ எரிபொருட்கள்(Fossil Fuels) (பெட்ரோலியம், நிலக்கரி, இயற்கை வளிமம், காற்று, சூரியன், நீர்வீழ்ச்சி, அணுக்கருப் பிளவு போன்றவை.

வரையறை

பொறியியல், தொழில்நுட்ப ஒப்புதல் வழங்கும் வாரியத்துக்கு) (ABET) முன்பு அப்பணியை நிறைவேற்றிய அமெரிக்கத் தொழில்முறை வளர்ச்சி மன்றம் (ECPD) "பொறியியல்" புலத்தைப் பின்வருமாறு வரையறுக்கிறது:

பொறியியல் என்பது கட்டமைப்புகளையும் எந்திரங்களையும் ஆய்கருவிகளையும் பொருட்செயல்முறைகளையும் தனியாகவோ கூட்டாகவோ அறிவியல் நெறிமுறைகளை ஆக்கமிகப் பயன்படுத்தி, வடிவமைத்து, உருவாக்குதலாகும்; இதில் வடிவமைப்பின்படி அவற்றைக் கட்டியமைத்து இயக்குதலும், குறிப்பிட்ட இயக்க நிலைமைகளில் அவற்றின் நடத்தையை முன்கணித்தலும் அடங்கும்; இந்த அனைத்துமே பொருட்களுக்கும் வாழ்க்கைக்கும் பாதுகாப்பு அளிப்பதோடு சிக்கனத்தோடும் கடைபிடிக்கப்பட வேண்டும்.


வரலாறு

பொறியியல் 
1968 இல் அன்றையமுன்னோடிப் படைசார் பொறியாளராகிய வாவுபான் வடிமைத்த Citadel of Lille- இன் உருவத் தரைப்படம்.

பொறியியல் ஆப்பு, நெம்பு, ஆழி (சக்கரம்) கப்பி, உருளை போன்ற புதுமைபுனைவுகளை இயற்றிய பண்டைய காலத்தில் இருந்தே நிலவி வருகிறது.

பொறியியல் என்ற சொல், பொறியாளர் எனும் சொல்லில் இருந்து 1390 முதலேவழக்கில் உள்ளது. அப்போது பொறியாளர் என்பது ஒரு பொறியை இயக்குபவரையும் படைசார் பொறிகளைக் கட்டியமைப்பவரையும் குறித்தது. பொறி எனும் சொல் அப்போது படைசார் எந்திரத்தைக் குறித்தது அதாவது, போர் செய்ய பயன்படுத்திய எந்திரக் கருவியைக் குறித்தது( எடுத்துகாட்டாக, கவணைக் குறித்தது).

பொறியியல் எனும் சொல், இலத்தீன மொழிச் சொல்லான ingenium என்ற வேர்ச்சொல்லில் (கிபி1250) இருந்து வந்தது. இதன் பொருள் " இயற்பண்பு, அல்லது மதிநுட்பம், உளத்திறல்" என்பதாகும். எனவே பொறியியல் நுட்பமான (தந்திரமான) ஆக்கம் ஆகும்.

பொறியியல் என்ற தமிழ்ச்சொல், "Engineering" என்பதற்கு இணையாக பயன்படுத்தும் ஒன்றாகும். பொறி (கருவிகள் ஆக்குவது, இயங்குவது பற்றியது)+அறிவியல் = பொறியியல். பொறியியல் என்னும் சொல் தமிழில் பயன்பாட்டுக்கு வருமுன்னர் யந்திரவியல் (வடமொழி), இயந்திரவியல், எந்திரவியல் போன்ற சொற்களும் பயின்று வந்துள்ளன. மிகவும் பிற்காலத்தில் அறிமுகமான "Engineering" என்ற ஆங்கிலச் சொல் "Engineer" என்பதிலிருந்தும், இது பொறி என்று பொருள்படும் "Engine" என்னும் சொல்லிலிருந்து உருவானதே. இதன் மூலம் இலத்தீன் மொழிச் சொல்லான "ingenium" என்பதாகும். "Engineer" என்பதைக் குறிக்கும் engineour என்னும் நடு ஆங்கிலச் சொல் 14 ஆவது நூற்றாண்டில் இருந்து ஆங்கில-பிரெஞ்ச் மொழிகளில் பயின்று வந்துள்ளது

