பேண்தகுநிலை

தொடர்ந்து பேணத் தகுந்த முறையில் பொருளாதார, சமூக, சூழல், அமைப்பு சார் நடவடிக்கைகள், நடைமுறைகள் அமைவதை பேண்தகுநிலை (sustainability) எனலாம்.

தமிழில் இதனை தாங்குதிறன் அல்லது நிலைத்திருநிலை என்றும் குறிப்பிடப்படுவதுண்டு. அண்மைக் காலத்தில் பேண்தகு நிலை என்பது, உயிரியல் தொகுதிகள் தொடர்பில் முக்கியமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சூழலியல் நோக்கில் பேண்தகுநிலை என்பதை, சூழலியல் வழிமுறைகள், செயற்பாடுகள், உயிரியல் பல்வகைமை, உற்பத்தித் திறன் ஆகியவற்றை எதிர்காலத்துக்கும் பேணும் வகையில் சூழல்மண்டலத்துக்கு இருக்கக்கூடிய வல்லமை என வரையறுக்க முடியும்.

பேண்தகுநிலை
Blue Marble composite images generated by NASA in 2001 (left) and 2002 (right).

இன்று, பேண்தகுநிலை என்பது புவியில் உள்ள உயிர் வாழ்வின் ஏறத்தாழ எல்லா அம்சங்களுக்கும் பயன்படுத்தப் படுகின்ற ஒரு சிக்கலான சொல்லாக உள்ளது. உயிரியல் சார் ஒழுங்கமைப்புக்களான ஈரநிலங்கள், காடுகள் தொடர்பிலும், மனித ஒழுங்கமைப்புக்களான பேண்தகுநிலை நகரங்கள் போன்றவை தொடர்பிலும், மனித நடவடிக்கைகள் துறைகள் சார்ந்த பேண்தகுநிலை வேளாண்மை, பேண்தகுநிலைக் கட்டிடக்கலை, மீள்விக்கத்தக்க ஆற்றல் போன்றவை தொடர்பிலும் இச்சொல் முக்கியத்துவம் பெறுகிறது. மனித இனம் பேண்தகுநிலையுடன் வாழ்வதற்கு, புவியின் வளங்களின் பயன்பாடு, அவற்றை மீளுருவாக்கம் செய்யத்தக்க அளவு வேகத்திலேயே இருக்கவேண்டும். ஆனால், தற்கால அறிவியல் சான்றுகளின்படி மனிதர் அவ்வாறு வாழவில்லை என்பது தெரியவருகிறது. இதனால், புவியின் வளங்களின் பயன்பாட்டு வேகத்தை, அவற்றை மீளுருவாக்கம் செய்யத்தக்க அளவுக்குக் குறைப்பதற்கு முன்னெப்பொழுதும் இல்லாத வகையிலான கூட்டுமுயற்சிகள் தேவைப்படுகின்றன.

1980களில் இருந்து, மனிதர் சார் பேண்தகுநிலை என்னும் எண்ணக்கருவானது, பொருளியல், சமூகவியல், சூழலியல் அம்சங்களின் ஒருங்கிணைப்புடன் தொடர்புபடுத்தப்பட்டு வருகின்றது. 1989 ஆம் ஆண்டில் சூழலுக்கும் வளர்ச்சிக்குமான உலக ஆணையம் இன்று பரவலாக ஏற்றுக்கொள்ளப்படும், "பேண்தகுநிலை" என்பதற்கான வரைவிலக்கணத்தை உருவாக்கியது. இதன்படி, பேண்தகுநிலை என்பது, "எதிர்காலத் தலைமுறையினர் தமது தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான வல்லமையைப் பாதிக்காமல் இன்றைய தேவைகளை நிறைவேற்றிக் கொள்வது ஆகும்".”

வரைவிலக்கணம்

மேற்குறிப்பிட்ட ஆணையத்தின் வரைவிலக்கணம் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வந்தபோதிலும், அதனை எல்லோரும் ஏற்றுக்கொள்ளாததுடன், பலவாறான விளக்கங்களும் அதற்குக் கொடுக்கப்பட்டுள்ளன. பேண்தகுநிலையை ஒரு "பயணம்" ஆகவோ "பயணத்தின் முடிவு" ஆகவோ எடுத்துக்கொண்டு, அதன் வரைவிலக்கணத்தை, இருக்கும் நிலை பற்றிய கூற்றாகவோ, தேவையாகவோ, பெறுமானமாகவோ வெளிப்படுத்த முடியும்."

குறிப்புக்கள்

Tags:

அமைப்புஉயிரியல் பல்வகைமைசமூகம்சூழல்சூழல்மண்டலம்பொருளாதாரம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

யூடியூப்கில்லி (திரைப்படம்)கணினிவேலையில்லா பட்டதாரி (திரைப்படம்)சென்னைவேலுப்பிள்ளை பிரபாகரன்கடையெழு வள்ளல்கள்கர்மாமாமல்லபுரம்கூகுள்தாயுமானவர்விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல்தமிழ் இலக்கியம்மாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்காச நோய்இன்னா நாற்பதுபதினெண்மேற்கணக்குதொல்காப்பியர்கோத்திரம்நவதானியம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்எஸ். பி. பாலசுப்பிரமணியம்ராதிகா சரத்குமார்நம்மாழ்வார் (ஆழ்வார்)தமிழ் விக்கிப்பீடியாசிந்துவெளி நாகரிகம்புறாகுண்டூர் காரம்மு. மேத்தாதீராத விளையாட்டுப் பிள்ளை (திரைப்படம்)திருக்குறள்பள்ளர்பொருநராற்றுப்படைசேக்கிழார்திருமந்திரம்கொன்றை வேந்தன்அக்கி அம்மைசூரியக் குடும்பம்சிறுபஞ்சமூலம்நான் சிகப்பு மனிதன் (2014 திரைப்படம்)பீப்பாய்அறுசுவைகும்பகோணம்வெண்குருதியணுஅங்குலம்பஞ்சதந்திரம் (திரைப்படம்)இரட்சணிய யாத்திரிகம்ஜே பேபிபிரபஞ்சன்கீர்த்தி சுரேஷ்புரோஜெஸ்டிரோன்நிணநீர்க்கணுபஞ்சபூதத் தலங்கள்சேரர்விந்துதிருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோயில்நெருப்புபாண்டவர்இரண்டாம் உலகம் (திரைப்படம்)அளபெடைஇயேசுதஞ்சைப் பெருவுடையார் கோயில்திருமணம்வேலைக்காரி (திரைப்படம்)காதல் (திரைப்படம்)திருக்கடையூர் அமிர்தகடேசுவரர் கோயில்நிதிச் சேவைகள்பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில்எங்கேயும் காதல்எஸ். ஜானகிஜன கண மனமுத்துராமலிங்கத் தேவர்சேரன் செங்குட்டுவன்இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்மக்களவை (இந்தியா)சின்ன வீடு🡆 More