சுடாலின்கிராட் சண்டை: ஸ்டாலின்கிராடு சண்டை

ஸ்டாலின்கிரட் சண்டை (Battle of Stalingrad) இரண்டாம் உலகப் போரின் போது ஜெர்மனி முதன்மையான அச்சு நாட்டுப் படைகளுக்கும் சோவியத் ஒன்றியத்துக்கும் இடையில் சோவியத் நகரான ஸ்டாலின்கிரட்டில் (தற்போதைய வோல்கோகிராட்) ஆகஸ்ட் 21 1942 க்கும் பெப்ரவரி 2 1943க்குமிடையே நடைபெற்ற சண்டையாகும்.

சுடாலின்கிரட் சண்டையானது இரண்டாம் உலகப் போரின் ஐரோப்பிய அரங்கில் நடைபெற்ற போரின் திருப்புமுனையாக பரவலாக கருதப்படுகிறது. இருதரப்பு இறப்புக்க்களையும் இணைத்து மொத்தமாக 1.5 மில்லியன் பேர் வரை பலியான இச்சண்டை உலகின் மிக கொடுரமான சண்டையாகக் கொள்ளலாம். இச்சண்டையின் போது இருதப்பும் பொதுமக்கள், படைத்துரைச் சார் இறப்புக்களையும் இழப்புக்களையும் கவனத்திற் கொள்ளப்படாமல் செயற்பட்டன. சுடாலின்கிரட் சண்டையில் ஜெர்மனிய படைகளால் ஸ்டாலின்கிரட் நகரை முற்றுகையிட்டது, நகர் நடுவே இடம்பெற்றச் சண்டகள், சோவியத் எதிர்த்தாக்குதல் என்பன இணைத்து நோக்கபடுகிறது.

ஸ்டாலின்கிரட் சண்டை
Battle of Stalingrad
இரண்டாம் உலகப்போரின் கிழக்கு களமுனையின் ஒரு பகுதி
சுடாலின்கிராட் சண்டை: ஸ்டாலின்கிராடு சண்டை
ஜெர்மனிய போர்க் கைதிகள் சோவித் படைகளால் எடுத்துச் செல்லப்படல் பெப்ரவரி 1943.
நாள் ஆகஸ்ட் 21 1942பிப்ரவரி 2 1943
இடம் ஸ்டாலின்கிரட் சோவியத் ஒன்றியம்
முக்கிய சோவியத் வெற்றி
பிரிவினர்
சுடாலின்கிராட் சண்டை: ஸ்டாலின்கிராடு சண்டை ஜேர்மனி
உருமேனியா ருமேனியா
இத்தாலி இத்தாலி
அங்கேரி அங்கேரி
சுடாலின்கிராட் சண்டை: ஸ்டாலின்கிராடு சண்டை சோவியத் ஒன்றியம்
தளபதிகள், தலைவர்கள்
நாட்சி ஜெர்மனி இட்லர்
நாட்சி ஜெர்மனி பிரெட்ரிக் போலுசுசுடாலின்கிராட் சண்டை: ஸ்டாலின்கிராடு சண்டை
நாட்சி ஜெர்மனி எரிக் வொன் மன்சுடெயின்
நாட்சி ஜெர்மனி வுல்பாம் வொன் ரிச்தோபுன்
உருமேனியா பீட்டர் துமிதிரிசுகு
உருமேனியா கொண்சுடான்டின் கொண்சுடான்டினெசுகு
இத்தாலி இத்தாலியோ கரிபால்டி
அங்கேரி கொசுடாவ் ஜானி
சோவியத் ஒன்றியம் ஜோசப் ஸ்டாலின்
சோவியத் ஒன்றியம் வசிலி சுயிகொவ்
சோவியத் ஒன்றியம் அலக்சாண்டர் வசியேவ்சுகி
சோவியத் ஒன்றியம் கிரகொரி சுகொவ்
சோவியத் ஒன்றியம் செம்யோன் திமோசெங்கோ
சோவியத் ஒன்றியம் கொண்சுடான்டின் ரொகோசோவ்சுகி
சோவியத் ஒன்றியம் ரொடியொன் மலினொவ்சுகி
சோவியத் ஒன்றியம் அன்டிரேயி யெமெரென்கோ
பலம்
தொடக்கம்:
270,000 பேர்
3,000 ஆட்டிலரி
500 தாங்கிகள்
600 வானுர்திகள், செப்டம்பரில் 1,600