பிற்காலத்தில் பாலங்கள், கட்டிடங்கள் போன்ற கட்டமைப்புகளை வடிவமைக்க தொடங்கி முதிர்நிலைத் தொழில்நுட்பமாக வளர்ந்ததும் அதைக் குறிக்க குடிசார் பொறியியல் எனும் சொல், படைசார் பொறியியல் புலத்தில் இருந்து வேறுபடுத்திக் காட்ட, உருவாகியது இது படைசாராத திட்டங்களையும் படைசார்ந்த கட்டகப் பணிகளையும் குறிக்கலானது.

தொல்பழங் காலம்

பொறியியல் 
உரோமப் பேரரசின் கீழ்வரும் மாநகரங்களுக்கும் நகரங்களுக்கும் தூய நன்னீர் வழங்க பண்டைய உரோமானியர் கட்டியமைத்த நீர்க்குழாய்கள்.

கிரீசில் உள்ள பார்த்தெனான், ஏதென்சு நகர அக்ரோபோலிசு, உரோமர்களின் நீர்க்குழாய்கள், கொலோசியம், தியொத்திகுவாகான், பாபிலோனின் தொங்கு தோட்டம், எகுபதியில் உள்ள அலெக்சாந்திரியா நகர பரோவாக்களின் பிரமிடுகள், மாயன் நாகரிகப் பிரமிடுகள், சீனப் பெருஞ்சுவர், தஞ்சாவூர் பெருவுடையார் கோயில் போன்ற அமைப்புக்கள் அக்காலத்து குடிசார் மற்றும் படைசார் பொறியாளர்களின் திறமைகளுக்குச் சான்றாக அமைகின்றன.

மிகப் பழைய காலத்துப் பெயர் குறிப்பிட்டு அறியப்படுகின்ற பொறியாளர், பாரோவாவின் அலுவலரான இம்கோதெப் (Imhotep) என்பவராகும்.< ref name="ECPD Definition on Britannica"/> பாரோவா தியோசர் அலுவலரான இவரே எகிப்திலுள்ள சக்காரா என்னுமிடத்தில் உள்ள பாரோவா தியோசரின் பிரமிடுவான படிப் பிரமிடுவை வடிவமைத்துக் கட்டியிருக்கலாம் எனக் கருதப்படுகின்றது. இதன் காலம் கிமு 2630 - கிமு 2611 ஆகும். உலகக் கட்டிடக்கலையில் முதலில் அறியப்பட்ட தூண்களை வடிவமைத்தவரும் இவராகவே இருக்கக்கூடும்.

பண்டைய கிரேக்கம் குடிசார், படைசார் பொறியியல் புலங்களில் எந்திரங்களை உருவாக்கியது; முதல் எந்திரவகை ஒப்புமைக் கணினியை உருவாக்கியது; ஆர்க்கிமெடீசின் கண்டுபிடிப்புகளும் புதுமைபுனைவுகளும் மிக முந்திய எந்திரப் பொறியியல் எடுத்துகாட்டுகளாகும். சில ஆர்க்கிமெடீசின் புதுமைபுனைவுகளுக்கும் ஒப்புமை எந்திரக் கணினிக்கும் வேறுபாட்டுப் பல்லிணைகள் அறிவும் புறத்துருளும் பல்லிணைகளின் அறிவும் அதாவது தொழிற்புரட்சியின் பல்லிணைத்தொடர்களை வடிவமைத்த இரண்டு எந்திரம் சார்ந்த கோட்பாடுகள் தேவைபட்டிருக்க வேண்டும். இக்கோட்படுகள் இன்றும் தானூர்திப் பொறியியலிலும் எந்திரன்களின் வடிவமைப்பிலும் பயன்படுகின்றன.

