இஷிதா தத்தா: இந்திய நடிகை

இஷிதா தத்தா (Ishita Dutta ஆகஸ்ட் 26, 1990) இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகை ஆவார், 2015ல் வெளிவந்த பாலிவுட் அதிரடி திகில்த் திரைப்படமான திரிஷ்யம் படத்தில் அவரது வேடத்திற்கும் மற்றும், ஸ்டார் பிளஸ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான இந்தி தொலைகாட்சித் தொடர் ஏக் கர் பனூங்கா என்பதில் நடித்ததனால் நன்கு அறியப்படுகிறார்.

நடிகை தனுஸ்ரீ தத்தாவின் இளைய சகோதரி ஆவார்.

இஷிதா தத்தா
இஷிதா தத்தா: ஆரம்ப வாழ்க்கை, நடிப்பு, சொந்த வாழ்க்கை
2018இல் அந்தேரியில் ஒரு விடுதியில் தத்தா
பிறப்பு26 ஆகத்து 1990 (1990-08-26) (அகவை 33)
ஜம்சேத்பூர், பீகார், இந்தியா
(தற்போது சார்க்கண்ட், இந்தியா)
தேசியம்இந்தியன்
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
2011 முதல் தற்போது வரை
வாழ்க்கைத்
துணை
உறவினர்கள்தனுஸ்ரீ தத்தா (சகோதரி)

ஆரம்ப வாழ்க்கை

தத்தா சார்க்கண்டில் உள்ள ஜம்சேத்பூரில் பென்காலி இந்து குடும்பத்தில் பிறந்துள்ளார். தத்தா ஜம்சேத்பூர் டி.பி.எம்.எஸ் ஆங்கிலப் பள்ளியில் பள்ளிப் படிப்பை மேற்கொண்டார், பின்னர் ஊடகப்படிப்பினை மும்பையில் படித்தார். அவரது சகோதரி, 2004இல் ஃபெமினா மிஸ் இந்தியா பட்டம் பெற்ற இவரது சகோதரி தனுஸ்ரீ தத்தாவும் ஒரு திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகை ஆவார்.

நடிப்பு

தத்தா 2012இல் வெளியான சாணக்கியடு என்ற தெலுங்குத் திரைப்படத்தில் நடிகர் தனிஷ்க்கு நாயகியாக தனது நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர், நியாஸ் அகமது தயாரிப்பில் ஹெச். ஆர். ஸ்ரீகாந்த் இயக்கத்தில் வெளிவந்த யேனிடு மனசாலி என்ற படத்தில் இவரும் இவரது சகோதரி தனுஸ்ரீ தத்தாவும் இணைந்து பணியாற்னர், ஆனால் அது முழுமையடையாத காரணத்தால் வெளியிடப் படவில்லை. பின்னர் இவர், ஏக் கர் பனூங்கா என்ற தொலைக்காட்சி நாடகத் தொடரில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 2016இல், லைப் ஓகே தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான ரிஸ்தோன் கா சௌதாகர்- பாஸிகர் என்ற நிகழ்ச்சியில் நடிகர் வத்சல் சேத்திற்கு இணையாக நடித்திருந்தார்.. இவர் பாலிவுட் திரைப்படமான திரிஷ்யம் படத்தில் நடிகர் அஜய் தேவ்கான், தபூ மற்றும் சிரேயா சரன் ஆகியோருடன் ஒரு துணைக் கதாபாத்திரத்தில் அஜய் தேவ்கானின் மகளாக நடித்திருந்தார். கபில் ஷர்மாவுடன் அவர் ஃபிராங்கி படத்தில் பணிபுரிந்தார்.

சொந்த வாழ்க்கை

இஷிதா தத்தா தனது நீண்டகால காதலர் மற்றும் முன்னாள் துணை நட்சத்திரமான வத்சல் சேத் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார்.

குறிப்புகள்

வெளி இணைப்புகள்

இஷிதா தத்தா: ஆரம்ப வாழ்க்கை, நடிப்பு, சொந்த வாழ்க்கை 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Ishita Dutta
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

Tags:

இஷிதா தத்தா ஆரம்ப வாழ்க்கைஇஷிதா தத்தா நடிப்புஇஷிதா தத்தா சொந்த வாழ்க்கைஇஷிதா தத்தா குறிப்புகள்இஷிதா தத்தா வெளி இணைப்புகள்இஷிதா தத்தாதனுஸ்ரீ தத்தாபாலிவுட்ஸ்டார் பிளஸ்

🔥 Trending searches on Wiki தமிழ்:

சங்க இலக்கியம்வல்லினம் மிகும் இடங்கள்குணங்குடி மஸ்தான் சாகிபுகள்ளர் (இனக் குழுமம்)விபுலாநந்தர்புற்றுநோய்தெருக்கூத்துசுபாஷ் சந்திர போஸ்வளைகாப்புகொன்றைசிங்கம் (திரைப்படம்)நக்கீரர், சங்கப்புலவர்முதுமொழிக்காஞ்சி (நூல்)சீனாஇந்திய ரிசர்வ் வங்கிதமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்தொல். திருமாவளவன்கலித்தொகைஇலட்சம்சித்தர்முதலாம் இராஜராஜ சோழன்சிவனின் 108 திருநாமங்கள்முக்கூடற் பள்ளுரா. பி. சேதுப்பிள்ளைஎல் நீனோ-தெற்கத்திய அலைவுமண் பானைஅருணகிரிநாதர்இந்து சமயம்கல்லணைபெரும்பாணாற்றுப்படைமுத்துராஜாஒன்றியப் பகுதி (இந்தியா)ரயத்துவாரி நிலவரி முறைதேர்தல்குண்டலகேசியாதவர்அமெரிக்க ஐக்கிய நாடுகள்நம்ம வீட்டு பிள்ளைஓடி விளையாடு பாப்பா (பாரதியார் பாடல்)ஆண்டு வட்டம் அட்டவணைஎயிட்சுமு. கருணாநிதிகா. ந. அண்ணாதுரைஞானபீட விருதுஎட்டுத்தொகைஇந்திரா காந்திமீனா (நடிகை)கார்த்திக் (தமிழ் நடிகர்)தங்கராசு நடராசன்மருதமலை முருகன் கோயில்இந்தியாவின் உயிர்க்கோளக் காப்பகங்கள்கடையெழு வள்ளல்கள்தொடை (யாப்பிலக்கணம்)சிவனின் தமிழ்ப் பெயர்கள்தமிழர் விளையாட்டுகள்சென்னை சூப்பர் கிங்ஸ்ந. பிச்சமூர்த்திசிவபுராணம்அகநானூறுமதுரைக் காஞ்சிஐந்தாம் பத்து (பதிற்றுப்பத்து)தங்கம்வணிகம்சித்திரைத் திருவிழாவிலங்குகளின் பெயர்ப் பட்டியல்பூப்புனித நீராட்டு விழாசேரர்யூடியூப்இலங்கைதிருவிழாவிநாயகர் அகவல்கண்ணதாசன்புவியிடங்காட்டிதிருவாசகம்தொல்லியல்திரவ நைட்ரஜன்பர்வத மலை🡆 More