குவாஜர் வம்சம்

குவாஜர் வம்சம் (Qajar dynasty) (ⓘ; பாரசீக மொழி: سلسله قاجار‎ Selsele-ye Qājār; அசர்பைஜான்: قاجارلر Qacarlar) கிபி 1794 முதல் 1925 முடிய ஈரானை ஆண்ட சியா இசுலாமிய அரச மரபாகும்.

பாரசீகத்தின் பரந்த பேரரசு
دولت علیّه ایران
Dolate Eliyye Iran
1794–1925
கொடி of குவாஜர் வம்சம்
பாரசீகத்தின் கொடி
சின்னம் of குவாஜர் வம்சம்
சின்னம்
நாட்டுப்பண்: முதல் ஈரானிய நாட்டுப்பண்
19-ஆம் நூற்றாண்டில் குவாஜர் வம்சத்தின் கீழ் பாரசீகம்
19-ஆம் நூற்றாண்டில் குவாஜர் வம்சத்தின் கீழ் பாரசீகம்
நிலைபேரரசு
தலைநகரம்தெகுரான்
பேசப்படும் மொழிகள்பாரசீகம், அசர்பைஜானிய மொழி
அரசாங்கம்
ஷாகென்ஷா 
• 1794–1797
முகமது கான் குவாஜர்(முதல்)
• 1909–1925
அகமது ஷா குவாஜர் (இறுதி)
பிரதம அமைச்சர் 
• 1906
மிர்சா நசுருல்லா கான்(முதல்)
• 1923–1925
ரேசா ஷா பகலவி வம்சம்(இறுதி)
வரலாறு 
• குவாஜர் வம்சம்
1794
• குலிஸ்தான் உடன்படிக்கை
24 அக்டோபர் 1813
• துருக்மென்சாய் உடன்படிக்கை
10 அக்டோபர் 1828
• பாரிஸ் உடன்படிக்கை, 1857
4 மார்ச் 1857
• அக்கல் உடன்படிக்கை
21 செப்டம்பர் 1881
• பாரசீக அரசமைப்பு புரட்சி
5 ஆகஸ்டு 1906
• பகலவி வம்சம்
1925
நாணயம்ஈரானிய கிரான்
முந்தையது
பின்னையது
குவாஜர் வம்சம் ஜெந்த் வம்சம்
குவாஜர் வம்சம் Kingdom of Kartli-Kakheti
குவாஜர் வம்சம் அப்சரித்து வம்சம்
பகலவி வம்சம் குவாஜர் வம்சம்
உருசியப் பேரரசு குவாஜர் வம்சம்
தற்போதைய பகுதிகள்

துருக்கிய வழித்தோன்றல்களான பழங்குடி இன குவாஜர் வம்சத்தினர் ஆண்ட நிலப்பரப்புகளை பாரசீகத்தின் பரந்த பேரரசு என்பர் (பாரசீக மொழி: دولت علیّه ایرانDowlat-e Aliyye Iran).

ஈரானை ஆண்ட சண்டு வம்சத்தின் இறுதி மன்னரான லோட்டப் அலி கானை பதவி நீக்கிய குவாஜர் வம்சத்தினர், 1794ல் ஈரானை தங்களது முழுக்கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர். 1796-இல் குவாஜர் வம்சத்தின் முதல் மன்னர் முகமது கான் குவாஜர், வடகிழக்கு ஈரானின் மஷாத் நகரைக் கைப்பற்றி, ஈரானின் அப்சரித்து வம்சத்தின் ஆட்சியை முடிவு கட்டினார்.

குவாஜர் வம்சத்தினர் உருசியாவுடன் நடத்தியப் போரில் காக்கேசியா பகுதிகளான ஜார்ஜியா, அசர்பைஜான் மற்றும் ஆர்மீனியா உள்ளிட்ட பல பகுதிகளை உருசியப் பேரரசிடம் இழந்தது.

காக்கேசியப் பகுதிகளை மீண்டும் கைப்பற்றுதல்

உருசியப் பேரரசின் இராணுவப் பாதுகாப்பு பெற்ற ஜார்ஜியா போன்ற காக்கேசியா பகுதிகளை குவாஜர் வம்சத்தினர் மீண்டும் கைப்பற்றினார்.

