கால்நடை

கால்நடைகள் (livestock) என்பவை வேளாண்தொழில் சூழலில் வீட்டில் வளர்க்கும் விலங்குகள் ஆகும்.

கால்நடைகள் அவற்றின் உழைப்புக்காகவும் இறைச்சி, முட்டை, பால், முடி, தோல், கம்பளி போன்ற பொருட்களுக்காகவும் பயன்படுகின்றன. சிலவேளைகளில் இவை இறைச்சிக்காக மட்டுமோ அல்லது பண்ணை விலங்குகளாக மட்டுமோ பயன்படுவதுண்டு. அமெரிக்காவில் குதிரைகள் கால்நடைகளாகக் கருதப்படுகின்றன. பலவகை கால்நடைகள் அவற்றின் சிவப்பு இறைச்சிக்காகவே வளர்க்கப்படுகின்றன. மீனும் கோழியும் இவ்வகைபாட்டில் அடங்குவதில்லை.

கால்நடை
புல்வெளியில் மேயும் மாடுகள் , செருமனி

வேட்டையாடல்-உணவுதிரட்டல் வாழ்க்கைமுறையில் இருந்து வேளாண்மைசார் வாழ்க்கைமுறைக்கு மாறியபோது அனைத்து தொல்பண்பாடுகளிலும் வழக்கில் வந்த கால்நடைகளை வளர்த்தல், பேணுதல், கொன்று இறைச்சியாகப் பயன்படுத்தல் ஆகிய செயல்முறைகளின் கூட்டுத் தொழில் கால்நடை வளர்ப்பு எனப்பட்டது. இது வேளாண்மையின் துணைத்தொழிலாகி விட்டது. கால்நடை வளர்ப்பு பண்பாட்டுக்குப் பண்பாடு மாறுவதோடு காலத்துக்குக் காலமும் மாறும். பல்வேறு குமுகங்களில் இது தனிச்சிறப்பான பண்பாட்டு, பொருளியல் பாத்திரத்தை வகிக்கிறது.

இப்போது கால்நடைப் பண்ணை பெரிதும் "செறிநிலை விலங்குப் பண்ணை"யாக உருமாறிவிட்டது. சிலவேளைகளில் புதுவடிவம் "தொழிலகப் பண்ணை" எனவும் அழைக்கப்படுகிறது ; அமெரிக்காவில் 99% க்கும் மேலாக கால்நடைகள் இம்முறையில்தான் வளர்க்கப்படுகின்றன. செறிநிலை விலங்குப் பண்ணை பல்வகை வணிக வெளியீடுகளை கூட்டுகிறது; ஆனால், விலங்குநலம், சுற்றுச்சூழல் தாக்கம், மக்கள் நலவாழ்வு ஆகியவற்றின்பால் எதிர்மறை விளைவுகளைச் செலுத்துகிறது. இந்த எதிர்மறை விளைவுகளாலும் ஒட்டுமொத்தத் திறமை குறைவதாலும், 2030 கால அளவில் சில நாடுகளின் சிலவகைக் கால்நடைகளின் எண்ணிக்கை சரிவடையும் என சில புள்ளிவிவரங்கள் கணிக்கப்பட்டுள்ளன.

சொற்பிறப்பியல்

கால்நடை 
ஆத்திரேலியச் சாலை வழிகாட்டி.

கால்நடை எனும் சொல் முதலில் 1650 களுக்கும் 1660 களுக்கும் இடையில் பயனுக்கு வந்தது. கால்நடை என்பது கால், நடை ஆகிய சொற்களி ன் கூட்டுச்சொல்லாகும். இன்று ஆடுமாடுகள் அசைபோடும் விலங்குகளாக அமைய, கால்நடைகள் அனைத்து வளர்ப்பு விலங்குகளையும் குறிக்கிறது.

ஐக்கிய அமெரிக்காவின் கூட்டுக் குடியரசு சட்டம் இச்சொல்லைக் குறிப்பிட்ட திட்டத்தில் வேளாண்பொருள்களின் ஆக்கத்துக்கு பயன்படுமா இல்லையா என்பதைப் பொறுத்தே வரையறுக்கிறது. எடுத்துகாட்டாக, 1999 ஆண்டைய கட்டாயக் கால்நடை அறிவிப்புச் சட்டம் (P.L. 106-78, தலைப்பு IX) அசைபோடும் ஆடு, மாடு போன்ற விலங்குகளை ம்ட்டும் கால்நடைகளாக வரையறுக்கிறது. ஆனால், 1988 ஆம் ஆண்டைய சட்டம் ஆடுமாடுகள், செம்மறி, வெள்ளாடு,பன்றி, கோழி, உணவுக்கும் உணவு தயாரிக்கவும் பயன்படும் விலங்குகள், மீன்கள் போன்றவற்றைக் கால்நடைகளாக வரையறுக்கிறது.

