நியூ ஹேவென், கனெடிகட்

நியூ ஏவன் (New Haven, நியூ ஹேவென்) ஐக்கிய அமெரிக்காவின் கனெடிகட் மாநிலத்தின் கடலோரத்தில் அமைந்துள்ள நகரமாகும்.

இது நீள் தீவு இடைக்கடலின் வடக்கு கரையோரத்திலுள்ள துறைமுக நகரம். 2020 மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி மக்கள்தொகை 134,023. கனெக்டிகட் மாநிலத்தில் பிரிட்ஜ்போர்ட், இசுடாம்போர்டு நகரங்களை அடுத்து மூன்றாவது பெரிய நகரமாக விளங்குகின்றது.

நியூ ஏவன், கனெக்டிகட்
மாநகரம்
நியூ ஏவன் நகரம்
நியூ ஹேவென், கனெடிகட்
நியூ ஹேவென், கனெடிகட்
நியூ ஹேவென், கனெடிகட்
நியூ ஹேவென், கனெடிகட்
நியூ ஹேவென், கனெடிகட்
நியூ ஹேவென், கனெடிகட்
நியூ ஹேவென், கனெடிகட்
மேலிருந்து, இடமிருந்து வலது : மையநகரம், கிழக்கு பாறைப் பூங்கா, நியூ ஏவன் கிரீன், அப்பர் ஸ்டேட் ஸ்ட்ரீட் இஸ்டாரிக் டிஸ்ட்ரிக்ட், ஐந்து மைல் பாய்ன்ட் கலங்கரைவிளக்கு, ஆர்க்னசு கோபுரம்,யேல் பல்கலைக்கழகத்தில் கனெக்டிகட் கூடம்
அடைபெயர்(கள்): எல்ம் நகரம்

நியூ ஏவன் நகரின் நிகழ்ஊடக நிலப்படம்
ஆள்கூறுகள்: 41°18′36″N 72°55′25″W / 41.31000°N 72.92361°W / 41.31000; -72.92361
Countryநியூ ஹேவென், கனெடிகட் ஐக்கிய அமெரிக்கா
கவுன்ட்டிநியூ ஏவன்
பெருநகர பகுதிபெரும் நியூ ஏவன்
குடியமர்வு (ஊர்)ஏப்ரல் 3, 1638
நிறுவப்பட்டது (நகரம்)1784
ஒருங்கிணைப்பு1895
பெயர்ச்சூட்டுஓர் புதிய ஏவன், துறைமுகம் என்ற பொருளில்
அரசு
 • வகைமேயர்-நகரவை
 • நகரத்தந்தைஜஸ்டின் எலிக்கர் (D)
பரப்பளவு
 • மாநகரம்20.13 sq mi (52.15 km2)
 • நிலம்18.69 sq mi (48.41 km2)
 • நீர்1.44 sq mi (3.74 km2)
ஏற்றம்59 ft (18 m)
மக்கள்தொகை (2010 கணக்கெடுப்பு)
 • மாநகரம்1,29,779
 • Estimate (2019)1,30,250
 • அடர்த்தி6,968.97/sq mi (2,690.72/km2)
 • பெருநகர்8,62,477
 மெட்ரோ என்பது நியூ ஏவன் கவுன்ட்டியைக் குறிக்கும்
நேர வலயம்கிழக்கு (ஒசநே−5)
 • கோடை (பசேநே)கிழக்கு (ஒசநே−4)
சிப் குறியீடுகள்06501–06540
தொலைபேசி குறியீடு203/475
FIPS code09-52000
GNIS feature ID0209231
முதன்மை நெடுஞ்சாலைகள்நியூ ஹேவென், கனெடிகட் நியூ ஹேவென், கனெடிகட்
இணையதளம்www.newhavenct.gov

நியூ ஏவன் அமெரிக்காவில் திட்டமிடப்பட்டு உருவான முதல் நகரமாகும். 1638இல் ஆங்கில சீர்திருத்தவாதிகள் நிறுவி ஓராண்டிற்குப் பின்னர் எட்டு சாலைகள் நான்குக்கு நான்கு வலைவடிவமாக திட்டமிடப்பட்டன; இது தற்போது "ஒன்பது சதுரத் திட்டம்" என அறியப்படுகின்றது. நடுவில் அமைந்த பொதுச் சதுரத்தில் நியூ ஏவன் கிரீன் என்ற பூங்கா உள்ளது; இது நியூ ஏவனின் மையநகரப்பகுதியில் 16-ஏக்கர் (6 ha) பரப்பளவில் அமைந்துள்ளது. இந்தப் பூங்கா தற்போது தேசிய வரலாற்று அடையாளமாகவும், "ஒன்பது சதுரத் திட்டம்" தேசிய திட்டமிடல் அடையாளமாகவும் ஏற்கப்பட்டுள்ளன.

