கப்படோசியா நகரம்

கப்படோசியா (ஆங்கிலம்: Cappadocia) என்பது மத்திய அனத்தோலியாவில் உள்ள ஒரு வரலாற்றுப் பகுதியாகும்.

துருக்கியில் உள்ள நெவகிர், கெய்சேரி, கோரேகிர், அக்சராய் மற்றும் நீட் மாகாணங்களை விட இது பெரியதாகும். எரோடோட்டசின் கூற்றுப்படி, அயோனியன் கிளர்ச்சியின் போது (கிமு 499), கப்படோசியர்கள் தாரசு மலையிலிருந்து இயூக்சின் ( கருங்கடல் ) அருகே ஒரு பகுதியை ஆக்கிரமித்ததாகக் கூறப்பட்டது. இந்த அர்த்தத்தில், கப்படோசியா தெற்கில் தாசசு மலைகளின் சங்கிலியால் சூழப்பட்டுள்ளது, இது சிலிசியாவிலிருந்து கிழக்கிலும், கிழக்கே புறாத்து நதியாலும், வடக்கே பான்டசுவாலும், மேற்கில் இலைகோனியா மற்றும் கிழக்கு கலாத்தியாவாலும் பிரிக்கப்படுகிறது.

கப்படோசியா நகரம்
கப்படோசியா நிலப்பரப்பின் காட்சி

வரலாறு முழுவதும் கிறிஸ்தவ மூலங்களில் பாரம்பரியமாகப் பயன்படுத்தப்படும் இந்த பெயர், விதிவிலக்கான இயற்கை அதிசயங்களின் ஒரு பகுதியை வரையறுக்க ஒரு சர்வதேச சுற்றுலா கருத்தாக தொடர்ந்து பயன்படுத்தப்படுகிறது, குறிப்பாக தேவதை புகைபோக்கிகள் பாறைகள் மற்றும் ஒரு தனித்துவமான வரலாற்று மற்றும் கலாச்சார பாரம்பரியத்தால் வகைப்படுத்தப்படுகிறது.

சொற்பிறப்பு

கப்படோசியா என்ற பெயரின் முந்தைய பதிவு கிமு 6 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து தொடங்குகிறது. பாரசீக சாம்ராச்சியத்தின் அகாமனிய மன்னர்களான முதலாம் டேரியஸ் மற்றும் செர்க்செசு ஆகியோரின் முத்தரப்பு கல்வெட்டுகளில் கட்டபுகா என்று வெட்டப்பட்டுள்ளது. லூவிய மொழியில் இதன் அர்த்தம் "கீழ்நாடு" என்பதாகும். கிரேக்கர்கள் ,சிரியர்கள் அல்லது வெள்ளை சிரியர்கள், லுகோசிரி மற்றும் பெர்சியர்கள் ஆகியோரால் கப்படோசியா என்ற பெயர் பயன்படுத்தப்பட்டது என்று எரோடோட்டசு குறிப்பிடுகிறார்.

புவியியல் மற்றும் காலநிலை

கப்படோசியா நகரம் 
கப்படோசியாவின் உகிசரில் தேவதை புகைபோக்கிகள்.

கப்படோசியா மத்திய துருக்கியின் மையப்பகுதியில் மத்திய அனத்தோலியாவில் உள்ளது. 1000 மீ மேல் உயரத்தின் எரிமலை சிகரங்களையும் கொண்டுள்ளது. வரலாற்றில் கப்படோசியாவின் எல்லைகள் தெளிவற்றவை, குறிப்பாக மேற்கு நோக்கி. தெற்கே, டாரஸ் மலைகள் சிலிசியாவுடனான எல்லையை உருவாக்குகின்றன மற்றும் மத்தியதரைக் கடலில் இருந்து கப்படோசியாவை பிரிக்கின்றன. மேற்கில், கப்படோசியா தென்மேற்கில் உள்ள இலைகோனியாவின் வரலாற்று பகுதிகளாலும், வடமேற்கில் கலாத்தியாவிலும் எல்லைகளாக உள்ளது. அதன் இருப்பிடம் மற்றும் அதிக உயரத்தின் காரணமாக, கப்படோசியா ஒரு குறிப்பிடத்தக்க காலநிலையைக் கொண்டுள்ளது, வெப்பமான வறண்ட கோடை மற்றும் குளிர்ந்த பனி குளிர்காலம். மழைப்பொழிவு குறைவாகவும், இப்பகுதி பெரும்பாலும் வறண்டதாகவும் உள்ளது.