உருசியாவுடனான போரில் இழந்த பகுதிகள்

12 செப்டம்பர் 1801ல் குவாஜர் வம்ச மன்னர் ஆகா முகமது கான் குவாஜர் இறந்த நான்கு ஆண்டுகள் கழித்து, உருசியப் பேரரசு, கிழக்கு ஜார்ஜியப் பகுதிகளை தன்னில் இணைத்துக் கொண்டது. 1804ல் நடைபெற்ற கஞ்சாப் போரில் ருசியாப் பேரரசு பாரசீகத்தின் கஞ்சா நகரத்தை, உருசியர்கள் முற்றிலும் அழித்தனர். இதனால் 1804 – 1813-களில் உருசியப் - பாரசீகப் போர் நடைபெற்றது. பதே அலி ஷா தலைமையில் (ஆட்சிக் காலம்|r]. 1797-1834) குவாஜர்கள், பாரசீகத்தின் வடக்குப் பகுதிகளைக் கைப்பற்றியிருந்த உருசியப் பேரரசின் மீது போர் தொடுத்தனர்.

இப்போர்க் காலமானது பாரசீகத்தின் பொருளாதாரம் மற்றும் இராணுவ உத்திகள் மீது உருசியப் பேரரசின் ஆதிக்கம் வெளிப்படுத்தியது. இப்போரில் குவாஜர் இராணுவம் பெரும் தோல்வியை சந்தித்தது. 1813ல் உருசியாவுடன் செய்து கொண்ட குலிஸ்தான் போர் நிறுத்த உடன்படிக்கையின் படி, பாரசீகம் காக்கேசியாவின் தற்கால ஜார்ஜியா, அசர்பைஜான் மற்றும் ஆர்மீனியா போன்ற பல பகுதிகளை உருசியாவிற்கு விட்டுக்கொடுக்க வேண்டியதாயிற்று.

பத்தாண்டுகள் கழித்து குலிஸ்தான் உடன்படிக்கையை மீறி உருசியப் படைகள் ஈரானின் எரிவான் ஆளுநரகத்தை கைப்பற்றினர். இதனால் 1826 - 1828ல் மீண்டும் பாரசீக - உருசியப் போர் மூண்டது. இப்போர் பாரசீக குவாஜர்களுக்கு பெரும் பின்னடைவாக இருந்தது. 1828ல் உருசியா - ஈரான் செய்து கொண்ட துருக்மென்சாய் உடன்படிக்கையின் படி, தெற்கு காக்கேசியாவின் தற்கால ஆர்மீனியா, அசர்பைஜான் போன்ற பகுதிகள் முழுவதும், உருசியாவிற்கே உரியது என பாரசீகத்தின் குவாஜர்கள் ஏற்றுக்கொண்டனர். ஒப்பந்தப்படி உருசியாவிற்கும் -பாரசீகத்திற்கு இடையே புது எல்லையாக, ஆரஸ் ஆறு அமைந்தது. இந்த இரண்டு ஒப்பந்தங்களால் ஈரான் தனது காக்கேசியா நிலப்பரப்புகளை உருசியாவிடம் இழந்தது.

காக்கேசிய முஸ்லீம்கள் புலம்பெயர்தல்

இரு உருசிய-பாரசீக ஒப்பந்தங்களின் படி, உருசியாவிடம் இழந்த தெற்கு காக்கேசியப் பகுதிகளில் வாழ்ந்த முஸ்லீம் பாரசீக இனக் குழுக்கள், பாரசீகத்தின் மையப் பகுதிகளில் புலம்பெயர்ந்ந்தனர்.

குவாஜர்களின் வளர்ச்சி மற்றும் வீழ்ச்சி

பாரசீக குவாஜர் அரச மரபின் மன்னர் நசீர் அல்-தீன் ஷா ஆட்சிக் காலத்தில் மேற்கத்திய அறிவியல், தொழில்நுட்பம், கல்வி முறைகளை ஈரானில் அறிமுகப்படுத்தினார். 1856ல் நடைபெற்ற ஆங்கிலேய-பாரசீகப் போரில், ஆங்கிலேயர்கள் பாரசீகத்தின் ஹெராத் நகரத்தைக் கைப்பற்றி ஆப்கானித்தானுடன் இணைத்தனர். மேலும் பாரசீக வளைகுடாவின் பல பகுதிகளை ஆங்கிலேயர்கள் கைப்பற்றினர். குவாஜர் வம்ச மன்னர்கள் ஆங்கிலேயர்களுக்கு பல வணிக நடவடிக்கைகளுக்கு ஆதரவு அளித்தனர்.

குவாஜர் வம்ச மன்னர் அமீர் கபீர், 1851ல் தாரூல் பனூன் எனும் மிகப்பெரிய பல்கலைக்கழகத்தை நிறுவினார். இப்பல்கலைக் கழகம் மேற்கத்திய முறையில் கல்வி பயிற்றுவிக்கப்பட்டது.