இறந்த கால்நடை கொல்லும் முன்பே நோயால் இறந்த கால்நடைகளைக் குறிக்கிறது. கனடா போன்ற சில நாடுகளின் சட்டங்கள் இறந்த கால்நடைகளை உணவாகப் பயன்படுத்துவதைத் தடை செய்துள்ளன.

வரலாறு

வேட்டையாடல்-உணவுதிரட்டல் வாழ்க்கைமுறையில் இருந்து வேளாண்மைசார் வாழ்க்கைமுறைக்கு மாறியபோது கால்நடைகள் வழக்கில் வந்துவிட்டன.. கால்நடைகளை வளர்த்தல், பேணுதல், கொன்று இறைச்சியாகப் பயன்படுத்தல் ஆகிய செயல்முறைகளின் கூட்டுத் தொழில் கால்நடை வளர்ப்பு எனப்பட்டது. மாந்தர் கால்நடை வளர்ப்பையும் வாழ்நிலைமைகளையும் கட்டுபடுத்த கற்றதுமே அவை வீட்டுப் பயன்பாட்டிலும் பரவலாகின. மேலும் அவற்றின் கூட்டு நடத்தையும் வாழ்க்கைமுறையும் உடல்கூ றுகளும் பெரிதும் மாற்றமடைந்தன. பல தற்கால கால்நடைகள் காட்டில் வாழத் தகுதியற்றனவாகி விட்டன.

முதல் வீட்டு விலங்கு நாய்தான். நாய் 15,000 ஆண்டுகளுக்கு முன்பே ஐரோப்பாவிலும் சேய்மைக் கிழக்குப் பகுதிகளிலும் வீட்டு நாய்கள் காணப்பட்டுள்ளன. வெள்ளாடுகளும் செம்மறிகளும் தென்மேற்கு ஆசியாவில் 11,000 ஆண்டுகளுக்கும் 5,000 ஆண்டுகளுக்கும் இடையே விட்டு விலங்குகளான. கி.மு 8,500 கால அளவில் பன்றிகள் அண்மைக் கிழக்குப் பகுதிகளில் வீட்டு விலங்குகளாகின சீனாவில் கி.மு 6,000 அளவில் வீட்டுப் பன்றிகள் உருவாகியுள்ளன. கி.மு 4,000 ஆண்டளவில் குதிரைகள் வீட்டு விலங்குகளாகின. மாடுகள் 10,500 ஆண்டுகளுக்கு முன்பாகவே வீட்டு விலங்குகளாகிவிட்டன. கி.மு 7,000 ஆண்டளவில் கோழிகளும் பிற பறவைகளும் வீட்டில் உணவாகப் பயன்படத் தொடங்கிவிட்டன.

வகைகள்

"கால்நடை" எனும் சொல்லைக் குறுகலான பொருளிலும் அகல்விரிவான பொருளிலும் வரையறுக்கலாம். அகல்விரிவான பொருளில் வணிகப் பயன்பாட்டுக்கு மக்கள் வளர்க்கும் எந்தவொரு விலங்கையும் கால்நடை குறிக்கும்.

