கொல்லைப்படுத்தல்

கொல்லைப்படுத்தல் (Domestication) அல்லது வீட்டிற் பழக்குதல் அல்லது வீட்டினமாக்கம் என்பது ஓர் உயிரினக்குழு (மாந்தர்), தான் முன்கணிக்கும் வளங்களைப் பெற, மற்றொரு உயிரினக்குழுவின் (விலங்கு அல்லது தாவரம் அல்லது பூஞ்சை) இனப்பெருக்கத்திலும் கவனிப்பிலும் முதன்மையான தாக்கம் செலுத்தும் தொடர்ந்த பல தலைமுறைச் செயல்பாடு ஆகும்.

குறிப்பாக இது, விலங்குகள் அல்லது தாவரங்கள் அல்லது பூஞ்சைகள் கட்டுப்பாடான சூழலுக்கு தகவமையச் செய்யும் செயல்முறையைக் குறிக்கும். சார்லசு டார்வின் காட்டு மூதாதைகளில் இருந்து வீட்டு விலங்குகள் சில பண்புகளில் வேறுபட்டு இருத்தலை முதலில் கண்டுணர்ந்தார். இவர் தான் முதலில் மாந்தர் வேண்டிய பண்புகளை நேரடியாக நனவோடு தேர்ந்தெடுக்கும் செயற்கைத் தேர்வுமுறை வளர்ப்பிற்கும் இயற்கைத் தேர்வின் விளைபொருளாகப் படிமலர்ந்து சில பண்புகள் உருவாகும் முறைக்கும் இடையே உள்ள வேறுபாட்டையும் கண்டுணர்ந்தார். காட்டு, வீட்டு உயிரினத் திரளிடையே மரபியல் வேறுபாடும் அமைகிறது. காட்டுவகையில் இருந்து வீட்டு வகைகள் உருவாகிய தொடக்கநிலைக் கட்டங்களுக்கும் பின்னர் பின்னவை காலப்போக்கில் பெற்ற பண்பு மேம்பாடுகளுக்கும் இடையில் கூட பெருத்த வேறுபாடு அமைதலை அறிவியல் அறிஞர்கள் கண்டுணர்ந்துள்ளனர். வீட்டினவாக்கத்தின் தொடக்கத்தில் உருவாகிய வீட்டினவாக்கப் பண்புகள அனைத்து வீட்டினவாக்க உயிரிகளிலும் அமையும். ஆனால், தனி வளர்ப்புயிரிகளைக் கருதினாலும் அல்லது வட்டார உயிரினத்திரள்களைக் கருதினாலும், பின்னர் ஏற்பட்ட மேம்பாட்டுப் பண்புகள் குறிப்பிட்ட விகித உயிரிகளில் மட்டுமே, நிலவும்.

கொல்லைப்படுத்தல்
வீட்டில் பழக்கிய முதல் விலங்குகளான நாயும் ஆடும்.

நாய் தன் முதலில் வீட்டிற் பழக்கிய முதுகெலும்பியாகும். இந்த நிகழ்வு ஐரோப்பாசியாவில் வேளாண்மை வளர்ச்சிக்கும் பிற விலங்குகளின் வீட்டினவாக்கத்துக்கும் முன்பே நிறைவேறிவிட்டது. இது பிந்தைய பிளிசுட்டோசீன் காலத்துக்கு முன்பே ஏற்பட்டதாகும். தொல்லியல் விவரங்களும் மரபியல் விவரங்களும் காட்டு, வீட்டு வளரினங்களுக்கு இடையே நெடுங்காலமாகவே மரபன் பாய்வு தொடர்ந்து இருந்துவந்துள்லதைக் காட்டுகின்றன. இந்த நிலைமை கழுதைகள், குதிரைகள், பழைய புதிய உலக ஒட்டகங்கள், வெள்ளாடுகள், செம்மறியாடுகள், பன்றிகள் ஆகிய அனைத்து விலங்கினங்களுக்கும் பொருந்தும்.வீட்டினவாக்கம் மாந்தரினத்துக்குப் பெரும்பயன் நல்குவதாலும் படிமலர்ச்சி, மாந்தச் செயற்கைப் படிமம் ஆகவும் விளங்குவதால், தொல்லியல், தொல்லுயிரியல், மாந்தரினவியல் (மானிடவியல்), தாவரவியல், விலங்கியல், மரபியல், சுற்றுச்சூழலியல் ஆகிய பல்வேறு புலங்கள் சார்ந்த அறிவியலாளர்களையும் இது ஈர்க்கிறது.