பண்டைய கிரேக்க, சீன, உரோம, அங்கேரியப் படைகள் கிமு நான்காம் நூற்றாண்டில் கிரேக்கர்கள் வடிவமைத்த கவண், எறிபடை போன்ற படைசார் எந்திரங்களையும் புதுமைபுனைவுகளையும் பயன்படுத்தியுள்ளனர். இடைக்காலத்தில், கல் ஏவுபடை உருவாக்கப்பட்டது.

இடைக்காலம்

அல்-யசாரி என்னும் ஈராக்கியர் ஒருவர், 1174 க்கும் 1200க்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் துருக்கிய ஆர்த்துஜிட் வம்சத்தைச் சேர்ந்த அரசர் ஒருவரது மாளிகைகளில் நீருயர்த்துவதற்கு தற்கால எக்கிகளைப் போன்ற எந்திரங்களை உருவாக்கியதாகத் தெரிகிறது. இரட்டைச் செயற்பாட்டு முன்பின்னியக்க (reciprocating motion) உலக்கை எக்கிகள் பிற்காலப் பொறியியல் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக அமைந்தன. ஏனெனில், இதுவே இணைதண்டையும் (connecting rod), வணரித்தண்டையும் (Crankshaft) உள்ளடக்கி, சுழல் இயக்கத்தை முன்பின் இயக்கமாக மாற்றும் வல்லமை கொண்ட முதல் எந்திரமாகும். இன்றும் கூடச் சில விளையாட்டுப் பொருட்களில், அல் யசாரியின் கூட்டுப்பூட்டு (combination lock) தன்னியக்கப் பொறிகள் ஆகியவற்றில் காணப்படும் பல்சட்டம் – நெம்புருள் (cam-lever) இயங்குமுறை பயன்படுத்தப்பட்டு வருவதைக் காணலாம். ஐம்பதுக்கு மேற்பட்ட பொறியியல் கருவிகளைக் கண்டுபிடித்த அல்-யசாரி, துண்டுப் பல்லிணைகள் (segmental gears), பொறியியல் கட்டுப்பாடுகள், தப்பிப்புப் (escapement) இயங்குமுறைகள், மணிக்கூடு, வடிவமைப்பு, பொருள் செயல்முறைகளுக்கான நடைப்படிகள் போன்றவற்றை மேம்படுத்திப் புதுமைகளையும் புகுத்தியுள்ளார்.

மறுமலர்ச்சிக் காலம்

உலகின் முதலாவது மின் பொறியியலாளராகக் கருதப்படுபவர் வில்லியம் கில்பர்ட் என்பவராவார். 1600 ஆம் ஆண்டில் காந்தம் (De Magnete) என்னும் நூலை எழுதியுள்ள இவரே முதன் முதலில் "electricity" (மின்சாரம்) என்னும் சொல்லைப் பயன்படுத்தியவராவார்.

முதல் நீராவிப் பொறியை எந்திரப் பொறியாளரான தாமஸ் சவேரி (Thomas Savery) 1698 ஆம் ஆண்டில் உருவாக்கினார். ]]. இதன் உருவாக்கம் பிற்காலத்தில் தொழிற்புரட்சி ஏற்படுவதற்குக் காரணமாயிற்று. இது பெருந்திரளாக்கத்தின் (mass production) தொடக்கமாகவும் அமைந்தது.

18 ஆம் நூற்றாண்டில் பொறியியல் ஒரு தொழில்முறையாக வளர்ச்சியடைந்ததுடன், பொறியியல் என்னும் சொல், கணிதம் மற்றும் அறிவியலைப் பயன்படுத்தும் துறைகளுக்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்டது. அத்துடன், படைத்துறைப் பொறியியல், குடிசார் பொறியியல் என்பவற்றுக்குப் புறம்பாக எந்திரக் கலைகள் எனப்பட்ட துறைகளும் பொறியியலுக்குள் சேர்க்கப்பட்டன.

