கிறிஸ்டோபர் நோலன்

கிறிஸ்டோபர் நோலன் (பிறப்பு: சூலை 30, 1970) ஓர் ஐக்கிய அமெரிக்க/இராச்சிய திரைப்பட நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் மற்றும் எழுத்தாளர் ஆவார்.

தன் சகோதரர் ஜோனதன் நோலனுடன் சிறப்பாக திரைப்படங்களின் திரைக்கதைகளை எழுதியுள்ளார். சின்காபி திரைப்படங்கள் என்றொரு திரைப்பட நிறுவனத்தினை நிறுவியுள்ளார். இவரது மெமன்டோ திரைப்படம் மிகவும் பாராட்டப்பட்டத் திரைப்படமாகும். அத்திரைப்படம் மிகுந்த பாராட்டுகளையும் விருதுகளையும் பெற்றுத்தந்தது. கிறிஸ்டோபர் நோலன் இன்றைய சிறந்த ஆங்கிலத் திரைப்பட இயக்குநர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார்.

கிறிஸ்டோபர் நோலன்
Christopher Nolan
கிறிஸ்டோபர் நோலன்
சான்டா பார்பரா திரைப்பட கண்காட்சியில்
கிறிஸ்டோபர் நோலன்
பிறப்புகிறிஸ்டோபர் ஜோனதன் ஜேம்ஸ் நோலன்
சூலை 30, 1970 (1970-07-30) (அகவை 53)
இலண்டன் ஐக்கிய இராச்சியம்
இருப்பிடம்லாஸ் ஏங்ஜெலேஸ், கலிபோர்னியா
அமெரிக்கா
மற்ற பெயர்கள்கிறிஸ் நோலன்
குடியுரிமைஇங்கிலாந்து
அமெரிக்கா
கல்விஆங்கில மொழியில் இளங்கலைப் பட்டம் பெற்றுள்ளார்
பணிதிரைப்பட இயக்குநர், திரை எழுத்தாளர்,
திரைப்பட தயாரிப்பாளர்
செயற்பாட்டுக்
காலம்
1985 – இன்றுவரை
சொந்த ஊர்இலண்டன், இங்கிலாந்து,
சிகாகோ, இல்லியனாயிஸ்
இயக்குநராக உள்ள
நிறுவனங்கள்
சின்காபி திரைப்படங்கள்
வாழ்க்கைத்
துணை
எம்மா தாமஸ்
(1997–இன்றுவரை)
உறவினர்கள்ஜோனதன் நோலன் (சகோதரன்)
மாத்தியு பிரான்சிஸ் நோலன் (சகோதரன்)

நோலன் தனது இளம் பருவத்தினை அமெரிக்காவிலும் இங்கிலாந்திலும் செலவிட்டார். பின்னர் ஆங்கில இலக்கியப் பட்டம் ஒன்றை இலண்டனில் உள்ள பல்கழைக்கழகக் கல்லூரியில் பெற்றார். கல்லூரியின் திரைப்படச் சங்கத்தில் சந்தித்த நண்பர்களோடு பின்னர் 1998 இல் பால்லோவிங் திரைப்படத்தினை இயக்கும் முன் பல குறும்படங்களை உருவாக்கினார். நோலன் தனது இரண்டாவது படமான மெமெண்டோ (2000) மூலம் சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றார். அதற்காக இவர் சிறந்த அசல் திரைக்கதையிற்கான அகாதமி விருதுதுக்கு பரிந்துரைக்கப்பட்டார்.