நியூ ஏவன்யேல் பல்கலைக்கழகத்தின் இருப்பிடம். நகரத்தின் பெருமளவில் வரி கட்டுபவராகவும் முதன்மை வேலை வாய்ப்பு நல்குபவராகவும் விளங்கும் யேல்பல்கலைக்கழகம்,நியூ ஏவன் நகரத்தின் பொருளாதாரத்தின் ஆணிவேராக உள்ளது.

இந்த நகரம் 1701 முதல் 1873 வரை கனெக்டிகட் மாநிலத்தின் இணை தலைநகரமாக விளங்கியது; 1873க்குப் பின்னரே மாநிலத்தின் மையத்தில் அமைந்திருந்த ஹார்ட்பர்டிற்கு தலைநகரம் மாறியது. இங்குள்ள கலைக்கூடங்கள், அருங்காட்சியகங்கள், இசையரங்கங்கள் காரணமாக நியூ ஏவன் கனெக்டிகட்டின் பண்பாட்டுத் தலைநகரம் என அறியப்படுகின்றது. அமெரிக்காவின் முதல் மரம் நடுவிழா இங்குதான் நடைபெற்றது; எல்ம் என்ற வகை மரங்கள் அதிகமாக நடப்பட்டு இந்த நகரத்திற்கு "எல்ம் நகரம்" என்ற சிறப்புப் பெயரை பெற்றுத் தந்தது.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

ஐக்கிய அமெரிக்க மாநிலம்ஐக்கிய அமெரிக்காகனெடிகட்நீள் தீவு இடைக்கடல்

🔥 Trending searches on Wiki தமிழ்:

இயற்கைபறவைக் காய்ச்சல்காசோலைஉடுமலைப்பேட்டைதமிழ்த் தேசியம்பௌத்தம்முள்ளம்பன்றிரயத்துவாரி நிலவரி முறைபாரதிதாசன்மாமல்லபுரம்நாச்சியார் திருமொழிபெண்களுக்கு எதிரான வன்முறை2024 இந்தியப் பொதுத் தேர்தல்அமெரிக்க ஐக்கிய நாடுகள்திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்மழைபரணி (இலக்கியம்)திருமலை (திரைப்படம்)தேவயானி (நடிகை)இராசேந்திர சோழன்காற்றுஇந்தியப் பிரதமர்நந்திக் கலம்பகம்கர்மாகற்றாழைஎட்டுத்தொகை தொகுப்புபுறப்பொருள்மறைமலை அடிகள்லிங்டின்கள்ளுநீ வருவாய் எனநாலாயிர திவ்வியப் பிரபந்தம்அரச மரம்கிறிஸ்தவம்அகத்திணைசூரரைப் போற்று (திரைப்படம்)வெ. இராமலிங்கம் பிள்ளைகவலை வேண்டாம்சன்ரைசர்ஸ் ஐதராபாத்பழமொழி நானூறுஇடைச்சொல்ஆசாரக்கோவைஇலவச மதிய உணவுத் திட்டம், தமிழ்நாடுமருதம் (திணை)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்இந்திய தேசிய காங்கிரசுஏலாதிகல்லணைபல்லவர்பறம்பு மலைநரேந்திர மோதிசிவன்அயோத்தி தாசர்சுந்தர காண்டம்கருத்தரிப்புவேலுப்பிள்ளை பிரபாகரன்சின்னம்மைகருப்பசாமிகலிங்கத்துப்பரணிசிற்பி பாலசுப்ரமணியம்தலைவி (திரைப்படம்)இரட்டைக்கிளவிஅஸ்ஸலாமு அலைக்கும்திணைசங்கம் (முச்சங்கம்)ஐம்பூதங்கள்நீர்சேரர்திருவிழாகார்லசு புச்திமோன்பெரியாழ்வார்ஐங்குறுநூறுதீபிகா பள்ளிக்கல்ஆசிரியர்திரிசாதிராவிட மொழிக் குடும்பம்திருக்குர்ஆன்தமிழ் மன்னர்களின் பட்டியல்🡆 More