காசுமீரி மொழி

காசுமீரி மொழி ஒரு வடமேற்கு இந்திய-ஆரிய மொழியாகும்.

இது, முக்கியமாக இந்திய மாநிலமான சம்மு காசுமீரின் காசுமீர் பள்ளத்தாக்குப் பகுதியில் பேசப்படுகிறது. இம் மொழி பேசும் 7,147,000 தொகையினரில், 6.797.587 பேர் இந்தியாவிலும் மிகுதிப் பேர், 353,064 பாகித்தானிலும் உள்ளனர். இந்திய-ஐரோப்பிய மொழிக் குடும்பத்தின், இந்திய-ஆரியப் பிரிவைச் சேர்ந்த இந்த மொழி புவியியல் அடிப்படையிலான துணைக் குழுவான தார்டிக் மொழிகள் குழுவில் அடங்குகிறது. இது இந்தியாவின் அட்டவணைப் படுத்தப்பட்ட 23 மொழிகளுள் ஒன்றாகும்.

காசுமீரி மொழி
Default
மொழிக் குறியீடுகள்
ISO 639-1ks
ISO 639-2kas
ISO 639-3kas

எழுத்து வடிவம்

காசுமீரி ஒரு வினை இரண்டாவதாக வரும் சொல் ஒழுங்கு (V2 word order) கொண்ட ஒரு மொழியாகும். சாரதா எழுத்து முறையில் எழுதப்பட்ட சில ஆவணங்கள் இருந்தபோதும் காசுமீரி மொழி அண்மைக்காலம் வரை பேச்சு மொழியாகவே இருந்தது. பின்னர் இது பார்சிய-அரபி எழுத்துக்களில் எழுதப்பட்டது. தற்போது இம்மொழி, பார்சிய-அரபியில் அல்லது தேவநாகரி எழுத்தில் எழுதப்பட்டு வருகிறது. எழுதும் போது உயிர் எழுத்துக்களை எப்பொழுதும் பயன்படுத்துவதனால், பார்சிய-அரபியில் எழுதப்படும் மொழிகளுள் காசுமீரி தனித்துவமானது ஆகும்.

மொழிப் பயன்பாடு

பல்வேறு அரசியற் காரணங்களினாலும் போதிய கல்வி வசதிகள் இல்லாமையாலும் காசுமீரி மொழிக் கல்வி பெரிதும் புறக்கணிக்கப்பட்ட நிலையிலேயே காணப்படுகின்றது. இதனைப் பேசுவோர் தொகையும் குறைந்து வருகிறது. சம்மு காசுமீரி மாநிலத்தின் உத்தியோக மொழி காசுமீரி அல்ல என்பதும், இத் தகுதியை உருது மொழியே பெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத் தக்கது. காசுமீரி பேசுவோரிற் சிலர் இரண்டாவது மொழியாக ஆங்கிலம் அல்லது இந்தியைப் பயன்படுத்துகின்றனர். கடந்த சில பத்தாண்டுகளாக காசுமீரி மொழி இப்பகுதியிலுள்ள பல்கலைக் கழகங்களிலும், கல்லூரிகளிலும் பாடமாக அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது. தற்போது பாடசாலைகளுக்கான பாடத் திட்டங்களிலும் இதனைச் சேர்த்துக் கொள்வதற்கான முயற்சிகள் நடைபெறுகின்றன.

இலக்கியம்

சார்ச்சு ஆபிரகாம் கிரியர்சன் என்பவர், 1919 ஆம் ஆண்டில் எழுதும்போது, தார்டிக் மொழிகளில் காசுமீரி மட்டுமே இலக்கியத்தைக் கொண்ட மொழி என்று குறிப்பிட்டார். காசுமீரி மொழியில் காணப்படும் இலக்கியங்கள் சுமார் 750 ஆண்டுகள் வரை பழமையானவை. இதுவே ஆங்கிலம் உள்ளிட்ட பல நவீன மொழி இலக்கியங்களின் வயதாக உள்ளது.

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

காசுமீரி மொழி 
Wiki
கட்டற்ற கலைக்களஞ்சியம் விக்கிபீடியாவின் காசுமீரி மொழிப் பதிப்பு

Tags:

காசுமீரி மொழி எழுத்து வடிவம்காசுமீரி மொழி மொழிப் பயன்பாடுகாசுமீரி மொழி இலக்கியம்காசுமீரி மொழி மேற்கோள்கள்காசுமீரி மொழி வெளியிணைப்புகள்காசுமீரி மொழிஇந்திய-ஆரிய மொழிகள்இந்திய-ஐரோப்பிய மொழிகள்இந்தியாசம்மு காசுமீர் மாநிலம்பாக்கித்தான்புவியியல்

🔥 Trending searches on Wiki தமிழ்:

சீனிவாச இராமானுசன்இந்திய இரயில்வேகடல்முடியரசன்அவுரி (தாவரம்)மயக்க மருந்துரச்சித்தா மகாலட்சுமிரா. பி. சேதுப்பிள்ளைஸ்ரீகேள்விசெஞ்சிக் கோட்டைவே. செந்தில்பாலாஜிவிஷால்வௌவால்மட்பாண்டம்பள்ளிக்கூடம்அறுபது ஆண்டுகள்பெரியபுராணம்சினைப்பை நோய்க்குறிமுல்லைப் பெரியாறு அணைதிருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில்வினைச்சொல்மதீச பத்திரனதிருக்காளத்தி காளத்தியப்பர் கோயில்கொல்லி மலைகருப்பைவாட்சப்விடுதலை பகுதி 1சாத்துகுடிவிண்டோசு எக்சு. பி.பெண்புதுச்சேரிமாத்திரை (தமிழ் இலக்கணம்)வருத்தப்படாத வாலிபர் சங்கம் (திரைப்படம்)செக்ஸ் டேப்போயர்ஏப்ரல் 25முகுந்த் வரதராஜன்இரட்சணிய யாத்திரிகம்சீறாப் புராணம்திருக்குறள்இராவணன்எட்டுத்தொகை தொகுப்புமருதமலைபெண்களின் உரிமைகள்மாசாணியம்மன் கோயில்கஞ்சாமகேந்திரசிங் தோனிசிறுபாணாற்றுப்படைஅங்குலம்பதினெண்மேற்கணக்குசிற்பி பாலசுப்ரமணியம்முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்சிலப்பதிகாரம்கல்விபழமுதிர்சோலை முருகன் கோயில்மீனம்சூரியக் குடும்பம்இரட்டைமலை சீனிவாசன்அகத்தியர்குடும்ப அட்டைதமிழர் கப்பற்கலைசேரன் செங்குட்டுவன்கள்ளுபல்லவர்அயோத்தி இராமர் கோயில்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்கணையம்ஜோக்கர்சிதம்பரம் நடராசர் கோயில்பதிவேற்றம் மற்றும் பதிவிறக்கம்கம்பர்மான்செஸ்டர் யுனைடெட் கால்பந்துக் கழகம்பாண்டியர்அக்பர்நாயன்மார்திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்நிலாமங்கலதேவி கண்ணகி கோவில்🡆 More