துணைக்கோள் டைட்டன்

டைட்டன் (அல்லது சனி VI) ஆனது சனியின் நிலவுகளின் மிகப்பெரியது ஆகும்.

அடர்த்தியான வளிமண்டலத்தை கொண்டுள்ளதாக அறியப்படும் ஒரேயொரு இயற்கைத் துணைக்கோள் இதுவாகும், மேலும் பூமியைத் தவிர மேற்பரப்பில் நிலையான நீர்ம பரப்புகள் உள்ளதற்கான ஆதாரங்கள் உள்ள ஒரே துணைக்கோள் டைட்டன் ஆகும். 2012 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் காசினி செயற்கைக்கோள் அனுப்பிய புகைப்படங்களிலிருந்து டைட்டனில் ஒரு நதி இருப்பது கண்டறியப்பட்டு குட்டி நைல்நதி எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

டைட்டன்
துணைக்கோள் டைட்டன்
இயற்கையான வண்ணத்தில் டைட்டன் -காசினி விண்கலத்திலிருந்து (2005). ஆரஞ்சு வண்ணத்தில் இருப்பது அதன் மேல் உள்ள கண்ணுக்கு தெரியக்கூடிய நைட்ரஜன் துகள்கள்
கண்டுபிடிப்பு
கண்டுபிடித்தவர்(கள்) கிறிஸ்டியான் ஹைஜென்ஸ்
கண்டுபிடிப்பு நாள் மார்ச் 25, 1655
பெயர்க்குறிப்பினை
வேறு பெயர்கள்சனி VI
சுற்றுப்பாதை அண்மை முனைப்புள்ளி 1186680 கிமீ
சுற்றுப்பாதை சேய்மை முனைப்புள்ளி1257060 km
அரைப்பேரச்சு 1221870 km
மையத்தொலைத்தகவு 0.0288
சுற்றுப்பாதை வேகம் 15.945 d
சாய்வு 0.34854° (சனிக் கோளின் நிலநடுக்கோட்டிற்கு)
இது எதன் துணைக்கோள் சனி
சிறப்பியல்பு
சராசரி ஆரம் 2576±2 km (0.404 Earths)
புறப் பரப்பு 8.3×107 கிமீ2
கனஅளவு 7.16×1010 கிமீ3 (0.066 புவிs)
நிறை (1.3452±0.0002)×1023 கிலோ கிராம் (0.0225 Earths)
அடர்த்தி 1.8798±0.0044 g/cm3
நிலநடுக்கோட்டு ஈர்ப்புமையம்1.352 m/s2 (0.14 g)
விடுபடு திசைவேகம்2.639 km/s
சுழற்சிக் காலம் Synchronous
அச்சுவழிச் சாய்வு பூச்சியம்
எதிரொளி திறன்0.22
வெப்பநிலை 93.7 K (−179.5 °C)
தோற்ற ஒளிர்மை 8.2 and mean opposition magnitude 8.4. to 9.0
பெயரெச்சங்கள் டைடனியன்
வளிமண்டலம்
பரப்பு அழுத்தம் 146.7 kPa
வளிமண்டல இயைபு Variable
படைமண்டலம்:
98.4% நைட்ரசன் (N2),
1.4% மெத்தேன் (CH4);
Lower அடிவளிமண்டலம்:
95% N2, 4.9% CH4

டைட்டன் சனியின் ஆறாவது துணைக்கோள் ஆகும். அடிக்கடி கோளைப் போல உள்ளதாக விவரிக்கப்படும் இது பூமியின் நிலவை விட 50% அதிக விட்டத்தையும், 80% அதிக நிறையையும் கொண்டது. இது சூரியக் குடும்பத்தில் வியாழனின் துணைக்கோள் கனிமீட்டிற்கு அடுத்த இரண்டாவது மிகப்பெரிய நிலவு ஆகும், மேலும் இது கொள்ளவைப் பொறுத்து மிகச்சிறிய கோளான புதனை விட பெரியது, எனினும் புதனின் நிறையில் பாதியளவே டைட்டன் கொண்டுள்ளது. டைட்டன் ஆனது முதலில் அறியப்பட்ட சனியின் நிலவாகும். டச்சு வானியலாளர் கிறிஸ்டியான் ஹைஜென்சால் 1655 இல் டைட்டன் கண்டுபிடிக்கப்பட்டது. பூமியைத் தவிர மற்ற கோள்களின் நிலவுகளில் ஐந்தாவதாக கண்டுபிடிக்கப்பட்ட நிலவு இதுவாகும்.

