டூப்பாக் ஷகூர்

டூப்பாக் (Tupac) என்றழைக்கப்படும் டூப்பாக் அமரு ஷகூர் (Tupac Amaru Shakur) ஓரு புகழ்பெற்ற அமெரிக்க ராப் இசைக் கலைஞர் ஆவார்.

1991 முதல் 1996 வரை இவர் ஐந்து இசைத்தொகுப்புகளை படைத்தார். 75 மில்லியன் இசைத்தொகுப்பு நகல்களை விற்பனை செய்த டூபாக் விற்பனை செய்த இசைத்தொகுப்புகள் மிகுந்த ராப்பர் என்று கின்னெஸ் உலகச் சாதனை நூலில் உள்ளார். பல ராப் விமர்சனம் எழுத்தாளர்கள் இவரை ராப் இசையில் மிகச்சிறந்த கலைஞர்களில் சேர்த்துக் கொள்கின்றனர். ராப் இசை தவிர திரைப்பட நடிகராகவும் கவிதை எழுத்தாளராகவும் பணியாற்றினார். பெரும்பான்மையாக ஆபிரிக்க அமெரிக்கர்கள் வாழும் வறுமைப்பட்ட பகுதிகளில் நடந்த வன்முறை, இனப் பாகுபாடு, போதைப்பொருள் பயன் போன்ற சமூகப் பிரச்சனைகளைப் பற்றி டூப்பாக் பாடல்களை படைத்தார். சமூக சமத்துவத்தை டூபாக் பல பாடல்களில் ஆதரவளித்தார்.

டூபாக் ஷகூர்
டூப்பாக் ஷகூர்
பின்னணித் தகவல்கள்
இயற்பெயர்டூபாக் அமரு ஷகூர்
பிற பெயர்கள்மாக்கவெலி (Makaveli)
பிறப்பு(1971-06-16)சூன் 16, 1971
நியூயார்க் நகரம், நியூயார்க், ஐக்கிய அமெரிக்கா
பிறப்பிடம்மரின் நகரம், கலிபோர்னியா
இறப்புசெப்டம்பர் 13, 1996(1996-09-13) (அகவை 25)
லாஸ் வேகஸ், நிவாடா, ஐக்கிய அமெரிக்கா
இசை வடிவங்கள்ஹிப் ஹொப்
தொழில்(கள்)ராப் பாடகர், ராப் எழுத்துவர், நடிகர்
இசைத்துறையில்1990-1996
வெளியீட்டு நிறுவனங்கள்இன்டர்ஸ்கோப், டெத் ரோ, அமரு
இணைந்த செயற்பாடுகள்அவுட்லாஸ், டாக்டர் ட்ரே, ஸ்னூப் டாக், டிஜிட்டல் அண்டர்க்ரவுண்ட்
இணையதளம்2paclegacy.com

நியூயார்க் நகரில் பிறந்த டூப்பாக் பெரும்பான்மையாக ஓக்லன்ட், கலிபோர்னியா நகரில் வளந்தார். இசை உலகில் முதலாக டிஜிட்டல் அண்டர்கிரவுண்ட் என்னும் ராப் குழுமத்தில் ஒரு நடனக்காரராக இருந்தார். 1991இல் டூப்பாக்கின் முதலாம் இசைத்தொகுப்பு 2பாக்கலிப்ஸ் நௌ வெளிவந்து ராப் திறனாய்வாளர்கள் இதை பாராட்டியுள்ளன, ஆனால் இந்த இசைத்தொகுப்பில் இருந்த பாடல் வரிகளை சில மக்கள் கண்டனம் செய்தன. 1994ல் நவம்பர் மாதத்தில் ஐந்து முறை துப்பாக்கிச் சூட்டிற்கு உள்ளானார். இந்த நிகழ்வை முன்னாள் நன்பர் நொடோரியஸ் பி.ஐ.ஜி உள்ளிட்ட ராப் உலகில் வேறு சிலரை குற்றம் சாட்டியுள்ளார். இந்த நிகழ்வு 1990களில் நடந்த கடும் கிழக்கு-மேற்கு எதிரிடையின் ஒரு காரணமாகும்.

பாலியல் குற்றத்துக்கு 11 மாதங்களாக சிறைப்பிடிக்கப்பட்டார், ஆனால் டெத் ரோ ரெக்கர்ட்ஸ் என்ற ஒலிப்பதிவு நிறுவனத்தின் அதிபர் சுக் நைட் நிதியுதவி செய்து டூப்பாக் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார். இதனால் டூப்பாக் டெத் ரோ ரெக்கர்ட்ஸ் நிறுவனத்தை சேர்ந்து ராப் இசை வரலாற்றில் முதலாம் இரட்டை இசைத்தொகுப்பு, ஆல் ஐஸ் ஆன் மி, படைத்தார்.

செப்டம்பர் 7, 1996 லாஸ் வேகஸ் நகரில் டூப்பாக் நான்கு முறை துப்பாக்கியால் சுடப்பட்டு ஆறு ஆண்டுகளுக்கு பிறகு உயிரிழந்தார்.

