குருநானக் ஜெயந்தி

குருநானக் ஜெயந்தி அல்லது குருநானக் குருபூரப் முதல் சீக்கிய குரு, குருநானக் பிறந்ததைக் கொண்டாடுகிறது.

இது சீக்கியர்களின் மிகவும் புனிதமான பண்டிகைகளில் ஒன்றாகும். சீக்கிய மதத்தில் கொண்டாட்டங்கள் சீக்கிய குருக்களின் ஆண்டு விழாவைச் சுற்றி வருகின்றன. குருபூரப் என அழைக்கப்படும் அவர்களின் பிறந்தநாள் சீக்கியர்களிடையே கொண்டாட்டம் மற்றும் பிரார்த்தனைக்கான நாட்களாகும்.

குருநானக் ஜெயந்தி
குருநானக் ஜெயந்தி
அதிகாரப்பூர்வ பெயர்குருநானக் குருபூரப்
கடைபிடிப்போர்சீக்கியர்கள்
கொண்டாட்டங்கள்பரிசு வழங்குதல், குருத்துவார் சேவைகள்
அனுசரிப்புகள்மத திருவிழா
நாள்கட்டக் மாதம் பௌர்ணமி (1469)
2023 இல் நாள்27 நவம்பர்

பின்னணி

குருநானக் ஜெயந்தி 
குருநானக்கின் பிறப்பு

சீக்கிய சமய நிறுவனரான குருநானக், 1469 இல், விக்ரம் சம்வத் நாட்காட்டியின்படி கட்டக் மாதம் பௌர்ணமி நாளன்று பிறந்தார். அவர் பிறந்த இடம் தற்போது [[ நங்கானா சாகிபு]] , பாகிஸ்தானில் உள்ளது. இது இந்தியாவின் சில பகுதிகளில் அரசு விடுமுறை ஆகும். சீக்கியர்கள் குருநானக்கின் இந்த பிறந்தநாள் விழாவை நவம்பர் மாதத்தில் காலம்தொட்டு கொண்டாடி வருகின்றனர்.

கொண்டாட்டம் மற்றும் சடங்குகள்

இந்த கொண்டாட்டம் பொதுவாக அனைத்து சீக்கியர்களுக்கும் ஒரே மாதிரியாக இருக்கும்; கீர்த்தனைகள் மட்டும் மாறுபடலாம். கொண்டாட்டங்கள் பொதுவாக பிரபாத் பெரிஸுடன் தொடங்கும். பிரபாத் பெரிஸ் என்பது குருத்வாராக்களில் தொடங்கி, பாடல்களைப் பாடி உள்ளூர்களைச் சுற்றிச் செல்லும் அதிகாலை ஊர்வலங்கள் ஆகும். பொதுவாக, பிறந்தநாளுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு, அகண்ட பாதை (சீக்கியர்களின் புனித நூலான குரு கிரந்த் சாகிப் ஐ நாற்பத்தெட்டு மணிநேர இடைவிடாத வாசிப்பு) குருத்துவார்ல் நடத்தப்படுகிறது. பிறந்தநாளுக்கு முந்தைய நாள், நகர்கீர்த்தன் என்று அழைக்கப்படும் ஊர்வலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த ஊர்வலம் "பஞ்ச் பைரஸ்" (ஐந்து அன்பானவர்கள்) தலைமையில் நடைபெறுகிறது. குருகிரந்த் சாகிபின் பல்லக்கு (பல்கி) மற்றும் கொடி (நிசான் சாகிபு) ஊர்வலமாக எடுத்து செல்கிறார்கள்.அவர்களைத் தொடர்ந்து பாடகர்கள் பாடல்களைப் பாடுகிறார்கள். கட்கா குழுக்கள் பல்வேறு தற்காப்புக் கலைகள் மூலமாகவும், பாரம்பரிய ஆயுதங்களைப் பயன்படுத்தியும் தங்கள் வாள்வீச்சு திறனை வெளிப்படுத்துகின்றனர். ஊர்வலம் ஊர் தெருக்களில் செல்லும். இந்த சிறப்பு சந்தர்ப்பத்திற்காக, பாதை பதாகைகளால் மூடப்பட்டிருக்கும் மற்றும் வாயில்கள் கொடிகள் மற்றும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டும். குருநானக்கின் செய்தியைப் சமய தலைவர்கள் போதிப்பனர்.

