இரண்டாம் தேவ ராயன்

இரண்டாம் தேவ ராயன் விஜயநகரப் பேரரசின் ஒன்பதாவது பேரரசன்.

விசயநகரப் பேரரசு
சங்கம மரபு
அரிகர ராயன் I 1336-1356
புக்க ராயன் 1356-1377
அரிகர ராயன் II 1377-1404
விருபாட்ச ராயன் 1404-1405
புக்க ராயன் II 1405-1406
தேவ ராயன் I 1406-1422
ராமச்சந்திர ராயன் 1422
வீரவிஜய புக்கா ராயன் 1422-1424
தேவ ராயன் II 1424-1446
மல்லிகார்ஜுன ராயன் 1446-1465
விருபாட்ச ராயன் II 1465-1485
பிரவுட ராயன் 1485
சாளுவ மரபு
சாளுவ நரசிம்ம தேவ ராயன் 1485-1491
திம்ம பூபாலன் 1491
நரசிம்ம ராயன் II 1491-1505
துளுவ மரபு
துளுவ நரச நாயக்கர் 1491-1503
வீரநரசிம்ம ராயன் 1503-1509
கிருஷ்ணதேவராயன் 1509-1529
அச்சுத தேவ ராயன் 1529-1542
சதாசிவ ராயன் 1542-1570
அரவிடு மரபு
அலிய ராம ராயன் 1542-1565
திருமலை தேவ ராயன் 1565-1572
ஸ்ரீரங்கன் I 1572-1586
வேங்கடன் II 1586-1614
ஸ்ரீரங்கன் II 1614-1614
ராம தேவ ராயன் 1617-1632
வேங்கடன் III 1632-1642
ஸ்ரீரங்கன் III 1642-1646

சங்கம மரபைச் சேர்ந்தவன். இம் மரபில் வந்த அரசர்களுள் மிகச் சிறந்தவன் இவனே எனலாம். இவனது தந்தையான வீரவிஜய புக்கா ராயனின் குறுகியகால ஆட்சியைத் தொடர்ந்து அரியணை ஏறியவன் தேவ ராயன். தந்தையைப் போலல்லாது, தேவ ராயன், திறமையானவனாயும், வெற்றிகரமான பேரரசனுமாக விளங்கினான்.

வெற்றிகள்

1432 இல் கொண்டவீடு கோட்டையைக் கைப்பற்றியதுடன், ராய்ச்சூர் ஆற்றுப் பகுதியில் சில பகுதிகளை இழந்தாலும், முதலாம் அஹ்மத் ஷாவின் படையெடுப்பை முறியடித்து முட்கல் (Mudgal) கோட்டையைத் தக்கவைத்துக் கொண்டான். ஒரிசாவின் கஜபதியை 1427, 1436, 1441 ஆகிய ஆண்டுகளில் மும்முறை தோற்கடித்தான். ரெட்டி அரசான ராஜமுந்திரியை முன்னைய நிலைக்குக் கொண்டுவந்தான். சுல்தான் அலாவுதீனுக்கு எதிராகப் போரிட்டு, கேரளாவுக்குள்ளும் முன்னேறினான். அங்கே, கிலான் (Quilon) அரசனையும் பிற தலைவர்களையும் தோற்கடித்தான். இலங்கை மீதும் படையெடுத்துப் பெரும் திறை பெற்றான். கோழிக்கோட்டு அரசனும், பர்மாவின் பெகு, தனசெரிம் ஆகியவற்றின் அரசர்களிடமிருந்தும் கூடத் திறை பெற்றான். இத் தகவல்கள் நூனிஸின் எழுத்துக்களிலிருந்து அறியவருகின்றது.