பறவைகளில் கோழி விட்டினவாக்க உயிரியாகும். இது இறைச்சியும் முட்டையும் தருகிறது. பறவைகள் கூண்டுப் பறவைகளாகவும் வளர்க்கப்படுகின்றன. இவ்வகைக் கூண்டுப் பறவைகளாக பாடும் பறவைகளும் பேசும் கிளிகளும் வளர்க்கப்படுகின்றன.

முதுகெலும்பில்லாத வீட்டினவாக்க விலங்குகளில் தேனீயும் பட்டுப்புழுவும் நெடுங்காலமாகவே பயனில் உள்ளன. நிலவாழ் நத்தைகள் உணவுக்காக வளர்க்கப்படுகின்றன. பல்வேறு உயிரினத் தொகுதிகளில் இருந்து, சில உயிரினங்கள் ஆராய்ச்சிக்காகவும் சில உயிரியல் கட்டுபாட்டிற்காகவும் வளர்க்கப்படுகின்றன.

தாவரங்கள் வீட்டுப் பயன்பாட்டுக்கு 12,000 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கொணரப்பட்டன. வடகிழக்குப் பகுதியில் கூலங்களும் ஆசியாவில் சுரைக்காயும் பயன்பாட்டுக்கு வந்தன. வேளாண்மை, உலகின் வெவ்வேறான பதினொரு பகுதிகளில் தோன்றி, பல்வேறு பயிரினங்களையும் கால்நடைகளையும் பயன்பாட்டில் கொணர்ந்தது.


வீட்டினவாக்கம் சார்ந்த சொற்கள்

கொல்லைப்படுத்தல் 
இறைச்சிக்காகக் கொல்லைப்படுத்தப்பட்டு உள்ள விலங்குகள்.

பொதுவாக வீட்டினவாக்கம் அல்லது கொல்லைப்படுத்தல் மனிதர்களின் செயற்கைமுறைத் தேர்வு ஆகும். இவ் விலங்குகளையும் தாவரங்களையும் மனிதர்கள் பல காரணங்களுக்காகத் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருகிறார்கள்:

  • உணவை அல்லது பெறுமதி வாய்ந்த பொருட்களை பெறுவதற்காக. (கம்பளி, பருத்தி, பட்டு போன்றவை.)
  • பலவகை வேலைகளில் பயன்படுத்திக் கொள்வதற்காக. (போக்குவரத்து, பாதுகாப்பு முதலியன.)
  • தங்களையும் பிற கால்நடைகளையும் பாதுகாப்பதற்காக.
  • வளர்ப்பு விலங்குகளாக்கி மகிழ்வதற்காக. (நாய், பூனை முதலியன)
  • அழகுக்காக (அழகூட்டல் தாவரங்கள்)
கொல்லைப்படுத்தல் 
அழகூட்டல் தேவைக்காக வீட்டில் வளர்க்கப்படும் ரோஜாச் செடி

அழகூட்டல் தேவைகளுக்காகக் கொல்லைப்படுத்தப்பட்டு வீடுகளுக்கும் பிற கட்டிடங்களுக்கும் உள்ளேயும் சுற்றாடலிலும் வளர்க்கப்படும் தாவரங்கள் வீட்டுத் தாவரங்கள் அல்லது அழகூட்டல் தாவரங்கள் எனப்படுகின்றன. உணவு உற்பத்திக்காகப் பெருமளவில் கொல்லைப்படுத்தப்படும் தாவரங்கள் பயிர்கள் எனப்படுகின்றன. விருப்பமான இயல்புகளைப் பெற்றுக்கொள்வதற்காக வேண்டுமென்றே மாற்றங்கள் செய்யப்பட்ட அல்லது தேர்வு செய்யப்பட்ட கொல்லைப்படுத்தப்பட்ட தாவரங்களையும், காட்டுத் தாவரங்களில் இருந்து அதிகம் வேறுபடாத கொல்லைப்படுத்தப்பட்ட தாவரங்களையும் வேறுபடுத்திப் பார்க்க முடியும். இதுபோலவே வீட்டுத் துணைக்காகக் கொல்லைப்படுத்தப்படும் விலங்குகள் செல்லப் பிராணிகள் எனவும், உணவுக்காகவும், வேலைகளில் உதவுவதற்காகவும் வளர்க்கப்படுவன கால்நடைகள் அல்லது தோட்ட விலங்குகள் என்றும் அழைக்கப்படுகின்றன.

