குருதிவளிக்காவி

ஹீமோகுளோபின், அல்லது ஈமோகுளோபின் அல்லது குருதிவளிக்காவி (Hemoglobin) என்பது மனிதனதும் இதர முதுகெலும்பிகளினதும் சில முதுகெலும்பிலிகளினதும் குருதியில் உள்ள ஒரு முக்கிய கூறு ஆகும்.

இது செங்குருதியணுக்களில் உள்ள இரும்பு தனிமத்தைக் கொண்ட ஆக்சிசன் கடத்தும் உலோகப் புரதத்தைக் குறிக்கிறது. ஆக்சிசனுடன் இணைந்த நிலையில் அதற்கு ஆக்சிஹீமோகுளோபின் என்று பெயர்.
இது உடலில் குறிப்பிட்ட அளவில் பேணப்படுதுவது உடல்நலத்துக்கு அவசியம். இது குருதிப் புரதங்களில் மிக முக்கியமான புரதமாகும்.

குருதிவளிக்காவி
A schematic visual model of oxygen-binding process
குருதிவளிக்காவி
Heme group

பெரும்பான்மையான முதுகெலும்பிகளில் குருதிவளிக்காவி நான்கு குளோபின் புரத மூலக்கூறுகள் பிணைந்து உருவாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு குளோபினும் இரும்புத் தனிமத்தைக் கொண்ட ஈம் (ஹீம்) எனப்படும் அமைப்புடன் இணைந்துள்ளது. ஈமோகுளோபின் எனப்படும் பெயருக்கு இதுவே காரணம் ஆகும்.

குருதிவளிக்காவி சுவாசப்பையில் இருந்து உயிர்வளியை உடலின் ஏனைய பாகங்களுக்குக் காவிச்செல்கின்றது. மீன்கள் போன்ற கடல் வாழ் உயிரினங்களில் செவுள் எனப்படும் சுவாச உறுப்பு நீரில் கரைந்துள்ள உயிர்வளியை உள்ளெடுத்த பிற்பாடு ஏனைய பாகங்களுக்கு காவிச்செல்வதற்கு குருதிவளிக்காவி உதவுகின்றது. ஒவ்வொரு குருதிவளிக்காவி மூலக்கூறாலும் நான்கு உயிர்வளிக்கூறுகள் எடுத்துச்செல்லப்படுகின்றன. இவை உயிரணுக்களுக்குள் விடப்படுகின்றது. உயிரணுக்களில் இருந்து வெளிவிடப்படும் கரியமிலவளியின் சில சதவீதங்கள் (20–25%) குருதிவளிக்காவியால் காவப்படுகின்றது, இச்சந்தர்ப்பத்தில் கரியமிலவளியுடன் இணைந்த நிலையில் இது காபமினோ ஈமோகுளோபின் (Carbaminohaemoglobin) என அழைக்கப்படுகின்றது. ஏனையவை நீருடன் கரைந்து கார்போனிக் அமிலமாக உருவாகி செங்குருதியணுக்களால் எடுத்துச் செல்லப்படுகின்றது. கார்பனோராக்சைடு ஈமோகுளோபினுடன் இணைந்து உருவாகும் சேர்வை காபொக்சி ஈமோகுளோபின் எனப்படும்.

குருதிவளிக்காவி செங்குருதியணுக்களைவிட வேறு பகுதிகளிலும் (மூளையில் கரும்பதார்த்தம், பெருவிழுங்கிகள், மூச்சுச் சிற்றறை) காணப்படுகின்றது. இங்கு அது உயிர்வளி இணைவு எதிர்ப்பியாகவும் இரும்பு வளர்சிதைமாற்றக் கட்டுப்படுத்தியாகவும் செயல்படுகின்றது.

புற இணைப்புகள்

குருதிவளிக்காவி 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Hemoglobin
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

Tags:

ஆக்சிசன்இரும்புஉடல்உலோகம்குருதிகுருதிப் புரதம்செங்குருதியணுதனிமம்புரதம்மனிதர்முதுகெலும்பிகள்முதுகெலும்பிலி

🔥 Trending searches on Wiki தமிழ்:

யாதவர்செயங்கொண்டார்ஆகு பெயர்2024 இந்தியப் பொதுத் தேர்தல்நரேந்திர மோதிவிஷ்ணுசப்தகன்னியர்கூகுள்தமிழக வெற்றிக் கழகம்கம்பர்கட்டுவிரியன்தமிழச்சி தங்கப்பாண்டியன்தமிழ்நாடு அமைச்சரவைஜே பேபிஅயோத்தி தாசர்தமிழ்மயக்க மருந்துஇரட்டைமலை சீனிவாசன்கடல்பித்தப்பைகாமராசர்அரவான்கொடைக்கானல்பால் (இலக்கணம்)உயர் இரத்த அழுத்தம்நக்கீரர், சங்கப்புலவர்உத்தம புத்திரன் (2010 திரைப்படம்)கழுகுஇந்து சமயம்கபிலர்இயற்கைமாநிலங்களவைகண்ணாடி விரியன்வெ. இறையன்புஅன்னை தெரேசாசைவ சமயம்கரிகால் சோழன்மங்காத்தா (திரைப்படம்)கருத்துபெண்களுக்கு எதிரான வன்முறைமாமல்லபுரம்இதயம்தமிழக மக்களவைத் தொகுதிகள்தனுசு (சோதிடம்)சுற்றுலாபோதைப்பொருள்சுந்தரமூர்த்தி நாயனார்முதலாம் இராஜராஜ சோழன்காளமேகம்குறவஞ்சிதினகரன் (இந்தியா)நெல்மீராபாய்மயில்தற்கொலை முறைகள்பெருவிருப்ப கட்டாய மனப்பிறழ்வுஉலக நாடுகள் பட்டியல் (கண்டங்கள் வாரியாக)நீக்ரோசிவனின் 108 திருநாமங்கள்கருக்கலைப்புமுல்லைப்பாட்டுதீபிகா பள்ளிக்கல்விளம்பரம்சுரைக்காய்சீவக சிந்தாமணிசங்க காலம்சைவத் திருமணச் சடங்குஇந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்பள்ளுபறவைசீரகம்வினோஜ் பி. செல்வம்தமிழர் பண்பாடுமு. மேத்தாஇராவணன்சமுத்திரக்கனிகைப்பந்தாட்டம்மருதநாயகம்🡆 More