தற்காலம்

பொறியியல் 
பன்னாட்டு விண்வெளி நிலையம் பல துறைகளுக்கு புத்தியற் காலப் பொறியியல் விடுத்த அறைகூவலாக விளங்கியது.
பொறியியல் 
பன்னாட்டு விண்வெளி நிலையம் பல துறைகளுக்கு புத்தியற் காலப் பொறியியல் விடுத்த அறைகூவலாக விளங்கியது.

தாமசு சவேரி, இசுகாட்டியப் பொறியாளரான ஜேம்ஸ் வாட் ஆகியோரின் புதுமைபுனைவுகள் தற்கால இயந்திரப் பொறியியல் துறையின் தோற்றத்துக்குக் காரணமாகின. சிறப்புத் தன்மைகளைக் கொண்ட இயந்திரங்களினதும், அவற்றைப் பேணுவதற்குத் தேவையான கருவிகளினதும் வளர்ச்சி, இயந்திரப் பொறியியல், அதன் பிறப்பிடமான பிரித்தானியாவிலும், உலகின் பிற பகுதிகளிலும் வேகமாக வளர்வதற்குத் துணை செய்தன.

பொறியியல் 
நாசாவின் செவ்வாய் வட்டணையில் சுற்றும் விண்கலம், பீனிக்சு செவ்வாய் தரையிறங்கி ஆகியவற்றை உருவாக்கும் கட்டமைப்புப் பொறியாளர்கள்

ஐக்கிய அமெரிக்காவின் 1850 ஆம் ஆண்டைய மக்கள்தொகைக் கணக்கின்படி, 2000 பொறியாளர்கள் அப்போது இருந்துள்ளனர். அமெரிக்கவில் 1865 ஆம் ஆண்டுக்கு முன்பு 50 பொறியியல் பட்டதாரிகளே இருந்தனர். இயந்திரப் பொறியாளர் எண்ணிக்கை 1870 இல் வெறும் பன்னிரண்டாகவே இருந்தது. இந்த எண்ணிக்கை 1875 இல் 43 ஆக உயர்ந்தது. குடிசார், சுரங்க, இயந்திர, மின் பொறியியல் ஆகிய நான்கு பொறியியல் துறைகளில் அமெரிக்கவில் 1890 இல் 6,000 பொறியாளர்கள் இருந்துள்ளனர்.

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் 1875 வரை பயன்முறை இயங்கமைப்புகளுக்கோ பயன்முறை இயக்கவியலுக்கோ தனித்துறை கிடையாது. ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்தில் 1907 வரையில் பொறியியலுக்கான துறையே உருவாக்கப்படவில்லை. இதற்கு முந்தியே செருமனி தொழில்நுட்பப் பல்கலைக்கழகங்களை நிறுவியது.


அலெசாந்திரோ வோல்ட்டா, மைக்கேல் ஃபாரடே, ஜார்ஜ் ஓம் ஆகியோர் 1800 களில் நிகழ்த்திய செய்முறைகளும், தொலைவரி 1816 இல் உருவானதும் மின்னோடி 1872 இல் உருவானதும் மின்பொறியியல் துறையைத் தொடக்கி வைத்தன. இதேபோல, 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் ஜேம்ஸ் மாக்சுவெல், என்றிக் எர்ட்சு ஆகியோருடைய ஆய்வுகள், மின்னன் இயலின் தொடக்கமாக விளங்கின. தொடர்ந்து வந்த காலங்களில் வெற்றிடக் குழாய், திரிதடையம் (transistor) போன்றவற்றின் உருவாக்கம் மின் பொறியாளர், மின்னணுப் பொறியாளர் ஆகியோரின் எண்ணிக்கையைக் கூட்டியது. அக்காலத்தில் இவர்கள் பிற துறைகளைச் சேர்ந்த பொறியாளரைவிட அதிகமாக இருந்ததாகக் கூறப்படுகின்றது. .