வீட்டினவாக்கம் என்பது முன்னரே குறிப்பிட்டது போல நீடித்துநிற்கும் பல தலைமுறை உறவாகும். இதில் ஓர் உயிரினம் தான் முன்கணித்த வளம்பெறுதலுக்காக மற்றொருவகை உயிரினத்தின் இணப்பெருக்கத்திலும் கவனிப்பிலும் தாக்கம் செலுத்தி இருபுறப் பரிமாற்ற இணைவாழ்வில் ஈடுபடும் நிகழ்வாகும். இதில் வீட்டினவாக்கல் உயிரினமும் வீட்டினமாகும் உயிரினமும் இதில் ஈடுபடாத பிற உயிரினங்களைக் காட்டிலும் நலங்களைத் தமக்குள் பெறுகின்றன. மேலும் சூழல் சார்ந்த உயிரியலான பொருத்தப்பாட்டையும் உயர்தகவமைப்பையும் அடைகின்றன. இந்த வரையறை வீட்டினவாக்கம் உருவாக்கும் உயிரியல் பண்பாட்டுக் கூறுபாடுகளையும் மாந்தர்பாலும் விலங்கு, தாவர இனங்கள் பாலும் விளையும் தாக்கங்களையும் உள்ளடக்கும். பழைய வரையறைகள் மாந்தன் நிலையை உயர்த்திப் பிடிக்க, புதிய வரையறைகள் இருபுறச் சம நலப் பகிர்வினை சுட்டுகிறது. விட்டினவாக்கம் பயிர்கள், கால்நடை, செல்ல உயிரிகள் ஆகியவற்ரின் இனப்பெருக்கத் திறனை அவற்றின் காட்டுவகைகளை விடப் பேரளவில் உயர்த்தியுள்ளது. இந்நிகழ்வு மாந்தருக்கு முன்கணித்தபடியும் காப்புறுதியோடும் கட்டுபடுத்தவும் நகர்த்தவும் மீள்பகிரவும் இயலும்படியுமான வளங்களைப் பெருக்கியது. இதனால், வேளாண்மை மக்கள்பெருக்கத்தைத் தூண்டி மாந்தரினம் புவியின் மூலைமுடுக்குகளில் எல்லாம் பரவிடச் செய்தது.

இந்தச் சமவாய்ப்பு நலங்கள் மாந்தர், விலங்குகள், தாவரங்கள் இடையில் மட்டுமே அமையவில்லை. இது பூச்சிகளுக்கும் தாவரங்களுக்கும் விலங்குகளுக்கும் இடையிலும் நிறைவேறுகிறது. எடுத்துகாட்டாக, எறும்பு-பூஞ்சை இணைவாழ்வு இலைகொறிப்பு எறும்புகளுக்கும் சிலவகைப் பூஞ்சைகளுக்கும் இடையில் நிகழ்கிறது.

இந்நிகழ்வு புறத்தோற்றநிலையிலும் தாவரங்களையும் விலங்குகளையும் தம் காட்டு மூதாதைகளில் இருந்துப் பெரிதும் வேறுபடுத்துகிறது. இது முதுகெலும்பு விலங்குகளுக்கும் பொருந்தும். மென்மையான உறவையும் தோலின் நிறமாற்றத்தையும் தருகிறது; பல் அளவினைக் குறைக்கிறது; மண்டையோட்டு, முக உருமாற்றத்தை விளைவிக்கிறது; கது, வால் வடிவை மாற்றுகிறது; அண்ணீரகப் புறணியூட்ட இசைம மட்டங்களை மாற்றுகிறது; பல நரம்புக் குறிகைச் செலுத்திகளின் செறிவை மாற்றுகிறது, இளவுயிரியின் வளர்ச்சிப் பருவத்தைக் கூட்டி அதன் நடத்தையை மாற்றுகிறது; மொத்த மூளையளவையும் மூளையின் சில பகுதிகளின் அளவையும் குறைக்கிறது.