பாரசீகத்தின் தூதுவனாக 1443 இல் தென்னிந்தியாவுக்கு வந்த அப்துல் ரசாக் என்பவன், இரண்டாம் தேவ ராயன், ஒரிசாவிலிருந்து மலபார் வரையும், இலங்கையிலிருந்து குல்பர்கா வரையும் பேரரசை விரிவாக்கியதுடன், தென்னிந்தியாவின் பல துறைமுகங்களையும் கைப்பற்றி இருந்ததாகக் குறிப்பிடுகின்றான். இருந்தும், பாமினி சுல்தானகம் தொடர்பில் எவ்வித தீர்வும் கிடைக்காமல், தேவராயனின் ஆட்சிக்காலம் முழுவதும் இரு அரசுகளுக்கு இடையிலும் பகைமை தொடர்ந்து நிலவியது. பஹமானி அரசு மீதான படையெடுப்புக்கள் வெற்றியளிக்கவில்லை எனினும், 1426 ஆம் ஆண்டில் நிகழ்ந்த தாக்குதலால் பஹமானி அரசன் தனது தலைநகரத்தை பிதாருக்கு (Bidar) நகர்த்த வேண்டியதாயிற்று.

தேவ ராயனின் இறுதிக் காலத்தில் முழுத் தென்னிந்தியாவையும் கைப்பற்றுவதில் அவன் வெற்றியடைந்ததோடு அல்லாமல், பேரரசை அதன் வளமான பொற்காலம் ஒன்றை நோக்கிக் கொண்டு சென்றான்.

இரண்டாம் தேவ ராயனுக்குப் பின்னர் மல்லிகார்ஜுன ராயன் அரசனானான்.

மேற்கோள்கள்

Tags:

சங்கம மரபுவிஜயநகரப் பேரரசுவீரவிஜய புக்கா ராயன்

🔥 Trending searches on Wiki தமிழ்:

புதிய ஏழு உலக அதிசயங்கள்வாட்சப்புனித வெள்ளிதிருச்சிராப்பள்ளிசில்லுனு ஒரு காதல் (திரைப்படம்)சங்க காலப் பெண்பாற் புலவர்கள்உப்புச் சத்தியாகிரகம்இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்திருக்குறள்கோத்திரம்ஹாட் ஸ்டார்தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளின் பட்டியல்இயேசுசினைப்பை நோய்க்குறிஇலங்கைகிரியாட்டினைன்மெய்யெழுத்துகலித்தொகைஇந்திய அரசியலமைப்பின் சிறப்பு அம்சங்கள்தமிழ் எழுத்து முறைதிருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில்சித்திரைஐம்பெருங் காப்பியங்கள்ராசாத்தி அம்மாள்சுக்ராச்சாரியார்நவரத்தினங்கள்அகத்தியமலைசட் யிபிடிதமிழ்நாடு அமைச்சரவைகோயில்நான்மணிக்கடிகைஇயோசிநாடிஐங்குறுநூறுகலைரயத்துவாரி நிலவரி முறைஇந்தியத் தேசிய வளர்ச்சியை உள்ளடக்கிய கூட்டணிசென்னைமக்காபி. காளியம்மாள்மதராசபட்டினம் (திரைப்படம்)செரால்டு கோட்சீஇன்ஸ்ட்டாகிராம்திருட்டுப்பயலே 2இராமர்பாண்டவர் பூமி (திரைப்படம்)தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்உலக நாடக அரங்க நாள்கம்பராமாயணம்வே. செந்தில்பாலாஜிஅன்மொழித் தொகைஎருதுராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்பாட்டாளி மக்கள் கட்சிசிற்பி பாலசுப்ரமணியம்புறப்பொருள்சித்தர்இந்திய அரசியல் கட்சிகள்அத்தி (தாவரம்)சீமான் (அரசியல்வாதி)ஆங்கிலம்திருவாலங்காடு வடாரண்யேசுவரர் கோயில்காவல் தெய்வங்கள் பட்டியல், தமிழ்நாடுவேலுப்பிள்ளை பிரபாகரன்சன்ரைசர்ஸ் ஐதராபாத்அளபெடைஉயிர்மெய் எழுத்துகள்வேற்றுமையுருபுதீரன் சின்னமலைமதுரைக் காஞ்சிமதுரை மக்களவைத் தொகுதிபாண்டியர்திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்எம். கே. விஷ்ணு பிரசாத்பட்டினப் பாலைஔவையார் (சங்ககாலப் புலவர்)மக்களவை (இந்தியா)மலைபடுகடாம்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்🡆 More