துணைக்கோள் டைட்டன்
திரவ ஹைட்ரோகார்பன் ஏரிகள்
துணைக்கோள் டைட்டன்
மேற்பரப்பின் புகைப்படம்

டைட்டன் முதன்மையாக நீர், பனிக்கட்டி, பாறை பொருட்களால் உருவாக்கப்பட்டது.2004 ஆம் ஆண்டு காசினி-ஹைஜென்ஸ் செயற்கைக்கோளின் ஆராய்ச்சிக்கு பின்பே அதன் அடர்த்தியான வளிமண்டலதிற்கு அடியில் துருவ பகுதிகளில் திரவ ஹைட்ரோகார்பன் ஏரிகள் இருப்பது கண்டறியப்பட்டது. மேலும் அதன் மேற்பரப்பு இளம் நிலவமைப்பை கொண்டதாகவும் சில மலைகள் மற்றும் விண்கல் பள்ளங்களுடன் அதிக அளவில் சமதளபரப்பை கொண்டது என அறியப்படுகிறது.மற்றும் இது அதி உறைநிலை எரிமலைகளையும் கொண்டிருக்கலாம் என கருதப்படுகிறது. இந்த கோளானது அதிக அளவில் நைட்ரஜனை கொண்டுள்ளதால் இதன் மேற்பரப்பில் மீத்தேன் மற்றும் ஈதேன் மேகங்கள் மற்றும் நைட்ரஜன் நிறைந்த கரிம பனிப்புகை அதிக அளவில் காணப்படுகிறது.மேலும் இது காற்று மற்றும் மழை உட்பட பல மாறுபட்ட காலநிலைகளை கொண்டுள்ளது.எனவே இது பூமியை போல குன்றுகள், ஆறுகள், ஏரிகள், கடல்கள்(திரவ மீத்தேன் மற்றும் ஈத்தேன்), மற்றும் கழிமுக பூமி போன்ற மேற்பரப்பு அம்சங்களை கொண்டுள்ளது, மற்றும் பூமியில் இருப்பது போன்று பருவகால வானிலைகளையும் கொண்டுள்ளது. அதன் திரவங்கள் மற்றும் அடர்ந்த நைட்ரஜன் வளிமண்டலத்தில் மீத்தேன் சுழற்சி பூமியின் தண்ணீர் சுழற்சியை ஒத்து குறைந்த வெப்பநிலையில் நடைபெறலாம் என கருதப்படுகிறது.

இதிலுள்ள இந்த அம்சங்கள் காரணமாக இது நைட்ரஜனை அடிப்படையாக கொண்ட உயிரினங்கள் இங்கு தோன்றி இருக்கலாம் அல்லது அதற்கான வாய்ப்பு இருக்கலாம் என கருதப்படுகிறது. எனவே இது சூரிய குடும்பத்தில் அதிகமாக கவனிக்கப்படும் நிலவுகளில் ஒன்றாக இது உள்ளது.

கண்டுபிடிப்பு மற்றும் பெயரிடல்

டச்சு வானியலாளர் கிறிஸ்டியன் ஹைஜென்ஸ் மூலம் மார்ச் 25, 1655 அன்று டைட்டன் கண்டுபிடிக்கப்பட்டது.1610 இல் வியாழனின் நான்கு பெரிய சந்திரன்கள் பற்றிய கலிலியோவின் கண்டுபிடிப்பு மற்றும் தொலைநோக்கி தொழில்நுட்பம் ஆகியவற்றால் கவரப்பட்ட அவர் தனது சகோதரர் இளைய கான்ச்டன்டிஜின் ஹைஜென்ஸ் உதவியுடன் 1650 ல் தனது முதல் தொலைநோக்கியை உருவாக்கினார்.அதன் மூலம் இவர் டைட்டனை கண்டறிந்தார்.இது சனி கோளின் முதலாவது கண்டறியப்பட்ட கோளாகும்.இவர் முதலில் இதற்கு சனியின் நிலா என பொருள் படும் சட்டர்னி லூனா என்று பெயரிட்டார். அதன் பின்னர் சனியின் ஏழு செயற்கைக்கோள்கள் கண்டறியப்பட்ட பின் ஜான் ஹெர்ச்செல் (சனியின் வேறு இரு கோள்களை கண்டறிந்தவர்) 1847 ஆம் ஆண்டு வெளியிட்ட புத்தகத்தில் டைட்டன் என்ற பெயரை முதன் முதலாக பயன்படுத்தினார்.கிரேக்க புராணத்தின் படி இப்பெயரானது கையா மற்றும் யுரேனசு ஆகியோரின் குழந்தைகளான குரோனசு மற்றும் அவனது சகோதர,சகோதரிகளை குறிக்கும் இவர்கள் பழம்பெரும் பொற்கால ஆட்சி போது சக்திவாய்ந்த தெய்வங்களாக இருந்தனர் என குறிப்பிடப்படுகிறது.