மன்னர் அமீர் கபீர் உருசியா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளின் கல்வி அறிஞர்களைக் கொண்டு, ஈரானில் பன்னாட்டு மொழிகள், நவீன மருத்துவம், சட்டம், புவியியல், வரலாறு, பொருளாதாரம் மற்றும் பொறியல் போன்ற படிப்புகளை ஈரானிய மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்க ஆதரவு அளித்தார்.

அரசமைப்புச் சட்ட புரட்சி

சனவரி 1906ல் ஈரானில் அரசமைப்புச் சட்டத்தை இயற்றக் கோரி மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். அக்டோபர் 1906ல் நாடாளுமன்றப் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அரசமைப்பு சட்டம் இயற்றப்பட்டது. 30 டிசம்பர் 1906ல் மன்னரால் கையொப்பமிடப்பட்ட அரசமைப்புச் சட்டத்தில் மன்னரின் வரம்பற்ற அதிகாரம் குறைக்கபப்ட்டது.

மன்னர் முகமது அலி ஷா (ஆட்சிக் காலம் 1907–1909), உருசியாவின் உதவியுடன் அரசமைப்பு சட்டத்தை முடக்கியும், நாடாளுமன்றத்தை கலைத்தும் ஆனையிட்டார். சூலை 1909ல் முகமது வலி கான் தலைமையிலான அரசமைப்புப் புரட்சிப் படைகள், தெகுரானை நோக்கிச் சென்று, மன்னர் முகமது அலி ஷாவை உருசியாவிற்கு நாடு கடத்தி, அரசமைப்புச் சட்டத்தையும், நாடாளுமன்றத்தையும் மீண்டும் நிலைநாட்டினார்கள். 16 சூலை 1909ல் ஈரானிய நாடாளுமன்றம் முகமது அலி ஷாவின் 11 வயது மகன் அகமது ஷா குவாஜரை ஈரானிய மன்னராக அறிவித்தது. சூலை 1907ல் ஈரானின் வடக்கு பகுதியில் உருசியர்களும், கிழக்கு மற்றும் தெற்குப் பகுதிகளில் ஆங்கிலேயர்களும் ஆதிக்கம் செலுத்தினர். ஈரானின் நடுப்பகுதி மற்றும் மேற்கு பகுதியை நடுநிலைப் பகுதியாக விட்டு வைத்தனர்.

முதல் உலகப் போரும், அதன் தொடர்பான நிகழ்வுகளும்

முதல் உலகப் போரில் ஈரான் நடுநிலை வகித்தது. இருப்பினும் உதுமானியப் பேரரசு, ஈரானை முற்றுகையிட்டது.

குவாஜர் வம்சத்தின் வீழ்ச்சி

பிப்ரவரி 1921ல் ஈரானியப் படைத்தலைவரான ரேசா ஷா, இராணுவப் புரட்சி மூலம் ஈரானிய மன்னராக முடிசூட்டிக் கொண்டார். குவாஜர் வம்சத்தின் இறுதி மன்னரான அகமது ஷாவை நாடு கடத்தியதன் மூலம், ஈரானில் குவாஜர் வம்சத்தின் ஆட்சி முடிவிற்கு வந்தது. ரேசா கான் தன்னை பகலவை வம்சத்தின் முதல் ஈரானிய மன்னராக அறிவித்துக் கொண்டார். பகலவி வம்ச மன்னர்கள், ஈரானை 1925 முதல் 1941 முடிய ஆட்சி செய்தனர்.

பாரசீகத்தின் குவாஜர் வம்ச மன்னர்கள் (1794 –1925)

பெயர் படம் பட்டம் பிறப்பு-இறப்பு பதவி ஏற்பு பதவி துறப்பு
1 முகமது கான் குவாஜர் குவாஜர் வம்சம்  கான்
ஷா
1742 – 1797 20 மார்ச் 1794 17 சூன்1797
2 பதே அலி ஷா குவாஜர் குவாஜர் வம்சம்  பேரரசர்
கான்
1772–1834 17 சூன் 1797 23 அக்டோபர் 1834
3 முகமது ஷா குவாஜர் குவாஜர் வம்சம்  கான் 1808–1848 23 அக்டோபர் 1834 5 செப்டம்பர் 1848
4 நசீர் அல்-தீன் ஷா குவாஜர் குவாஜர் வம்சம்  செல்லேகா (பூமியின் மீது கடவுளின் நிழல்)
கிப்லே இ ஆலாம் (பிரபஞ்சத்தின் மையம்)
இஸ்லாம்பனா (இஸ்லாத்தின் புகலிடம்)
1831–1896 5 செப்டம்பர் 1848 1 மே 1896
5 முசாபர் அத்தீன் ஷா குவாஜர் குவாஜர் வம்சம்  1853–1907 1 மே 1896 3 சனவரி 1907
6 முகமது அலி ஷா குவாஜர் குவாஜர் வம்சம்  1872–1925 3 சனவரி 1907 16 சூலை 1909
7 அகமது ஷா குவாஜர் குவாஜர் வம்சம்  சுல்தான் 1898–1930 16 சூலை 1909 15 டிசம்பர் 1925