விலங்குகள் வீட்டினமாக்கம்

கோட்பாடு

கொல்லைப்படுத்தல் 
கராக்கு செம்மறி, பண்டைய (கிமு 1400) ஆசிய வளர்ப்பினம்.}} ஈரானிய இடையர்கள். 1920 களில் அரோல்டு எஃப். வெசுட்டன் எடுத்த ஒளிப்படம்

விலங்குகளின் வீட்டினமாக்கம் விலங்குகளுக்கும் மாந்தருக்கும் இடையில் உள்ள இருபுற உறவாகும். மாந்தர்கள் விலங்குகளின் கவனிப்பிலும் இனப்பெருக்கத்திலும் தாக்கம் செலுத்துகின்றனர். சார்லசு தார்வின் காட்டு மூதாதைக்கும் வீட்டுவகைக்கும் இடையில் உள்ள சில பண்பு வேறுபாடுகளைக் கவனித்துள்ளார். இவர்தான் முதன்முதலாக மாந்தன் தனக்கு வேண்டிய சில பண்புகளை நேரடியாகத் திட்டமிட்டு தேர்ந்தெடுக்கும் இனப்பெருக்கத்துக்கும், இயற்கையின் தேர்வால் சில பண்புகள் மாறும் இயல்பாக நிகழும் இனப்பெருக்கத்துக்கும் இடையில் உள்ள வேற்றுமையை அடையாளம் கண்டார்.

காட்டு உயிரித்திரளுக்கும் வீட்டுவகைக்கும் இடையில் மரபியல் வேறுபடுகள் அமைகின்றன. இதே வேறுபாடு தொடக்கநில வீட்டு விலங்குகளுக்கும் பிறகு மேம்பாடுற்ர விலங்குகளுக்கும் இடையிலும் மரபியலான வேறுபாடுகள் அமைகின்றன. வீட்டினமாக்கப் பண்புகள் குறிப்பிட்ட இடத்தில் அனைத்து வீட்டு விலங்குகளிலும் நிலையாகவே அமைய, மேம்பாட்டு பண்புகள் அவற்றின் வேறுபட்ட வட்டாரத்துக்கு ஏற்ப மாறுகின்றன.

விலங்குகளின் வீட்டினமாக்கத்தை அவற்றை குறிப்பிட்ட நடத்தையை உருவாக்க பழக்குதலோடு குழப்பிக் கொள்ளக்கூடாது. பழக்குதல் என்பது ஆக்கநிலை நடத்தை மாற்றம் ஆகும். இது விலங்குகள் இயற்கையாக மாந்தனைத் தவிர்ப்பதைக் குறைத்து மாந்தனின் உடனிருப்பை ஏற்க செய்கிறது. ஆனால், வீட்டினமாக்கம் விலங்குகளின் மரபுப்பேற்று வழித்தொன்றல்களைல் நிலைத்த மரபியல் மாற்ரங்களை உருவாக்குகிறது இது விலங்குகளுக்கு மாந்தனோடு அமைதியாக வாழும் மரபுவழி முந்தகவமைப்பை ஏற்படுத்துகிறது.

குறிப்பிட்ட விலங்கினங்களில் உள்ள குறிப்பிட்ட தனி விலங்குகள், மற்றவற்றை விட வீட்டினமாக்கத்துக்கு ஏற்ற மிக நல்ல பண்புகளைப் பெற்றுள்ளன. ஏனெனில் அவை பின்வரும் நல்ல நடத்தைப் பான்மைகளைப் பெற்றமைகின்றன::Fig 1

  1. சமுகக் கட்டமைப்பின் அளவும் ஒருங்கியைபும்
  2. தம் இணைகளை தெரிவதில் அமையும் கிடைப்புநிலையும் அளவும்
  3. பெற்றோர் இளந்தலைமுறையுடன் கொண்டுள்ல பற்றுதலின் எளிமையும் விரைவும்; பிறந்த இளவுயிரியின் முதிர்ச்சிநிலையும் இயங்குதிறமும்;
  4. உணவு, வாழிட ஏற்பில் அமையும் நெகிழ்வான தன்மை;
  5. புதிய சூழல், மாந்தரோடுகொள்ளும் துலங்கல்கள்; புதிய தூண்டுதலுக்கு செய்யும் எதிர்விணையும் விலகியோடாத தன்மையும்.