விலங்கு காட்டு மூதாதை நாட்டு வளர்ப்பு பயன்பாடு படம்
குதிரை பிசவைசுகி குதிரை மங்கோலியா பயணம், பந்தயம், ஊர்தி, பொதிசுமத்தல் கால்நடை 
கழுதை ஆப்பிரிக்கக் காட்டுக் கழுதை ஆப்பிரிக்கா பொதிசுமத்தலும் வண்டியிழுத்தலும் கால்நடை 
மாடுகள் ஆரோக்சு ஐரோப்பாசியா இறைச்சி, பால், வண்டியிழுத்தல் கால்நடை 
பிராகுமின் ஆரோக்சு ஐரோப்பாசியா இறைச்சி, பால், வண்டியிழுத்தல் கால்நடை 
பாலி மாடுகள் பாந்தெங் தெகி ஆசியா இறைச்சி, பால், வண்டியிழுத்தல் கால்நடை 
பனியெருமை காட்டுப் பனியெருமை திபெத்து இறைச்சி, பால், தோல் கால்நடை 
நீரெருமை முந்து நீரெருமை இந்தியா, தெகி ஆசியா ஐறைச்சி, பால், சுமத்தல்பணி கால்நடை 
காயல் கவுரிமா இந்தியா, மலேசியா சுமத்தலும் வண்டியிழுத்தலும் கால்நடை 
செம்மறி மவுஃப்லான் ஈரான், அனத்தோலியா இறைச்சி, பால், மென் தோல். கால்நடை 
வெள்ளாடு பிசோர் ஐபெக்சு கிரீசு, பாக்கித்தானம் இறைச்சி, பால், மென் தோல். கால்நடை 
கலைமான் முந்து கலைமான் ஐரோப்பாசியா வண்டியிழுத்தல், பால், இறைச்சி, தோல் கால்நடை 
பாக்தீரிய ஒட்டகம் காட்டு பாக்தீரிய ஒட்டகம் நடுவண் ஆசியா பயணம், பந்தயம் கால்நடை 
துரோம்தாரி அரேபிய ஒட்டகம் வட ஆப்பிரிக்கா, தெமே ஆசியா பயணம், பந்தயம் கால்நடை 
இலாமா குவனாக்கோ ஆந்தெசு மெந்தோல், இறைச்சி கால்நடை 
அல்பாக்கா தென் அமெரிக்கா ஆந்தெசு மெந்தோல் கால்நடை 
பன்றி காட்டுப் பன்றி ஐரோப்பாசியா இறைச்சி கால்நடை 
முயல் ஐரோப்பிய முயல் ஐரோப்பா இறைச்சி கால்நடை 
கால்நடை 
ஒருவார ஆட்டுமறி
கால்நடை 
வட எசுபானிய இயற்கை முழையின் கதிரடிப்புக் களம்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

கால்நடை 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Livestock management
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

Tags:

கால்நடை சொற்பிறப்பியல்கால்நடை வரலாறுகால்நடை வகைகள்கால்நடை மேற்கோள்கள்கால்நடை வெளி இணைப்புகள்கால்நடை

🔥 Trending searches on Wiki தமிழ்:

ஔவையார்உத்தரப் பிரதேசம்ஆனைக்கொய்யாசப்ஜா விதைபஞ்சாயத்து ராஜ் சட்டம்நந்திக் கலம்பகம்தமிழ்விடு தூதுவெ. இராமலிங்கம் பிள்ளைதமிழக மக்களவைத் தொகுதிகள்ஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோயில்சுய இன்பம்சீமான் (அரசியல்வாதி)விநாயகர் அகவல்கண்ணனின் 108 பெயர் பட்டியல்மறைமலை அடிகள்நாம் தமிழர் கட்சிகட்டுரைமருதமலை முருகன் கோயில்சிலப்பதிகாரம்காரைக்கால் அம்மையார்தரணிவேர்க்குருகுஷி (திரைப்படம்)சுற்றுச்சூழல் பாதுகாப்புதிட்டக் குழு (இந்தியா)அறுபது ஆண்டுகள்பித்தப்பைகாமராசர்திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில்கிருட்டிணன்பறம்பு மலைமஞ்சள் காமாலைபழமொழி நானூறுசின்னம்மைவிருமாண்டிபஞ்சபூதத் தலங்கள்சுற்றுச்சூழல் மாசுபாடுமகேந்திரசிங் தோனிமுத்தரையர்விண்டோசு எக்சு. பி.உரைநடைபுறாவைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாதர் கோயில்சேமிப்புக் கணக்குஅன்புமணி ராமதாஸ்திருக்கடையூர் அமிர்தகடேசுவரர் கோயில்வெட்சித் திணைபுறப்பொருள்தமிழக சுற்றுலாத் தலங்களின் பட்டியல்லால் சலாம் (2024 திரைப்படம்)நவரத்தினங்கள்குறுந்தொகைகூத்தாண்டவர் திருவிழாஇந்து சமய அறநிலையத் துறைஆசிரியர்கல்லணைசிலம்பம்சபரி (இராமாயணம்)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்நாழிகைஅபினிவராகிதமிழிசை சௌந்தரராஜன்ஆண்டாள்விஜய் (நடிகர்)முடக்கு வாதம்நீக்ரோஜோக்கர்வணிகம்மதுரை வீரன்இந்தியாவில் தேசியக் கட்சிகளின் பட்டியல்திராவிசு கெட்கருமுட்டை வெளிப்பாடுஉ. வே. சாமிநாதையர்ம. கோ. இராமச்சந்திரன்🡆 More