வேதிப் பொறியியல் துறையும், 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில்தொழிற்புரட்சிக் காலத்தின்போதே உருவானது. தொழிலக அளவிலான பேரளவு வேதிபொருள் ஆக்கங்களுக்குப் புதிய பொருட்களும், செயல்முறைகளும் தேவைப்பட்டன. 1880 ஆம் ஆண்டளவில், வேதிப்பொருட்களுக்கு இருந்த தேவைகள் அதிகமாக இருந்ததால், பாரிய எந்திரங்களைப் பயன்படுத்தி வேதிப்பொருட்களைப் புதிய தொழிலக அணிகளில் பேரளவில் உருவாக்குவதற்கான புதிய தொழில்முறைப் பொறியியல் புலம் தொடங்கியது. . வேதிப் பொறியாளரின் பணி இத்தகைய எந்திரத் தொகுதிகளையும், செயல்முறைகளையும் வடிவமைப்பது ஆகும். .

பொறியியல் 
பால்கிர்க்கு ஆழி (சக்கரம்)

, இசுகாட்லாந்து]]

வானூர்திப் பொறியியல், வானூர்திகளை வடிவமைத்தல், பேணுதல் தொடர்பான துறை. அதேவேளை வான் வெளிப் பொறியியல் என்பது வானூர்திப் பொறியியலுக்கும் அப்பால் விண்கலங்களின் வடிவமைப்புக்களையும் உட்படுத்திய விரிவான துறையாகும். இத்துறைகளுடன் தொடர்புடையனவாகக் கருதப்படக்கூடிய, சர் ஜார்ஜ் காலே என்பவரின் பணிகள் 18 ஆம் நூற்றாண்டின் இறுதிக் காலத்தைச் சேர்ந்தனவாயினும், இத்துறைகளின் தோற்றம் 19 ஆம் நூற்றாண்டிலிருந்து 20 ஆம் நூற்றாண்டுக்கு மாறுகின்ற காலப்பகுதியைச் சேர்ந்தது என்பதே பொதுக் கருத்து. இத் துறைகள் தொடர்பான பழங்காலத்து அறிவு, பட்டறிவு வாயிலானது என்பதுடன், சில கருத்துருக்களும், திறமைகளும் பிற பொறியியல் துறைகள் வழியாகப் பெறப்பட்டனவுமாகும். .

பொறியியலில் (பயன்முறை அறிவியல், பொறியியல் துறையில்) முதல் முனைவர் பட்டம் ஐக்கிய அமெரிக்காவில் 1863 இல் யேல் பல்கலைக்கழகத்தால் வழங்கப்பட்டது; இது ஐக்கிய அமஎரிக்காவில் அறிவியலில் தரப்பட்ட இரண்டாம் முனைவர் பட்டமும் ஆகும்.

உரைட் உடன்பிறப்புகள் வெற்றிகரமாக வானில் பறந்து காட்டிய பத்தாண்டுகளுக்குள், வானூர்திப் பொறியியல் வேகமாக வளர்ந்து, முதல் உலகப் போருக்கான படைசார் வானூர்திகளை வடிவமைத்து தந்தது. இதற்குள் கோட்பாட்டு இயற்பியலையும் செய்முறைகளையும் இணைத்து, தொடர்ந்து நடத்திய ஆராய்ச்சிகள் இப்புலத்துக்கான அறிவியல் அடித்தளத்தை உருவாக்கின.

கணினித் தொழில்நுட்பத்தின் எழுச்சி 1990 இல் நிகழ்ந்ததும், முதல் தேடல்பொறி கணினிப் பொறியாளர் ஆலன் எந்தாகேவால் உருவாக்கப்பட்டது.