இசைத்தொகுப்புகள்

உயிர் இருக்கும்பொழுது வெளிவந்த இசைத்தொகுப்புகள்

  • 1991: 2பாக்கலிப்ஸ் நௌ
  • 1993: ஸ்டிரிக்ட்லி 4 மை N.I.G.G.A.Z.
  • 1994: தக் லைஃப் (with தக் லைஃப்)
  • 1995: மி அகைன்ஸ்ட் த வர்ல்ட்
  • 1996: ஆல் ஐஸ் ஆன் மி
  • 1996: த டான் கில்லூமினாடி: த 7 டே தியரி

மரணத்துக்கு பிறகு வெளிவந்த இசைத்தொகுப்புகள்

  • 1997: R U ஸ்டில் டவுன் (ரிமெம்பர் மி)
  • 1999: ஸ்டில் ஐ ரைஸ்
  • 2001: அண்டில் த எண்ட் ஆஃப் டைம்
  • 2002: பெட்டர் டேஸ்
  • 2003: டூபாக்: ரெசரெக்ஷன்
  • 2004: லாயல் டு த கேம்
  • 2006: பாக்'ஸ் லைஃப்
  • 2007: பிகினிங்ஸ் - த லாஸ்ட் டேப்ஸ் 1988-1991

நடித்த திரைப்படங்கள்

ஆண்டு படம் பாத்திரம் குறிப்புகள்
1991 நதிங் பட் ட்ரபிள் அவர்தாமே சிறிய பாத்திரம்
1992 ஜூஸ் பிஷப் முதன்முறை கதாநாயகனாக
1993 போயெடிக் ஜஸ்டிஸ் லக்கி ஜேனெட் ஜாக்சன் உடன் கதாநாயகன்
1994 அபவ் த ரிம் பெர்டி மார்லன் வேயன்ஸ் உடன் கதாநாயகன்
1996 புலெட் டேங்க் மரணத்துக்கு பிறகு வெளிவந்தது
1997 கிரிட்லாக்ட் இசிகியெல் "ஸ்பூன்" விட்மோர் மரணத்துக்கு பிறகு வெளிவந்தது
1997 கேங்க் ரிலேடெட் டிடெக்டிவ் ராட்ரிகெஸ் டூபாக்கின் கடைசியாக நடித்த திரைப்படம்
2003 டூபாக்: ரெசரெக்ஷன் அவர் தாமே விளக்கப்படம்
2008 லிவ் 2 டெல் அவர் தாமே 2008இல் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
2009 பெயர் இல்லாத டூபாக் விளக்கப்படம் அவர் தாமே (அறிவிக்கப்பட்டது)

மேற்கோள்கள்

Tags:

டூப்பாக் ஷகூர் இசைத்தொகுப்புகள்டூப்பாக் ஷகூர் நடித்த திரைப்படங்கள்டூப்பாக் ஷகூர் மேற்கோள்கள்டூப்பாக் ஷகூர்19911996ஆபிரிக்க அமெரிக்கர்ஐக்கிய அமெரிக்காகின்னெஸ் உலகச் சாதனை நூல்சமத்துவம்திரைப்படம்போதைப்பொருள்மில்லியன்ராப் இசைவறுமை

🔥 Trending searches on Wiki தமிழ்:

ஆந்தைகுற்றாலக் குறவஞ்சிரத்னம் (திரைப்படம்)உணவுகுருதி வகைசிறுநீரகம்முத்துலட்சுமி ரெட்டிஆத்திசூடிபித்தப்பைஸ்ரீசுகன்யா சம்ரிதி திட்டம் (செல்வமகள் சேமிப்பு திட்டம்)விசயகாந்துஇதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்எட்டுத்தொகை தொகுப்புவேளாண்மைமு. க. ஸ்டாலின்நிலாமீன் வகைகள் பட்டியல்ஆனந்தம் (திரைப்படம்)திருமூலர்திரைப்படம்இந்தியப் பிரதமர்அஸ்ஸலாமு அலைக்கும்பரதநாட்டியம்ஷங்கர் (திரைப்பட இயக்குநர்)போயர்இராமர்கிழவனும் கடலும்மூகாம்பிகை கோயில்இயேசு காவியம்மரம்அகத்தியர்தமிழர் அளவை முறைகள்நந்திக் கலம்பகம்கணினிஆண் தமிழ்ப் பெயர்கள்சே குவேராதமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம்மதீச பத்திரனசுற்றுச்சூழல் பாதுகாப்புதமிழ்அளபெடைநெல்ஔவையார் (சங்ககாலப் புலவர்)மெய்யெழுத்துமலையாளம்தண்டியலங்காரம்ஆசிரியர்உரிச்சொல்திருச்சிராப்பள்ளிஅயோத்தி தாசர்வட்டாட்சியர்புறநானூறுமகாபாரதம்விண்டோசு எக்சு. பி.உயிர்ச்சத்து டிபிரீதி (யோகம்)கிரியாட்டினைன்தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்தமிழ் படம் 2 (திரைப்படம்)புலிமுருகன்தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம்தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 2019ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம்வெப்பம் குளிர் மழைஅண்ணாமலையார் கோயில்பதினெண்மேற்கணக்குபாண்டி கோயில்நிர்மலா சீதாராமன்கொடைக்கானல்சங்கம் மருவிய காலம்திராவிடர்அறுபடைவீடுகள்அனுஷம் (பஞ்சாங்கம்)திருமந்திரம்உத்தரகோசமங்கைதடம் (திரைப்படம்)புவி🡆 More