இதனையும் காண்க

இதனையும் காண்க

மேற்கோள்கள்

ஆதாரங்கள்

வெளி இணப்புகள்

Tags:

குவாஜர் வம்சம் காக்கேசியப் பகுதிகளை மீண்டும் கைப்பற்றுதல்குவாஜர் வம்சம் உருசியாவுடனான போரில் இழந்த பகுதிகள்குவாஜர் வம்சம் குவாஜர்களின் வளர்ச்சி மற்றும் வீழ்ச்சிகுவாஜர் வம்சம் அரசமைப்புச் சட்ட புரட்சிகுவாஜர் வம்சம் முதல் உலகப் போரும், அதன் தொடர்பான நிகழ்வுகளும்குவாஜர் வம்சம் குவாஜர் வம்சத்தின் வீழ்ச்சிகுவாஜர் வம்சம் பாரசீகத்தின் குவாஜர் வம்ச மன்னர்கள் (1794 –1925)குவாஜர் வம்சம் இதனையும் காண்ககுவாஜர் வம்சம் இதனையும் காண்ககுவாஜர் வம்சம் மேற்கோள்கள்குவாஜர் வம்சம் ஆதாரங்கள்குவாஜர் வம்சம் வெளி இணப்புகள்குவாஜர் வம்சம்அசர்பைஜான் மொழிசியா இசுலாம்படிமம்:Qajar.oggபாரசீக மொழிபாரசீகம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

தகவல் தொழில்நுட்பம்காயத்திரி ரேமாவேலுப்பிள்ளை பிரபாகரன்கலைஞர் மகளிர் உரிமைத் தொகைகேதா மாவட்டம்நாட்டு நலப்பணித் திட்ட தினம்தூத்துக்குடிலீலாவதிமாத்திரை (தமிழ் இலக்கணம்)கருப்பைகார்த்திக் (தமிழ் நடிகர்)சீறாப் புராணம்பத்துப்பாட்டுஇதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாராயாதவர்சாகித்திய அகாதமி விருதுதமிழ்நாட்டின் மாவட்டங்கள்முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்கல்லணைமுல்லைப்பாட்டுசைவ சமயம்கோயில்திதி, பஞ்சாங்கம்விஜயநகரப் பேரரசுநீரிழிவு நோய்தேசிக விநாயகம் பிள்ளைகல்விசிந்துவெளி நாகரிகம்இணையம்தமன்னா பாட்டியாதமிழ்ஒளிதீபிகா பள்ளிக்கல்சென்னைவைகைஇந்திய விடுதலை இயக்கம்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்யுகம்காவிரிப்பூம்பட்டினம்கடல்சித்திரா பௌர்ணமிஜெயகாந்தன்யோகாசனம்திருக்குர்ஆன்உத்தரகோசமங்கைஅட்டமா சித்திகள்பள்ளிக்கரணைசிவாஜி (பேரரசர்)வெப்பநிலைசுற்றுச்சூழல் கல்விநாடார்அறுவகைப் பெயர்ச்சொற்கள்விரை வீக்கம்காளை (திரைப்படம்)போக்கிரி (திரைப்படம்)ரயத்துவாரி நிலவரி முறைபாலை (திணை)இலட்சம்மலேசியாசுற்றுச்சூழல் மாசுபாடுவராகிபங்குச்சந்தைம. பொ. சிவஞானம்மலேரியாதிருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயில்பரதநாட்டியம்மு. கருணாநிதிகந்தர் அலங்காரம் (திரைப்படம்)தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளின் பட்டியல்அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்வில்லியம் சேக்சுபியர்மாலைத்தீவுகள்இரட்டைக்கிளவிநடுக்குவாதம்வெந்து தணிந்தது காடுபித்தப்பைஆவுடையார் கோயில் ஆத்மநாதசுவாமி கோயில்நான் அவனில்லை (2007 திரைப்படம்)குறிஞ்சிப் பாட்டு🡆 More