பொறியியலின் முதன்மைக் கிளைப்பிரிவுகள்

பொறியியல் 
கூவர் அணை

பொறியியல் அகல்விரிவான புலம் என்பதால் அதைப் பல உட்புலங்களாகப் பிரிக்கலாம். ஒரு பொறியாளர் ஒரு குறிப்பிட்ட புலத்தில் பயிற்சி பெற்றாலும் அவர் பட்டறிவு வாயிலாக பலபுல வல்லுனர் ஆகலாம். பொறியியல் வழக்கமாக நான்கு பெரும்பிரிவுகளாகப் பிரிக்கப்படுகிறது: அவை வேதிப் பொறியியல், குடிசார் பொறியியல், மின்பொறியியல், இயந்திரப் பொறியியல் என்பனவாகும்.

வேதிப் பொறியியல்

வேதிப் பொறியியல் என்பது இயற்பியல், வேதியியல், உயிரியல், பொறியியல் நெறிமுறைகள் ஆகியவற்றைப் பயன்படுத்தி, வணிக அளவில் வேதியியல் செயல்முறைகளை வடிவமைத்து வணிக வேதிப் பொருட்களையும் சிறப்பு வேதிப் பொருட்களையும் செய்தலாகும்; மேலும் இப்பொறியியல் எண்ணெய்த் (பெட்ரோல்) தூய்மிப்பு, நுண்ணிலைப் புனைவு, நொதித்தல், உயிர் மூலக்கூறு ஆக்கம் ஆகிய பணிகள் சார்ந்த வேதிச் செயல்முறைகளையும் வடிவமைக்கவும் நிகழ்த்தவும் பொறுப்பேற்கிறது.

குடிசார் பொறியியல்

மின்பொறியியல்

இயந்திரப் பொறியியல்


பொறியியல் வழிமுறை

பொறியியலாளர்கள் இயற்பியல் மற்றும் கணித அறிவியல்களை பிரச்சினைகளுக்கு பொருத்தமான தீர்வுகளை காண்பதற்கு அல்லது நிலையை மேம்படுத்துவதற்கு பிரயோகிக்கிறார்கள். முன்னெப்போதையும் விட அதிகமாக, தற்போது பொறியியலாளர்கள் அவர்களுடைய வடிவமைப்பு திட்டங்களுக்கு தேவையான அறிவியல் அறிவை பெறவேண்டியுள்ளது. இதன் விளைவாக அவர்களுடைய வாழ்க்கை முழுவதும் புதிய விடயங்களை கற்றுக் கொண்டிருக்க வேண்டும்.

பல தெரிவுகள் இருக்கும் போது பொறியியலாளர்கள் பல்வேறு வடிவமைப்புத் தேர்வுகளில் அவற்றின் தரத்தை ஆழ்ந்து எண்ணிப்பார்த்து தேவைக்கு மிகப் பொருத்தமான தீர்வை தெரிவு செய்வார்கள். வெற்றிகரமான விளைவை பெறுவதற்கு வடிவமைப்பிலுள்ள தடைகளை அடையளம் கண்டு, புரிந்து கொண்டு விளக்குவது பொறியியலாளரின் முக்கியமான மற்றும் தனிப்பட்ட பணியாகும். ஏனெனில், பொதுவாக ஒரு தயாரிப்பு தொழிநுட்பரீதியாக வெற்றிகரமானதாக இருப்பதோடு மேலும் பல தேவைகளை பூர்த்தி செய்தாக வேண்டும்.

கிடைக்கின்ற வளங்கள், பௌதீக, கற்பனையான அல்லது தொழிநுட்ப குறைபாடுகள், எதிர்காலத்தில் திருத்தங்கள் மற்றும் சேர்த்தல்களுக்கான நெகிழ்வுத்தன்மை இன்னும் ஏனைய காரணிகள்: அதாவது செலவு, பாதுகாப்பு, சந்தைப்படுத்தல், உற்பத்தி மற்றும் சேவை வசதிகளுக்கான தேவைகள் போன்றவற்றுக்கு கட்டுப்பாடுகள் ஏற்படுத்தப்படலாம். பொறியியலாளர்கள் இவ்வாறான கட்டுப்பாடுகளை புரிந்து கொள்வதன் மூலம் எவ்வாறான பொருட்களின் உற்பத்தி பொருத்தமானது மற்றும் எவ்வாறான இயக்க அமைப்பு பொருத்தமானது என்பது தொடர்பான வரம்புகளை நிர்ணயிக்கிறார்கள்.