இன்சோம்னியா (2002) மூலம் தனது சொந்த திரைப்படத் தயாரிப்பிற்கு மாறினார். மேலும் தி டார்க் நைட் முத்தொகுப்பு (2005-2012), தி ப்ரெஸ்டீஜ் (2006) மற்றும் இன்செப்ஷன் (2010) ஆகிய படங்களுடன் விமர்சன மற்றும் வணிக வெற்றியைக் கண்டார். இவற்றில் கடைசியாக நோலனுக்கு சிறந்த படம் மற்றும் சிறந்த அசல் திரைக்கதை என இரண்டு சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இன்ஸ்டெர்டெல்லர் (2014), டன்கிர்க் (2017) மற்றும் டெனட் (2020) ஆகிய படங்களை இயக்கினார். டன்கிர்க் படத்திற்காக, இவர் இரண்டு அகாதமி விருது பரிந்துரைகளைப் பெற்றார். இதில் சிறந்த இயக்குனருக்கான முதல் பரிந்துரையும் அடங்கும். நோலன் தனது 12வது படமான ஓப்பன்ஹைமர் (2023) படத்திற்காக சிறந்த இயக்குநர் மற்றும் சிறந்த படத்திற்கான அகாதமி விருதை வென்றார்.

ஆரம்பகால வாழ்க்கை

நோலன், இலண்டனில் பிறந்தார். இவரது பிரித்தானிய தந்தை பிரெண்டன் நோலன் ஓர் விளம்பர எழுத்தாளர் மற்றும் இவரது அமெரிக்க தாயார் கிறிஸ்டினா (ஜென்சென்) ஓர் விமான பணிப்பெண் மற்றும் ஆங்கில ஆசிரியராக பணிப்புரிந்துள்ளார். இலண்டன் மற்றும் சிகாகோ என இரு நகரங்களில் இவரது சிறு வயது கழிந்தது. இவருக்கு பிரித்தானிய மற்றும் அமெரிக்க குடியுரிமை இருந்தது. இவருக்கு மாத்தியு எனும் அண்ணனும், ஜோனதன் எனும் தம்பியும் இருக்கின்றனர். நோலன் தனது ஏழு வயதில், தன்னிடம் இருந்த பொம்மைகளை வைத்து, தனது தந்தையின் சூப்பர் 8 காணொளிகருவி மூலம் சிறு படங்கள் உருவாக்க ஆரம்பித்தார். தனது பதினோராவது வயதிலிருந்து, இவர் ஓர் இயக்குநர் ஆக வேண்டும் என கனவு கண்டார்.

ஹெர்ட்பொர்ட்ஷயரில் உள்ள ஹெர்ட்பொர்ட் ஹீத் எனும் ஊரில் உள்ள ஹைளிபரி மற்றும் இம்பீரியல் சர்வீஸ் காலேஜ் எனும் பள்ளியில் நோலன் பயின்றார். பின்பு, இலண்டன் யுனிவெர்சிட்டி கல்லூரியில் (யுசீஎல்) ஆங்கில இலக்கியம் பயின்றார். யுசீஎல்-லை இவர் தேர்ந்தெடுக்க காரணம், அந்தக் கல்லூரியில் இருந்த ஸ்தீன்பக் படத்தொகுப்பு அறை மற்றும் 16 மிமீ புகைப்படக் கருவிகள்தான். திரைப்படக் குழுவின் தலைவராக நோலன் இருந்தார். எம்மா தாமஸ் உடன் இணைந்து 35 மிமீ திரைப்படங்களைத் திரையிட்டு, அதன் மூலம் வரும் பணத்தைக்கொண்டு 16 மிமீ படங்கள் தயாரித்தார்.

தனது கல்லூரிக் காலங்களில், நோலன் இரு குறும்படங்களை உருவாக்கினார். 1989-ஆம் ஆண்டு, "டாரன்டெல்லா" எனும் 8 மிமீ படமே இவரது முதல் படமாகும். 1995-ஆம் ஆண்டு சிறிய குழு மற்றும் கருவிகளுடன் உருவான இவரது இரண்டாவது படம் "லார்சனி". நோலனின் பணம் மற்றும் குழுவின் கருவிகளுடன் உருவான அந்தப் படம், 1996-ஆம் ஆண்டு காம்ப்ரிஜ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டதுடன் யுசிஎல்-லின் சிறந்த குறும்படம் என கருதப்பட்டது.