சோவியத் எதிர்த்தாக்குதலின் போது:
1,011,000 பேர்
10,250 ஆட்டிலரி
675 தாங்கிகள்
732 (402 இயங்கியவை) வானுர்திகள்
தொடக்கம்:
187,000 பேர்
2200 ஆட்டிலரி
400 தாங்கிகள்
300 வானுர்திகள்


சோவியத் எதிர்த்தாக்குதலின் போது:
1,103,000 பேர்
15,501 ஆட்டிலர்
1463 தாங்கிகள்
1,115 வானுர்திகள்
இழப்புகள்
740,000 கொலை அல்லது காயம்
110,000 கைது

வானுர்தி: 900
750,000 கொலை,காயம் அல்லது கைது,
40,000+ பொதுமக்கள் கொலை
வானுர்தி: 2,846 (நவம்பர் 19 வரை). , அண்ணளவாக 300 (20 நவம்பர் - 31 டிசம்பர்), 942 (1 ஜனவரி - 4 பெப்ரவரி). மொத்தம்: 4,088

காரணிகள்

இட்லரின் கருத்தியல் நோக்கம். அதாவது இந்த நகரம் ரஷ்யாவின் தெற்கு பகுதிகளில் உள்ள எண்ணெய் வளங்களை தலைநகர் மாஸ்கொ கொண்டு செல்லும் முக்கியமான ரயில் பாதையில் உள்ளது. இதை வெற்றி கொள்வதன் மூலம் வடக்கு பகுதிக்கு கிடைக்கும் எண்ணெய் வளம் பாதிக்கும்.அதன் மூலம் நாஜி படைகள் வெற்றி பெறும். அதே வேளையில் இந்த நகரம் சோவியத் ஒன்றியத்தின் தலைவர் ஜோசப் ஸ்டாலினின் பெயர் கொண்டு உள்ளது. இது வீழ்த்தப்பட்டால் கிழக்கு முனையில் சண்டையிடும் அனைத்து ரஷ்ய படைகளும் மனோதிடம் உடைந்து தோற்று போகும். இதுவே இட்லரின் என்னவோட்டமாக இருந்தது. ஸ்டாலினின் அவர்களின் நிலை. இதே காரணத்தால் எவ்வளவு சேதாரம் நடந்தாலும் இந்த நகரை காக்கவேண்டிய பொருப்பு சோவியத் தலைமைக்கு கூடியது. சண்டையும் நீடித்தது. ===நாசி போர் தந்திரங்கள்=== சோவியத் ஒன்றியத்தின் படைபலத்தை ஒப்பிடும்போது நாசி படைகள் மேம்பட்ட தாகவும் அதிக எண்ணிக்கையிலும் இருந்தன. மேலும் நாசி படைகளுக்கு பக்க பலமாக‌ அச்சு நாடுகளின் படை பிரிவுகள் இருந்தன. டாங்கிகள், வான் எதிர்ப்பு துப்பாக்கிகள், சிறிய ரக டாங்கிகள், Stuka ரக விமானங்கள் பயன்படுத்தப்பட்டன.இட்லரின் ஒரு பேச்சில் " நாம் அங்கே போய் காலால் ஒரு உதை விட்டால் போதும் அனைத்தும் இடிந்து விழும்" என்று உரைத்தார். அதை போலவே நாசி படைகளின் கிழக்கு நகர்தலில் எவ்வித பெரும் சண்டை வரவே இல்லை. சோவியத் ஒன்றியத்தின் மேற்கு பகுதி நகரங்களான கீவ் கர்ஸ்க் நடந்த சண்டைகள் இது போல் நீடித்து இருக்க வில்லை. அதே நிலைப்பாட்டில் இந்த சண்டையையும் நாசிகள் எதிர்பார்த்தனர்.

நகரத்தின் அமைப்பு

இந்த நகரம் வால்கோ நதிக்கரையில் அமைந்துள்ளது. இதன் பழம் பெயர் வால்கோகிராடு. ஒரு முக்கியமான தொழில் நகரமாகவும் பெரிய கனரக வாகனங்கள் உற்பத்தி மையமாகவும் விளங்கியது.நகரத்தின் விரிவாக்கம் மேற்கு பகுதியில் அதிகமாக இருந்தது.