வீட்டினமாக்கத் தாவரங்கள்

கொல்லைப்படுத்தல் 
கோதுமை, மாடுகளுடன் உழவர்கள் – பண்டையஎகுபதி, கிமு 1,422

விலங்குகளின் தொடக்கநிலை வீட்டினமாக்கம் அவற்றின் நடத்தை சார்ந்த மரபன்களைக் கட்டுபடுத்தியது.. ஆனால், தாவரங்களின் தொடக்கநிலை வீட்டினமாக்கம் அவற்றின் புறத்தோற்றத்தையும் (விதையளவு,தாவரக் கட்டமைப்பு, பரவல் இயக்கம்) உடலியங்கியலையும் (முளைத்தல் நேரம், பழுத்தல் நேரம்) சார்ந்த மரபனகளைக் கட்டுபடுத்தியது .

கோதுமையின் வீட்டினமாக்கம் சிறந்த எடுத்துகாட்டாக அமைகிறது. காட்டுக் கோதுமை மணிகள் முதிர்ந்ததும் பிரிந்து தரையில் உதிர்கின்றன. இவை மீண்டும் முளைக்க வாய்ப்புள்ளது.ஆனால், வீட்டினமாக்க விதை தண்டிலேயே இருக்கிறது. பின் அது எளிதாக அறுவடை செய்யப்படுகிறது. வீட்டினமாக்கத்தின்போது காட்டுவிதையில் ஏற்பட்ட மரன்களின் சடுதிமாற்றம் இத்தகைய மாற்ற வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு இவ்வகை சடுதிமாற்றம் அமைய, அடிக்கடி அறுவடை செய்த கோதுமை அடுத்த பயிரீட்டிற்கான விதையாகிறது. எனவே, தம்மையறியாமலே தொடக்கநிலயில் உழவர்கள் செயற்கைத் தேர்வால் இந்த சடுதிமாற்றத்தை உருவாக்கியுள்ளனர். இதனால் வீட்டினமாக்கக் கோதுமை விளையலானது. எனவே வீட்டினமாக்கக் கோதுமை தன் இனப்பெருக்கத்துக்கும் பரவலாக்கத்துக்கும் முதலில் உழவர்களையே சார்ந்திருந்தது.

வரலாறு

மிக முந்திய தாவர வீட்டினமாக்க மாந்த முயற்சி நடுவண்கிழக்குப் பகுதியில் நிகழ்ந்துள்ளது. சிரியாவில் புதிர கற்காலத்துக்கு முந்திய மாந்தக் குழுக்கள் திட்டமிட்டு தேர்ந்தெடுத்த தாவர வளர்ப்பு நிகழ்ந்தமைக்கான தொல்பழஞ் சான்றுகள் கிடைத்துள்ளன: சியாவில் அபு-குரேயாவில் விட்டினமாக்கப் பண்புகள் உள்ள புல்லரிசிக் கூலங்கள் (தானியங்கள்) பழைய கற்காலப் இறுதியில் (அண். கிமு 11,050 இல்) கிடைத்துள்ளன. ஆனால், இது காட்டுப் புல்லரிசி விளச்சலின்போது தற்செயலாக நிகழ்ந்தவொரு கள நிகழ்வாகவே அமைந்துள்ளது. இது மிகத் தெளிவாக முன்னெடுத்த வீட்டினமாக்க முயற்சியாகத் தெரியவில்லை.

சுரைக்காய்(Lagenaria siceraria) தாவரக் குடுக்கை வெங்களித் தொழில்நுட்பம் உருவாதலுக்கு முன்பாக கிமு 10,000 ஆண்டளவில், வீட்டுப் பயன்பாட்டுக்கு வந்துள்ளதாக தோன்றுகிறது. வீட்டினமாக்க்கச் சுரைக்காய் கிமு 8,000 ஆண்டளவில் ஆசியவில் இருந்து அமெரிக்காவுக்குப் புலம்பெயர்ந்த மக்கள்வழி அமெரிக்காவைச் சென்றடைந்துள்ளது.