திரைப்படங்கள்

முழு நீளத் திரைப்படங்கள்

ஆண்டு திரைப்படம் Credited as ஸ்டூடியோ வருவாய்
இயக்குநர் தயாரிப்பாளர் திரைக்கதை எழுத்தாளர் மற்றவை
1998 பால்லோவிங் ஆம் ஆம்   ஒளிப்பதிவாளர்
திரை இயக்குநர்
மோமன்டம் பிக்சர்கள் $48,482
2000 மெமன்டோ ஆம் ஆம் $39,723,096
2002 இன்சாம்னியா ஆம் வார்னர் சகோதரர்கள் $113,714,830
2005 பேட்மேன் பிகின்ஸ் ஆம் ஆம் $372,710,015
2006 த பிரஸ்டீஜ் ஆம் ஆம் ஆம் டச்ஸ்டோன் பிக்சர்கள்
வார்னர் சகோதரர்கள்
$109,676,311
2008 த டார்க் நைட் ஆம் ஆம் ஆம் வார்னர் சகோதரர்கள் $1,001,921,600
2010 இன்சப்சன் ஆம் ஆம் ஆம் $825,532,764
2012 த டார்க் நைட் ரைசஸ் ஆம் ஆம் ஆம்
2013 டிரான்சன்டன்ஸ் ஆம்
2013 மேன் ஆப் ஸ்டீல் ஆம் ஆம்
2014 இன்டர்‌ஸ்டெலர் ஆம் ஆம் ஆம்
2017 டன்கிர்க் ஆம் ஆம்
2020 டெனெட்டு ஆம் ஆம் ஆம் வார்னர் சகோதரர்கள்

குறுந்திரைப்படங்கள்

ஆண்டு திரைப்படம் Credited as
இயக்குநர் தயாரிப்பாளர் திரைக்கதை எழுத்தாளர்
1989 டரான்டெல்லா ஆம் ஆம் ஆம்
1996 லார்ஸ்னி ஆம் ஆம் ஆம்
1997 டூடில்பக் ஆம் ஆம் ஆம்

தயாரிக்கும் திரைப்படங்கள்

  • 2015 - பேட்மேன் சூப்பர்மேன் டாண் ஆஃப் ஜஸ்டிஸ்

வரவேற்பு

அக்டோபர் 2011 அன்றுவரை, வட அமெரிக்காவில் நோலனின் திரைப்படங்கள் $ 1.2 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வருவாய் ஈட்டியுள்ளன. அவரது முதல் திரைப்படமான பால்லோவிங் வெறும் $48,482 வருவாயினை ஈட்டிய நிலையில் அவரது த டார்க் நைட் திரைப்படம் $533,345,358 வருவாயினை ஈட்டியது.

விமர்சகர்கள்

திரைப்படம் ராட்டன் டோமேடோஸ் மெடாகிரிடிக்
மொத்தமாக சிறந்த விமர்சகர்கள்
பால்லோவிங் 76% N/A N/A
மெமன்டோ 92% 89% 80
இன்சாம்னியா 92% 94% 78
பேட்மேன் பிகின்ஸ் 85% 61% 70
த பிரஸ்டீஜ் 76% 71% 66
த டார்க் நைட் 94% 91% 82
இன்சப்சன் 86% 80% 74
Average 86% 80.8% 75

விருதுகள்

ஆண்டு திரைப்படம் அகாதமி விருது பரிந்துரைகள் அகாதமி விருது வெற்றிகள் கோல்டன் குளோப் பரிந்துரைகள் கோல்டன் குளோப் வெற்றிகள் பாஃப்டா பரிந்துரைகள் பாஃப்டா வெற்றிகள் மொத்த விருது பரிந்துரைகள் மொத்த விருது வெற்றிகள்
1998 பால்லோவிங்
2000 மெமன்டோ 2 1
2002 இன்சாம்னியா
2005 பேட்மேன் பிகின்ஸ் 1 3
2006 த பிரஸ்டீஜ் 2
2008 த டார்க் நைட் 8 2 1 1 9 1
2010 இன்சப்சன் 8 4 4 9 3
2012 த டார்க் நைட் ரைசஸ் - - - - - -
2013 மேன் ஆஃப் ஸ்டீல் - - - - - -
2014 டிரான்சிடன்ஸ் - - - - - -
2014 இன்டர்‌ஸ்டெலர் - - - - - -
மொத்தம் 21 6 6 1 21 4 48 11

