வறுமை

வறுமை என்பது, உணவு, உடை, உறைவிடம், பாதுகாப்பான குடிநீர், கல்வி பெறும் வாய்ப்பு, பிற குடிமக்களிடம் மதிப்புப் பெறுதல் போன்றவை உட்பட்ட, வாழ்க்கைத் தரத்தைத் தீர்மானிப்பவற்றை இழந்த நிலை ஆகும்.

பல நாடுகளில் முக்கியமாக வளர்ந்து வரும் நாடுகளில் வறுமை ஒழிப்பு என்பது ஒரு முக்கியமான இலக்காக இருந்துவருகிறது. வறுமைக்கான காரணம், அதன் விளைவுகள், அதனை அளப்பதற்கான வழிமுறைகள் போன்றவை தொடர்பான வாதங்கள், வறுமை ஒழிப்பைத் திட்டமிடுவதிலும், நடைமுறைப் படுத்துவதிலும் தாக்கத்தைக் கொண்டுள்ளன. இதனால் இவை, அனைத்துலக வளர்ச்சி, பொது நிர்வாகம் ஆகியவற்றோடு நெருங்கிய தொடர்புகளைக் கொண்டுள்ளன. வறுமையினால் ஏற்படும் வலி, துன்பம் என்பவை காரணமாக, வறுமை விரும்பத்தகாத ஒன்றாகவே கொள்ளப்படுகின்றது. சமயங்களும், பிற அறநெறிக் கொள்கைகளும் வறுமையை இல்லாது ஒழிப்பதற்கான நடவடிக்கைகளைச் சிறப்பித்துக் கூறுகின்றன. எனினும், சில ஆன்மீகச் சூழல்களில் உலகப் பொருட்களைத் துறந்து பொருள்சார் வறுமை நிலையை ஏற்றுக்கொள்ளல் சிறப்பானதாகக் கருதப்படுவதும் உண்டு. வறுமை தனிப்பட்டவர்களையோ அல்லது குழுக்களையோ பாதிக்கக்கூடும். இது வளர்ந்துவரும் நாடுகளில் மட்டுமின்றி வளர்ந்த நாடுகளிலும், வறுமை வீடின்மை போன்ற பல வகையான சமுதாயப் பிரச்சினைகளுக்குக் காரணமாக அமைகின்றது.

வறுமை
வறுமையைச் சாற்றும் சிறுவன்
வறுமை
இந்தோனேசியாவின், ஜகார்த்தாவைச் சேர்ந்த ஒரு பையன் தான் குப்பைத்தொட்டியில் கண்டெடுத்தவற்றைப் பெருமையுடன் காட்டுகிறான்.

வறுமையின் வகைகள்

வறுமையை முற்றிலும் வறுமை (absolute poverty) என்றும், ஒப்பீட்டு வறுமை (relative poverty) என்றும் இருவகைப்படுத்தலாம். முற்றிலும் வறுமை என்பது ஒரு குடும்பத்தின் வருமானம் அக்குடும்பத்தினரின் அடிப்படைத் தேவைகளைக் கூட நிறைவேற்ற முடியாத அளவில் மிகக் குறைவாக இருப்பதாகும். மிகக் குறைந்த அளவு வாழ்க்கைத் தரத்திற்கும் கீழான நிலையில் உள்ளவர்களை இது குறிக்கும். ஒப்பீட்டு வறுமை என்பது இரண்டு பிரிவினரின் வாழ்க்கைத் தரத்திற்கு இடையே உள்ள ஏற்றத் தாழ்வுகளைக் குறிப்பதாகும். இந்தியா போன்ற நாடுகளில் இவ்விரண்டு வகை வறுமையும் காணப்படுகிறது. அமெரிக்கா போன்ற வளர்ச்சி பெற்ற நாடுகளில் ஒப்பீட்டு வறுமை மட்டும் காணப்படுகிறது. இதற்குக் காரணம் தேசிய வருமானப் பங்கீட்டில் உள்ள ஏற்றத் தாழ்வுகளே.

விளைவுகள்

வறுமையில் உழல்வது ஒருவரின் மூளைத்திறனை பாதிப்பதாக இந்தியாவிலும், அமெரிக்காவிலும் நடந்துள்ள இரண்டு ஆய்வு முடிவுகள் சுட்டிக் காட்டுகின்றன. இந்த ஆய்வு முடிவுகள் சயன்ஸ் விஞ்ஞான சஞ்சிகையில் வெளியாகியுள்ளன.

மேலும் பார்க்க

மேற்கோள்கள்

Tags:

வறுமை யின் வகைகள்வறுமை விளைவுகள்வறுமை மேலும் பார்க்கவறுமை மேற்கோள்கள்வறுமைஆன்மீகம்உடைஉணவுகல்விகுடிநீர்சமயம்பொது நிர்வாகம்வளர்ந்த நாடுகள்

🔥 Trending searches on Wiki தமிழ்:

மக்களவை (இந்தியா)மனோன்மணீயம்இந்திய தேசிய காங்கிரசுநரேந்திர மோதிபெண்ணியம்சிறுதானியம்குண்டூர் காரம்தமிழக வெற்றிக் கழகம்சோமசுந்தரப் புலவர்ஜிமெயில்இலங்கைமரபுச்சொற்கள்இராமலிங்க அடிகள்உடுமலை நாராயணகவிசங்க காலம்தமிழில் சிற்றிலக்கியங்கள்சின்னம்மைஆய்த எழுத்துவைகைகா. ந. அண்ணாதுரைஜோதிகாதமிழ்நாட்டின் மாவட்டங்கள்கருக்கலைப்பும. கோ. இராமச்சந்திரன்குலசேகர ஆழ்வார்பஞ்சபூதத் தலங்கள்சச்சின் (திரைப்படம்)சுற்றுலாவருத்தப்படாத வாலிபர் சங்கம் (திரைப்படம்)கட்டுரைதேவாரப்பாடல் பெற்ற நடு நாட்டு தலங்களின் பட்டியல்தொழிலாளர் தினம்தமிழர் உலோகத் தொழில்நுட்பம்விஸ்வகர்மா (சாதி)ஸ்ரீலீலாகலித்தொகைஆல்யாழ்நாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்அறுபடைவீடுகள்வேற்றுமை (தமிழ் இலக்கணம்)இந்தியத் தேர்தல் ஆணையம்வேதநாயகம் பிள்ளைசன் தொலைக்காட்சி நாடகத் தொடர்கள் பட்டியல்உத்தரகோசமங்கைசென்னைஇசைசைவத் திருமணச் சடங்குஎஸ். பி. பாலசுப்பிரமணியம்முதற் பக்கம்சேரன் செங்குட்டுவன்தொழிற்பெயர்அளபெடைஇந்தியாவில் இட ஒதுக்கீடுபோக்கிரி (திரைப்படம்)ஆந்திரப் பிரதேசம்சைவ சமயம்பூரான்குறிஞ்சிப் பாட்டுநிணநீர்க் குழியம்வெட்சித் திணைசீவக சிந்தாமணிபட்டினத்தார் (புலவர்)விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல்முக்குலத்தோர்மருதமலை முருகன் கோயில்திரவ நைட்ரஜன்கொடைக்கானல்தாவரம்நான் அவனில்லை (2007 திரைப்படம்)இந்திய உச்ச நீதிமன்றம்அரச மரம்புதுமைப்பித்தன்தமிழ்விடு தூதுமஞ்சள் காமாலைவிஜய் (நடிகர்)பணவீக்கம்வேற்றுமைத்தொகைஇயேசு🡆 More