நடுவண்கிழக்குப் பகுதி செம்பிறை வள நிலத்தில் கிமு 9,000 ஆண்டளவில் கூலப் பயிர்கள் முதலில் விட்டினமாக்கப்பட்டுள்ளன. முதலில் வீட்டினமாக்கப் பயிர்கள் பெரிய விதமணிகள் அல்லது பழங்கள் உள்ள ஓராண்டுப் பயிர்கள் ஆகும். இவற்றில் பட்டாணி, கோதுமை போன்ற பருப்பு, கூலவகைகள் அடங்கும். நடுவண்கிழக்குப் பகுதி இவ்வகத் தாவர இனங்களைப் பயிரிட ஏற்ற நிலப்பகுதியாக இருந்தது; இப்பகுதியின் உலர்னான கோடைக்காலநிலை பெரிய விதை ஓராண்டுப் பயிர்களின் விளைப்புக்கு ஏற்றதாக இருந்துள்ளது. அங்குப் பல்வேறு குத்துயரங்களில் பலவகை பயிரீட்டு தாவர இனங்கள் உருவாகின. விட்டினமாக்கம் தொடங்கியதும் மாந்தர் திரட்டல்-வேட்டைப் பொருளியல் வாழ்க்கையில் இருந்து விடுபட்டு நிலையான் வேளாண்மை வாழ்க்கைக்கு மாறினர். இந்த மாற்றமே கிமு 4000 முதல் கிமு 5000 இடையிலான கால இடைவெளியில் ஏற்பட்ட நகரவகை அரசாக்கம் உருவாகி, முடிவாக முதல் நகர நாகரிகங்கள் தோன்ற வித்திட்டுள்ளது.

இடைவிட்ட தோல்வி, வெற்றிகளூடாக, வீட்டின்மாக்கம் படிப்படியாக தொடர்ந்தது. பல்வேறு விரிநிலை பண்புகளுடனும் பான்மைகளுடனும் முன்னேறியது. நாளடைவில் ஆப்பிள், ஆலிவ் உள்ளங்கிய தொடர்பசுமைத் தாவரங்களும் சிறிய மரங்களும் வீட்டினமாக்கதுக்கு உள்ளாகின. என்றாலும், மிக அண்மைவரை மசடாமியா விதை, பிகான்வகைகள் வீட்டினமாக்கத்துக்கு ஆட்படாமலே இருந்துள்ளன.

உலகின் மற்ற பகுதிகளில் வெவ்வேறு தாவரங்கள் வீட்டினமாக்கம் உற்றுள்ளன. அமெரிக்கா பகுதிகளில் மக்கச்சோளம், அவரை வகைகள், மானியோக், கசாவா வகைகள் முதன்மையான உணவைத் தந்துள்ளன. கிழக்காசியாவில் தினை, நெல், [[சோயா] அவரை வகைகள் முதன்மை வாய்ந்த பயிர்களாக அமைந்துள்ளன. தென் ஆப்பிரிக்கா, ஆத்திரேலியா, கலிபோர்னியா, தெற்குத் தெனலமெரிக்கா போன்ற உலகின் பிற பகுதிகளில் கள வீட்டினமாக்கத் தாவரங்கள் ஏதும் உருவானதந்த் தெரியவில்லை.

பூஞ்சைகளும் நுண்ணுயிரிகளும்

கொல்லைப்படுத்தல் 
குடைக்காளான்கள் உணவாக பரவலாகப் பயன்பட்டுள்ளன.

பல பூஞ்சைத் தாவர இனங்கள் நேரடி உணவுக்காக வீட்டினமக்கப் பட்டுள்ளன. அல்லது உணவையும் பருகுவகைகளையும் நொதிக்கவைக்க பயன்கொள்லப்பட்டுள்ளன. காட்டுக் குடைக்காளான் Agaricus bisporus உணவுக்காகப் பரவலாக வளர்க்கப் பட்டுள்ளன. Saccharomyces cerevisiae எனும் ஈசுட்டு நொதிப்பொருள் பீரையும் முந்திரித் தேறலையும் (வைனையும்) உரொட்டி மாவையும் நொதிக்கவைக்கப் பல்லாயிரம் ஆண்டுகளாகவே நொதிக்க வைக்கப் பயனில் இருந்து வந்துள்ளன . Mould fungi including Penicillium உள்லிட்ட பூஞ்சைவகைகள்னௌயிக்கொல்லி மருந்து செய்யவும் வெண்ணெயைத் திரட்ட அல்லது உறைவிக்க பயபட்டுள்ளன.