கப்படோசியா நகரம் 
கப்படோசியாவில் உள்ள கெரெம் அருகில் தேவதை புகைபோக்கிகள் பாறை உருவாக்கம்

நவீன சுற்றுலா

கப்படோசியா நகரம் 
கப்படேசியாவில் சூடான காற்று ஊதுபை பயணம் பிரபலமானது.

தனித்துவமான புவியியல், வரலாற்று மற்றும் கலாச்சார அம்சங்களைக் கொண்ட பல பகுதிகளைக் கொண்டிருப்பதால் இப்பகுதி ஒரு பிரபலமான சுற்றுலாத் தலமாகும். சுற்றுலாவுக்காக நெவ்செர், கெய்செரி, அக்சரே மற்றும் நிக்டே என்ற கப்படோசியாவில் 4 நகரங்கள் உள்ளன.

போக்குவரத்து

இப்பகுதி முக்கிய நகரமான கெய்செரிக்கு தென்மேற்கே அமைந்துள்ளது, இது அங்காரா மற்றும் இசுதான்புல் மற்றும் பிற நகரங்களுக்கு விமான மற்றும் ரயில் சேவையை கொண்டுள்ளது. கப்படோசியா நகரம் மிக முக்கியமான மற்றும் சுற்றுலாத் தலங்களான உர்குப், கோர்மி, இலகரா பள்ளத்தாக்கு, செலிமி, குசல்யுர்ட், சிசர், அவனோசு மற்றும் செல்வ் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. அதிக அளவில் பார்வையிடப்படும் நிலத்தடி நகரங்களில் உள்ளன. ஆர்கப், கோரேம், குச்ஸ்லியுர்த் மற்றும் உகிசார் ஆகிய இடங்களில் சிறந்த வரலாற்று மாளிகைகள் மற்றும் சுற்றுலா தங்குமிடங்கள் உள்ளன.

இடைத்தோலியப்புற்று

1975 களில், மத்திய கப்படோசியா-துசுகோய், கரியான் மற்றும் சரிக்தார் ஆகிய மூன்று சிறிய கிராமங்களில் ஆய்வறிக்கை ஒன்றில் இடைத்தோலியப்புற்று இப்பகுதிகளில் அதிகம் காணப்படுவதாகவும் இதன் காரணமாக 50% மரணங்கள் ஏற்படுகிறது எனக் கூறுகிறது. இது கல்நாருக்கு ஒத்த பண்புகளைக் கொண்ட ஒரு செயோலைற்று மற்றும் எரியோனைட் ஆகிய கனிமங்கள் காரணமாக இருந்திருக்கலாம் என ஆய்வுகள் சுட்டிக் காட்டுகிறது. ஆய்வுகள் பிராந்தியத்தின் பிற பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்படுகின்றன.

ஊடகம்

அதன் நிலப்பரப்பு காரணமாக இப்பகுதி பல படங்களில் இடம்பெற்றது. 1983 இத்தாலிய / பிரஞ்சு / துருக்கிய திரைப்படமான உயோர், தி ஹண்டர் ஃப்ரம் தி ஃபியூச்சர் கப்படோசியாவில் படமாக்கப்பட்டது. 2010 மற்றும் 2011 ஆம் ஆண்டின் முற்பகுதியில், கோஸ்ட் ரைடர்: ஸ்பிரிட் ஆஃப் வெஞ்சியன்ஸ் படமும் கப்படோசியா பிராந்தியத்தில் படமாக்கப்பட்டது. துருக்கிய நடிகை அஸ்ரா அகான் ஃபர்ஸ்ட் ஐஸ் என்ற சூயிங் கம் ஒரு விளம்பரத்தில் பங்கேற்றார். வணிக நோக்கில் தயாரிக்கப்படும் ஒரு சில நிகழ்ச்சிகள் இப் பகுதியின் சில அம்சங்களைக் காட்டுகிறது.