பண்புகள்

  • டைட்டன் ஒரு முறை சனியை சுற்றிவர 15 நாட்கள் மற்றும் 22 மணி நேரம் எடுத்துகொள்கிறது.இது சனியை சுற்றிவரும் வாயு கோள்கள் மற்றும் பிற துணைக்கோள்களுக்கு பொதுவானதாகும்.எனவே இது சனியின் சனியின் ஒத்த அலை சுழற்சிக்கு கட்டுப்பட்டுள்ளது. அதன் சுற்றுப்பாதையின் வட்டவிலகல் 0.0288 ஆகவும் 0,348 டிகிரி சாய்ந்த சுற்றுப்பாதையை கொண்டுள்ளது.
  • இதன் மேற்பரப்பு வெப்பநிலையானது 94 கெல்வின் (−179.2 °C) என்ற மிகக்குறைந்த வெப்ப நிலையை கொண்டுள்ளது.இதனால் அதன் மேல்வளிமண்டலத்தில் 1 சதவீத பனிக்கட்டி காணப்படலாம் என கருதப்படுகிறது.அதிலுள்ள மீதேன் காரணமாக பசுமை இல்ல விளைவு மூலம் அதன் வெப்பநிலை உட்புறத்தில் சிறிதளவு அதிகமாக உள்ளது எனவும் அதன் தூசு மேகங்கள் காரணமாக அது அனைத்து வெப்பத்தையும் திருப்பி அனுப்பும் எனவே அது உட்புறத்தில் இன்னுமும் குளிராக இருக்கும் எனவும் மாறுபட்ட கருத்துகள் நிலவுகின்றன.

மேற்கோள்கள்

Tags:

இயற்கைத் துணைக்கோள்சனியின் நிலவுகள்பூமி

🔥 Trending searches on Wiki தமிழ்:

மதுரைஏலாதிபள்ளிக்கூடம்விநாயகர் அகவல்ராஜா ராணி (1956 திரைப்படம்)பீனிக்ஸ் (பறவை)சன்ரைசர்ஸ் ஐதராபாத்முலாம் பழம்இசுலாமிய வரலாறுதசாவதாரம் (இந்து சமயம்)சுரைக்காய்செம்மொழிதமிழ்நாட்டின் மாவட்டங்கள்இட்லர்திருமலை (திரைப்படம்)அருணகிரிநாதர்நாயன்மார் பட்டியல்தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021விழுமியம்மியா காலிஃபாபூரான்திருத்தணி முருகன் கோயில்அயோத்தி இராமர் கோயில்பௌத்தம்தீராத விளையாட்டுப் பிள்ளை (திரைப்படம்)தமிழ் எண்கள்புறநானூறுஉடுமலை நாராயணகவிஇந்திய அரசியலமைப்பிலுள்ள அடிப்படை உரிமைகள்அளபெடைஅரவான்தமிழில் உள்ள ஓரெழுத்துச் சொற்கள்சூல்பை நீர்க்கட்டிதமிழக வரலாறுஆப்பிள்சிவபுராணம்சங்ககால மலர்கள்முதலாம் இராஜராஜ சோழன்இசைஉலகம் சுற்றும் வாலிபன்பெருஞ்சீரகம்ஆல்வண்ணார்சின்னம்மைதமிழ்ப் புத்தாண்டுமழைதொடை (யாப்பிலக்கணம்)சினைப்பை நோய்க்குறிகாந்தள்காயத்ரி மந்திரம்பி. காளியம்மாள்மலைபடுகடாம்சங்கம் (முச்சங்கம்)தமிழ்த் திரைப்பட நடிகைகளின் பட்டியல்காடுவெட்டி குருதிரு. வி. கலியாணசுந்தரனார்ம. கோ. இராமச்சந்திரன்ஆனைக்கொய்யாரா. பி. சேதுப்பிள்ளைரஜினி முருகன்பஞ்சாங்கம்பரிபாடல்நெசவுத் தொழில்நுட்பம்அஜித் குமார்பொருநராற்றுப்படைராஜீவ் காந்தி பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம்இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றம்இரைச்சல்மகேந்திரசிங் தோனிமங்காத்தா (திரைப்படம்)திருவாசகம்இந்திய அரசியலமைப்பின் முகப்புரைதிதி, பஞ்சாங்கம்ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்கார்ல் மார்க்சுமண்ணீரல்ஜெயம் ரவிஇந்தியன் பிரீமியர் லீக்🡆 More