மேற்கோள்கள்

நூல்தொகை

  • சார்லஸ் டார்வின். The Variation of Animals and Plants under Domestication, 1868.
  • Jared Diamond. Guns, Germs, and Steel|Guns, germs and steel. A short history of everybody for the last 13,000 years, 1997.

மேலும் படிக்க

வெளி இணைப்புகள்

Tags:

கொல்லைப்படுத்தல் வீட்டினவாக்கம் சார்ந்த சொற்கள்கொல்லைப்படுத்தல் விலங்குகள் வீட்டினமாக்கம்கொல்லைப்படுத்தல் வீட்டினமாக்கத் தாவரங்கள்கொல்லைப்படுத்தல் மேற்கோள்கள்கொல்லைப்படுத்தல் நூல்தொகைகொல்லைப்படுத்தல் மேலும் படிக்ககொல்லைப்படுத்தல் வெளி இணைப்புகள்கொல்லைப்படுத்தல்சார்லசு டார்வின்தாவரம்பூஞ்சைவிலங்கு

🔥 Trending searches on Wiki தமிழ்:

நம்பி அகப்பொருள்அட்சய திருதியைதிட்டக் குழு (இந்தியா)சுபாஷ் சந்திர போஸ்ஸ்ரீகிராம சபைக் கூட்டம்மலேசியாகருத்துஇந்தியாதமிழ் இலக்கியம்திருக்கடையூர் அமிர்தகடேசுவரர் கோயில்சென்னை மாநகர பேருந்து வழித்தடங்கள்திரவ நைட்ரஜன்உளவியல்தமிழக வரலாறுமு. க. ஸ்டாலின்இராபர்ட்டு கால்டுவெல்மலைபடுகடாம்நிணநீர்க்கணுகவலை வேண்டாம்கலம்பகம் (இலக்கியம்)கலைஞர் மகளிர் உரிமைத் தொகைரயத்துவாரி நிலவரி முறைகஞ்சாதமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியல்மு. வரதராசன்கூர்ம அவதாரம்ஆனைக்கொய்யாதிருநாள் (திரைப்படம்)தன்வினை / பிறவினை வாக்கியங்கள்புணர்ச்சி (இலக்கணம்)அந்தாதிபதிவேற்றம் மற்றும் பதிவிறக்கம்திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில்திரு. வி. கலியாணசுந்தரனார்ஆய்வுதமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல், 2019வைதேகி காத்திருந்தாள்வெப்பநிலைஇரண்டாம் உலகப் போர்திருநங்கைகூகுள்அமலாக்க இயக்குனரகம்சின்ன வீடுவாலி (கவிஞர்)புவிஅண்ணாமலை குப்புசாமிமெய்யெழுத்துஇங்கிலீஷ் பிரீமியர் லீக்திருப்போரூர் கந்தசாமி கோயில்சீனிவாச இராமானுசன்மீன் வகைகள் பட்டியல்வாற்கோதுமைபாரிசுகன்யா சம்ரிதி திட்டம் (செல்வமகள் சேமிப்பு திட்டம்)பிரியா பவானி சங்கர்மண் பானைமாணிக்கவாசகர்கருமுட்டை வெளிப்பாடுஉப்புச் சத்தியாகிரகம்காதல் கொண்டேன்வசுதைவ குடும்பகம்பாரத ரத்னாபிரீதி (யோகம்)இரட்டைக்கிளவிசுய இன்பம்யுகம்திருமந்திரம்முருகன்இந்தியன் (1996 திரைப்படம்)சிலம்பரசன்குருதி வகைபுறப்பொருள்ஆயுஸ்மான் பாரத் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்நரேந்திர மோதிஜிமெயில்தொல்காப்பியர்கருட புராணம்🡆 More