பொறியியலாளரின் வேலை

ஒரு பொறியாளர் எடுத்துக்கொண்ட விடயம் தொடர்பிலான வரையறைகளை அடையாளங்கண்டு அவற்றைப் புரிந்து கொண்டு வடிவமைப்புச் செய்யவேண்டும். இங்கே வரையறைகள் என்பது, கிடைக்கக்கூடிய வளங்கள்; பௌதீக அல்லது தொழில்நுட்பம்சார் வரையறைகள்; எதிர்கால மாற்றங்களுக்கும், விரிவாக்கத்துக்கும் ஏற்றதாயிருத்தல்; செலவு; உற்பத்தி செய்யக்கூடிய தன்மை; பேணக்கூடிய தன்மை; சந்தைப்படுத்தல்; அழகியல், சமூகம் மற்றும் நெறிமுறைகள் சார்ந்த விடயங்களை உள்ளடக்கியது. Engineering is therefore a contingent enterprise influenced by many considerations.

முக்கிய பொறியியல் படைப்புகள்

அமெரிக்கத் தேசியப் பொறியியல் கல்விக்கழகத்தின்படி பின்வருவன இருபது 20 நூற்றாண்டின் முதன்மையான பொறியியல் படைப்புகள் ஆகும். [1] பரணிடப்பட்டது 2007-03-08 at the வந்தவழி இயந்திரம் அனேகமானவையை கண்டுபிடிக்க அமெரிக்காவே முக்கிய பங்காற்றியுள்ளது.

மேலே குறிப்பிடவற்றுள் கட்டிடத் தொழில்நுட்பம், துப்புரவு அமைப்பு(Sanitation System), படைசார் தொழில்நுட்பங்கள் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பொறியியலும் சமூகமும்

'பொறியியல் வாழ்க்கையில் தப்பிபிழைத்து வாழுவதற்கான உந்தலை மீறியது. புதிய சாத்தியக்கூறுகளை அது சிந்திக்கிறது. கலைகளைப் போல பொறியியலில் அழகு உண்டு, அளவுகளின் மதிப்பீடு உண்டு. பொறியிலாளர் இயற்கையைப் போட்டிக்கு அழைக்கின்றார்கள். சூறாவளியை எதிர்க்கின்றனர், நில நடுக்கம், வெள்ளப் பெருக்கு என இயற்கையின் மூர்க்கமான ஆற்றல்களோடு பொறியலாளர் போட்டிபோடுகின்றார்கள். அதேவேளை, இயற்கையுடன் இயைந்து செயற்படுகிறார்கள். மண்ணை, கனிமத்தை, வெவேறு தனிமங்களை அவர்கள் விளங்கிகொள்கிறார்கள். அறிவியலையும் கணிதத்தையும் அறிந்து பயன்படுத்திக்கொள்கிறார்கள். மனித நல்வாழ்க்கைக்கு பொறியிலாளரின் பங்களிப்பு அளப்பரியது.'Samuel C. Florman. (1987). The Civilized Engineer. New York: St. Martin's Press.

தமிழர்களும் பொறியியலும்

தமிழர்கள் பண்டைய காலத்திலிருந்தே பொறியியல் துறைகளில் கோலேச்சியே வந்துள்ளனர், கட்டுமானப் பொறியியல் துறைகளின் சான்றாக கல்லணை, தஞ்சைப் பெரியகோவில் ஆகியன இன்றும் நிலைத்து நிற்கின்றன.