விளையாட்டு

2012 முதலே, ஜூலை மாதம் பாலைவனதை அடிப்படையாகக் கொண்டு மாரத்தான் தடகளப் போட்டி ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. 244 km (152 mi) இப்போட்டி ஆறு நாட்களில் கப்படோசியா முழுவதும் பல இடங்கள் வழியாக துஸ் ஏரியை அடைகிறது. 2016 செப்டம்பர் 9 மற்றும் செப்டம்பர் 13 க்கு இடையில், முதன்முறையாக, துருக்கிய அதிபர் பங்கேற்ற இரு சக்கர உந்து பயணம் கப்படோசியாவில் நடந்தது. இதில் உலகம் முழுவதும் இருந்து 300 க்கும் மேற்பட்ட சைக்கிள் ஓட்டுநர்கள் பங்கேற்றனர்.

குறிப்புகள்

Tags:

கப்படோசியா நகரம் சொற்பிறப்புகப்படோசியா நகரம் புவியியல் மற்றும் காலநிலைகப்படோசியா நகரம் நவீன சுற்றுலாகப்படோசியா நகரம் போக்குவரத்துகப்படோசியா நகரம் இடைத்தோலியப்புற்றுகப்படோசியா நகரம் ஊடகம்கப்படோசியா நகரம் விளையாட்டுகப்படோசியா நகரம் குறிப்புகள்கப்படோசியா நகரம்எரோடோட்டசுகருங்கடல்தாரசு மலைத்தொடர்துருக்கிபான்டசுபுறாத்து ஆறு

🔥 Trending searches on Wiki தமிழ்:

தமிழ்நாடுபெரியபுராணம்பஞ்சதந்திரம் (திரைப்படம்)பத்து தலசி. விஜயதரணிநாம் தமிழர் கட்சிதற்குறிப்பேற்ற அணிபதிவேற்றம் மற்றும் பதிவிறக்கம்வே. செந்தில்பாலாஜிமாநிலங்களவைஎம். கே. விஷ்ணு பிரசாத்பிரான்சிஸ்கன் சபைவேளாண்மைஐராவதேசுவரர் கோயில்பிரபுதேவாஆய்த எழுத்துகூகுள்இந்திய நாடாளுமன்றம்கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதிஇராமர்கேழ்வரகுஇறைமறுப்புசரத்குமார்இந்தியாவின் பொருளாதாரம்திருப்பெரும்புதூர் மக்களவைத் தொகுதிவெள்ளியங்கிரி மலைமதுரை மக்களவைத் தொகுதிராஜீவ் காந்தி பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம்இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்விஜயநகரப் பேரரசுஅன்புமணி ராமதாஸ்கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிமத்திய சென்னை மக்களவைத் தொகுதிமாதவிடாய்நற்கருணை ஆராதனைபனைமும்பை இந்தியன்ஸ்கரூர் மக்களவைத் தொகுதிஅபினிமாதம்பட்டி ரங்கராஜ்திரு. வி. கலியாணசுந்தரனார்மனித மூளைஇந்திய உச்ச நீதிமன்றம்ஊராட்சி ஒன்றியம்ஆந்திரப் பிரதேசம்புதிய ஏழு உலக அதிசயங்கள்சிலம்பம்அதிதி ராவ் ஹைதாரிபாக்கித்தான்நாயக்கர்ஞானபீட விருதுஉவமைத்தொகைநேர்பாலீர்ப்பு பெண்பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில்வாழைகா. ந. அண்ணாதுரைதங்கம்சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில்சைவத் திருமுறைகள்உயிர்ப்பு ஞாயிறுசிறுகதைஇந்திய அரசியலமைப்புதிருநங்கைநாயன்மார் பட்டியல்சேக்கிழார்சுயமரியாதை இயக்கம்அரவிந்த் கெஜ்ரிவால்சென்னை சூப்பர் கிங்ஸ்வெ. இராமலிங்கம் பிள்ளைவெள்ளையனே வெளியேறு இயக்கம்எல். முருகன்நிலக்கடலைஇந்திஐம்பூதங்கள்இந்திய தேசியக் கொடிமரவள்ளிஐஞ்சிறு காப்பியங்கள்சிந்துவெளி நாகரிகம்சில்லுனு ஒரு காதல் (திரைப்படம்)🡆 More