திருவிழா நாளில், கொண்டாட்டங்கள் அதிகாலை 4 மணிக்கு ஆரம்பமாகின்றன. நாளின் இந்த நேரம் "அமிர்த காலம்" என்று குறிப்பிடப்படுகிறது. "ஆசா-கி-வார்" (காலை பாடல்கள்) பாடலுடன் நாள் தொடங்குகிறது. இதைத் தொடர்ந்து குருவின் புகழ் கதை (வேதத்தின் வெளிப்பாடு) மற்றும் கீர்த்தன் (சீக்கிய வேதங்களிலிருந்து பாடல்கள்) மூலம் போற்றப்படும். அதைத் தொடர்ந்து, லங்கர என்ற சிறப்பு சமூக மதிய உணவு, தன்னார்வலர்களால் குருத்வாராக்களில் ஏற்பாடு செய்யப்பட்டும். சில குருத்வாராக்களில் இரவு பிரார்த்தனை அமர்வுகள் நடத்தப்படுகின்றன, அவை சூரிய அஸ்தமனத்தில் ரெஹ்ராஸ் (மாலை பிரார்த்தனை) ஓதப்படும்போது தொடங்குகின்றன, அதைத் தொடர்ந்து கீர்த்தனை மற்றும் இரவு சுமார் 1:20 மணிக்கு சபை குர்பானி தொடங்குகிறது.

மேற்கோள்கள்

Tags:

குருநானக்சீக்கியக் குருக்கள்சீக்கியர்

🔥 Trending searches on Wiki தமிழ்:

ஆறுமுக நாவலர்பங்குச்சந்தைஅயோத்தி தாசர்மு. வரதராசன்தமிழ்த்தாய் வாழ்த்துதமிழ்ஒளிபுதிய ஏழு உலக அதிசயங்கள்இந்தியன் (1996 திரைப்படம்)இந்தோனேசியாஆ. ராசாமீன்பதினெண் கீழ்க்கணக்குஔவையார்விவேகானந்தர்இயேசுவின் இறுதி இராவுணவுசிலம்பரசன்ராதாரவிதமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளின் பட்டியல்வடிவேலு (நடிகர்)இந்தியப் பிரதமர்பனைவங்காளதேசம்தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்தமிழர் கலைகள்திருவள்ளூர் மக்களவைத் தொகுதிஹோலிவிலங்குஅவிட்டம் (பஞ்சாங்கம்)கடையெழு வள்ளல்கள்பிரேமலுமலைபடுகடாம்தமிழர் நிலத்திணைகள்தொல். திருமாவளவன்தமிழ் இலக்கியம்முத்துராமலிங்கத் தேவர்பித்தப்பைகினி எலிஐம்பெருங் காப்பியங்கள்கிருட்டிணன்அரக்கோணம் மக்களவைத் தொகுதிஇந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்ஊரு விட்டு ஊரு வந்துதயாநிதி மாறன்காப்பியம்திராவிசு கெட்முக்கூடற் பள்ளுவிருத்தாச்சலம்பிரித்விராஜ் சுகுமாரன்பெண்ணியம்வேலு நாச்சியார்மீரா சோப்ராமதுராந்தகம் தொடருந்து நிலையம்குண்டூர் காரம்ஆதம் (இசுலாம்)தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 2019தொல்காப்பியம்கான்கோர்டுதாயுமானவர்திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில்கலைதேர்தல்ஹஜ்இரசினிகாந்துஜெயம் ரவிஉஹத் யுத்தம்அதிதி ராவ் ஹைதாரிஎம். ஆர். ராதாகண்ணனின் 108 பெயர் பட்டியல்குருமயிலாடுதுறை மக்களவைத் தொகுதிமார்ச்சு 29அணி இலக்கணம்வேளாண்மைசிலுவையோவான் (திருத்தூதர்)எயிட்சுகள்ளுமஞ்சும்மல் பாய்ஸ்🡆 More