சுடாலின்கிராட் சண்டை: ஸ்டாலின்கிராடு சண்டை
வரைபடம்

சோவியத் படைகளின் போர் தந்திரங்கள்

இந்த நகரின் பொருளாதாரம் போர் கருவிகளின் உற்பத்தி மற்றும் புவிசார் அரசியல் முக்கியத்துவம் தெரிந்து முற்றுகை தொடங்கும்போதே சோவியத் படைகள் முழு திறனுடன் போரிட்டன. இருப்பினும் நாசி படைகளின் பலம் பொருந்தியதாக இருந்தது. நாசி வான்படையின் தாக்குதல் கூடுதல் சேதாரம் விளைவித்தது.1942ல் குளிர்காலம் தொடங்கும் முன்பே நாசி படைகளின் குண்டு வீச்சு விமானங்கள் நகரத்தின் பெரும்பாலான கட்டடங்களைக் தரைமட்டம் ஆக்கின. எதிரியின் தாக்குதல் உள்ளான நகரங்களை விட்டு பொதுமக்கள் வெளியேறுவது இயல்பு. ஆனால் சோவியத் தலைமை இந்த நகரின் முக்கியத்துவம் அறிந்து ஒரு திட்டம் வகுத்தது. பொதுமக்கள் யாரும் நகரை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டது.நகரின் மேற்க்கு நாசி படைகளும் கிழக்கே ஆற்றின் கரையில் சோவியத் படைகளும் மையம் கொண்டன.இதற்கான காரணம், மக்கள் இருந்தால் மட்டுமே , இரண்டு ஆண்டுகளாக தோல்வி முகம் கண்டு போர் புரியும் சிப்பாய்களுக்கு தாய்நாட்டை காக்க வேண்டிய உத்வேகம் கூடும் என்று நம்பப்படுகிறது. மக்களும் அவ்வண்ணமே ஒத்துழைப்பு நல்கினர்.

மேற்கோள்கள்

Tags:

19421943ஆகஸ்ட் 21இரண்டாம் உலகப் போரின் அச்சு நாடுகள்இரண்டாம் உலகப் போர்சோவியத் ஒன்றியம்ஜேர்மன்பெப்ரவரி 2மில்லியன்வோல்கோகிராட்

🔥 Trending searches on Wiki தமிழ்:

திருவீழிமிழலை வீழிநாதேஸ்வரர் கோயில்தைப்பொங்கல்பறையர்மயங்கொலிச் சொற்கள்அடல் ஓய்வூதியத் திட்டம்தமிழ் எண்கள்குடும்பம்அறிவுசார் சொத்துரிமை நாள்இசைஇந்தியாவின் உயிர்க்கோளக் காப்பகங்கள்முதுமலை தேசியப் பூங்காதமிழக மக்களவைத் தொகுதிகள்வெண்பாகொன்றை வேந்தன்அகத்தியம்யூடியூப்விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல்மனோன்மணீயம்வைகைடாக்டர். முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டம்பஞ்சதந்திரம் (திரைப்படம்)திருநாகேசுவரம் நாகநாதசுவாமி கோயில்போயர்குறுந்தொகைமங்கலதேவி கண்ணகி கோவில்சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில்வானிலைஇரட்சணிய யாத்திரிகம்அய்யா வைகுண்டர்கம்பர்ஆசிரியப்பாரத்னம் (திரைப்படம்)முத்துலட்சுமி ரெட்டிசச்சின் (திரைப்படம்)பழமொழி நானூறுஆகு பெயர்ஜி. யு. போப்ஐராவதேசுவரர் கோயில்நவரத்தினங்கள்கபிலர்சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிகளின் பட்டியல்தமிழர் தொழில்நுட்பம்காரைக்கால் அம்மையார்மருதம் (திணை)தமிழர் நிலத்திணைகள்கலம்பகம் (இலக்கியம்)ர. பிரக்ஞானந்தாஆங்கிலம்வெட்சித் திணைநான்மணிக்கடிகைநெல்ஆளி (செடி)தமிழ்ஐந்தாம் பத்து (பதிற்றுப்பத்து)முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்முதலாம் இராஜராஜ சோழன்திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்பழமுதிர்சோலை முருகன் கோயில்அம்பேத்கர்தனுசு (சோதிடம்)மருதமலை முருகன் கோயில்நிணநீர்க்கணுபலாபூரான்முருகன்கிராம்புநற்கருணைசூர்யா (நடிகர்)கொல்லி மலைஅழகர் ஆற்றில் இறங்குதல் (விழா)பரிதிமாற் கலைஞர்மயில்தேவாரப்பாடல் பெற்ற நடு நாட்டு தலங்களின் பட்டியல்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)பெருஞ்சீரகம்வீரமாமுனிவர்மலையாளம்🡆 More