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

கிறிஸ்டோபர் நோலன் ஆரம்பகால வாழ்க்கைகிறிஸ்டோபர் நோலன் திரைப்படங்கள்கிறிஸ்டோபர் நோலன் வரவேற்புகிறிஸ்டோபர் நோலன் மேற்கோள்கள்கிறிஸ்டோபர் நோலன் வெளி இணைப்புகள்கிறிஸ்டோபர் நோலன்ஜோனதன் நோலன்மெமன்டோ (திரைப்படம்)

🔥 Trending searches on Wiki தமிழ்:

தீரன் சின்னமலைவேற்றுமை (தமிழ் இலக்கணம்)கருக்கலைப்புநபிமூலம் (நோய்)கௌதம புத்தர்வெண்குருதியணுபரணி (இலக்கியம்)பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்சுலைமான் நபிபழமுதிர்சோலை முருகன் கோயில்காயத்ரி மந்திரம்பூ. சா. கோ. தொழில்நுட்பக் கல்லூரிநாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்இந்திய அரசியலமைப்பின் சிறப்பு அம்சங்கள்உருவக அணிதமிழ்த்தாய் வாழ்த்துபால் கனகராஜ்இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்களின் பட்டியல்கரூர் மக்களவைத் தொகுதிதிருமூலர்இந்திய அரசியல் கட்சிகள்கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதிவேலூர் மக்களவைத் தொகுதிசுற்றுச்சூழல் பாதுகாப்புகண்ணாடி விரியன்தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021இராமநாதபுரம் மக்களவைத் தொகுதிகிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதிவி.ஐ.பி (திரைப்படம்)ஹஜ்திருவண்ணாமலை மக்களவைத் தொகுதிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்மணிமேகலை (காப்பியம்)கம்போடியாசி. விஜயதரணிரமலான் நோன்புகருத்தரிப்புதிருமலை நாயக்கர்தஞ்சைப் பெருவுடையார் கோயில்ஆய கலைகள் அறுபத்து நான்குவிஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல்திதி, பஞ்சாங்கம்ஐஞ்சிறு காப்பியங்கள்அமேசான்.காம்கடையெழு வள்ளல்கள்மியா காலிஃபாசூல்பை நீர்க்கட்டிஅ. கணேசமூர்த்திபரிவர்த்தனை (திரைப்படம்)மஜ்னுபெரம்பலூர் மக்களவைத் தொகுதிநிர்மலா சீதாராமன்பெரியபுராணம்ஆதம் (இசுலாம்)மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தமிழ்நாடுபெண்களின் உரிமைகள்தேவதாசி முறைமூவேந்தர்வடிவேலு (நடிகர்)கட்டுவிரியன்நாயன்மார் பட்டியல்யூலியசு சீசர்தனித் தொகுதிகள், தமிழ்நாடு சட்டமன்றம்செண்பகராமன் பிள்ளைதமிழ் மாதங்கள்விடுதலை பகுதி 1மெட்ரோனிடசோல்திண்டுக்கல் மக்களவைத் தொகுதிபொள்ளாச்சி மக்களவைத் தொகுதிமுத்தரையர்திருமந்திரம்சீமான் (அரசியல்வாதி)அறுபடைவீடுகள்முல்லைப்பாட்டுவன்கொடுமைத் தடுப்புச் சட்டம்பொன்னுக்கு வீங்கி🡆 More