இவற்றையும் பார்க்க

மேற்கோள்கள்

மேலும் படிக்க

வெளி இணைப்புகள்

நூல்தொகை

  • Nigel Cross. Engineering Design Methods: Strategies for Product Design. 2nd ed. Toronto: John Wiley & Sons, 1994.
  • Martyn S. Ray. Elements of Engineering Design. Toronto: Prentice Hall, 1985.
  • John W. Priest. Engineering Design for Producibility and Reliability. New York: Marcel Dekker, 1988.

Tags:

பொறியியல் வரையறைபொறியியல் வரலாறுபொறியியல் பொறியியலின் முதன்மைக் கிளைப்பிரிவுகள்பொறியியல் வழிமுறைபொறியியல் பொறியியலாளரின் வேலைபொறியியல் முக்கிய படைப்புகள்பொறியியல் பொறியியலும் சமூகமும்பொறியியல் தமிழர்களும் பொறியியலும்பொறியியல் இவற்றையும் பார்க்கபொறியியல் மேற்கோள்கள்பொறியியல் மேலும் படிக்கபொறியியல் வெளி இணைப்புகள்பொறியியல் நூல்தொகைபொறியியல்அமைப்புஅறிவியல்எந்திரம்கட்டமைப்புகட்டுமானம்கணிதவியல்நிறுவனம்புத்தாக்கம்பொருள்பொறியியல் துறைகளின் பட்டியல்வடிவமைப்பு

🔥 Trending searches on Wiki தமிழ்:

தென்னிந்தியாபாரிஅடி (யாப்பிலக்கணம், சீர் எண்ணிக்கை)ஜல் சக்தி அமைச்சகம்மலையாளம்யாதவர்69சமயபுரம் மாரியம்மன் கோயில்பூனைபி. காளியம்மாள்ஸ்ரீலீலாஅசுவத்தாமன்மொழிபெயர்ப்புஇசைக்கருவிசத்திய சாயி பாபாஞானபீட விருதுசிங்கம்கீர்த்தி சுரேஷ்செவ்வாய் (கோள்)சிவனின் 108 திருநாமங்கள்இயேசுதமிழ் இலக்கியப் பட்டியல்பஞ்சதந்திரம் (திரைப்படம்)புறப்பொருள்நாளந்தா பல்கலைக்கழகம்பாவலரேறு பெருஞ்சித்திரனார்தூது (பாட்டியல்)குணங்குடி மஸ்தான் சாகிபுஅயோத்தி தாசர்தமிழ்த் தேசியம்மொரோக்கோசேரர்வெண்பாகாற்றுஉவமையணிதமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்சங்க காலம்அக்பர்இராவணன்தமிழ் எழுத்து முறைமுதலாம் உலகப் போர்தங்கராசு நடராசன்கண்ணகிஇந்திய ஐந்தாண்டு திட்டங்கள்பள்ளர்ஆப்பிள்ஐங்குறுநூறுவிளம்பரம்ஔவையார்கார்லசு புச்திமோன்கபிலர் (சங்ககாலம்)ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்திருநங்கைஇசைஞானியார் நாயனார்தமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியல்தரங்கம்பாடிகுக்கு வித் கோமாளிதிருமலை (திரைப்படம்)வ. உ. சிதம்பரம்பிள்ளைமருதமலை முருகன் கோயில்கேள்விஅதியமான்முடக்கு வாதம்திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயில்இந்தியாவில் இட ஒதுக்கீடுதிரு. வி. கலியாணசுந்தரனார்கூலி (1995 திரைப்படம்)திருவீழிமிழலை வீழிநாதேஸ்வரர் கோயில்சதுரங்க விதிமுறைகள்தளபதி (திரைப்படம்)காயத்ரி மந்திரம்உரிச்சொல்முடியரசன்தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம்தமிழர் நெசவுக்கலைஓம்கள்ளழகர் கோயில், மதுரைசித்ரா பெளர்ணமிதொல்காப்பியம்🡆 More